புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
89 Posts - 38%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
36 Posts - 15%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
9 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
6 Posts - 3%
ayyamperumal
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Anitha Anbarasan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
340 Posts - 48%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
66 Posts - 9%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
24 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
ayyamperumal
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
3 Posts - 0%
Srinivasan23
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)

Page 3 of 84 Previous  1, 2, 3, 4 ... 43 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 21, 2013 9:52 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (14)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” (மெய்ப்பாட்டியல் 3)

-என்று எட்டு வகை மெய்ப்பாடுகளைத் (Physical manifestation of emotions)தொல்காப்பியர் கூறுகிறார்!

இவற்றில்,‘நகை’யை ,நகைச்சுவை என்று குறிக்கலாம்! சிரிப்பது படுசுவையாக உள்ளதே!
ஆனால் அழுகையை?

ஒருவர் அழுதுகொண்டிருக்கும்போது ,“இவர் பிரமாதமாக அழுகிறார்!” என்று சொன்னால் ? தர்ம அடி விழும்!

ஆனால் அழுகையை ‘அவலச் சுவை’ என்று பலரும் எழுதக் காண்கிறோம்!

அவர்கள் எழுதியது தவறா ? அப்படியானால் ‘சுவை’ என்றால் என்ன பொருள் ?

-வினாக்கள் எழுகின்றன!

உணவு தரும் நாச்சுவை,மகிழ்வு அடிப்படையில் எழும் சுவை! நாமறிந்ததே! நாமறியாச் சுவைபற்றித் தொல்காப்பியர் எங்கும் விளக்கியுள்ளாரா?

தொல்காப்பியர் மூன்று இடங்களில்(நூற்பா-563,899,1096) ‘சுவை’ என்ற சொல்லை எழுதுகிறார்;‘உருசி’ ,‘நுகர்ச்சி’ என்ற பொருள்களில்தான் அவை வருகின்றனவே அல்லாமல் ‘மெய்ப்பாடு’என்ற பொருளில் வரவில்லை.

இளம்பூரணர் நமக்குக் கைகொடுக்கிறார்! ‘சுவை’என்பதன் பொருளை, “ ‘சுவை’ என்பது ,காணப்படு பொருளாற் காண்போரகத்தின் வருவதோர் விகாரம்” (மெய்ப்பாட்டியல் 1 உரை) என விளக்குகிறார்!

அஃதாவது, ஒருத்தி அழுதுகொண்டிருக்கும்போது அவளிடத்திலே நடக்கும் வெளிப்பாடு, ‘மெய்ப்பாடு’ எனப்படும். அதற்குப் பெயர் ‘அழுகை மெய்ப்பாடு’ என்பதே;‘அழுகைச் சுவை’ அல்ல! ஆனால், அவள் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த நம் மனத்தில் எழுகிறதல்லவா ஒரு மாறுதல்(விகாரம்) அதற்குப் பெயர் ‘சுவை’!

‘சுவை’என்றால் ‘மகிழ்ச்சி’என்பது பொருள் அல்ல! மனவிகாரம்தான் ‘சுவை’!

‘மனவிகாரம்’ என்பது மகிழ்ச்சிக்கு உரியதாகவும் இருக்கலாம்,துயரத்திற்கு உரியதாகவும் இருக்கலாம்!

மெய்ப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பேசினால் ,எழுதினால் அந்த அணி (Figure of speech) ‘சுவையணி’ எனப்படும்; இந்த விளக்கத்தைத் தந்தது தண்டியலங்காரம்(68) ஆகும்!

தண்டியலங்காரத்தின்படி ‘சுவை’க்கு ‘மெய்ப்பாடு’ அடிப்படையாக உள்ளதை உணரலாம்!

நம் மனத்தில் அவலம் (வருத்தம்) பிறக்கும்போது ஏற்படும் மனவிகாரமே ‘அவலச் சுவை’!

ஐயங்கள் நீங்கிற்றா?
* ** *

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 9:57 pm

தமிழறிவை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும் பதிவு நன்று அய்யா

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 22, 2013 12:57 am

தொடத் தொடத் தொல்காப்பியம்
சுடச் சுடப் பலகாரம்

நன்றிகள்.

[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 22, 2013 9:01 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (15)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியம் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள பதரப்பட்டவர்களையும் உள்ளடக்கி இலக்கணம் வகுத்துள்ளது !

வணிகர்களை உள்ளடக்கிய ஒரு விதி :-

“எப்பொரு ளாயினும் அல்லது இல்லெனின்
அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்” (கிளவியாக்கம் 34)

அஃதாவது, “நல்லெண்ணெய் இருக்கிறதா?” என்று ஒரு கடையில் கேட்டால் ,கடைக்காரர் “இல்லை” என்ற பதிலைச் சொல்லக்கூடாது! வளரவேண்டிய கடையில் ‘இல்லை’ என்ற ஒலி ஒலிக்கக்கூடாது!

பிறகு , கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வது ?

“கடலை எண்ணெய் தவிர வேறு இல்லை” என்று கூறவேண்டும்!
முதலில் இருக்கும் பொருளைக் குறிப்பிட்டுவிட்டுக் கடைசியில் ‘அது தவிர வேறு இல்லை’ என்ற தொடரைச் சேர்த்துக் கூறவேண்டும்!

- இதுதான் தொல்காப்பிய விதி !

வணிகர்களின் இப் பழக்கம் தொல்காப்பியர் காலத்துக்கும் முன்பே இருந்தது என்பதை நாம் அறிதல் நலம்!

தொல்காப்பியரின் மேலை விதி சுட்டியது போலத் தமிழ் வணிகர்கள் கூறிவந்ததை, “என்னய்யா? உப்பு இருக்கிறதா என்றால் பருப்பு இருக்கிறது என்கிறாயே?” என்று கேலிசெய்வர்!

குறிப்பாகக் கேட்ட கேள்விக்கு உண்டு இல்லை என்ற பதிலை எதிர்நோக்கும் அவசர நிர்வாகம் பெருகிய நாளில்,இப்படிக் கேலிசெய்யும் பழக்கம் தோன்றியது!

வணிகர்களிடம் மட்டும்தான் ‘இல்லை என்று கூறக்கூடாது’
எனும் பழக்கம் இருந்ததா?

இல்லை! குடும்பங்களிலும் அப் பழக்கம் இருந்தது!

“இந்தா புள்ளே! அவ புளி கேட்டா , வாங்கித் தருகிறேன்னு சொல்லுவியா, இல்லைங்கிறியே?” –மாமியார் இரைவாள்! “நிறைந்த வீட்டில் இல்லைனே சொல்லக்கூடாது!” –அறிவுரை கூறுவாள்!

பல வீடுகளில் இன்றும் இச் சத்தத்தைக் கேட்கலாம்!

தமிழர்களிடம் வேரோடிப்போயிருந்த ஒரு நேர்மறைப் (Positve approach) பண்பின் அடையாளம் இது!

அதைத்தான் தொல்காப்பியம் பதிவு செய்துள்ளது!

* ** *

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 22, 2013 11:23 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்
இல்லை எனாத இனிய வாக்கியம்

நன்றிகள் கோடி.

[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jan 23, 2013 10:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (16)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“வினைபயன் மெய்யுரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம் ” (உவமவியல் 1)

-இதில்,தொல்காப்பியர் ,உவமைகள் தோன்றுவதற்குரிய நான்கு வகைகளைக் குறிக்கிறார்.அந் நான்கு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்:-

1.வினை - ‘அவள் குயில்போலப் பாடுகிறாள்’

2. பயன் - ‘கணினி போலப் புள்ளி விவரங்களை வைத்திருக்கிறானே’

3.மெய் - ‘நெல்லி இலைபோல நெடுக வளர்ந்த சாமி’

4. உரு - ‘நறுக்கிய மாம்பழம் போலச் சிவந்த பொண்ணு’

1.‘வினை’ என்பது செயலைக் குறிக்கும். ‘அவர் பேச்சு மடை திறந்த வெள்ளம்போல இருக்கும்’-என்பதில் வெள்ளத்தின் செயலும்(விரைவும்) பேச்சின் செயலும் ஒப்பிடப்படுகின்றன; அதனால் இந்த உவமை, ‘வினை உவமை’.

2. ‘பயன்’ என்பது ஏதாவது ஒன்று தரும் பயனைஅல்லது சிறப்பை ஒப்பிடுவது. ‘எம் .கே.டி. குரல் தங்கக் குரல்!’- என்பதில் தங்கத்தின் சிறப்பு அவரது குரலுக்கு ஒப்பிடப்படுகிறது.

3.‘மெய்’ என்பது உடலைக் குறிக்காது! மெய் = வடிவம் (shape).

‘பையனுக்கு என்னா சட்டை போட்டிருக்கிறே? சர்க்கஸ் கோமாளி மாதிரி!’- இதில்
இருவரது உடைகளும் வடிவத்தில் ஒப்பிடப்படுகின்றன.

4. ‘உரு’ என்பது உருவத்தைக் குறிக்காது! உரு = நிறம் (colour).

‘வாடாமல்லி நிறத்தில் சேலை வாங்கினாள்!’- இதில்,பூவின் நிறமும் சேலை
நிறமும் ஒப்பிடப்படுகின்றன.

மேலை நூற்பாவின் சிறப்பு யாதெனில், இந்த நான்கு அடிப்படைகளில் அல்லாது ,உவமை தோன்றுவதற்கென ,வேறொரு அடிப்படையை நம்மால் சொல்லமுடியாது! நீங்கள் ஏதாவது ஓர் உவமையைச் சொல்லிப்பாருங்கள்;அது இந்த நான்கினுக்குள்ளே அடங்குவதாகத்தான் இருக்கும்!

தொல்காப்பியர் ,‘போல’, ‘புரைய’,‘ஒப்ப’ முதலிய பல உவம உருபுகளைத் தந்துள்ளார்;இன்னும் பலவற்றைச் சேர்த்துக்கொள்ளவும் இடம் வைத்துள்ளார்.எனவே ,‘மாதிரி’, ‘கணக்கா’ முதலிய வழக்காட்சி உவம உருபுகளையும் நாம் கொள்ளலாம்.

* ** *
[b]

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

PostTHIYAAGOOHOOL Thu Jan 24, 2013 8:25 pm

தமிழ் களஞ்சியம் என்பது இது போன்ற பதிவுகளில் அறிய முடிகிறது. நன்றி அய்யா. தொடருங்கள். தொடர் 16 இரண்டு முறை இடம் பெற்றுள்ளது.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 24, 2013 9:09 pm

[b] தொடத் தொடத் தொல்காப்பியம் (17)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே” (எச்சவியல் 54)

- இந்நூற்பாவில் , ‘செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்’
என்றாரல்லவா? இந்த வினைச் சொல் வடிவத்தினைப் பயன்படுத்திய சில தொடர்களைக் காண்போம்:-

1.எதற்கும் இணங்கமாட்டாய் !

2.நீ போகமாட்டாய் அப்படித்தானே?

3.பாடச் சொன்னால் பாடமாட்டாய்!

4. கேட்கும்போது தரமாட்டாய் !

இவற்றில் வந்துள்ள வினைகள் ‘செய்யாய்’ எனும் முன்னிலைகளே.பொருள் – எதிர்மறைப் பொருளே.

ஆனால் உடன்பாட்டுப் பொருளிலும் ‘செய்யாய்’ எனும் வினை வரும் என்று விளக்குகிறார் தொல்காப்பியர்.

1. ‘நீ எனக்கு அருளாய் ஆண்டவனே’ – இத்தொடரில் ‘அருளாய்’ என்ற சொல் உடன்பாட்டுப் பொருளில்தான் வந்துள்ளது; ‘நீ எனக்கு அருள்க ஆண்டவனே’ என்பதே பொருள்.

2. ‘வாராய் நீ வாராய்’ – இத் தொடருக்கு ‘வருக நீ வருக’ என்பதே பொருள்;உடன்பாட்டுப் பொருள்தான் இதிலும் உள்ளது.

3. ‘போதாய் நீயே’- எனில் ‘போவாய் நீயே’ என்பதே பொருள்; பொருள் – உடன்பாட்டுப் பொருள்.

மேலை முன்னிலை வினைகளோடு ‘பிள்ளாய்’, ‘தங்காய்’ என்பவற்றைச் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது! இவைகள் முன்னிலை வினைகள் அல்ல ! விளியேற்ற பெயர்கள்! :-

பிள்ளாய் != பிள்ளையே!

தங்காய் ! = தங்கையே !

‘நல்ல தங்காள்’ என்பதிலுள்ள ‘தங்காள்’?

இது விளிப்பெயர் அல்ல!

தங்காள் = தங்கை

‘மக்காள்’?

‘மக்காள்’ = மக்களே ; விளிப்பெயர்.

இத்தகைய நுணுக்கங்களையெல்லம் நாம் காணுவதற்கு ஆதாரம் தொல்காப்பியம்தானே?
* * *

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 24, 2013 9:31 pm

கருத்து வழங்கிய ச.சந்திரசேகரன்,யினியவன்,த்யகூஹூல் ஆகியோர்க்கு நன்றி! நன்றி!

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 25, 2013 9:01 am

Dr.S.Soundarapandian wrote: தொடத் தொடத் தொல்காப்பியம் (16)
உவமைகள் விளக்கம் மிக நன்று.
"வாழைப்பழத்தை உரித்து வாயில் வைப்பது போல் உங்களின் தொல்காப்பிய விளக்கங்கள் உள்ளன " - இந்த உவமை நான்கில் எதில் சேரும்? விளக்கம் தர வேண்டுகிறேன்.
Dr.S.Soundarapandian wrote:

தொடத் தொடத் தொல்காப்பியம் (17)
பாவாய் - விளியேற்றப்பெயர்
சரிதானே ஐயா.

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 3 of 84 Previous  1, 2, 3, 4 ... 43 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக