புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10 
2 Posts - 4%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 16 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 16 of 84 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 50 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 20, 2013 7:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (107)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முன் ‘ஏழ்’ தொடர்கிறது ! :-

“அளவு நிறையு மெண்ணும் வருவழி
 நெடுமுதல் குறுகலு முகரம் வருதலும்
கடிநிலை யின்றே யாசிரி யர்க்க”           (புள்ளி மயங்கியல் 94)

‘ஏழ்’ எனும் எண்ணுப் பெயருடன் , அளவுப் பெயரும் , நிறைப் பெயரும் , எண்ணுப் பெயரும் வந்து புணர்ந்தால் எப்படிப் புணரும் என்று கூறுகிறார் தொல்காப்பியர் !

‘நெடுமுதல்  குறுகலும்’  -  நெடில் குறிலாக மாறும்; ‘ஏழ்’ என்பது                                                                                           ‘ஏழ்’ ஆகும் !

‘உகரம் வருதல்’  -  உகரச் சாரியை     தோன்றும் ; ‘எழ்’ என்பது ‘எழு’
ஆகும்!


இவை இப்படி அமைகின்றன ! :-

ஏழ் + கலம்  =  எழ் கலம்  (நெடுமுதல் குறுகியது)
எழ் + கலம்  = எழு கலம் (உகரச் சாரியை தோன்றியது)

ஏழ் + சாடி  =  எழ் சாடி  (நெடுமுதல் குறுகியது)
எழ் + சாடி  = எழு சாடி (உகரச் சாரியை தோன்றியது)

ஏழ் + தூதை  =  எழ் தூதை  (நெடுமுதல் குறுகியது)
எழ் + தூதை  = எழு தூதை (உகரச் சாரியை தோன்றியது)

ஏழ் + பலம்  =  எழ் பலம்  (நெடுமுதல் குறுகியது)
எழ் + பலம்  = எழு பலம் (உகரச் சாரியை தோன்றியது)

ஏழ் + மூன்று  =  எழ் மூன்று  (நெடுமுதல் குறுகியது)
எழ் + மூன்று  = எழு மூன்று   (உகரச் சாரியை தோன்றியது)

ஏழ் + நான்கு  =  எழ் நான்கு  (நெடுமுதல் குறுகியது)
எழ் + நான்கு  = எழு நன்கு (உகரச் சாரியை தோன்றியது)

‘எழு கலம்’ என்பது , ‘ஏழாகிய கலம்’ என்று விரிவதால் , இஃது அல்வழிப் புணர்ச்சி !

எண்ணுப் பெயரைப் பொறுத்தவரை , ‘ஏழ்’ என்பது ‘எழு’ என  மாறுவதே பொருட் குழப்பத்தை நீக்கும் !

‘எழு மூன்று வயது அவளுக்கு’ என்றால் , அவளுக்கு வயது 21 என்று விளங்குகிறது ! ‘ஏழ்’உடன் நேரடியக  ‘உம்’ சேர்ந்து ‘ஏழு’  ஆகி ,  ‘ஏழு மூன்று வயது’ என்றால் ,  “ஏழு வயதா ? மூன்று வயதா? ஒழுங்காச் சொல்லுய்யா !” என்று கேட்பர் ! குழப்பம் !

‘ஏழ்’ , ‘ஏழு’ ஆகியனவற்றில் ‘ஏழ்’ என்பதே தொன்மையான சொல்! ‘ஏழு’ என்பது அதன்பிறகு ஏற்பட்டது ! ஆனால் இரண்டுமே சரியான வடிவங்கள்தாம் !

“எத்தனை கலம் நெல் விற்றீர்கள் ?” என்றால்  ,“ஏழு கலம் விற்றேன்” என்றால் தவறு ஒன்றும் இல்லை ! இலக்கணமும் சரிதான் !

இன்றைக்கும் , ‘ஏழு கழுதை வயதாகுது !’ என்பதுதானே வழக்கு ?

‘ஏழு கலம்’ என்பதைக் கொள்ளும் அதே வேளையில் , ‘எழுகலம்’ என்பதையும் தள்ளவேண்டாம் என்றே தொல்காப்பியர் கூறுகிறார்!

தொல்காப்பியர் காலத்தில் , ‘ஏழ்’ என்பது புழக்கத்தில் இருந்ததா? ‘ஏழு’ என்பது புழக்கத்தில் இருந்ததா?

இரண்டுமே இருந்தன !

’ஏழு’ என்ற சொல்லைத் தொல்காப்பியர் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார் ! “ அப்பால் ஏழும்” (நூன் மரபு 4) , “நெட்டெழுத்து ஏழே” (மொழி மரபு 10) முதலிய பல இடங்களைக் காட்டலாம் !

புணர்ச்சிக்கு வரும்போதுதான் ‘ஏழ்’ , ‘எழ்’ ஆகிறது !

மேலை எடுத்துக்காட்டுகளில் ,

சாடி , தூதை – அளத்தல் (Quantity measurement)பெயர்கள் .
பலம் – நிறைப்  (Weight measurement )பெயர் .
மூன்று , நான்கு – எண்ணுப் பெயர்கள் (Numeral nouns)

‘சாடி’ வேறு , ‘மஞ்சாடி’ வேறு ! ‘மஞ்சாடி’ என்பது நிறைப் பெயர் ! ‘மஞ்சாடி’ என்பது மண் சாடி அல்ல !  ‘மஞ்சாடி’ என்பது மரத்தின் பெயர் . சிவப்பான அதன் ஒரு விதை , இரண்டு குன்றிமணி எடை உள்ளது என்று பொற்கொல்லர் பெருமக்கள் கூறுவர் !!

மேலே பார்த்த சான்றுகளில் , வல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட அளவுப் பெயர்களும் , எண்ணுப் பெயர்களும் வந்து புணர்ந்தன !இவ்விடத்தில்  இளம்பூரணர் , “வன் கணத்துப் பொருட் பெயர்க்கும் இம்முடிபு கொள்க” என்றார் !

இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-

ஏழ் + கடல் =  எழு கடல் (நெடுமுதல் குறுகி , உகரச் சாரியை பெற்றது)

ஏழ் + சிலை =  எழு சிலை (நெடுமுதல் குறுகி , உகரச் சாரியை பெற்றது)

                   ஏழ் + திசை =  எழு திசை (நெடுமுதல் குறுகி , உகரச் சாரியை பெற்றது)

                  ஏழ் + பிறப்பு =  எழு பிறப்பு (நெடுமுதல் குறுகி , உகரச் சாரியை பெற்றது)

இவையும் அல்வழிப் புணர்ச்சிகளே !

தொல்காப்பியத்தையும் (கி.மு.10ஆம் நூ.ஆ.), நன்னூலையும்(கி.பி.13ஆம் நூ.ஆ.) ஒப்பிட்டால் சொற்களின் முற்காலப் , பிற்கால வளர்ச்சிகளை அறியலாம் !

தொல்காப்பியர் ‘அக்கு’ச் சாரியையைக் கூறினால் , நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் ‘அ’கரச் சாரியையாக அதனைப் பேசுகிறார் !தொல்காப்பியர் ‘ஏழ்’ எனும் சொல்லை வைத்துபுணர்ச்சி பேச , நன்னூலார் ‘ஏழு’ என்ற வடிவத்தைக்கொண்டு விளக்குகிறார் !

இத்தகைய முற்காலப் , பிற்காலச் சொற்கள் செம்பதிப்புப் பணிக்கு (Critical Edition) மிகவும் தேவையானதாகும் ! ஒரு பழங்கால நூலைப் பதிப்பிக்கும்போது அதில் பழஞ் சொற்கள்தாமே இடம்பெறவேண்டும் ? ஓலைச் சுவடிகளைப் படியெடுத்தோர் இந்த நுணுக்கங்களைப் பார்ப்பதில்லை !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 21, 2013 12:12 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (108)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 ‘ழ்’ ஈறு தொடர்கிறது ! :-

“பத்தென் கிளவி யொற்றிடை  கெடுவழி
நிற்றல் வேண்டு மாய்தப் புள்ளி”    (புள்ளி மயங்கியல் 95)


‘பத்தென் கிளவி’ -  ‘பத்து’ எனும் சொல் !

‘ஒற்றிடை கெடுவழி’ – இடையே மெய்யெழுத்தானது கெடும்போது ; ‘பத்து’ , ‘பது’                
ஆகும்போது !

 ‘ நிற்றல் வேண்டும் ’  -  வரவேண்டும் !

‘ஆய்தப் புள்ளி’ – ஆய்தம் எனும் எழுத்து !

முன் நூற்பாவில் (புள்.94) , ‘ஏழ்’ பற்றி உரைத்ததால் , ‘பத்து’ என்பது ‘ஏழ்’ என்பதோடு புணரும் முறையைத் தொல்காப்பியர் உரைக்கிறார் !

அதன்படி ,

ஏழ் + பத்து = எழ் பத்து (நெடுமுதல் குறுகியது) எழ் + பத்து = எழு பஃது (உகரச் சாரியையும் ஆய்தமும் வந்தன)

அடுத்து ,

”ஆயிரம் வருவழி யுகரங் கெடுமே”  (புள்ளி மயங்கியல் 96)

என்கிறார் தொல்காப்பியர் !

இதில்   “ஏழ்  என்பது எப்போதுமே ‘எழ்’  ஆகும் என நினைக்காதீர்கள் ! ‘ஏழ்’ அப்படியே நின்றும் புணரும் ”என்கிறர் தொல்காப்பியர் !

ஏழ் + ஆயிரம் = எழாயிரம் ×
= ஏழாயிரம் √

“நூறூர்ந்து வரூஉ  மாயிரக் கிளவிக்குக்
கூறிய நெடுமுதல்   குறுக்க மின்றே”  (புள்ளி மயங்கியல் 97)

என்றார் !

‘நூறூர்ந்து வரும் ஆயிரம்’ – நூறு + ஆயிரம் = நூறாயிரம்

‘நெடுமுதல் குறுக்க மின்று’ -  ‘ஏழ்’ என்பது ‘எழ்’ ஆகாது !

அஃதாவது ,

ஏழ் + நூறாயிரம் = ஏழ் நூறாயிரம் √
ஆனால் , இளம்பூரணர் , தொல்காப்பியரின் நடையை வைத்து , “  ‘கூறிய’ என்றதனான் நெடுமுதல் குறுகி உகரம் பெற்று ‘எழுநூறாயிரம்’ என்றும் ஆகும் ! ” என்கிறார் !

மொத்தத்தில் ,

ஏழ் + நூறாயிரம் = ஏழ் நூறாயிரம் √
    = எழு நூறாயிரம் √

தொல்காப்பியரின் நடையை வைத்து இளம்பூரணர் ‘எழுநூறாயிரம் வரும் ’என்றாலும் , மொழிக் குழப்பத்தைத் தீர்க்க வல்லது தொல்காப்பியர் கூறிய ‘’ ஏழ் நூறாயிரம்
என்பதே !

‘எழு நூறாயிரம்’ என்றால் , ‘எழுநூறையும் ஆயிரத்தையும் அடுத்தடுத்து வைத்துக் (700, 1000)கூறுகிறாரா ?’ – குழப்பம் !

‘ஏழ் நூறாயிரம்’ எனில் , ‘ஏழாகிய நூறாயிரம்’ என்ற பொருள் கிட்டிவிடுகிறது ! ‘நூறாயிரம்’ என்ற தொகையை முறியாமல் காப்பாற்றுவது ‘ஏழ்’ எனும் பகுதியே !

மொழிக்குழப்பம் தடுக்கும் அருமையான இலக்கணக் கோட்பாட்டைத் (Grammatical theory) தொல்காப்பியத்தில் காணமுடிகிறது !

ஆனால் கட்டுக் கடங்காத மொழி வளர்ச்சி தமிழில் ஏற்பட ஏற்படத் , தவிர்க்க இயலாத பல இலக்கண நெகிழ்வுகள் ஏற்பட்டன எனலாம் !

மேல் நூற்பா இறுதியில் (புள். 96) , இளம்பூரணர் , “இன்னும் அதனானே , இயல்பு கணத்து முடிவு கொள்க; எழு ஞாயிறு , எழு நாள் என வரும்” என்கிறார் !


திடீரென்று ‘இயல்பு கணம்’ எங்கிருந்து வந்தது இவருக்கு ?

எங்கிருந்து என்றால் , இதே புள்ளி மயங்கியல் நூற்பா 94இலிருந்து வந்தது !
அந் நூற்பாவை முன்பே நாம் ஆய்ந்துள்ளோம் !
அதில் (புள்ளி மயங்கியல் 94) ‘எழு கடல்’ போன்ற வன்கண எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்புணர்ச்சிகளுக்கு விதி கூறப்பட்டுள்ளது !

அந்த விதியை , இந்த நூற்பாவால் (புள்.97), நெகிழ்க்கிறார் இளம்பூரணர் !

அஃதாவது ,

ஏழ் + ஞாயிறு = எழ் ஞாயிறு  (நெடுமுதல் குறுகுதல்)
எழ் + ஞாயிறு = எழு ஞாயிறு (உகரச் சாரியை)

ஏழ் + நாள் = எழ் நாள்  (நெடுமுதல் குறுகுதல்)
எழ் + நாள் = எழு நாள் (உகரச் சாரியை)
என வரும் !

மேலைக் காட்டுகளில் , ‘ஞாயிறு’ , ‘நாள்’  ஆகியவற்றில் முதல் எழுத்துகள் இயல்புகண எழுத்துகள் ஆம் !

எழு ஞாயிறு – தமிழ் மரபிலக்கணத்தில்  ‘வினைத் தொகை’ .
- ஆங்கில மரபிலக்கணத்தில் ‘Compound noun’ (இதனைக் ‘கூட்டுப்  
           பெயர்’ என்று நாம் பயன்படுத்தினால் தவறு இல்லை
!)
-. மொழியிலில் , Attributive + NP = Attributive Noun Phrase.

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 09, 2013 9:39 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (109)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ழ்’ ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்த நூற்பா !:-


“ஐயம்  பல்என  வரூஉ  மிறுதி
அல்பெய ரெண்ணு மாயிய னிலையும்”  (புள்ளி மயங்கியல் 98)

‘ஐ ,அம் , பல்  என  வரும் இறுதி   -  ’ஐ’என்றஎழுத்தைஇறுதியாகக்  கொண்ட   சொல் தாமரை                                                            ‘ ; ‘அம்’மை
                                                                               இறுதியாகக் கொண்ட சொல்   ‘வெள்ளம்’;
                                                                                      ‘பல்’லை இறுதியாகக் கொண்ட சொல்
                                                                                        ‘ஆம்பல்’  !

‘அல் பெயர்’        -        பொருட்  பெயர்  அல்லாத எண்ணுப் பெயர் !

‘ஆ  இயல் நிலையும்’  -  இயல்பாகப் புணரும்; அஃதாவது , நெடுமுதல் குறுகல்,
                              உகரச் சாரியை வருதல் இருக்காது !

ஏழ்  +  தாமரை =  ஏழ் தாமரை  (அல்வழிப் புணச்சி)

ஏழ்  +  வெள்ளம் =  ஏழ் வெள்ளம்  (அல்வழிப் புணச்சி)

ஏழ்  +  ஆம்பல் =  ஏழ் ஆம்பல்  (அல்வழிப் புணச்சி)

சில கணக்கு   நூற்களில் தாமரையைப்  ‘பதுமம்’ என்று போட்டிருப்பார்கள் ! இரண்டும் ஒன்றுதான் ! ‘தாமரை’ முதலான இவை குறிக்கும் எண் யாது ?

உரையாசிரியர் எவரும் விளக்கவில்லை !

                 பிற கணக்கு ஆய்வுகளிலிருந்து இவற்றின் தொகை விவரத்தை
வருமாறு விளக்கலாம் !

‘தாமரை’ என்பது -   ‘Hundred trillion’ ; தமிழில் ‘௰௲௲௱௱௲’ என்று குறிப்பர்.இதனைப்,

             ‘பத்தாயிரம் ஆயிரம் நூறுநூறாயிரம்’ எனப் படிக்கவேண்டும் !

                           எண்ணில், 100 000 000 000 000 என எழுதவேண்டும் .

                        தமிழில் ஆயிரத்திற்கு மேற்பட்ட எண்ணைக் குறிக்கக் குறியீடு கிடைக்கவில்லை! ஆகவேதான்  ௰ , ௱,  ௲   என்ற எண்களைக் கொண்டே பெரிய எண்ணையும் குறிப்பிட வேண்டியுள்ளது ! (௰ -  10 ;  ௱ – 100 ; ௲ - 1000)

‘வெள்ளம்’ என்பது -   ‘Ten quadrillion’  ; தமிழில் ‘௰௲௲௲௲௲’ என்று குறிப்பர்.இதனைப், ‘பத்தாயிரம் ஆயிரம் ஆயிரம்  ஆயிரமாயிரம்’ எனப் படிக்கவேண்டும் !

எண்ணில், 10 000 000 000 000 000 என எழுதவேண்டும் .

  ‘ஆம்பல்’ என்பது -   ‘Hundred quadrillion’  ; தமிழில் ‘௱௲௲௲௲௲’ என்று குறிப்பர்.இதனைப், ‘நூறாயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரமாயிரம்’ எனப் படிக்கவேண்டும் ! 1017  எனவும் எழுதலாம்.

எண்ணில், 100 000 000 000 000 000 என எழுதவேண்டும் .
‘நூறாயிரம்’ , ‘ஆயிரமாயிரம்’ – இவையெல்லாம் குழப்பம் தருவன !

எனவேதான் , சுருக்கமாகத் , ‘தாமரை’ போன்ற சொற்களால் தமிழர்கள் குறித்தனர் !
சுருக்கமாகக் குறித்ததுதான் தவறாயிற்று ! விரிவாகவே வைத்திருந்தால் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கும் !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 09, 2013 11:26 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (110)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ழ்’ – ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்த நூற்பா !:-

“உயிர்முன் வரினு மாயிய றிரியாது”    (புள்ளி மயங்கியல் 99)

‘உயிர்முன் வரினும்’  -  உயிரெழுத்துகளை முதலாகக் கொண்ட ‘அகல்’ , ‘உழக்கு’ , ‘ஒன்று’ , ‘இரண்டு’ முதலிய சொற்கள் ‘ஏழ்’ என்பதன் முன் வந்தாலும் !

               ‘ஆயியல் திரியாது’ – நெடுமுதல் குறுகலோ , உகரச் சாரியை வருதலோ இல்லாது , இயல்பாகப் புணரும் !

ஏழ் + அகல் = எழு வகல் ×
                          = ஏழகல் √        (அல்வழிப் புணர்ச்சி)
   
ஏழ் + உழக்கு = எழு வுழக்கு ×
                            = ஏழுழக்கு √        (அல்வழிப் புணர்ச்சி)

ஏழ் + ஒன்று = எழு வொன்று ×
                          = ஏழொன்று √        (அல்வழிப் புணர்ச்சி)

ஏழ் + இரண்டு = எழு விரண்டு ×
                                = ஏழிரண்டு √        (அல்வழிப் புணர்ச்சி)

அகல் – முகத்தல் அளவை (Mesurement of capacity)
உழக்கு – 1/8  படி

அடுத்த சொல் ‘கீழ்’ !

மேலான இதன் புணர்ச்சியைப் பார்ப்போம் ! :-


 “கீழென் கிளவி யுறழத் தோன்றும்”   (புள்ளி மயங்கியல் 100)

‘கீழ் என் கிளவி’  -  ‘கீழ்’   எனும் சொல் !

‘உறழத் தோன்றும்’  -  இப்படியும் வரும் , அப்படியும் வரும் ! வல்லொற்றுப்
                                     பெற்றும் வரும் , பெறாதும் வரும் !

கீழ் + குளம் = கீழ் குளம்  √ (வேற்றுமைப் புணர்ச்சி)
                        =  கீழ்க் குளம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இந்த இடத்து உரையில் இளம்பூரணர், சில கூடுதல் செய்திகளை வரைகிறார் !:-

“  ‘தோன்றும்’  என்றதனான் , நெடுமுதல் குறுகாது உகரம் வருதலும் கொள்க . [ஆங்கு] இயைபு வல்லெழுத்து இவ்வோத்தின் புறனடையான் வீழ்க்க” .

இதன்படி வருவன !:-

கீழ் + குளம் = கீழு குளம்  (  ‘நெடுமுதல் குறுகாது உகரம் வருதலும்’)(வேற்றுமைப்
புணர்ச்சி)

கீழ் + சேரி = கீழு சேரி  (  ‘நெடுமுதல் குறுகாது உகரம் வருதலும்’)(வேற்றுமைப் புணர்ச்சி)

                  கீழ் + தோட்டம் = கீழு தோட்டம்  (  ‘நெடுமுதல் குறுகாது உகரம் வருதலும்’)    (வேற்றுமைப் புணர்ச்சி)

கீழ் + பாடி = கீழு பாடி  (  ‘நெடுமுதல் குறுகாது உகரம் வருதலும்’)(வேற்றுமைப் புணர்ச்சி)

- இந்தப் புணர்ச்சிகள் இப்போது , பெரும்பாலும் , வழக்கில் இல்லை !

வரலாற்று முறையில் தமிழ்ப் புணர்ச்சிகளை ஆய்வோர்க்கு (Historical Grammar)இந்த விவரங்கள் தேவையானவையே !

மேல் புணர்ச்சிகள் , ‘கீழுக் குளம் , கீழுச் சேரி, கீழுத்தோட்டம் , கீழுப் பாடி’ என்றெல்லாம் வல்லொற்றுப் பெறாவா?

இதற்கு விடை , மேல் இளம்பூரணர் உரையில் உள்ளது ! அவர்தான் , “இயைபு வல்லெழுத்து இவ்வோத்தின் புறனடையான் வீழ்க்க !” என்று சொன்னாரே ?

அஃதாவது, புள்ளி மயங்கியல் நூற்பா 110தான் , இளம்பூரணர் குறித்த ‘புறனடை’ !

அதன்படி , வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘விழன் குளம்’ என்று வருமே தவிர , ‘விழற் கூளம்’ என வராது என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டுத் தந்துள்ளார் !அந்த விதியை இங்கும் (புள்.100) இணைத்து , ‘கீழு குளம் , கீழு சேரி , கீழு தோட்டம் , கீழு பாடி’ என்றே கொள்க என்பதே இளம்பூரணர் உரை !

மேல் இளம்பூரணர் உரை நடுவே , ‘[ஆங்கு] ’ என்று பகர அடைப்புக்குள் போட்டிருந்ததைக் கவனித்தீர்களா?  

இவ்வாறு பகர அடைப்புக்குள் இருப்பவை , மூலத்தில் இல்லாது பதிப்பாசிரியரால் போடப்பட்டவை என்று விளங்கிக் கொள்ளவேண்டும் !

சுவடிப் பதிப்பில்  (Editing of Manuscripts) , குறிக்கத் தக்கது இது!

                                    ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 09, 2013 12:21 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (111)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33


எழுத்ததிகாரத்துப் புள்ளி மயங்கியலில் இதுவரை ‘ழ்’ ஈற்றுச் சொற்களின் புணர்ச்சிகளை ஆய்ந்தோம் !

இப்போது , ‘ள்’ ஈறு !

ஒன்பது நூற்பாக்களில் ‘ள்’ ஈர்றுச் சொற்புணர்ச்சிகளைத் தொல்காப்பியர் விளக்குகிறார் !

முதலாவது நூற்பா !:-

“ளகார  விறுதி  ணகார  வியற்றே”     (புள்ளி மயங்கியல் 101)
 

‘ளகார இறுதி’  - ‘ள்’ஐ ஈறாகக் கொண்டு முடியும் சொற்கள்!

‘ணகார இயற்றே’  -  ‘ண்’ஐ  ஈறாகக் கொண்டு முடிந்த சொற்களைப் போலப் புணரும் !

இப்போது , ‘ண்’ஐ  ஈறாகக் கொண்டு முடியும் சொற்புணர்ச்சி விதியை நாம் தேடிப் பிடிக்க வேண்டும் !

புள்ளி மயங்கியல் நூற்பா 7தான் அது !

அதன்படி (புள்.7),

மண் + குடம் = மட் குடம் (வேற்றுமைப் புணர்ச்சி)

இதே விதிப்படிக் கீழ்வரும் புணர்ச்சிகள் அமையும் ! :-

முள் + குறை = முட் குறை (வேற்றுமைப் புணர்ச்சி)
முள் + சிறை = முட் சிறை (வேற்றுமைப் புணர்ச்சி)

முள் + தலை = முட் டலை (வேற்றுமைப் புணர்ச்சி)

முள் + புறம் = முட் புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)

- இந்த நான்கும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்கே
சான்றுகள்!  
அப்படியானால் மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் ?

                                       அதற்கு வேறு விதி ! :-

                        “மெல்லெழுத்  தியையின்  ணகார  மாகும்” (புள்ளி மயங்கியல் 102)

                                        இதன்படி அமையும் புணர்ச்சிகள் ! :-
முள் + ஞெரி = முண் ஞெரி  (வேற்றுமைப் புணர்ச்சி)
முள் + நுனி = முண்ணுனி  (வேற்றுமைப் புணர்ச்சி)
முள் + முறி = முண் முறி  (வேற்றுமைப் புணர்ச்சி)

இந்த இடத்தில் , இளம்பூரணர் , “அல்வழிக்கும் இம் முடிபு கொள்க” என்கிறார் !  இதற்கு அவர் கூறும் காரணம் , “அல்வழியது எடுத்துக் கோடற்கண் வைத்தலின்” என்பதாகும் !

                                        இதன் பொருள் ?

                                          வேற்றுமைப் புணச்சி கூறி முடிந்ததும் , அல்வழிப் புணர்ச்சி கூறத் தொடங்கும் இடத்தில்  வைத்துத் தொல்காப்பியர் கூறியுள்ளதால் , அல்வழி முடிபையும் கொள்ளலாம் என்பது இளம்பூரணர் கூறவந்தது !
             
                                          எடுத்துக் கோடற்கண் – தொடங்கும் இடத்தில் .
இதன்படி ,
முள் + ஞெரிந்தது = முண் ஞெரிந்தது (அல்வழிப் புணர்ச்சி)
முள் + நீண்டது = முண் ணீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
முள் + மாண்டது = முண் மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)
எனப் புணரும் !
‘தாள்’ (Paper) என்ற வேறு ளகர ஈற்றுச் சொல்லைக் கொண்டு கூறுவதானால் ,
தாள் + சுவடி = தாட்  சுவடி (வேற்றுமைப் புணர்ச்சி)
தாள் + நீளமானது = தா ணீளமானது (அல்வழிப் புணர்ச்சி)

                                 ‘முட் குறை’ யைப் பார்த்தோமல்லவா?

                                     தமிழ் மரபிலக்கணத்தில் இது – 7ஆம் வேற்றுமைத் தொகை. ‘முள்ளின் கண் குறை’ என்று விரியும்போது ‘கண்’ தலையை நீட்டுகிறது பார்த்தீர்களா? அதை ‘லபக்’கென்று பிடித்து ஒரு கைக்குட்டையில் வைத்துக்கொள்ளவேண்டும்! அந்த 7ஆம் வேற்றுமை உருபை வைத்துத்தான் நாம் ‘7ஆம் வேற்றுமைத் தொகை’என்கிறோம்!

                                   மொழியியலில் ,  ‘முட் குறை’யை – ‘Locative noun + Noun ’ என்று எழுதுவார்கள் !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 09, 2013 12:59 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (112)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  ‘ள்’ ஈறு தொடர்கிறது ! :-

                                     “அல்வழி யெல்லா முறழென மொழிப” (புள்ளி மயங்கியல் 103)

                                        அஃதாவது , ‘ள்’ ஈற்றுச் சொற்கள் , அல்வழிப் புணர்ச்சிகளில் , ஈறு திரிபு பெற்றும் , திரிபு பெறாது இயல்பாயும் புணரும் !

                                       முள் + கடிது = முள் கடிது √ (இயல்பு) (அல்வழிப் புணர்ச்சி)
= முட் கடிது √ (திரிபு ) (அல்வழிப் புணர்ச்சி)

                                       முள் + சிறிது = முள் சிறிது √ (இயல்பு) (அல்வழிப் புணர்ச்சி)
= முட் சிறிது √ (திரிபு ) (அல்வழிப் புணர்ச்சி)

                                       முள் + தீது = முள் தீது √ (இயல்பு) (அல்வழிப் புணர்ச்சி)
= முட்  டீது √ (திரிபு ) (அல்வழிப் புணர்ச்சி)

                                         முள் + பெரிது = முள் பெரிது √ (இயல்பு) (அல்வழிப் புணர்ச்சி)
= முட்  பெரிது √ (திரிபு ) (அல்வழிப் புணர்ச்சி)

                                           மேலே வந்த ‘உறழ்ச்சி’ அல்வழிப் புணர்ச்சிகளுக்குத்தான் ! தொல்காப்பிய விதி (புள். 103) இதுதான் !

                                        ஆனால், இளம்பூரணர் , “குணவேற்றுமைக் கண்ணும் இவ் வுறழ்ச்சி கொள்க” என்கிறார் தம் உரையில் !

                                            குணப் பெயர் -  பண்புப் பெயர் (Abstract noun) .

                                           ‘ள்’ ஈற்றுச் சொற்களுடன் , குணப்பெயர்கள் வந்து சேர்ந்தால் , அவற்றிலும் மேற்சொன்ன ‘உறழ்ச்சி’ இருக்கும் என்பதே இளம்பூரணர் கூறியது ! :-

  முள் + குறுமை = முள் குறுமை √   (வேற்றுமைப் புணர்ச்சி)
= முட் குறுமை    √   (வேற்றுமைப் புணர்ச்சி)

முள் + சிறுமை = முள் சிறுமை √   (வேற்றுமைப் புணர்ச்சி)
= முட்  சிறுமை    √   (வேற்றுமைப் புணர்ச்சி)

                      முள் + தீமை = முள் தீமை √   (வேற்றுமைப் புணர்ச்சி)
= முட்  டீமை    √   (வேற்றுமைப் புணர்ச்சி)

  முள் + பெருமை = முள் பெருமை √   (வேற்றுமைப் புணர்ச்சி)
= முட்  பெருமை    √   (வேற்றுமைப் புணர்ச்சி)

  கோள் + கடுமை = கோள் கடுமை √   (வேற்றுமைப் புணர்ச்சி)
= கோட் கடுமை    √   (வேற்றுமைப் புணர்ச்சி)

மேலும் இளம்பூரணர் ,  “இன்னும் அதனானே , உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின் முடிபுங் கொள்க’’ என்கிறார் !

                              உருபு – வேற்றுமை உருபு (Case marker)

                              இளம்பூரணர் தந்த ’அதோள் கொண்டான்’ முதலிய எடுத்துக்காட்டுச் சொற்களை அவரின் மேலைக் கருத்துடன் ஆயலாம் !

                    அதோள் – அவ்விடத்து .

                   ‘அதோள் கொண்டான்’ என்பதில் , வேற்றுமை உருபு எதுவும் இல்லை !

                     ஆனால் ,  ‘அவ்விடத்தில் கொண்டான்’ என்ற பொருளைப் பெறமுடிகிறது ! ‘உருபு வாராது , உருபின் பொருள் வருவது’ என்பது இதுதான் ! இப்படி வருமிடங்களில் , ‘ள்’ ஈற்றில் திரிபு வரும் என்கிறார் இளம்பூரணர் ! :-

                    அதோள் + கொண்டான் = அதோட்  கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)
இதோள் + கொண்டான் = இதோட்  கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)
 உதோள் + கொண்டான் = உதோட்  கொண்டான் (வேற்றுமைப் புணர்ச்சி)

அதோள் + சென்றான் = அதோட்  சென்றான் (வேற்றுமைப் புணர்ச்சி)
இதோள் + சென்றான் = இதோட்  சென்றான் (வேற்றுமைப் புணர்ச்சி)
 உதோள் + சென்றான் = உதோட்  சென்றான் (வேற்றுமைப் புணர்ச்சி)

அதோள் + தந்தான் = அதோட்  தந்தான் (வேற்றுமைப் புணர்ச்சி)
இதோள் + தந்தான் = இதோட்  தந்தான் (வேற்றுமைப் புணர்ச்சி)
 உதோள் + தந்தான் = உதோட்  தந்தான் (வேற்றுமைப் புணர்ச்சி)
அதோள் + போயினான் = அதோட்  போயினான் (வேற்றுமைப் புணர்ச்சி)
இதோள் + போயினான் = இதோட்  போயினான் (வேற்றுமைப் புணர்ச்சி)
 உதோள் +போயினான் = உதோட்  போயினான் (வேற்றுமைப் புணர்ச்சி)

‘அதோள்’ , ‘இதோள்’ முதலியன இன்று நம் வழக்கில் இல்லை!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 09, 2013 9:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (113)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33


அல்வழிப் புணர்ச்சியில் , ‘முள் + தீது = முள் தீது ; முட்டீது’ ஆகிய இரு வழிகளிலும் புணரும் என்று முன் கட்டுரையில் பார்த்தோம் !

இதே புணர்ச்சி , ‘முஃடீது’ என்றும் வரலாம் என்கிறார் அடுத்துத் தொல்காப்பியர் ! :-

“ஆய்த  நிலையலும் வரைநிலை யின்றே
தகரம் வரூஉங் காலை யான ”       (புள்ளி மயங்கியல் 104)

ஆகத் , தொல்காப்பியத்தின்படி  (புள். 103,104) ,

முள் + தீது = முள் தீது √   (அல்வழிப் புணர்ச்சி)
=முட் டீது √   (அல்வழிப் புணர்ச்சி)
=முஃ டீது √   (அல்வழிப் புணர்ச்சி)

ஆய்த எழுத்தின் பயன்பாடு இன்று அருகிவிட்டது !பழந் தமிழில் ஓரளவுக்குப் பயிற்சி இருந்தது !
தொல்காப்பிய முதல் நூற்பாவிலேயே ‘முப்பஃது’ என்றுதான் வருகிறது !
திருக்குறளில் ‘கஃசா’ வருகிறது  என்பது கப்சா அல்ல!
வரலாற்றில் ‘பஃறுளி’ ஆறு ஓடுகிறது ! (பல் + துளி= பஃறுளி).
இங்கே பார்த்த எல்லா ஆய்தங்களுமே ஆய்தக் குறுக்கங்களே(Shortened ஃ) !
ஆய்தக் குறுக்கத்திற்கு மாத்திரை ¼ ; முழு ஆய்தத்திற்கு மாத்திரை ½ .
ஆய்தம் ,உயிரெழுத்தா  மெய்யெழுத்தா?
இரண்டும் இல்லை !
தொல்காப்பியர் கருத்துப்படி , ஆய்தம் சார்பெழுத்து (நூன் மரபு 2)!
மொழியியலில் ஆய்தத்தை அரை உயிர் (Semi vowel) என்பர் ! ‘Liqiud’ என்பதும் இதுவே !
ஆய்தத்தின் பிறப்பை மொழியியலில் , ‘Voiceless  Velar Fricative’ எனக் குறிப்பர் !

‘ள்’ ஈற்றைத் தொடர்வோம் ! :-

                         “நெடியத  னிறுதி  யியல்பா  குநவும்
            வேற்றுமை யல்வழி வேற்றுமை  நிலையலும்
போற்றல் வேண்டு  மொழியுமா  ருளவே ”    (புள்ளி மயங்கியல் 105)

‘நெடியதன் இறுதி’  -   நெடில் எழுத்தின் அருகே வரும் ‘ள்’ ! ‘வாள்’ போன்ற சொல் !

‘இயல்பாகுந’  -  இயல்பாகப் புணரும் ; திரிபு இருக்காது !

‘வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையல்’  -  அல்வழிப் புணர்ச்சியில் வேற்றுமைப் புணர்ச்சி போலத் திரிபு அமைந்து !

‘போற்றல் வேண்டும்’ -  புணர்ச்சி நெறியைக் கைக்கொள்ள வேண்டும் !

இதன்படி ,

வாள் + கடிது = வாள் கடிது (இயல்பு) (அல்வழிப் புணர்ச்சி)
வாள் + சிறிது = வாள் சிறிது (இயல்பு) (அல்வழிப் புணர்ச்சி)
வாள் + தீது = வாள் தீது (இயல்பு) (அல்வழிப் புணர்ச்சி)
வாள் + பெரிது = வாள் பெரிது (இயல்பு) (அல்வழிப் புணர்ச்சி)


கோள் + கடிது = கோள் கடிது (இயல்பு) (அல்வழிப் புணர்ச்சி)
கோள் + சிறிது = கோள் சிறிது (இயல்பு) (அல்வழிப் புணர்ச்சி)
கோள் + தீது = கோள் தீது (இயல்பு) (அல்வழிப் புணர்ச்சி)
கோள் + பெரிது = கோள் பெரிது (இயல்பு) (அல்வழிப் புணர்ச்சி)

தோள் + கடிது = தோள் கடிது ×
= தோட்  கடிது √  (திரிபு) (அல்வழிப் புணர்ச்சி)
தோள் + சிறிது = தோள் சிறிது ×
= தோட்  சிறிது √  (திரிபு) (அல்வழிப் புணர்ச்சி)
தோள் + தீது = தோள்  தீது ×
= தோட்  டீது √  (திரிபு) (அல்வழிப் புணர்ச்சி)
தோள் + பெரிது = தோள் கடிது ×
= தோட் பெரிது √  (திரிபு) (அல்வழிப் புணர்ச்சி)


நாள் + கடிது = நாள் கடிது ×
= நாட்  கடிது √  (திரிபு) (அல்வழிப் புணர்ச்சி)
நாள் + சிறிது = தோள் சிறிது ×
= நாட்  சிறிது √  (திரிபு) (அல்வழிப் புணர்ச்சி)
நாள் + தீது = நாள்  தீது ×
= நாட்  டீது √  (திரிபு) (அல்வழிப் புணர்ச்சி)
நாள் + பெரிது = நாள் கடிது ×
= நாட்  பெரிது √  (திரிபு) (அல்வழிப் புணர்ச்சி)


இளம்பூரணர் , தம் உரையில் , “உதளங் காய் ; செதிள் , தோல் , பூ என அம்முப் பெற்று முடிவன கொள்க” என்கிறார் !   :-

உதள் + காய் = உதள் காய் ×
= உதட்  காய் ×
= உதளங் காய் √ (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

உதள் + செதிள் = உதள் செதிள் ×
= உதட்  செதிள் ×
= உதளஞ் செதிள் √ (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)


உதள் + தோல் = உதள் தோல் ×
= உதட்  டோல் ×
= உதள ந் தோல் √ (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

உதள் + பூ = உதள் பூ ×
= உதட்  பூ ×
= உதளம்  பூ √ (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இதே புள்ளிமயங்கியல் நூற்பா 80இல் , ‘பூலங் கோடு’ என அம் சாரியை பெறும் புணர்ச்சியை நாம் பார்த்தோம் ! அந்த இடத்தில் இளம்பூரணர் ‘உதளங் கோடு’ பற்றிக் கூறியிருக்கலாமே? – ஐயம் !

நூற்பா 80 லகர  ஈறு பற்றியதாதலால் அங்கு கூறவில்லை !

சரி ! இந்த நூற்பாவில் (புள். 105) அல்வழிப் புணர்ச்சிகளைத்தானே கூறிவந்தார் ?; ஏன் ‘உதளங்காய்’ என வேற்றுமைப் புணர்ச்சி கூறவேண்டும் ?

இந்தப் பகுதி ளகர ஈற்றுப் பகுதி ! இப் பகுதிக்கு முன்பும் பின்பும் ‘உதள்’ பற்றிய புணர்ச்சி கூற இடம் இல்லை ! எனவேதான் இளம்பூரணர் இங்கேயே முடித்தார் !
‘உதள்’ என்பதற்கு உதள்மரம் என்ற ஒரு பொருளைத்தான் இளம்பூரணர் சுட்டினார் ! மரம் என்பதற்கு ஏற்பவே  ‘காய்’ , ‘பூ’ என்றெல்லாம் குறித்தார் !

‘உதள்’ என்றால் ‘ஆண் ஆடு ’ எனவும் ஒரு பொருள் உண்டு (தொல். மரபு. 47) . ( ஆண் ஆடு – கிடாய் ; Ram)

நச்சினார்க்கினியர் இதனைப் பிடித்துக்கொண்டார் ! பிடித்து ,  “உதள் என்பது யாட்டினை உணர்த்துங்கால் ,முற்கூறிய முடிபுகள்,  இருவழிக்கும் ஏற்றவாறே முடிக்க” என்றார் !

யாட்டினை – ஆட்டை

இருவழிக்கும் – வேற்றுமைப் புணர்ச்சிக்கும் , அல்வழிப் புணர்ச்சிக்கும் .

நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை  ‘இருவழியிலும்’ வருமாறு விளக்கலாம் ! :-

உதள் + கோடு = உதட்  கோடு (திரிபு) (வேற்றுமைப் புணர்ச்சி)

(கோடு – கொம்பு; Horn)

உதள் + கடிது = உதள் கடிது (இயல்பு ) (அல்வழிப் புணர்ச்சி)

உதள் + நன்று = உதணன்று (திரிபு) (அல்வழிப் புணர்ச்சி)

இளம்பூரணர் குறித்த ‘உதள்’ மரத்தைப் பார்க்க ஆசையா ?
இதுதான் உதள் மரம் ! :-
[You must be registered and logged in to see this link.]
 Courtesy – ntbg.org

உதள் மரத்திற்குக் ‘காட்டு மாமரம்’ என்றும் ஒரு பெயர் உண்டு ! இதன் காய் மாங்காய் போலவே இருக்கும் !இதன் பருப்பு விசத்தன்மை கொண்டது ! தற்கொலை செய்வோர் இதனை உண்பராம் ! இதனால் இம் மரத்திற்கே ‘தற்கொலை மரம்’ (Suicide tree) என்றும் பெயர் ! பூ , நறுமணம் உள்ளது. இதன் தாவரவியல் பெயர்-Cerbera odollam . இதன் தாயகம் இந்தியா என்கின்றனர் ! இங்கே தமிழர்கள் சுறுசுறுப்புக் காட்டவேண்டும் ! இம்மரம் முதலில் தமிழகத்தில் தோன்றியதா ? என்று ஆயவேண்டும் ! கீழே உதள் மரத்தின் பூவும் காய்களும் ! :-
(Couresy- Toptropicals.com)http://img41.imageshack.us/img41/1730/opr9.
[You must be registered and logged in to see this link.]




***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 10, 2013 2:40 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (114)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ள்’ ஈற்றில் அடுத்த நூற்பா !:-

“தொழிற்பெய  ரெல்லாந் தொழிற்பெய ரியல” (புள்ளி மயங்கியல் 106)

தொல்காப்பியக் கண்ணாமூச்சிகளில் இதுவும் ஒன்று !

முன் நூற்பாக்களைப் படித்தால்தான் இந் நூற்பா விளங்கும் !

‘தொழிற்பெயர் இயல’ – ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் போல !

அஃதாவது , ஞகார ஈற்றுத் தொழிற்பெயரான ‘உரிஞ்’ என்பது , வேற்றுமையில் , வல்லெழுத்து வரும்போது , ‘உரிஞுக் கடுமை’ என்றும் , அல்வழியில் , வல்லெழுத்து வரும்போது, ‘உருஞுக் கடிது’ என்றும் , வேற்றுமையில் , மெல்லெழுத்து வரும்போது , ‘உரிஞு மாட்சி’ என்றும் , அல்வழியில் மெல்லெழுத்து வரும்போது , ‘உரிஞு மாண்டது’ என்றும் , புள்ளி மயங்கியல் நூற்பாக்கள் 1,2 ஆகியவற்றால் விதித்தார் தொல்காப்பியர் !

அவற்றையே ‘ள்’ ஈற்றுக்கும் வைத்துக் கொள்க என்று இங்கு (புள். 106) குறிக்கிறார் அவர் !

இதன்படி ,

துள் + கடிது = துள்ளுக் கடிது (வன் கணம் புணர்ந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
துள் + சிறிது = துள்ளுச் சிறிது (வன் கணம் புணர்ந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
துள் + தீது = துள்ளுத் தீது (வன் கணம் புணர்ந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
துள் + பெரிது = துள்ளுப் பெரிது (வன் கணம் புணர்ந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

துள் + ஞான்றது = துள்ளு ஞான்றது (மென் கணம் புணர்ந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
துள் + நீண்டது = துள்ளு நீண்டது (மென் கணம் புணர்ந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
துள் + மாண்டது = துள்ளு மாண்டது (மென் கணம் புணர்ந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

துள் + வலிது = துள்ளு வலிது (இடைக் கணத்தில் வகரம் புணர்ந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

துள் + கடுமை = துள்ளுக் கடுமை (வன் கணம் புணர்ந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
துள் + சிறுமை = துள்ளுச் சிறுமை (வன் கணம் புணர்ந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
துள் + தீமை = துள்ளுத் தீமை (வன் கணம் புணர்ந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
துள் + பெருமை = துள்ளுப் பெருமை (வன் கணம் புணர்ந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

துள் + ஞாற்சி = துள்ளு ஞாற்சி (மென் கணம் புணர்ந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
துள் + நீட்சி = துள்ளு நீட்சி (மென் கணம் புணர்ந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
துள் + மாட்சி = துள்ளு மாட்சி (மென் கணம் புணர்ந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

துள் + வலிமை = துள்ளு வலிமை (இடைக் கணத்தில் வகரம் புணர்ந்தது)        
(வேற்றுமைப் புணர்ச்சி)

துள் – முதனிலைத் தொழிற்பெயர் ; மொழியியலில் , Verbal Noun Base .

‘துள்ளல்’ , ‘துள்ளுதல்’ – ஆகிய தொழிற் பெயர்களை நீங்கள் நினைத்துக்கொண்டால் , ‘துள்’ என்பது முதனிலைத் தொழிற்பெயர் என்பது விளங்கிவிடும் !

இந் நூற்பா (புள். 106) உரையில் , இளம்பூரணர் , “தொழிற் பெயர்கள் இருவழியும் இவ்வாறன்றிப் , பிறவாறு முடிவனவும் கொள்க!” என்கிறார் !

இரு வழியும் -  வேற்றுமையிலும் , அல்வழியிலும் .

இதற்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு பிரித்தெழுதலாம் ! :-

கோள் + கடிது = கோள் கடிது √  (அல்வழிப் புணர்ச்சி)
கோள் + கடிது = கோட் கடிது √  (அல்வழிப் புணர்ச்சி)

கோள் + சிறிது = கோள் சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)
கோள் + சிறிது = கோட்  சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

கோள் + தீது = கோள் தீது √  (அல்வழிப் புணர்ச்சி)
கோள் + தீது = கோட்  டீது √  (அல்வழிப் புணர்ச்சி)

கோள் + பெரிது = கோள் பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)
கோள் + பெரிது = கோட்  பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)


வாள் + கடிது = வாள் கடிது √  (அல்வழிப் புணர்ச்சி)
வாள் + கடிது = வாட் கடிது √  (அல்வழிப் புணர்ச்சி)

வாள் + சிறிது = வாள் சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)
வாள் + சிறிது = வாட்  சிறிது √  (அல்வழிப் புணர்ச்சி)

வாள் + தீது = வாள் தீது √  (அல்வழிப் புணர்ச்சி)
வாள் + தீது = வாட்  டீது √  (அல்வழிப் புணர்ச்சி)

வாள் + பெரிது = வாள் பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)
வாள் + பெரிது = வாட்  பெரிது √  (அல்வழிப் புணர்ச்சி)


கோள் + கடுமை = கோள் கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
கோள் + கடுமை = கோட்  கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

கோள் + சிறுமை = கோள் சிறுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
கோள் + சிறுமை = கோட்  சிறுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

கோள் + தீமை = கோள் தீமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
கோள் + தீமை = கோட்  டீமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

கோள் + பெருமை = கோள் பெருமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
கோள் + பெருமை = கோட்  பெருமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)


வாள் + கடுமை = வாள் கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
வாள் + கடுமை = வாட்  கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

வாள் + சிறுமை = வாள் சிறுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
வாள் + சிறுமை = வாட்  சிறுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

வாள் + தீமை = வாள் தீமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
வாள் + தீமை = வாட்  டீமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

வாள் + பெருமை = வாள் பெருமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
வாள் + பெருமை = வாட்  பெருமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)


ஆமாம் ! ‘வாள்’ என்பது பெயர்ச்சொல் (Noun) அல்லவா? இஃது எப்படித் தொழிற் பெயர் ஆகும் ? – ஐயம் !

இளம்பூரணர் இதற்கு விடை தருகிறார் ! -  “வாள் என்றது கொல்லுதலை” ! (புள்.106 உரை)

மொழியியலில் , ‘வாட் கடுமை’ என்பதை ‘Genitive Noun + Noun’ என்று பகுத்தாய்வர் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 10, 2013 10:06 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (115)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33


அடுத்து , ‘ள்’ ஈற்றில் , ‘இருள்’ என்ற சொல்லுக்கு வெளிச்சம் போடுகிறார் தொல்காப்பியர் ! :-

“இருளென் கிளவி வெயிலிய  னிலையும்” (புள்ளி மயங்கியல் 107)

இலக்கணத்தைச் சுவைபடத் தர வேண்டும் என்ற ஒரு எண்ணம் தொல்காப்பியருக்கு இருந்தமைக்கு இந்த இடம் சான்று !

‘இருள்’ எப்படிப் புணரும் என்றால் , ‘வெயில்’ போலப் புணரும் என்கிறார் ! முரண் தொடை (Antithesis) நயம் உள்ளது!

சரி ! ‘வெயில்’ பற்றி எங்கே சொன்னார் ?

புள்ளி மயங்கியல் நூற்பா 82இல் , வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘வெயில்’ எனும் ‘ல்’ ஈற்றுச் சொல் ,  ‘அத்து’ச்  சாரியையும் , ‘இன்’சாரியையும் பெறும் என்று ஏற்கனவே சொல்லியுள்ளார் ! அதனை இங்கு கொணர வேண்டும் !

கொணர்ந்தால் –
இருள் + அத்து + கொண்டான் = இருளத்துக் கொண்டான் (அத்துச் சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருள் + இன் + கொண்டான் = இருளிற் கொண்டான் (இன் சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)

இருள் + அத்து + சென்றான் = இருளத்துச் சென்றான் (அத்துச் சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருள் + இன் + சென்றான் = இருளிற் சென்றான் (இன் சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)

இருள் + அத்து + தந்தான் = இருளத்துத் தந்தான் (அத்துச் சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
இருள் + இன் + தந்தான் = இருளிற் றந்தான் (இன் சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)

இருள் + அத்து + போயினான் = இருளத்துப் போயினான் (அத்துச் சாரியை)(வேற்றுமைப்
புணர்ச்சி)
இருள் + இன் + போயினான் = இருளிற் போயினான் (இன் சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)

அடுத்துப் -  ‘புள்’ , ‘வள்’ ! :-

“புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல” (புள்ளி மயங்கியல் 108)

‘உரிஞ்’ என்ற தொழிற்பெயரை (புள். 1,2) நினைப் பூட்டுகிறார் தொல்காப்பியர் ! அதன்படிதான் ‘புள்’ , ‘வள்’ என்கிறார் அவர் !

இதன்படி –

புள் + கடிது = புள்ளுக் கடிது (உகரச் சாரியை)(அல்வழிப் புணர்ச்சி)
புள் + சிறிது = புள்ளுச் சிறிது (உகரச் சாரியை (அல்வழிப் புணர்ச்சி)
புள் + தீது = புள்ளுத்  தீது (உகரச் சாரியை (அல்வழிப் புணர்ச்சி)
புள் + பெரிது = புள்ளுப் பெரிது (உகரச் சாரியை (அல்வழிப் புணர்ச்சி)

புள் + ஞான்றது = புள்ளு ஞான்றது (உகரச் சாரியை)(அல்வழிப் புணர்ச்சி)
புள் + நீண்டது = புள்ளு நீண்டது (உகரச் சாரியை)(அல்வழிப் புணர்ச்சி)
புள் + மாண்டது = புள்ளு மாண்டது (உகரச் சாரியை)(அல்வழிப் புணர்ச்சி)

புள் + வலிது = புள்ளு வலிது (உகரச் சாரியை)(அல்வழிப் புணர்ச்சி)

வள் + கடிது = வள்ளுக் கடிது (உகரச் சாரியை)(அல்வழிப் புணர்ச்சி)
வள் + சிறிது = வள்ளுச் சிறிது (உகரச் சாரியை (அல்வழிப் புணர்ச்சி)
வள் + தீது = வள்ளுத்  தீது (உகரச் சாரியை (அல்வழிப் புணர்ச்சி)
வள் + பெரிது = வள்ளுப் பெரிது (உகரச் சாரியை (அல்வழிப் புணர்ச்சி)

வள் + ஞான்றது = வள்ளு ஞான்றது (உகரச் சாரியை)(அல்வழிப் புணர்ச்சி)
வள் + நீண்டது = வள்ளு நீண்டது (உகரச் சாரியை)(அல்வழிப் புணர்ச்சி)
வள் + மாண்டது = வள்ளு மாண்டது (உகரச் சாரியை)(அல்வழிப் புணர்ச்சி)

வள் + வலிது = வள்ளு வலிது (உகரச் சாரியை)(அல்வழிப் புணர்ச்சி)

புள் + கடுமை = புள்ளுக் கடுமை (உகரச் சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
புள் + சிறுமை = புள்ளுச் சிறுமை (உகரச் சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
புள் + தீமை = புள்ளுத்  தீமை (உகரச் சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
புள் + பெருமை = புள்ளுப் பெருமை (உகரச் சாரியை )(வேற்றுமைப் புணர்ச்சி)

புள் + ஞாற்சி = புள்ளு ஞாற்சி (உகரச் சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
புள் + நீட்சி = புள்ளு நீட்சி (உகரச் சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
புள் + மாட்சி = புள்ளு மாட்சி (உகரச் சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)

புள் + வலிமை = புள்ளு வலிமை (உகரச் சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)

இளம்பூரணர் உரையில் , “இரு வழியும் வேற்றுமைத் திரிபு எய்தி முடிவனவும் கொள்க”என்றார் !

இதற்கு அவர் தந்த சான்றுகளை வருமாறு விரிக்கலாம் ! :-

புள் + கடிது = புட் கடிது (அல்வழிப் புணர்ச்சி)
புள் + சிறிது = புட் சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
புள் + தீது = புட் டீது (அல்வழிப் புணர்ச்சி)
புள் + பெரிது = புட் பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

புள் + ஞான்றது = புண் ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
புள் + நீண்டது = புண் ணீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
புள் + மாண்டது = புண் மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)

புள் + வலிது = புள் வலிது (அல்வழிப் புணர்ச்சி)

புள் + கடுமை = புட் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
புள் + சிறுமை = புட் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி)
புள் + தீமை = புட்  டீமை  (வேற்றுமைப் புணர்ச்சி)
புள் + பெருமை = புட் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி)

புள் + ஞாற்சி = புண் ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
புள் + நீட்சி = புண் ணீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)
புள் + மாட்சி = புண் மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

புள் + வலிமை = புள் வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி)

இத்துடன் விட்டாரா இளம்பூரணர் ?

“பள் என்பதன்கண்ணும் , கள் என்பதன்கண்ணும் இரு வழியும் இவ்விரு முடிபு பெற்றவழிக் கொள்க” என்று கூறிச் சில சான்றுகளைத் தருகிறார் !
அவற்றை வருமாறு பிரித்து ஆயலாம் ! :-
பள் + கடிது = பள்ளுக் கடிது √  (அல்வழிப் புணர்ச்சி)
பள் + கடிது = பட்  கடிது √  (அல்வழிப் புணர்ச்சி)

பள் + கடுமை = பள்ளுக் கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
பள் + கடுமை = பட்  கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

கள் + கடிது = கள்ளுக் கடிது √  (அல்வழிப் புணர்ச்சி)
கள் + கடிது = கட்  கடிது √  (அல்வழிப் புணர்ச்சி)

கள் + கடுமை = கள்ளுக் கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)
கள் + கடுமை = கட்  கடுமை √  (வேற்றுமைப் புணர்ச்சி)

புள் -  பறவை (‘குடம்பை தனித் தொழியப் புள் பறந்தற்றே’)
பள் – ஒரு பண் ; பள்ளர் சாதியையும் குறிக்கும் .
கள் – கள்ளுதல் (திருடுதல்)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Aug 11, 2013 8:17 am

நன்றி ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 16 of 84 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 50 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக