புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_vote_lcapசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_voting_barசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_vote_lcapசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_voting_barசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_vote_lcapசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_voting_barசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_vote_lcapசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_voting_barசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_vote_lcapசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_voting_barசிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்"


   
   

Page 2 of 2 Previous  1, 2

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Jan 14, 2013 3:04 am

First topic message reminder :

சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்"

ஒரு பெரிய தனியார் துறை அலுவலகத்தில் எழுத்தர் பணியில் உள்ள நாதனின் கைப்பேசி அழைக்கவே எடுத்து "ஹலோ" என்றான்.
மறுமுனையில் அதே அலுவலகத்தின் வேறு கிளையில் வேலை பார்க்கும் எழுத்தர் கோபால்.
கோபால்: "ஹலோ, நாதன் நான்தான் கோபால் பேசறேன். சௌக்கியமா?" என்றான்.
நாதன்: நல்ல சௌக்கியம். என்ன கோபால்?
கோபால்: வேறு ஒன்றுமில்லை. நாளை முதல் உங்கள் அலுவலகத்திற்கு புதிய மேலாளர் வருவது தெரியுமா?
நாதன்: தெரியும். ஆனால், அவர் யார்? எப்படிப்பட்டவர்? போன்ற விவரங்கள் தெரியாது.
கோபால்: அவரைப் பற்றி நான் சொல்லவா?
நாதன்: உனக்கு எப்படித் தெரியும்?
கோபால்: அவர் நான் வேலைபார்க்கும் கிளையிலிருந்துதான் மாற்றலாகி உன் அலுவலகத்துக்கு வருகிறார்.
நாதன்: அப்படியா? ஆள் எப்படி?
கோபால்: வேலை செய்யும் ஒருவரையும் தொந்தரவு செய்ய மாட்டார்.
நாதன்: அப்படியா. ரொம்ப நன்றி. வேலை பார்க்கும்போது இடையிடையே தொந்தரவு செய்தால் நமக்கு வேலை பார்க்க சிரமமாக இருக்கும். அது இல்லையென்றால் போதும்.
கோபால்: ஆனால், அவரைப் பற்றி வேறு ஒரு செய்தி உள்ளது.
நாதன்: என்ன செய்தி? ஏதாவது விவகாரமான செய்தியா?
கோபால்: அவருக்கு வயது 28. கல்யாணமாகி 4-5 வருடங்கள் இருக்கும். ஒரு குழந்தை. ஆனால், விவாகரத்து ஆகிவிட்டது.
நாதன்: அடப்பாவமே. என்ன காரணம்?
கோபால்: காரணம் தெரியவில்லை. ஆனால், ஆள் ரொம்ப சகஜமாகப் பழகுவார். நன்றாகப் பேசுவார். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வார். குடும்பப் பிரச்சனையை நம்மிடம் காட்டிக்கொள்ள மாட்டார்.
நாதன்: அது போதும். அதுதான் நமக்குத் தேவை.
கோபால்: ஆனால், ஒரு பெண்ணை வாரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அலுவலகத்துக்கு அழைத்து வருவார்.
நாதன்: அய்யய்யோ. அப்புறம்.
கோபால்: அவள் அவருடைய அறையிலேதான் காலை முதல் மாலை வரை இருப்பாள்.
நாதன்: விவகாரமான ஆளாத்தான் இருப்பார் போல.
கோபால்: அறையில் எங்கு வேண்டுமோ செல்வாள். எதை வேண்டுமானாலும் எடுப்பாள்.
நாதன்: அவ்வளவு சுதந்திரமா கொடுத்திருக்கிறார் அவளுக்கு?
கோபால்: சில நேரம் அவர் மடியில் கூட உட்கார்ந்திருப்பாள்.
நாதன்: மடியிலா?
கோபால்: ஆமாம். நானே பார்த்திருக்கிறேன்.
நாதன்: நீங்கள் யாரும் எதுவும் கேட்பதில்லையா?
கோபால்: நம்மிடம் நன்றாக நடந்துகொள்ளுவதால், யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்.
நாதன்: பெண் ஊழியர்களிடம் எப்படி நடந்துகொள்வார்?
கோபால்: ரொம்ப நல்லமுறையில் நடந்துகொள்வார். ஒரு பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் இல்லாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டது.

நாதனுக்கு, கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அந்த மேலாளரை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதே எண்ணங்களோடு இரவு உறங்கிப்போனான். பொழுது விடிந்தது. அன்று திங்கட்கிழமை. அலுவலகம் புறப்பட்டான்.

அலுவலகத்தில், புதிய மேலாளர் வந்தார். அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சகஜமாகப் பேசினார். அனைவருக்கும் அவரை மிகவும் பிடித்துவிட்டது. நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.

மறுநாள், செவ்வாய்க் கிழமை. நாதனுடன் வேலை பார்க்கும் நண்பன் மேலாளரைப் பற்றி ரொம்ப புகழ்ந்துகொண்டிருந்தான்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.

அடுத்த நாள் புதன்கிழமை. மேலாளர் அனைவருக்கும் ஒரு நட்சத்திர உணவகத்தில் விருந்தளித்தார். அனைவரும் மகிழ்ந்தனர்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.

இன்று வியாழக்கிழமை. மேலாளருக்கு ஒரே புகழாரம்தான். பெண் ஊழியர்களும் புகழ்ந்தனர்.
நாதன் மனதுக்குள் "எல்லாம் வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" என்று நினைத்துக் கொண்டான்.

மறுநாள் விடிந்தது. வெள்ளிக்கிழமை. நாதன் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பினான். இன்று மட்டும் மேலாளர் அந்தப் பெண்ணை அழைத்துவந்தால் கண்டிப்பாக தலைமை அலுவலகத்துக்கு விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும். அவரை வேலையை விட்டே தூக்க வேண்டும் என்ற முடிவோடு புறப்பட்டான்.
வழியில் எதிர்பாராத விதமாக நாதனின் வாகனம் பழுதடைய, அலுவலகம் மிகத் தாமதமாக செல்லும்படி ஆகிவிட்டது.

கிட்டத்தட்ட 11 மணியளவில் அலுவலகம் அடைந்த நாதனிடம், நண்பன் "வாடா, என்ன தாமதம்? எனக் கேட்க,
நாதன்: வண்டி பழுதடைந்து விட்டது. இன்று அலுவலகத்தில் ஏதாவது விசேஷமா?
நண்பன்: ஆமாம். சார், அறையில் ஒரு புதிய விருந்தினர் வந்திருப்பது உனக்குத் தெரியாதா?
நாதன்: (மனதுக்குள் ) எல்லாம், அந்தப் பெண்ணாகத்தான் இருக்கும் என எண்ணியவாறே, "யார்?" எனக் கேட்க,
நண்பன்: நீயே போய் பார்.
நாதன்: மனதை சகஜ நிலைக்கு வரவழைத்துக் கொண்டு, மேலாளரின் அறையில் நுழைந்தான்.

அங்கு, அவன் கண்ட காட்சி, ஒரு மூன்று வயதுப் பெண் குழந்தை மேலாளரின் மடியில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது.
விசாரித்த போது, அது அவர் குழந்தை என்பதும், வெள்ளிக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை குழந்தை அவரோடு இருக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதும் தெரிந்தது.

அதே கோபத்தோடு, தனக்கு இந்த விஷயத்தை தவறான கோணத்தில் கைப்பேசியில் சொன்ன நண்பன் கோபாலனை கைப்பேசியில் அழைத்தான்.
கோபால் "என்னாடா, நல்லா ஏமாந்தியா?" எனக் கேட்க இருவரும் சிரித்து விட்டனர்.




சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 425716_444270338969161_1637635055_n

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 17, 2013 1:27 am

ராஜா wrote:
நல்லா இருக்கு , கொஞ்சமா ஓவரா பில்ட்அப் கொடுத்துட்டதால நம்ம ஈகரை உறவுகள் கண்டுபிடித்து விட்டார்கள் போல
இந்த வரிகள் குழந்தைக்கும் பொருந்துகிற மாதிரி அமைய வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை.
நல்ல விமர்சனத்திற்கு நன்றிகள்.



சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 425716_444270338969161_1637635055_n
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Wed Jan 30, 2013 1:48 pm

கதை அருமை. ஆனால் முடிவு பாதியிலேயே தெரிந்துவிட்டது. தொடரட்டும் உங்கள் பணி

jeju
jeju
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Postjeju Wed Jan 30, 2013 1:55 pm

நல்ல கதை

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 31, 2013 12:08 am

slmkarthi wrote:கதை அருமை. ஆனால் முடிவு பாதியிலேயே தெரிந்துவிட்டது. தொடரட்டும் உங்கள் பணி
நன்றி கார்த்தி. உங்கள் ஆதரவுடன் பணி தொடரும்.
jeju wrote:நல்ல கதை
நன்றி ஜேஜு




சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 425716_444270338969161_1637635055_n
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Jan 31, 2013 10:45 am

சஸ்பென்சான நல்லதொரு கதை.

வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 31, 2013 8:34 pm

றினா wrote:சஸ்பென்சான நல்லதொரு கதை.

வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.




சிறுகதை - "வெள்ளிக்கிழமை வந்தா வெட்டவெளிச்சமாயிடும்" - Page 2 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக