புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
157 Posts - 79%
heezulia
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
1 Post - 1%
Pampu
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
322 Posts - 78%
heezulia
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஊமை உறவுகள் Poll_c10ஊமை உறவுகள் Poll_m10ஊமை உறவுகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊமை உறவுகள்


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Wed Jan 30, 2013 12:15 pm

ஊமை உறவுகள்
(சிறுகதை)

மாலை 6.30.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நான் காம்பௌண்ட் கேட்டைத் திறந்து உள்ளே நுழையும் போது பக்கத்து வீட்டு பத்மநாபன் என்னை நிறுத்தினார்.

'ஹலோ மிஸ்டர் சதாசிவம்…ஒரு நிமிஷம்”

நின்றேன்.

என்னை நெருங்கி வந்தவர் 'உங்களோட சிஸ்டர்ஸ் ரெண்டு பேரும்…உங்க பிரதரும் வந்திருந்தாங்க”

'ஓ…அப்படியா?..எப்ப…எத்தனை மணிக்கு,” அசுவாரஸியமாய்க் கேட்டேன்.

'ம்ம்…அஞ்சு மணியிருக்கும்….பட்..அவங்க யாருக்குமே முகமும்…பேச்சும் சரியாகவே இல்லை…ஒரு மாதிரி…கோபமா இருந்த மாதிரித் தெரியுது….ஏன் மிஸ்டர் சதாசிவம்…ஏதாச்சும் பிரச்சினையா?”

நான் பதிலேதும் சொல்லாமல் அமைதி காக்க,

'இட்ஸ் ஓ.கே.…அது உங்க குடும்ப விவகாரம்…ஸாரி…ஸாரி…” சொல்லியபடியே அவர் நகர நான் பூட்டைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.

எனக்குத் தெரியும் அவர்கள் வருவார்கள்…அதுவும் கடுங்கோபத்தோடு வருவார்கள்! என்று ஏனென்றால் நேற்றைக்கு முன் தினம் நான் அவர்கள் முகவரிக்கு அனுப்பி வைத்திருந்த என் திருமண பத்திரிக்கை அவர்களை நிச்சயம் ஆத்திரமூட்டியிருக்கும்…பட்…அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை…என் மனத்திற்கு சரி என்று பட்டதைத்தான் நான் செய்திருக்கிறேன்.

இரவு எட்டு மணி வாக்கில் காலிங் பெல் ஓசையெழுப்ப சென்று கதவைத் திறந்தேன்.

என் இரண்டு தங்கைகளும் ஒரே தம்பியும் உள்ளே நுழைந்தார்கள்.

வந்ததும் வராததுமாய் மூத்தவள் அழ ஆரம்பித்தாள். இளையவள் அவளுக்கு ஆறுதல் கூறும் விதத்தில் என்னைத் தாக்கினாள்.

'அக்கா..நீ அழாதேக்கா…நான் இருக்கேனக்கா உனக்கு…யாரோ ஒருத்தர் உன்னைய மறந்து ஒதுக்கிட்டதால நீ தனிமரமாய்டுவியா,….அப்படி ஆக விட்டுடுவேனா நான்?…கூடப் பிறந்த பிறப்பையெல்லாம் துhக்கி வீச நானென்ன கல் நெஞ்சுக்காரியா?”

பார்த்துக் கொண்டிருந்த என் தம்பி பிரசாத் என் அருகில் வந்தான். 'பாருண்ணே…உன்னோட சகோதரிகள் எப்படித் துடிக்கறாங்கன்னு பாருண்ணே……ஏண்ணா இப்படியொரு காரியம் பண்ணினே?…உண்மை உறவுகள்…உடன் பிறப்புக்கள் நாங்க உயிரோட இருக்கையில் உன்னோட கல்யாண பத்திரிக்கையில் எவளோட பேரையோ போட்டு 'மணமகனின் மூத்த தங்கை”ன்னு போட்டிருக்கே…அதே மாதிரி வேற யாரோவோட பேரைப் போட்டு 'மணமகனின் இளைய தங்கை”ன்னு போட்டிருககே…போதாக்கொறைக்கு எவனோ ஆல்பர்ட்டா…ஆப்ரஹாமா…அவனோட பேரைப் போட்டு 'மணமகனின் தம்பி”ன்னு போட்டிருக்கே…என்னாச்சு உனக்கு?…நாங்கெல்லாம் என்ன செத்தா போயிட்டோம்?…உசுரோடதானே இருக்கோம்?…இப்படி ஒரேயடியா தூக்கி எறியற அளவுக்கு நாங்க என்ன தப்பு பண்ணிட்டோம்…சொல்லுண்ணே ”

என் தோளைத் தொட்டு ஆவேசமாய் அவன் உலுக்க 'விருட்”டெனத் திரும்பி அவர்கள் மூவரையும் எரித்து விடுவது போல் பார்த்தேன்.

'டேய்…பிரசாத்…நீங்கெல்லாம் எந்தத் தப்பும் பண்ணலைடா…மொத்தத் தப்பும் என்னோடதுதாண்டா……ஆமாம்…என்னோட முதல் தப்பு…ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணத்தை முடிச்சதுக்கப்புறம்தான் என்னோட கல்யாணத்தைப் பற்றியே நினைப்பேன்னு ஒரு வெட்டி வைராக்கியத்துல நாற்பது வயசு வரைக்கும் பிரம்மச்சாரியாவே வாழ்ந்தேன் பாரு…அதாண்டா என்னோட முதல் தப்பு…'

அழுது கொண்டிருந்த மூத்த தங்கை தன்னுடைய பம்மாத்து அழுகையை நிறுத்தி விட்டு என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

'அதே மாதிரி…நீ உன் கூட வேலை பார்க்கற ஒரு பொண்ணைக் காதலிச்சிட்டு வந்து 'அண்ணே…அவ வீட்டுல உடனே கல்யாணம் பண்ணணும்கறாங்க!…உங்க அண்ணனுக்கு முடிஞ்சப்புறம்தான் உனக்குன்னா அது வரைக்கும் எங்களால காத்திட்டிருக்க முடியாது…எங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கறோம்!ன்னு சொல்றாங்கண்ணே….என்னால அவ இல்லாம உசுரோடவே இருக்க முடியாது” ன்னு கதறினியே….அப்ப உன் மேல இரக்கப்பட்டு…'சரிடா…என் கல்யாணத்தைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்…மொதல்ல உன் கல்யாணத்தை முடிக்கலாம்” ன்னு சொல்லி உங்க ரெண்டு பேரோட காதலையம் ஜெயிக்க வெச்சேன் பாரு!…அதாண்டா..அதாண்டா..என்னோட ரெண்டாவது தப்பு”

'அதுக்காக இப்படியா செய்வாங்க?” சின்னத்தங்கை சமயம் பார்த்து நுழைந்தாள்.

'அய்யோ…அதுக்காக இப்படிச் செய்யலை…அதுக்குப் பிறகு நீங்கெல்லாம் நடந்துக்கிட்டீங்க பாரு…அந்த முறைக்காகத்தான் இது”
;
'எப்படி நடந்துக்கிட்டோம்?” வெகு சாதாரணமாகக் கேட்டான் பிரசாத்.

'ஏண்டா…மூத்தவனான நான்…என்னோட கல்யாணத்தைக் கூட தள்ளிப் போட்டுட்டு…அதுக்காக வெச்சிருந்த பணத்தை வெச்சு உனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சேன்….உன்னோட காதலுக்காக என்னோட இளமையை…என்னோட வாழ்க்கையையே தியாகம் செஞ்சேன்…பதிலுக்கு நீ என்னடா செஞ்சே?…அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணின கையோட பெங்களுருக்குப் போய் செட்டிலாவன்தான்…இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கலை…'அட..நமக்காகத்தானே அண்ணன் தன்னோட கல்யாணத்தை தள்ளிப் போட்டாரு…மூத்தவரான அவருக்கு ஏற்கனவே வயசு மீறிப் போயிடுச்சு…அதனால நாம்தான் அவருக்கு ஒரு கல்யாணம் நடக்க ஏதாவது ஸ்டெப் எடுக்கணும்”னு நெனச்சியாடா நீ?..அன்னிக்குப் பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டுப் போனவன்…நாலு வருஷம் கழிச்சு திரும்பி வந்திருக்கியே…இடையில் ஒரு தடவ இந்த அண்ணன் உசுரோட இருக்காரா?…இல்லையா?…ன்னு…வந்து பார்க்கத் தோணலையாடா உனக்கு?..அட..ஒரு போன் கால்?…ச்சை…நன்றி கெட்ட ஜென்மம்”

அவன் வாயடைத்துப் போய் நிற்க சகோதரிகள் இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு எழுந்தனர்.

'அதனால..?..அதனால உறவு…பாசம்…சொந்தம்…பந்தம் எதுவும் இல்லைன்னு ஆய்டுமா?”

'ச்சே!….உறவையும்…பாசத்தையும் பத்தி நீங்க ரெண்டு பேரும் பேசாதீங்க…உங்க ரெண்டு பேருக்குமே அந்தத் தகுதி இல்லை.”

'அப்படி என்ன தகுதி இல்லாமப் போச்சு எங்களுக்கு?”

'உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் என் கல்யாணத்தைப் பத்தியே நினைப்பேன்”கற ஒரு வைராக்கியத்துல நாற்பது வயசு வரைக்கும் நான் பிரம்மச்சாரியாவே வாழ்ந்தேன்…அதே மாதிரி முடிச்சேன்…நீங்களும் கல்யாணம் முடிஞ்ச கையோடு போனவங்கதான்…அதுக்கப்புறம் ஒரே தடவை…அதுவும் அம்மா செத்துப் போனப்ப வந்தீங்க…போனீங்க……அத்தோட சரி…'அண்ணனும் தம்பியும் அம்மா இல்லாம எப்படி இருப்பானுக?…எங்க சாப்பிடுவானுக?…அவனுகளுக்கு யாரு சமைச்சுப் போடுவாங்க?”ன்னு ஒரு நாளாவது நெனச்சுப் பார்த்திருப்பீங்களாடி?…நமக்காகத்தானே அரைக் கெழவனாகற வரைக்கும் பிரம்மச்சாரியா வாழ்ந்தாரு…அதனால அவருக்கொரு கல்யாணத்தை நாம..நம்ம புருஷனுகளோட சேர்ந்து ஏற்பாடு செய்வோம்னு ஏண்டி தோணலை உங்களுக்கு?”

'அது…வந்து…நாங்க…எங்க வீட்டுக்காரர்…” மூத்த தங்கை திக்கித் திணறி சமாளிக்க முயல,

'ஒரு அண்ணனா…அப்பா ஸ்தானத்துல இருந்து நான் செஞ்ச என்னோட கடமைகளுக்கு உங்க கிட்டயிருந்து பிரதியுபகாரத்தை நான் எதிர்பார்க்க கூடாதுதான்…ஆனா நான் எதிர்பார்த்தது காசு பணத்தையோ….சொத்து சுகத்தையோ அல்ல….அன்பு…பாசம்…பரிவு….இதைத்தான்!…ப்ச்…ஏமாத்திட்டீங்க…ஆனா ஆபீஸ்ல என் கூட வேலை பார்க்கிறவங்க…எந்தவிதத்திலும் எனக்கு உறவு இல்லாதவங்க…நாப்பத்தாறு வயசாகியும் பிரம்மச்சாரியா…தனிக்கட்டையா கஷ்டப்படற என் மேல் இரக்கப்பட்டு…எனக்கொரு வாழ்க்கைய அமைச்சுக் கொடுக்கணும்கற நல்லெண்ணத்துல தாங்களே களமிறங்கி…எனக்காக விளம்பரம் குடுத்து….வந்த வரன்களை ஆராயந்து…அதுல ஒண்ணை தோ;ந்தெடுத்து…பேசி…முடிச்சு…முகூர்த்தத்துக்கு கோயில் ஏற்பாடு பண்ணி….ரிசப்ஷனுக்கு ஹால் புக் பண்ணி…” முடிக்க இயலாமல் என் குரல் தழுதழுத்தது.

'எங்களுக்கும் தெரிவிச்சிருந்தா நாங்களும் வந்து…” இளைய தங்கை ஏதோ சொல்ல வர,

'வந்து?…என்ன பண்ணியிருப்பீங்க?…'எங்க ரெண்டு பேருக்கும் பட்டுப் பொடவை எடுத்துக் குடு….மாப்பிள்ளைகளுக்கு பட்டு வேஷ்டி பட்டு சட்டை வேணும்…கொழந்தைக்கு துணி மணி எடு”…ன்னு ஆரம்பிச்சு…குட்டையைக் குழப்பி…இவங்க கூடவெல்லாம் சண்டை போட்டுட்டு…கல்யாணத்தை நிறுத்திட்டுப் போயிருப்பீங்க…”

அவள் மௌனியானாள்.

'என் பத்திரிக்கைல 'மூத்த தங்கை விஜயா”ன்னு போட்டிருக்கேனே?…அவதான் தன்னோட செலவுல எனக்காக விளம்பரம் குடுத்த எங்க ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட்…'இளைய தங்கை சவிதா”ன்னு போட்டிருக்கேனே?…அவதான் எனக்காக பொண்ணு வீட்டுக்காரங்களைச் சந்திச்சுப் பேசி..தேதி குறிச்ச எங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் ஆபரெட்டர்!.அப்புறம்…'தம்பி சுகுமார்”ன்னு போட்டிருக்கேனே,…அவன்தான் முகூர்த்த ஏற்பாடு…ரிசப்ஷன் ஏற்பாடெல்லாம்…செலவு கூட அவனோடதுதான்…இப்பச் சொல்லுங்க…இவங்கெல்லாம் எனக்கு உறவா?…இல்லை நீங்கெல்லாம் உறவா?”

உண்மை உறவுகள் ஊமையாய் நின்றன.

'அதனால…எதையும் மனசுல வெச்சுக்காம கல்யாணத்துக்கு குடும்ப சகிதம் வந்திட்டுப் போங்க”

சில நிமிட அமைதிக்குப்பின் அவர்கள் மூவரும் கோரஸாய் 'நாங்க அந்த மூணு பேரையும் நேர்ல பார்ககணும்” என்று கேட்க,

'அய்யய்யோ…எதுக்கு அவங்க கூட சண்டை போடவா?” துள்ளினேன் நான்.

'இல்லை….”

'பிறகு,”

'கையெடுத்துக் கும்பிட…” சொல்லிவிட்டுக் கண் கலங்கிய அவர்களை தோளோடு அணைத்துக் கொண்டேன்.

(முற்றும்)

முகில் தினகரன்
கோயமுத்தூர்.







ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 30, 2013 1:46 pm

அருமையான கதை ...பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 30, 2013 2:00 pm

உறவுகளுக்கு பணம் மட்டும்தான் தேவை......உண்மை....உண்மை.... சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 30, 2013 2:11 pm

கதை அருமை.தலைப்பு அதைவிட அருமை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 30, 2013 2:17 pm

நல்ல கதை .... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 30, 2013 2:22 pm

கதை நன்றாக இருக்கிறது . சூப்பருங்க



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 30, 2013 5:43 pm

சூப்பருங்க
அருமை.பணமே பிரதானம்..,

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 30, 2013 6:32 pm

அருமையான கதை சூப்பருங்க



ஊமை உறவுகள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 31, 2013 1:29 am

ஆறிலிருந்து அறுபது வரையிலிருந்து சிறிது மாறுபட்ட, இக்காலத்தை பிரதிபலிக்கும் நல்ல கதை. பகிர்வுக்கு நன்றிகள்.



ஊமை உறவுகள் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக