ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கனகபுரா ரோடில் கல்யாணம்
by ayyasamy ram Today at 4:04 pm

» கோடைக்கேற்ற குளு குளு நுங்கு லஸ்ஸி
by ayyasamy ram Today at 11:46 am

» வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்!
by ayyasamy ram Today at 11:41 am

» வைணவ ஆச்சாரியர் மணக்கால் நம்பி வாழ்க்கையில் தூதுவளை....
by ayyasamy ram Today at 11:24 am

» தூது சென்ற தூதுவளை!
by ayyasamy ram Today at 11:17 am

» அடையாள மையை நெற்றியில் வைத்தால் நல்லது!
by ayyasamy ram Today at 8:54 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by ayyasamy ram Today at 8:24 am

» உலகில் அதிகமாக பொய் பேசப்படும் இடம்!
by T.N.Balasubramanian Today at 7:32 am

» மன அழுத்தம் வராமல் தடுங்க!
by ayyasamy ram Today at 4:30 am

» வாட்ஸ்-அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 4:22 am

» பொண்ணு கண்டிப்பா ஸ்மார்ட் போன் வெச்சிருக்கணும்...!
by ayyasamy ram Today at 4:20 am

» குழந்தை பேறு கிடைக்க...
by ayyasamy ram Today at 4:08 am

» ஏழு ஜென்ம பாவங்கள் நீங்க...
by ayyasamy ram Today at 4:06 am

» தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா?
by ayyasamy ram Today at 4:00 am

» ஆயிரம் பிரியாணிக்கு ஆர்டர்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:18 pm

» தெரிகின்றதா...?
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தொழில் வளமே நாட்டுயர்வு! – வ.உ.சி.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:39 pm

» குச்சி ஐஸ்க்ரீம்
by krishnaamma Yesterday at 7:52 pm

» பேய்களுக்கு கால்கள் கிடையாது! - சிங்கிள் வரி சிறுகதைகள்
by krishnaamma Yesterday at 7:41 pm

» முகநூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» இசையென்னும் பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வனச்சித்திரம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» மதுரம்- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தலைவர் சொன்ன குட்டிக்கதை
by ayyasamy ram Yesterday at 7:35 pm

» ரெய்டு பயம்….
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ஆசைக்கோர் அளவில்லை
by krishnaamma Yesterday at 6:46 pm

» தண்டுவடத்தில் பூத்த தாமரைகள்
by krishnaamma Yesterday at 6:44 pm

» தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by krishnaamma Yesterday at 6:38 pm

» வாழத்தான் பிறந்தோம்...
by krishnaamma Yesterday at 6:37 pm

» அனைத்து பொருட்களும் அபேஸ்.. வடமாநில இளைஞர்கள் தப்பியோட்டம்!
by krishnaamma Yesterday at 6:35 pm

» 77 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை கோடை காலத்தில் திறப்பு
by krishnaamma Yesterday at 6:19 pm

» இந்தியில் பேசிய ஜப்பான் சிறுவன்
by krishnaamma Yesterday at 6:18 pm

» வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழுங்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» சிறுகதைத் திறனாய்வு : கு.அழகிரிசாமியின் ‘தியாகம்’
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 24/05/2022
by mohamed nizamudeen Yesterday at 10:03 am

» அமுத மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:04 am

» வாழைப்பழ கிரேப் கேக்
by ayyasamy ram Yesterday at 6:22 am

» நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பா.இரஞ்சித் படம்
by ayyasamy ram Yesterday at 6:16 am

» உக்ரைன் போரில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு: 3 மாதங்களில் 15 ஆயிரம் வீரர்கள் பலி
by ayyasamy ram Yesterday at 6:09 am

» குடிமகன்கள் போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 4:09 am

» ஒன்று தான் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:05 am

» என் இதயத்தின் ஒளிவட்டம் நீ! - கவிதை துளிகள்
by ayyasamy ram Yesterday at 4:04 am

» வித்தியாசமான கைத்தடி!
by ayyasamy ram Yesterday at 3:55 am

» தைவானை தாக்கினால் தலையிடுவோம்: சீனாவுக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 3:49 am

» சரத் பவாரின் சரணாகதி.
by Dr.S.Soundarapandian Mon May 23, 2022 6:08 pm

» சிவாஜி கணேசன் குடும்பத்தில் அடுத்த ஹீரோ
by Dr.S.Soundarapandian Mon May 23, 2022 6:01 pm

» சிறுகதைத் திறனாய்வு: கு.அழகிரிசாமியின் ‘மனப்பால்’
by Dr.S.Soundarapandian Mon May 23, 2022 5:53 pm

» 2022 இன் 7 சிறந்த இந்திய வெப் தொடர்கள் இதுவரை நம்மை கவர்ந்தவை
by sncivil57 Mon May 23, 2022 2:58 pm

» இரண்டாம் ஜாமங்களின் கதை -சல்மா
by sncivil57 Mon May 23, 2022 2:40 pm

» புத்தகப்பிரியன் - புத்தகங்கள் - 01.05.2919
by Rajana3480 Mon May 23, 2022 6:41 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


பொன் மொழி ‍ பழமொழிகள்

4 posters

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Fri Oct 16, 2009 10:09 am

01. ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின்போதுதான் தீர்மானமாகிறது.

02. இயற்கை என்னும் தாய் மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை ஒரு மார்பில் இருந்து இன்னொரு மார்பிற்கு மாற்றும் போது ஏற்படும் இடைவெளியே மரணம்.


03. வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளக் கூடாது.


04. மனிதர்கள் இறந்த பின்னர்தான் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம்.


05. பிறப்போடு பிறந்தது மரணம்.


06. மரணம் என்பதும் வாழ்வு என்பதும் இரண்டு வேறு வேறான சங்கதிகள் அல்ல வாழ்க்கையை அனுபவிப்பதென்பது மரணத்தை அனுபவிப்பதுதான்.


07. செத்தவன் வாயில் மண் இருந்தவன் வாயில் சோறு.


08. கெட்ட செய்திகள் போல வேறு எதுவுமே வேகமாகப் பரவுவதில்லை.


09. காத்துக் கொண்டிருக்காதே நீ ஒருபோதும் செயற்படமாட்டாய்.


10. குனியாதே சுமப்பாய் நிமிர்ந்தால் உயர்வாய்.


11. நன்றி மறவாத வாழ்வு நம்மை அறியாமலே உயரும்.


12. வார்த்தைகள் அசிங்கமானால் வாழ்வும் அசிங்கமாகும்.


13. ஆழமான அறிவே அழகான வாழ்வை அமைக்கும்.


14. புத்தகம் இல்லாத வீடு சன்னல் இல்லாத இருட்டறை போன்றது.


15. துன்பத்தை மறந்தாலும் அது புகட்டிய பாடத்தை மறக்காதே.


16. ஓர்மம் ஒப்பற்ற சாதனைகளை உருவாக்கும்.


17. உருப்படியான வேலைக்கே உலகம் உன்னை அழைத்திருக்கிறது மறந்துவிடாதே.


18. அரிய சந்தர்ப்பங்கள் தேடி வரும்போது அதைப் பயன்படுத்தத் தவறாதே


19. உங்கள் நேரம் உங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவதை உணருங்கள்.


20. ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by kirupairajah Fri Oct 16, 2009 10:13 am

பிறப்பு , இறப்பு, வாழ்க்கை அனைத்தையும் அற்புதமாக சித்தரிக்கின்ற அற்புதமான பொன்மொழிகள். நன்றி தாமு!
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Fri Oct 16, 2009 10:17 am

மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்:

"மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். நீ செய்வதை நீ நேசித்தாயானால், நீ வெற்றியடைவாய்."

- Albert Schweitzer


"உங்கள் விதி என்னவாயிருக்கும் என்று நானறியேன், ஆனால் ஒன்று நானறிவேன்: உங்களில் யார் சேவை செய்வது எப்படி என்று விழைந்து கண்டுபிடித்துள்ளீர்களோ, அவர்கள் தான் உண்மையில் மகிழ்ச்சியடைவீர்கள்."

- Albert Schweitzer

"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."

- Albert Schweitzer

"செய்வதற்குச் சில, நேசிப்பதற்குச் சில, மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில, இவைகளே மகிழ்ச்சியின் உன்னத அத்தியாவசியத் தேவைகள்."

- Allan K. Chalmers

"மகிழ்ச்சி: இதை நாம் அபூர்வமாக உணர்கிறோம். நான் அதை விலைக்கு வங்குவேன், யாசிப்பேன், திருடுவேன்,இரத்தம் சொட்டும் நாணயங்களால் விலை கொடுப்பேன் இந்த எல்லையற்ற நன்மைக்காக."

- Amy Lowell


"நாமனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் குறிக்கோளுடன் வாழ்கிறோம்; நம் வாழ்க்கைகள் எல்லாம் வேறுபட்டவை, இருப்பினும் ஒன்றே."

- Anne Frank

"மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது."

- Aristotle

"செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை."

- Benjamin Disraeli


"நமது மனோபலத்தின் பரிபூரண உபயோகிப்பும் நாம் வாழும் உலகைப் பரிபூரணமாய் உணர்வதும்உண்மையிலேயே திருப்திதரும் மகிழ்ச்சியை அளிக்கின்றன."

- Bertrand Russell

உன்னுடைய உழைப்பும் சொற்களும் உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில் மகிழ்ச்சி வருகிறது.

- Buddha
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Fri Oct 16, 2009 10:26 am

1) மற்றவர்களின் குறைகளைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்காதே. அவர்களின் நல்ல குணங்கள் உனக்கு தெரியாமலே போய் விடும்.

2) உன் கண்களில் கருனையையும், உன் வார்த்தையில் அன்பையும் காட்டு, பகையாளியும் உன்வசமாவான்.

3) நான் என்ற அகந்தையை விடு. நான் எல்லாம் தெரிந்தவன் என்று மற்றவர்களை குறைவாக மதிப்பிடாதே. அந்த மமதை உன்னை அளித்து விடும்.

4) எல்லோரையும் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக் கொள். தன்மானத்தை என்றும் விடாதே

5) பொறுமைக்கு என்றும் அழிவில்லை. பொறாமை குணத்தை விட்டொழி.

- அன்னைதெரசா

பொன் மொழி ‍ பழமொழிகள் 18885677

பொன் மொழி ‍ பழமொழிகள் 942 பொன் மொழி ‍ பழமொழிகள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Fri Oct 16, 2009 10:40 am

உங்களை நீங்கள் மதியுங்கள்

மற்றவர்கள் மதிக்க:

நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. என்வே,
உலகம் உங்களை மதிக்கும் விதமாக உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள்...

யோசித்த பின் செயல்படுங்கள்:

எந்த வேலையைச் செய்வதற்கு முன்பும், நன்கு யோசித்துவிட்டுத் தொடங்குங்கள். அது தேவையா என்று சிந்தியுங்கள். தேவையில்லை என்றால் தவிர்த்து விடுங்கள்

முகமலர்ச்சி:

பிளாஸ்டிக் பூக்களைப் போல் செயற்கையாய்ச் சிரிக்காமல் இன்று பூத்த மலர் போல் இயல்பான புன்னகையும் இதமான சொற்களும் உங்களள மேலுள்ள நல்லெண்ணத்தைப் பலமடங்கு பெருகச் செய்யும்.

உங்களை நீங்கள் மதியுங்கள். உலகம் நிச்சயாம் மதிக்கும்

ஃபாயிஷாகாதர்தோட்டத்து பூக்களைபோல் புன்னகை வீசிடுங்கள், வாட்டத்தை போக்குகின்ற வார்த்தையை பேசிடுங்கள்

-கவிஞர் வைரமுத்து
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Fri Oct 16, 2009 10:55 am

அன்னை தெரசா

அமைதியின் பலன் பிரார்த்தனை
பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை
நம்பிக்கையின் பலன் அன்பு
அன்பின் பலன் சேவை
சேவையின் பலன் அமைதி.

நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட, செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம்.
நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட, கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்.


டாக்டர். அப்துல் கலாம்

கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல...
உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே இலட்சியக் கனவு..
ஆம்! ! கனவு காணுங்கள்!

பொன் மொழி ‍ பழமொழிகள் Kalamwordscopy1
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Fri Oct 16, 2009 11:03 am

ஸ்ரீ அன்னைவாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும்.
உனது லட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ,
அவ்வளவு உயர்வாக அமையும் உனது வாழ்வு.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்க்கும்
முன்னேறுவதற்கும் வாய்ப்பிருக்கும்.

பின்னோக்கிப் பார்க்காதே.எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய
விரும்புகிறாயோ, அதையே பார். நீ முன்னேறுவது உறுதிவிவேகானந்தர்


பொன் மொழி ‍ பழமொழிகள் Vivekanandacopyகடவுளை மற ! மனிதனை நினை !
-தந்தை பெரியார்-


பொன் மொழி ‍ பழமொழிகள் Dcsc


எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒருசில முரன்பட்ட மனிதர்கள் மட்டுமே, தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றியமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் எல்லாவித முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட முரன்பட்ட நபர்களையும், அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தையும்தான் நம்பி இருக்கின்றன.

-பெர்னாட்ஷா-

தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Fri Oct 16, 2009 11:09 am

நட்பு’ பற்றி திருவள்ளுவர்

பொன் மொழி ‍ பழமொழிகள் Thiruvalluvar


நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. (திருக்குறள் 782)


வளர்பிறை சந்திரன் போல வளர்வது பண்பு நிறைந்தவருடன் கொள்ளும் நட்பு. தேய்பிறை சந்திரன் போலத் தேய்வது அறியாமையில் உழல்பவருடன் கொள்ளும் நட்பு.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு. (திருக்குறள் 784)


நட்பு என்பது நகுதலுக்காக (சிரித்தல், பொழுது போக்குதல் (enjoyment)) அல்ல. நண்பர் தவறு செய்ய முற்படும் போது அதை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுதலே நட்பாகும்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும். (திருக்குறள் 785)


கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு. (திருக்குறள் 786)


முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டால் மட்டுமே அது நட்பாகிவிடாது. நெஞ்சத்தால், உள்ளத்தால் ஒன்றுபடுதலே உண்மையான நட்பு.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. (திருக்குறள் 788 )


உடல் மேல் உடுத்தியிருக்கும் ஆடை நழுவும் போது உடனே கையானது விரைந்து சென்று நழுவும் ஆடையை சரி செய்யும். அது போல் நண்பர் துன்பப்படும் போது விரைந்து சென்று அவர் துன்பத்தைக் களைவதே உண்மையான நட்பு.

நட்பு பற்றிய பொன்மொழி ஒன்று:

நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Fri Oct 16, 2009 11:14 am

ஹெலன் கெல்லர் பொன்மொழிகள்

சிறு வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார் ஹெலன் கெல்லர். இதனால் துவண்டுவிடவில்லை அவர். ‘நம்பிக்கை’ எனும் ஒரேயொரு ஆயுதத்தை மட்டும் கொண்டு தடைக்கற்களை வழிக்கற்களாக்கி பின்னாட்களில் சிறந்த எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் உருவெடுத்தார்.


பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

பொன் மொழி ‍ பழமொழிகள் Animated20tulip20beelin


எந்த நேரத்தில் எதைச் செய்வதென்று தெரிந்தால் எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.

- ரால்ஃப்

பொன் மொழி ‍ பழமொழிகள் Animated20tulip20beelin


ஓர் இலட்சியம் உங்களை ஆட்கொள்ளும்போது ஒரு மகத்தான திட்டத்தில் நீங்கள் ஈடுபடும்போது உங்கள் எண்ணங்களின் குறுகிய எல்லைகள் உடைகின்றன- பதஞ்சலி முனிவர்

ஃபாயிஷாகாதர்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Fri Oct 16, 2009 11:17 am

● பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை

● வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை.

● புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்

● தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை

● காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்

● எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்

● வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச்செல்லாதே, வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா

● குழந்தையை ரசிக்கக் கற்றுக்கொள். குணவானாவாய்

● இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Fri Oct 16, 2009 11:19 am

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.


அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:


வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்:


ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அப்ரஹாம் லிங்கன்:

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டைன்:


எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by கோவைசிவா Fri Oct 16, 2009 11:21 am

பொன் மொழி ‍ பழமொழிகள் Icon_eek பொன் மொழி ‍ பழமொழிகள் Icon_eek பொன் மொழி ‍ பழமொழிகள் Icon_eek
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
மதிப்பீடுகள் : 9

http://www.kovaiwap.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Fri Oct 16, 2009 11:30 am

கடமையை மறந்து கவலையென சொல்லித் திரியாதே
அது உன் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.......

எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ, இறைவன் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்"

ஒரு அறிவாளியின் நாக்கு அவனின் இதயத்திற்கு பின்னாலும், ஒரு முட்டாளின் நாக்கு அவனின் இதயத்திற்கு முன்னாலும் உள்ளது"

உன்மையான சந்தோசம் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கிறது. கடந்த கால சம்பவங்களிலும், நிகழ்கால கேள்விக்குறியிலும் நம்மை தொலைக்காவிட்டால், நிகழ்காலத்தை 100 சதவிகிதம் அனுபவிப்போம்.

- ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்


தயவு செய்து தினசரி 30 நிமிடம் உடற்பயிற்ச்சி செய்யாதீர்கள், அவ்வாறு செய்தால், நம் உடம்பு உறுதியாகி, நீண்ட நாட்கள் ஆரோக்யமாக வாழ்ந்து விடுவோம். (எங்கேயோ படித்தது, ஆனால சிந்திக்க வைத்தது)


உணவும் உடையும், உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அவற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும்.

-இயேசுநாதர்


வாழ்க்கை கவிதை வாசிப்போம்...வானம் அளவு யோசிப்போம்.... முயற்ச்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்.

-கவிஞர் பா.விஜயன்


நாளை உலகை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு; உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு.

-கவிஞர் கண்ணதாசன்


மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை, மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது, இதை மனம் தான் உணர மறுக்கிறது.

-கவிஞர் வைரமுத்தின் வைர வரிகள்


மனிதன், கோபம் வரும்போது தன்னிலை மறந்துவிடுகிறான். அந்த நேரத்தில் "நான் இப்போது கோபமாக இருக்கின்றேன்" என்று மனதில் ஒரு முறை சொன்னாலே அதன் வேகம் பாதியாக குறைந்து விடும்.

-ஞானிகள்கவனியுங்கள்உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக வருகின்றன்.உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.உங்கள் செயல்களைக் கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்அவைகளே உங்கள் நடத்தையாகின்றனஉங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன


- எங்கோ படித்தது
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Fri Oct 16, 2009 11:31 am

ஏன் சிவா இப்படி பாக்குரிங்க? பொன் மொழி ‍ பழமொழிகள் Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by தாமு Sun Oct 18, 2009 6:27 am

பொன்மொழிகள்

உன் அண்டை வீட்டுக்காரனின் வயிறு
பசியோடு இருக்கும் போது
தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன்
என்னை சார்ந்தவனில்லை
இருப்பவன் இல்லாதவனுக்கு
கொடுத்து வாழ்வது
எல்லாவற்றையும் விட மேன்மையானது
கொடுத்து மகிழ்ந்து அனைத்தும்
பெருவோம்

[நபி மொழி]

நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன.
(சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.
(ஷேக்ஸ்பியர்)

உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள்.
(லாங்பெல்லோ)

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது
(அரிஸ்டாட்டில்)

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே
(அனுபவ வாக்கு)

மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான்.
(ஜார்ஜ் பெர்னார்டு ஷா)

எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை
(விட்மன்)

சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது.
(டிபியன் போர்ட்)

உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்
(ஷில்லாவகில்)

தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து; அதற்காக பாடுபடு
(ஓர் அறிஞர்)

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல
(வின்ஸ்ட்டன் சர்ச்சில்)

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்
(காந்தியடிகள்)

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
(ஓர் அனுபவசாலி)

இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும்.
(அரவிந்தர்)

கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்
(கிளெண்டல்)

என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்.
(டொரோதி தெலூசி)

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை.
(எமர்சன்)

மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
வாரியார் சுவாமிகள்)

உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள்.
ஜேம்ஸ் ஆலன்)

இறைவனின் தரிசனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும்.
(சுவாமி ராமதாஸ்)

நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்.
(ஓர் அறிஞர்)

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.
(மு.வ.)

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.
(ஜான்ஸன்)

ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
(வில்லியம் ஹாஸ்விட்)

ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது.
(ஷாம்பர்ட்)

நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
அரவிந்தர்)

உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்.
(சுவாமி விவேகானந்தர்)

உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது


கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது.
(பிளேட்டோ)

காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும்.
(ஹேக்ஸ்பியர்)

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம்.
(மகாத்மா காந்தி)

அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான்.
(யாரோ)

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும்.
(மாரியோ போஜியோ)

துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான்.
(ஹென்றி லீவ்ஸ்)

கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன்.
(ராபர்ட் பிராஸ்ட்)1. நண்பனை கஷ்ட காலத்திலும் வீரனை போர்க்களத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

2. உழைப்பின் வேர்கள் கசப்பு. அதன் கனிகள் இனிப்பு.

3. எல்லோரும் தீர்க்க வேண்டிய கடன் ஒன்று உள்ளது.அது தான் மரணம்.

4. முயற்சி இல்லாமல் வாழும் வாழ்வு, துடுப்பு இல்லாத படகு போன்றதாகும்.

5. பச்சை குழந்தைகளின் கேள்விக்கு, மகா அறிவாளி கூட பதில் கூற முடியாது.

6. தாமே பெற்றோர்களாக மாறும் வரை, பெற்றோர்களின் பாசத்தை புரிந்து கொள்ள முடியாது.

7. கடனோடு காலையில் எழுவதை விட, பட்டினியோடு இரவில் படுப்பது மேல்.

8. மற்றவர்கள் துன்பத்தை அறிந்து கொள். உன் துன்பம் அர்த்தமற்றதாகி விடும்.

9.எத்தனையோ துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் தான்டித் தான் உயரமுடியும்.

10.நண்பனாக நடிப்பவனை விட நேரடி எதிரி மேலானவன்.

11.இன்பத்திற்காக மனிதன் பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கிற்து.

12.எத்தனை நாட்கள் வாழ்ந்தாய் என்பது பெரிதல்ல, வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்திருக்கிறாய் என்பதே பெரிது.

13.உனது முயற்ச்சிக்கு பயிற்ச்சியை உணவிடு, புரட்சிகள் பூக்களாய் மலரும்.

14.அறிவாளிகளின் வார்த்தைகளைவிட அனுபவசாலிகளின் வார்த்தை உன்னதமாய் இருக்கும்

15.அகங்காரம் அறிவை வள்ர்க்காது.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பொன் மொழி ‍ பழமொழிகள் Empty Re: பொன் மொழி ‍ பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை