ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

+7
ச. சந்திரசேகரன்
lgp
Muthumohamed
கரூர் கவியன்பன்
பூவன்
யினியவன்
Guna Tamil
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். Empty "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

Post by Guna Tamil Fri Jan 11, 2013 7:22 pm

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். Resize20130110222956

வெடி வைப்பதில் ஜெயலலிதாவை மிஞ்ச யாராலும் முடியாது. ஆனால், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அவர் வைத்த வெடிக்கு, நாடு முழுவதும் நடுங்குகிறது.


'அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்று ஓ.பன்னீர்செல்வம் உட்பட கட்சிக்காரர்கள் ஆசைப்படுகிறார்கள். அதனை ஜெயலலிதாவும் நம்ப ஆரம்பித்து இருப்பதன் வெளிப்பாடுதான் 'நாற்பதும் தனியே’ என்ற அறிவிப்பு. வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா இப்படிச் சொன்னார் என்ற தகவல் வந்ததும் யாரும் அதனை நம்பவில்லை.

'வெற்றிக் கூட்டணியை அமைக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். நீங்கள் உங்கள் கடமையைச் சரியாகச் செய்யுங்கள்’ என்பதுதான் தேர்தலுக்கு முந்தைய பொதுக் குழுக்களில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு. ஆனால், இந்தப் பொதுக் குழுவில், 18 மாதங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் தேர்தலுக்கான தனது வியூகத்தைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்திருக்கிறார். 'அரசியல்வாதி எந்தப் பாதையில் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், என்ன சிந்தனையோடு நடக்கிறான் என்பது தெரியக் கூடாது’ என்பார்கள். ஜெயலலிதா விஷயத்தில் இது மர்மமாகத்தான் இதுவரை இருந்தது. ஆனால், அந்த இயல்பை முதன்முறையாக மாற்றிக்கொண்டுள்ளார்.


ஜெயலலிதாவினுடைய பேச்சின் பாணியும் பெரிய அளவில் மாறி இருக்கிறது. எங்கே நகைச்சுவை, எங்கே சவால், எங்கே கண்ணீர் என்பது கருணாநிதிக்குத்தான் கைவந்த கலை. அதனை ஜெயலலிதா எப்போதும் பின்பற்ற மாட்டார். 'நான் செய்தேன்’, 'நான் உத்தரவிட்டேன்,’ 'எனது அரசு’, 'தனிமனுஷியாக நான் துணிந்து முடிவு எடுத்தேன்’... இவைதான் ஜெயலலிதாவின் பாணி. முதல்தடவையாக ஜெயலலிதாவின் பேச்சிலும் மாற்றம்.


''பெரும்பாலான பெண்கள் இளம் வயதில் தகப்பனாரைச் சார்ந்திருப்பார்கள். பெரியவர்களான பிறகு, கணவரைச் சார்ந்திருப்பார்கள். வயதான பிறகு, பிள்ளைகளைச் சார்ந்திருப்பார்கள். ஆனால், என்னைப் போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள். நான் யாரையும் சார்ந்திருக்கக் கூடிய கொடுப்பினை எனக்கு இல்லை. யாரையும் சார்ந்திருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அமையவில்லை. எப்போதுமே நல்லதென்றாலும் கெட்டதென்றாலும் எனக்கு நானேதான் முடிவுகளை எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் எது வந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்துக்கொண்டு, இப்படியே நான் செயல்பட்டுவருகிறேன். இது என்னுடைய தனித் திறமை என்று சொல்ல மாட்டேன். இது விதி. தலையெழுத்து!'' எனப் பேசி இருக்கிறார் ஜெயலலிதா. கொடுப்பினை, விதி, தலையெழுத்து ஆகிய வார்த்தைகள் எல்லாம் ஜெயலலிதாவின் சிந்தனையில் உதிர்க்காத, நினைத்தாலும் சொல்லாத வார்த்தைகள். வயதா, அனுபவமா, வாழ்க்கையா எது அவரை இப்படிச் சொல்ல வைத்தது? மூன்றுமே!


2011 டிசம்பர் மாதக் கடைசியில் நடந்த பொதுக் குழுப் பேச்சுக்கும் 2012 டிசம்பர் கடைசியில் நடந்த பொதுக் குழுப் பேச்சுக்குமே பெரிய வித்தியாசம். அன்று அனைத்தையும் புறந்தள்ளியவராக ஜெயலலிதா காட்சி அளித்தார். இன்று, 'என் தலைவிதி இதுதான்’ என்கிறார். ''நம்மைப் பொறுத்தவரை நம்முடைய எதிர்காலத்தை நாம் தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும், நிர்ணயித் துக்கொள்ள வேண்டும். நாம் பி.ஜே.பி-யையும் சார்ந்திருக்க முடியாது, காங்கிரஸையும் சார்ந்து இருக்க முடியாது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற நாம் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று மத்தியில் நமது திட்டங்களை நாமே அமல்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும்'' என்பது அவரது பேச்சின் சாராம்சம்.


பரம்பரை எதிரியான கருணாநிதியுடன் காங்கிரஸ் அதிகமாக ஒட்டி உறவாடுவதால், அவர்களோடு கூட்டணிவைப்பது சாத்தியம் இல்லை. ஆனால், கருணாநிதியிடம் இருந்து பிரிந்து வந்து, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் சிலரே திட்டமிட்டுச் செயல்பட்டுவருகிறார்கள். தன்னை வந்து சந்தித்த மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோரிடம் இதை கருணாநிதி சொல்லிக் காட்டம் காட்டி னார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், மாநில அரசாங்கத்தை விமர்சிப் பது இல்லை என்பதும் கருணாநிதியின் ஆதங்கம். இது ஜெயலலிதாவுக்குச் சாதகமான விஷயம். தன்னுடைய பொதுக் குழுப் பேச்சின் மூலமாக அந்த ஆதரவையும் புறக்கணித்துவிட்டார் ஜெயலலிதா. குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்து சங்மாவைக் களம் இறக்கியவர் என்பதை அறிந்தும், ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டினார் பிரணாப் முகர்ஜி. ஜெயலலிதா அழைத்த இரு முறையும் தமிழகம் வந்தார். ஒன்றாக மேடைகளில் உட்கார்ந்தார். அந்த நட்பும் இனி குறையவே செய்யும். மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடிய கவர்னர் ரோசய்யா, ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு இதுவரை முழுமையான ஒத்துழைப்பு வழங்கிவந்தார். இதை இனி மத்திய அரசாங்கம் கேள்வி கேட்கும். அனைத்துக்கும் மேலாக, இதுவரை ஜெயலலிதாவைக் காட்டி கருணாநிதியை மிரட்டிக் கூடுதல் தொகுதிகளை வாங்கிவந்தது காங்கிரஸ் கட்சி. இனி, அவர்கள் கருணாநிதி கொடுத்ததை வாங்கியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். அதாவது, தன்னை அறியாமல் கருணாநிதி அதிகத் தொகுதிகளில் நிற்க ஜெயலலிதாவே காரணம் ஆகிவிட்டார். ஏராள மான விஷயங்களில் மத்திய அரசாங்கம் தமிழ கத்தைப் புறக்கணித்து வருகிறது. மாநில சுயாட்சி பேசினாலும் அதிகாரக் குவியல் உள்ள மத்திய அரசாங்கத்தின் தயவு இல்லாமல் ஆட்சி நடத்துவது கஷ்டம். கடந்த ஒன்றரை ஆண்டு சிரமங்கள், இன்னொரு ஒன்றரை ஆண்டும் தொடருமானால் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே முடங்கிப் போகும். எதிரி நாடு மாதிரி நாம் மத்திய அரசாங்கத்துடன் சண்டையைப் பிரகடனம் செய்துவிட்டு வாழ முடியாது. அப்படி வாழ்வது யதார்த்தம் அல்ல; அபத்தம்!


ஜெயலலிதாவை, பி.ஜே.பி-க்காரர்கள் எப்போதும் நட்பு சக்தியாகவே பார்த்தார்கள். அவரும் அவர்கள் கொள்கைகளை வழிமொழிபவராகவே இருந்தார். அத்வானி, ஜோஷி, சுஷ்மா, மோடி என அனைத்துக் காவிகளும் அவருக்கு உடன்பாடான நிறமே. இவர்கள் அனைவருமே வெவ்வேறு காலகட்டங்களில் போயஸ் கார்டன் வந்துபோனவர்கள்தான். சங்மாவை ஜெயலலிதா முன்மொழிந்ததும் பி.ஜே.பி. ஈகோ பார்க்காமல் வழிமொழிந்தது. அப்படிப்பட்ட தலைமை யையும் இந்த அறிவிப்பின் மூலமாக ஜெயலலிதா பகைத்துக்கொண்டார். நரேந்திர மோடிக்கு பி.ஜே.பி-க்குள் கடுமையான எதிர்ப்பு முதலில் இருந்தது. இப்போது எதிரிகள் அமைதியாகிவிட்டார்கள். மோடிக்கான நாற்காலி வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது.


அப்படிப்பட்டவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், ஜெயலலிதாவின் நிலைமை என்ன? மாற்றி மாற்றி சால்வை பரிமாறிக்கொண்டார்களே? மோடிக்கு எதிராக வாக்குக் கேட்டு பிரசாரப் பயணம் போவாரா ஜெ? அல்லது ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் சீரணி அரங்கத்தில் மேடை போட்டு மோடி பேசுவாரா? இப்படி நடப்பதைத் தடுக்காமல் சோ சும்மா இருந்துவிடுவாரா? அது நடக்காது. நடந்தால் அது ஜெயலலிதாவுக்குப் பலவீனமான விஷயம்.


கருணாநிதியுடன் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டு இருப்பதால், ஜெயலலிதா மீதுதான் இடதுசாரிகளின் பார்வை பாயும். இந்தியக் கம்யூனிஸ்ட்டும் மார்க்சிஸ்ட்டும் மூன்றாவது அணி ஃபார்முலா வைக் கொண்டுவந்து கார்டன் முன்னால் கடை விரிப்பார்கள். தா.பாண்டியன் அமுக்கி வாசிக்க ஆரம்பித்து இருப்பது இதனால்தான். 'நன்றி மறவாத’ இந்தத் தோழர்களுக்கும் சேர்த்து அல்வா கொடுத்துவிட்டது அந்த அறிவிப்பு. ஜெயலலிதா மீதான எதிர்ப்பைத் தனது சிவப்புத் துண்டில் தாங்கிப் பிடிக்கும் தோழர்களையும் அநாதை ஆக்கியதன் மூலமாக நாட்டில் இனி கூடுதலாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்குத் தேதி குறிக்கப்படும் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா... தெரியாதா?


மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே, அடிக்கடி ஒரு கதை சொல்வார். ''மிகப் பெரிய பணக்காரப் பெண் ஒருத்தி, 'எனக்கு பகவத் கீதையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் சொல்லி என்னைப் புரியவைப்பவர்களுக்கு என் சொத்தில் பாதியைத் தருகிறேன்’ என்று அறிவித்தாராம். இதைப் பார்த்ததும் அவரது கணவர் பதறிப்போனாராம். 'சொத்தில் பாதி என்றால் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு பணத்தை யாராவது இழப்பார்களா?’ என்று அவர் கேட்டா ராம். 'எனக்குப் புரிந்துவிட்டது என்று சொன்னால் தானே பணம் போகும். எனக்குத்தான் புரியப் போவது இல்லையே? புரிந்துவிட்டது என்று சொல்லப்போவதும் இல்லையே?’ என்றாராம் அந்தப் பெண்.''


ரே சொன்ன பெண், ஜெயலலிதா மாதிரியான ஒருவரோ?!

நன்றி - தேடிபார்


Last edited by Guna Tamil on Fri Jan 11, 2013 7:39 pm; edited 1 time in total
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். Empty Re: "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

Post by யினியவன் Fri Jan 11, 2013 7:31 pm

குணா எங்கே எடுக்கப்பட்டது என்று சொல்லுங்கள். அல்லது உங்கள் பதிவா இது?

அம்மணிக்கே தெரியாது எதை எப்ப செய்வாங்கன்னு ஆனா ஆணவத்தில் எப்பவுமே சரியான நேரத்தில் தப்பாவே செய்யறது அவங்களுக்கு புதுசு இல்லை.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். Empty Re: "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

Post by Guna Tamil Fri Jan 11, 2013 7:35 pm

யினியவன் wrote:குணா எங்கே எடுக்கப்பட்டது என்று சொல்லுங்கள். அல்லது உங்கள் பதிவா இது?

அம்மணிக்கே தெரியாது எதை எப்ப செய்வாங்கன்னு ஆனா ஆணவத்தில் எப்பவுமே சரியான நேரத்தில் தப்பாவே செய்யறது அவங்களுக்கு புதுசு இல்லை.


இது வலைபதிவுதான்....பதிவில் போட மறந்துவிட்டேன் ....
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். Empty Re: "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

Post by பூவன் Fri Jan 11, 2013 7:41 pm

இது வலைபதிவுதான்....பதிவில் போட மறந்துவிட்டேன் ....

இனி மறக்காமல் எந்த தளத்தில் இருந்து எடுத்தது எனவும் சொல்லிவிடுங்கள் ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். Empty Re: "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

Post by Guna Tamil Fri Jan 11, 2013 7:42 pm

பூவன் wrote:
இது வலைபதிவுதான்....பதிவில் போட மறந்துவிட்டேன் ....

இனி மறக்காமல் எந்த தளத்தில் இருந்து எடுத்தது எனவும் சொல்லிவிடுங்கள் ......

பதிவில் திருத்திவிட்டேன் நண்பரே!!!
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். Empty Re: "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

Post by கரூர் கவியன்பன் Fri Jan 11, 2013 10:06 pm

அது சரி.அப்போ தமிழக மக்களின் நிலை சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். Empty Re: "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

Post by யினியவன் Fri Jan 11, 2013 10:08 pm

கரூர் கவியன்பன் wrote:அது சரி.அப்போ தமிழக மக்களின் நிலை சோகம்
இதை விட மோசமாக போக முடியாது என்ற எண்ணம் தானோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். Empty Re: "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

Post by கரூர் கவியன்பன் Fri Jan 11, 2013 10:14 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அது சரி.அப்போ தமிழக மக்களின் நிலை சோகம்
இதை விட மோசமாக போக முடியாது என்ற எண்ணம் தானோ!!!
எது எப்படி நடந்தாலும் மாக்காளாக போவது மட்டும் இந்த மக்கள் தான் அண்ணா.அது தான் இப்படி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். Empty Re: "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

Post by யினியவன் Fri Jan 11, 2013 10:17 pm

கரூர் கவியன்பன் wrote:எது எப்படி நடந்தாலும் மாக்காளாக போவது மட்டும் இந்த மக்கள் தான் அண்ணா.அது தான் இப்படி
மாக்காளாக போவது மக்கள்
நாடாள போவது அவர்கள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். Empty Re: "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

Post by Muthumohamed Fri Jan 11, 2013 10:20 pm

ஆணவத்துக்கு கிடைக்கும் ஆனால் கிடைக்காது



"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். M"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். U"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். T"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். H"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். U"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். M"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். O"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். H"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். A"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். M"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். E"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். Empty Re: "நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum