புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
21 Posts - 66%
heezulia
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
63 Posts - 64%
heezulia
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதந் "தீ'


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:12 am

அரண்மனையில் வேலை செய்த பணிப்பெண் ஒருத்தி இரவுப் பணி முடிந்ததும் மறுநாள் காலை தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அரண்மனை வாயிலை ஒட்டிய சுவரில் மறுபக்கம் ஒரு படைவீரன் மற்றொரு படை வீரனுடன் பேசுவது அவள் காதில் கேட்டது.

"நான் இன்று இரவு அரசருக்குத் தெரியாமல் பஞ்ச கல்யாணியை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் செல்லப் போகிறேன்..'' என்றான்.

அதற்கு மற்றொருவன் ""அரசனுக்குத் தெரிந்தால் உன் நிலை என்னாகும் தெரியுமா? மரண தண்டனைதான்!'' என்றான்.

அந்நாட்டு மன்னரின் அரண்மனையில் "பஞ்ச கல்யாணி' என்றொரு நடன மங்கை இருந்தாள். அவள் பேரழகியாகவும் நடனத்தில் சிறந்தவளாகவும் விளங்கினாள். அவளை அபகரித்துச் செல்லப் பல நாட்டு மன்னர்கள் முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. மன்னர் தனது அரண்மனையில் அவளுக்கு ஒரு பகுதியை அளித்து அங்கு தங்க வைத்திருந்தார். அங்கு பலத்த காவலும் போடப்பட்டிருந்தது.

இவ்வீரர்கள் பேசியதைக் கேட்ட அப்பணிப்பெண் இவ்விஷயத்தை யாரிடமாவது கூறவேண்டும் எனத் துடித்தாள். அரண்மனையில் நடைபெறும் எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என கட்டளையிட்டிருந்தார் மன்னர். பணிப்பெண்களின் தலைவியிடம் கூறினால், அவள் இதை நம்பமாட்டாள். மேலும் சரியான ஆதாரம் இல்லாமல் இத்தகைய தகவல்களை வெளியில் சொல்லவும் முடியாது.

இவ்வாறு சிந்தனை வயப்பட்டவளாய் நடந்து செல்லும் வழியில் பூ விற்கும் பெண்மணியைக் கண்டாள். அவளிடம் விரைந்து சென்று, சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, "உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். யாரிடமும் சொல்லிவிடாதே... இன்றிரவு ஆட்டக்காரி பஞ்ச கல்யாணியை ஒரு வீரன் அழைத்துச் செல்ல இருக்கிறான்!' என்றாள்.

இதைக் கேட்ட அந்தப் பூக்காரிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. யாரிடமாவது இத்தகவலைப்
பகிர்ந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. அந்த நேரம் பார்த்து அவளுக்கு நன்கு பழக்கப்பட்ட தயிர் விற்கும் பெண்மணி அங்கு வந்தாள். உடனே அவளிடம் ஓடிச்சென்று, ""கேட்டாயா... இந்த அநியாயத்தை! ஆட்டக்காரி பஞ்ச கல்யாணிக்கும் படைவீரன் ஒருவனுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் இன்றிரவு அவர்கள் அரண்மனையை விட்டுத் தப்பித்துச் செல்ல இருக்கிறார்கள். இந்த ரகசியத்தை ஒருவரிடமும சொல்லிவிடாதே...'' என்றாள்.
இதைக் கேட்ட அந்த தயிர்க்காரி ""சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டேன்!'' என்று கூறி அங்கிருந்து அகன்றாள். அவள் ஊருக்குள் சென்று தயிர் விற்கும் பொழுதும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. மனம் இத்தகவலையே நினைத்துக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட பூங்கொடி என்ற பெண், ""என்னம்மா? என்னவோ போல் இருக்கிறீர்கள்? உடம்பு சரியில்லையா?'' என்று கேட்டாள்.

தயிர் விற்கும் பெண்மணி சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று, ""உனக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன். நீ அதை யாரிடமும் கூறக்
கூடாது. அரண்மனையில் இருக்கும் ஆட்டக்காரி பஞ்ச கல்யாணி இன்று இரவு ஒரு வீரனுடன் தப்பித்துச் செல்லப் போகிறாள்! அவள் பக்கத்து நாட்டு மன்னரிடம் சென்று நம் நாட்டைப் பற்றிய ரகசியங்களைச் சொல்லிவிடுவாள் என நினைக்கிறேன்..'' என்று தனது யூகத்தையும் கலந்து கூறினாள்.

அவள் அங்கிருந்து சென்றவுடன் பூங்கொடி நேரடியாகத் தன் எஜமானியாகிய அமைச்சரின் மனைவியிடம் ஓடிச் சென்று தான் கேள்விப்பட்ட எல்லா விஷயத்தையும் அப்படியே கூறினாள். அமைச்சரின் மனைவி உடனே அமைச்சரிடம் இத்தகவலைக் கூறினாள்.

இதைக் கேள்விப்பட்ட அமைச்சர் உடனடியாக மன்னரிடம் ஓடிச்சென்று, ""மன்னா.. நமது அரண்மனையில் தங்கியிருக்கும் ஆட்டக்காரி பஞ்ச கல்யாணி, வேற்று நாட்டு மன்னனால் அனுப்பப்பட்ட உளவாளி போலும்! அவள் இங்கு நடன மங்கை போல் தங்கியிருந்து நம் நாட்டு ராணுவ ரகசியங்களை சேகரித்து இருக்கிறாள். நம் படை வீரர்களுள் யாரோ ஒருவன் அவளுக்கு உதவி செய்கிறான். இன்று இரவு அவளும் அப்படை வீரனும் இங்கிருந்து தப்பிச் செல்ல திட்டம் தீட்டியுள்ளனர். அவர்கள் இங்கிருந்து சென்றுவிட்டால், வேற்று நாட்டு மன்னன் நம்மை எளிதாக முற்றுகையிட்டு விடுவான். எனவே அவ்விருவரையும் தாங்கள்தான் தண்டிக்க வேண்டும்!'' என்றார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மன்னர், ""உங்களுக்கு இத்தகவலைக் கூறியது யாரென்று கூறும்! தீர விசாரிக்காமல் என்னால் ஒருவரையும் தண்டிக்க முடியாது!'' என்றார்.

அமைச்சர் தனது மனைவி என்று கூற அவரது மனைவியோ தன் வீட்டுப் பணிப்பெண் பூங்கொடி கூறிய தகவல் என்றாள். பூங்கொடியை அழைத்து விசாரித்ததில், அவள் தயிர்க்காரி கூறிய தகவல் என்றாள். தயிர்க்காரி, பூக்காரிதான் இவ்விஷயத்தைக் கூறினாள் என்றாள். பூக்காரி அரண்மனையில் வேலை செய்யும் பணிப்பெண் கூறியது என்றாள். இதனால் அவள் மன்னர் முன் நிறுத்தப்பட்டாள். அவள் உடல் நடுங்கியபடியே மன்னரிடம், ""மன்னா! எனக்கு அப்படை வீரனின் முகம் தெரியாது! அவன் பேசிய குரலை மட்டுமே கேட்டேன்...'' என்றாள்.

அவள் குரல் கேட்ட நேரத்தில் பணியில் இருந்தவர்களை விசாரித்ததில் அவ்வாறு பேசியவன், வீரசிம்மன் என்னும் குதிரைப்படை வீரன் என்பது தெரிந்தது. அவன் உடனே மன்னரிடம் அழைத்துவரப்பட்டான்.

"மன்னா... எனக்கும் நடன மங்கை பஞ்ச கல்யாணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை! நம் குதிரைப் படையில் உள்ள குதிரைகளுக்கு அடையாளத்திற்காக நாங்கள் செல்லப் பெயர் வைப்போம். அப்படி மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்த குதிரைக்குப் "பஞ்சகல்யாணி' என்று பெயரிட்டோம்.

நான் குதிரையில் ஏறி வேகமாக ஓட்டுவதற்கும் அதை அடக்குவதற்கும் பயிற்சி செய்துவருகிறேன். எனக்குள்ள பணி நேரத்தில் எல்லா குதிரைகளையும் என்னால் பயிற்றுவிக்க இயலவில்லை!

எனவே இன்றிரவு "பஞ்சகல்யாணி' குதிரையைக் காட்டுக்கு அருகில் உள்ள திடலுக்கு ஓட்டிச் சென்று பயிற்சி செய்யலாம் என்று நினைத்தேன். அப்படிக் குதிரையை வெளியே ஓட்டிச் செல்ல வேண்டும் என்றால் தங்களின் முன் அனுமதி தேவை. எனவே தங்களுக்குத் தெரியாமல் அவ்வாறு செய்ய விரும்பினேன். ஆனால் எப்படியோ தங்களுக்குத் தெரிந்துவிட்டது! தயவு செய்து என்னை மன்னியுங்கள்!'' என்றான்.

இதைக் கேட்ட மன்னர், அமைச்சர் மற்றும் அங்கு கூடியுள்ளோர் அனைவரும் சிரித்துவிட்டனர்.
ஆம்! கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீரவிசாரிப்பதே மெய்! ஏனெனில் வதந்தி காட்டுத் தீயை விட மிக வேகமாகப் பரவும்!

சிறுவர் மணி




வதந் "தீ' Mவதந் "தீ' Uவதந் "தீ' Tவதந் "தீ' Hவதந் "தீ' Uவதந் "தீ' Mவதந் "தீ' Oவதந் "தீ' Hவதந் "தீ' Aவதந் "தீ' Mவதந் "தீ' Eவதந் "தீ' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 1:29 am

கூடங்குளம் கதையும் இதுபோலத்தான்.

இங்கிருந்து தயாரிக்கும் மின்சாரம் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையை தீர்த்துடும்ன்னு சொல்றத நம்பிடாதீங்க மக்களே.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 9:18 pm

யினியவன் wrote:கூடங்குளம் கதையும் இதுபோலத்தான்.

இங்கிருந்து தயாரிக்கும் மின்சாரம் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையை தீர்த்துடும்ன்னு சொல்றத நம்பிடாதீங்க மக்களே.

சூப்பருங்க




வதந் "தீ' Mவதந் "தீ' Uவதந் "தீ' Tவதந் "தீ' Hவதந் "தீ' Uவதந் "தீ' Mவதந் "தீ' Oவதந் "தீ' Hவதந் "தீ' Aவதந் "தீ' Mவதந் "தீ' Eவதந் "தீ' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 09, 2013 9:24 pm

கதை அருமை .நன்றி

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 09, 2013 11:01 pm

நல்ல கதை. இதன் கருத்தை நாம் மனதில் வைத்து நம் வாழ்வில் ஒவ்வொரு வதந்தியையும்/விஷயத்தையும் தீர விசாரித்து முடிவுக்கு வரவேண்டும்.



வதந் "தீ' 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக