புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
59 Posts - 55%
heezulia
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
54 Posts - 55%
heezulia
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சட்டத்தால் என்ன பயன்? Poll_c10சட்டத்தால் என்ன பயன்? Poll_m10சட்டத்தால் என்ன பயன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டத்தால் என்ன பயன்?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 09, 2013 8:43 am

தில்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடங்கி இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கும்படி எல்லா உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உள்ள சட்டங்களைக் கடுமையாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் வரவேற்கப்பட்டுள்ளன.
:-
ஒரு பிரச்னை ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கிப் புரட்டிப் போட்டிருக்கிறது.இப்போதாவது, இதுவரை விசும்பலும், அவமானமுமாக மூடி மறைக்கப்பட்ட அநீதிகள், அரங்கத்துக்கு எடுத்து வரப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
அதேநேரத்தில்,சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன. இந்தப் பிரச்னைக்குச் சட்டம் மட்டுமே தீர்வாகிவிடுமா என்பதுதான் அது.
:-
டிசம்பர் 16 ஆம் தேதி இரவு நடந்த அந்தக் கொடிய சம்பவம்முடிந்து ஏறத்தாழ ஒரு மாதம்ஆகப் போகிறது. இன்னமும் நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, இதுவரை காவல்துறையும், நீதிமன்றமும், அரசும் இந்தப் பிரச்னையை உளப்பூர்வமான உறுதியுடன் எதிர்கொண்டுள்ளதா? தேர்தல்முடிந்து ஆட்சி மாறினால், முதல்வரின் படத்தை அடுத்த சில நிமிடங்களிலேயே அரசு அலுவலகங்களில் மாற்றி விடுகிறார்களே, அதேபோல, சம்பவம் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும்போது, இதற்குள் இந்தியாவில் உள்ள அத்தனை காவல் நிலையங்களிலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளிருக்கு, சட்டப்படி என்னென்ன பாதுகாப்புகள் அளிக்கப்படுகின்றன என்கிற தகவல் பலகை பளிச்சென்று பார்வையில் படுவதுபோல வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? ஏன் இல்லை?
பாலியல் வன்கொடுமைப் பிரச்னையில் காவல்துறையின்மெத்தனமும், குற்றவாளிகள்மீது அவர்கள் காட்டும் அனுதாபமும்தான் பாதிக்கப்பட்ட மகளிரைக் காவல் நிலையத்தை அணுக விடாமல் தடுக்கின்றன. மகளிர் காவல் நிலையங்கள் இருக்கின்றனவே என்று கேட்கலாம். அந்த மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்களும், ஆணாதிக்கக் காவல்துறை அதிகாரிகளின் கைப்பாவையாகச் செயல்படும் அவலம்தான் காணப்படுகிறதே தவிர, தன்னிச்சையாகப் பெண்களுக்காக அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான் எதார்த்த உண்மை நிலை.
:-
இரண்டு வாரங்களுக்கு முன்னால், மேகாலய மாநிலத் தலைநகர் இம்பாலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 18 வயதுப் பெண், புகார் கொடுக்கக் காவல்நிலையத்தை அணுகி இருக்கிறார். நடந்ததுஎன்ன தெரியுமா? அவர் ஐந்து நாள்கள் காவல்துறைக் கண்காணிப்பில் காவலில் வைக்கப்பட்டார். எதற்குத் தெரியுமா? அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய!
:-
இந்தியக் குற்றவியல் சட்டப்படி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அவர் விசாரணைக்காகவோ, குற்றப்பதிவு செய்வதற்காகவோ காவல்நிலையத்துக்கு வரவழைக்கப்படக்கூட சட்டம் அனுமதிக்கவில்லை. இதெல்லாம்அவரை விசாரணைக்குக் காவல் நிலையத்தில் வைத்துக் கொண்ட காவல்துறை அதிகாரிக்கும், அதற்கு அனுமதித்த விசாரணை நீதிபதிக்கும் தெரியாதா என்ன? காவல் நிலையத்தில் குற்றப்பதிவுக்காகக் காவலில் வைக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு என்ன நேர்ந்திருக்கக்கூடும் என்பதை நினைத்துப் பார்த்தால் - நிச்சயமாக, வார்த்தைகளால் எள்ளிநகையாடவாவது செய்திருப்பார்கள், மனதைக் காயப்படுத்தும் விதத்தில் கேள்வி கேட்டிருப்பார்கள் - அந்தப் பெண் இதைவிடப் பாலியல் வன்கொடுமையே மேல் என்கிற எண்ணத்துக்கு வந்திருப்பார்.
:-
கடந்த 15 நாள்களில் நடந்தேறியிருக்கும் சில சம்பவங்கள் இவை.
:-
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண், புகார் கொடுக்கப்போன இடத்தில் காவல்துறையினரால்தரப்பட்ட தொந்தரவுகளால் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டு விட்டார்.
:-
பெங்களூரில் நடந்திருக்கும் இன்னொரு சம்பவத்தில், வழக்குப் பதிவு செய்யப்படாமல், காவல்துறையும், ஊர்ப் பெரியவர்களும் சேர்ந்து, ஏற்கெனவே திருமணமாகி இருந்த குற்றவாளிக்கே பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க பெண்ணின் பெற்றோரை வற்புறுத்தி இருக்கிறார்கள். காவல்துறையே, பாலியல் வன்கொடுமை செய்தவனுக்குச் சாதகமாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருப்பதாகப் பெண்ணின் தந்தை முறையிட்டிருக்கிறார்.
:-
கேரளத்தில் 16 வயதுப் பெண் ஒருத்தியை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியவழக்கு ஒன்றில் விசாரணை நீதிமன்றம் 36 பேருக்குத் தண்டனை வழங்கியது. நான்கு ஆண்டுகள் நீண்டு நின்ற வழக்கில், 2005 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம், போதிய சாட்சியங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டி 35 பேரை விடுதலை செய்துவிட்டது. அந்த வழக்கு மேல் முறையீட்டில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. வழக்கு பலவீனமானதற்குக் காரணம், குற்றவாளிகளுக்கு எதிராகப் பலமான சாட்சியங்களையோ, சட்டப் பிரிவுகளையோ காவல்துறை பயன்படுத்தாமல் விட்டதுதான்.
:-
கடுமையான சட்டம் கொண்டு வருவதும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீலிக்கண்ணீர் வடிப்பதும் ஒருபுறம் இருக்கட்டும். பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் சாதகமாகக் காவல்துறை இல்லாமல் போனால் சட்டங்களால் என்ன பயன்? கடந்த 40 ஆண்டுகளில் இதுவரைஆறு உயர்நிலைக் குழுக்கள் காவல்துறை சீர்திருத்தங்கள் பற்றிய அறிக்கைகளைச் சமர்ப்பித்துவிட்டன. இதுவரை, அவற்றில் ஓர் அறிக்கை வேண்டாம், ஒரு பரிந்துரைகூட நடைமுறைப்படுத்தப்படவில்லை.
:-
உச்ச நீதிமன்றம் காவல்துறை சீர்திருத்தங்களை உடனடியாகநடைமுறைப்படுத்தச் சொல்லியும், எந்தவொரு மாநிலமும், மத்திய அரசும் அதைச் செயல்படுத்தத் தயாராக இல்லை. ஏனென்றால், நமது அரசியல்வாதிகள் காவல்துறையின் பாதுகாப்பிலும், காவல்துறையினர் அரசியல்வாதிகள் தரும் பாதுகாப்பிலும் இருப்பதுதான் காரணம். இந்த லட்சணத்தில், சட்டங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகத்தான் இருக்கும்!
:-
தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 9:39 am

சட்டம் வழக்குகள் தீர்ப்புகள் மட்டுமே
திருத்திவிடாது சமுதாயத்தை

சீர்கெட்ட சிலர் சீரானாலே
சமுதாயம் மேன்மை அடையும்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக