ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....

Go down

ஈகரை டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....

Post by Muthumohamed Tue Jan 08, 2013 10:49 pm

டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....

எனக்கு நன்கு தெரியும்... இந்த மருத்துமனையிலிருந்து உயிரோடு நான் திரும்பி வந்தாலும் என்னுடல் பலவீனத்திலிருந்து மீண்டு வர முடியாது என்று... என் இளமை கால வசந்தம் அன்றிரவுடன் முடிந்துவிட்டதை தெரிந்தே வைத்திருக்கிறேன். என் வாழ்க்கை முடக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை!

அந்த கொடிய இரவை நினைத்து பல வருடங்கள் எனக்கு தூக்கம் வராது. இனி இரவுகளை பார்க்கும் நேரமெல்லாம் அந்த கொடிய விஷயமே என் நினைவில் வந்து நிற்கும்! ஆண்களை கண்டால் என்னை அறியாமல் என்னுடல் அலர்ஜியால் துடிதுடிக்கும்! இத்தனைக்கும் ஏன்?.... என் தந்தையோ சகோதரனோ மீதும் வெறுப்பு கலந்த சந்தேகம் தோன்றிக்கொண்டே இருக்கும்! என் சக தோழிகளை சந்திக்க நேர்ந்தால் கண்ணீர் முட்டும், என்னை பரிதாபமாக பார்க்கப்படும் ஒவ்வொரு நொடியும் மரணமே என் பக்கம் வந்ததுபோல் உணர்வு வரும். என் கனவுகள் ஆறு பேரால் மாற்றியமைக்கப்பட்டுவிட்டதை ஜீரணிக்கமுடியவில்லை என்றாலும் இது தான் என் நிலை!

லேசான எலும்பு முறிவுக்கு மருத்துவம் பார்த்தாலும் அவ்வப்போது வலி எட்டிப்பார்க்கும். சாதாரண மாத்திரைகளுமே பக்கவிளைவை ஏற்படுத்தும் எனும் போது என் உச்சந்தலை முதல் கருப்பை வரை தாக்கப்பட்ட வலி ஆறு மாதத்திற்குள் நின்றுவிடாது என்பதை உங்களால் உணர முடிகிறதா? நிச்சயம் எனக்கு தெரியும்... இனி வீல் சேரும், சிறிய அறையுமே என் தோழி.. என் சுயதேவைகள் அனைத்தும் இனி என் அன்னையின் உதவியால் மட்டுமே முடியும்... சாகும் வரை இந்த வேதனைகளும் வலிகளும் சுமக்க போவது நான் மட்டுமே...


எந்த தவறும் செய்யாத நான் மட்டும் வீட்டுச்சிறையில் மரணத்தை எதிர்நோக்கி!
என்னை சீரழித்தவர்கள் சிலமாத காவல் சிறைக்குப்பின் விடுதலை எதிர்நோக்கி!

ஒருவேளை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டால்....

பரிதாபம் கொண்டு இந்த மருத்துவச்செலவை ஏற்கிறது அரசு... மருத்துவமனை விட்டு நான் சென்ற பின்??? ஊடகங்களும் போராட்டக்காரர்களும் அடங்கிய பின்?
ஆனால்,
என்னை இந்நிலைக்கு ஆளாக்கிய அந்த விஷ ஜந்துக்களுக்கு இன்றும் என்றும் ஆயுள்தண்டனை என்ற பெயரில் அரசின் செலவில் இனிதாய் வாழ்க்கை கழிக்கும்! நிச்சயமாய் சில நாட்கள் குற்ற உணர்வு அவர்களை தொற்றிக்கொள்ளும்... ஆனால் நிரந்தரமல்ல... என் அவலநிலை மட்டும் நான் சாகும் வரை நிரந்தரமே...


இரக்கமற்றவர்களின் இருப்பு கம்பி அடியால் தலையில் பலத்த அடி வாங்கிய போதும், என்னை காப்பாற்ற அந்த ஆறுபேருடன் போராடி தோற்ற போதும், கொசு கடிபட்டாலே பதறிப்போகும் போகும் என் மெல்லிய தோல், வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு உராய்வு ஏற்பட்டு ரத்தத்தால் சிவப்புச்சாயம் பூசப்பட்ட போதும் , கூடியவர்களுக்கு முன் நிர்வாணமாய் நான் காட்சியளித்த போதும் என் உயிர் என்னுடலில் ஒட்டியிருந்ததற்கும் இல்லை... இல்லை... வலுகட்டாயமாய் தைரியம் வரவழைத்து உயிரை பிடித்து வைத்திருந்ததற்கும் ஒரே காரணம் கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே! மனதில் இருந்த ஒரே எண்ணம் இவர்களை தண்டிக்க வேண்டும் என்பதே! நான் கண் விழித்ததும் எதிர்பார்த்ததும் அதுவே!

பாறைக்கு கண் இருந்தாலும் அன்றிரவு என்னை பார்த்து அன்று அழுதிருக்கும்...

கேட்போரையும் கதறச்செய்யும் எனக்கிழைக்கப்பட்ட கொடுமை பார்த்த பின்னும் காமவெறியர்களை திருந்த வாய்ப்பு கொடுக்கச்சொல்லும் சமூகம்... சிரிப்பு மட்டுமே வருகிறதெனக்கு...

எறும்புகடித்தால் அதை நசுக்கி கொல்லாமல், கையை விட்டு மெல்லமாய் அப்புறப்படுத்துகிறதா அவர்களின் பகுத்தறிவு ?

வீட்டில் பாம்பு நுழைந்தால் அதை அடிக்காமல் , இரக்கப்பட்டு , மன்னித்து, மெல்லமாய் எடுத்து வெளியே அனுப்பிவிடுகிறதா அவர்களின் மனிதாபிமானம்?

ஆம் எனில், நானும் அவர்களுடன் கைகோர்க்கிறேன்... ஹா..ஹா..ஹா... சிறுகடிக்கே அறிவற்ற உயிரியை கொல்லதுணியும் நாம், நல்ல மனநிலையில், வேண்டுமென்றே ஒரு பெண்ணை சித்ரவதை செய்த கேடுகெட்டவர்களை மன்னித்துவிடவேண்டுமா? தாராளமாக மன்னிக்கட்டும்..... அவர்கள் வீட்டு பெண்ணுக்கு இந்த அலங்கோல நிலை ஏற்படும்போது!

மன்னிப்பார்கள் எனில் ...
அவர்களும் திருந்தக்கூடும் எனில் ...
அவர்களை திருத்தியதால் அனைத்தும் சரியாகிவிட்டதா? இனி உருவாகிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் காமவெறியர்களை எப்படி திருத்தப்போகிறார்கள்... "தைரியமா கற்பழி! மனிதாபிமானம் கொண்ட சட்டம் உன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் " என்றா???


கேட்டுக்கொள்ளுங்கள்.... அந்த ஆறு பேரை விடவும் கேவலமானவர்கள் இவர்களே...!!!
குறித்துக் கொள்ளுங்கள்... எனக்கு நடந்தது போல் இனி நடக்கபோகும் அனைத்து கொடிய நிகழ்வுக்கும் பொறுப்புத்தாரி இவர்கள் மட்டுமே!
பாதுகாத்துக் கொள்ளுங்கள்.... இல்லையேல் நாளை உங்கள் வீட்டுப்பெண்ணுக்கும் இதே நிலையே!!!!


என் விதியை நிச்சயம் மாற்றியமைக்க முடியாது... ஆனாலும் மற்ற பெண்கள் இந்நிலையை அடையாதிருக்க, சிறந்த வழியை என்னை பார்த்த பின்பாவது ஏற்படுத்திகொடுக்கட்டும் இவ்வரசு! ஆணாதிக்கத்தை தீயிழிட்டு பொசுக்க இன்றேனும் சந்தர்ப்பத்தை உருவாக்கட்டும் இவ்வரசு!


*********************
ஆக்கம் - ஆமினா முஹம்மத்



டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்..... Mடெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்..... Uடெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்..... Tடெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்..... Hடெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்..... Uடெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்..... Mடெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்..... Oடெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்..... Hடெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்..... Aடெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்..... Mடெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்..... Eடெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்..... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
» டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: டிசம்பர் -16 முதல்-ஆகஸ்ட் 31 வரை
» டெல்லி மாணவி கற்பழிப்பு கொலையில் 17 வயது சிறுவனுக்கு அதிக பங்கு!
» டெல்லி மாணவி குடும்பத்திற்கு வீடு; சோனியா, ராகுல் நேரில் ஆறுதல்
» டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க மாநகராட்சி பள்ளி மாணவி தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum