ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் நல்லவர்களா?

5 posters

Go down

ஆண்கள் நல்லவர்களா? Empty ஆண்கள் நல்லவர்களா?

Post by Powenraj Tue Jan 08, 2013 8:16 am

டெல்லி சம்பவத்தின் தாக்கமும் தகிப்பும் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் ஆங்கில ஊடகங்கள் காட்டும் அக்கறை அசாதாரணமானது. பிரமுகர்களின் வாயை கிண்டி அவர்கள் சொல்ல நினைத்திராத வார்த்தைகளை வரவழைத்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி பெண்களின் கோபத்தை கொதிநிலையில் பராமரித்து வருவது சாதாரணமான பணியல்ல. ஜனாதிபதி மகனோ ஆர்எஸ்எஸ் தலைவரோ கால்நடை அமைச்சரோ எவர் சிக்கினாலும் விடுவதில்லை.
:-
ராமாயணத்தில் சீதை லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டியதால் விபரீதம் நிகழ்ந்தது என்றார் ஒருவர்.குட்டைப் பாவாடை அணிவதை நிறுத்தினால் பலாத்காரம் குறையும் என்றார் இன்னொருவர். மற்றொருவர் இந்த கொடுமைக்கு காரணம் மேலை நாட்டு கலாசாரத்தை காப்பியடிப்பதுதான் என்றார். அனைத்து யோசனைகளிலும் பொதுவான அம்சம் ஒன்று: உடை அணிவதில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்.
:-
இதொன்றும் புதிய சிந்தனை அல்ல. பலர் சொன்ன பழைய கருத்து. கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும் இந்த அடிப்படையில் உடை கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. உடலை இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ், இடையை மறைக்காத டீ ஷர்ட், டாப்ஸ், லோ கட் சுடிதார், துப்பட்டா இல்லாதசல்வார் கமீஸ் போன்ற உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. போராட்டம்காரணமாக அது வாபஸ் பெறப்பட்டது. ‘உடையை பார்க்காதே, எங்கள் உள்ளத்தை பார்’ என்ற வாசகம்பொறித்த டீ ஷர்ட் பிரபலமானது. ஆண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்று எந்த பெண்ணும் யோசனை சொன்னதில்லை; உங்களுக்கு ஏனிந்த வீண் வேலை என்று பெண்கள் கேட்டனர்.
:-
இந்த விவகாரத்தில் பலர் கவனிக்க தவறிய ஒரு விஷயம் உண்டு. பெண்கள் உடை தொடர்பாக பேசியவர்கள் எல்லாரும் ஆணாதிக்க வாதிகளோ மத பழமைவாதிகளோ அல்ல. கல்வியாளர்கள், மேதைகள், பண்பாளர்கள் மட்டுமின்றி பெண்ணுரிமைக்காக போராடுபவர்கள் தரப்பில் இருந்தும் இந்த கருத்து வந்தது. இவர்கள் ஆணும் பெண்ணும் சமம் என்ற சித்தாந்தம் லட்சிய பூர்வமானது என்று உணர்ந்திருப்பவர்கள். சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்பதை போல.
:-
அனைவருக்கும் ஒரே சட்டம் என்றால் ஏழைகள் மட்டும் சிறையில் வாடுவானேன். சட்டத்தைவிட உயர்ந்தவர்கள்கிடையாது என்பது உண்மையாக இருந்தால் காவிரி பிரச்னையும் முல்லைப்பெரியாறுவிவகாரமும் இழுத்துக் கொண்டிருப்பானேன். உடல்ரீதியாக மட்டுமல்ல, மனம் அடிப்படையிலும் ஆண்களும் பெண்களும் வெவ்வேறானவர்கள்.இரு தரப்பினரின் சிந்தனையும் பார்வையும் வேறு வேறானவை. அறிவியல் பூர்வமாக ஏராளமான ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்திருக்கின்றன.
:-
மற்ற விஷயங்கள் கிடக்கட்டும். பெண்களை ஆண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை எடுத்துக் கொள்வோம். சிறு வயதில் இருந்தே அல்லது நீண்டகாலம் ஒரு ஆணுக்கு பழக்கமான ஒரு பெண் குறைந்த ஆடையில் தோன்றும்போது அவனுக்கு எந்த வித்யாசமும் தெரிவதில்லை. அதுவே முன்பின் தெரியாத ஒரு பெண் நீச்சல் உடையிலோ கவர்ச்சியான ஆடையிலோ வந்தால் அவளை ஒரு பெண்ணாகவேபார்க்க தெரியாது அவனுக்கு.
:-
ஒரு ஸ்குரூடிரைவர், டார்ச்லைட், ஏணி போன்ற பொருட்களை பார்க்கும்போது அவன் மூளையில் என்ன மாதிரியான ரசாயன மாற்றம் நிகழுமோ அதே மாற்றம் மேற்படி பெண்ணை பார்க்கையில் ஏற்படுகிறது. ஒரு சாதனத்தை அடி, சுழற்று, குத்து, தள்ளு என்று எவ்வாறு பயன்படுத்த உந்தப்படுவானோ அதே உந்துதல் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. அல்லது சாலையில் திரிபவன், போதைக்கு அடிமையானவன் போன்று அப்பெண்ணும் அவனுக்கு உணர்ச்சியற்ற ஜடமாக தெரிவாளாம். இது பேட்டிகள் மூலமல்ல, தலையில்எலக்ட்ரோடுகள் பொருத்தி நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரிய வந்த முடிவுகள்.
:-
பெண் மனம் உறவை தேடும்; ஆண் மனம் உடலுறவை நாடும் என்பதும் ஆராய்ச்சிகள் ஊர்ஜிதம் செய்த உண்மை. கண்ணை ஈர்க்கும் உடலழகையும் தாண்டி அவனது கல்வியால் விளைந்த பண்பாடு,சமூக அந்தஸ்து, விளைவுகள் குறித்த பயம் போன்றவை 70 சதவீத ஆண்களை குற்றவாளியாகாமல் தடுத்து விடுகிறது. மீதமுள்ள ஆண்களுக்கும் அந்த வேகத்தடைகள் உயிர்த்தெழும்காலம் வரும் வரையில் பெண்கள் சற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது தப்பில்லை.
:-
ஏனென்றால், ஒவ்வொரு சமூகத்திலும் பெருவாரியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பாரம்பரியப்படி - உடல் அழகைஅதிகம் வெளிப்படுத்தாத - உடையணியும் பெண்களை பார்க்கும் ஆண்களுக்கு விபரீதமான உணர்வுகள் ஏற்படுவதில்லை என்பதும் இதே போன்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை.
:-
உயர்வு - தாழ்வு, ஆதிக்கம் -அடிமை வாதங்களில் இறங்காமல் எதார்த்தம் புரிந்துகொள்ள முயன்றால் எல்லோருக்கும் நல்லது.
:-
நன்றி தினகரன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஆண்கள் நல்லவர்களா? Empty Re: ஆண்கள் நல்லவர்களா?

Post by மாணிக்கம் நடேசன் Tue Jan 08, 2013 9:27 am

இதிலென்ன சந்தேகம், நாங்கள் நல்லவர்கள் தான்.
இப்படி சொல்லி சமாளிச்சிக்குவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆண்கள் நல்லவர்களா? Empty Re: ஆண்கள் நல்லவர்களா?

Post by Guna Tamil Tue Jan 08, 2013 10:28 am

நாங்கள் பாவம் அப்பாவிகள் ஆறுதல் ஆறுதல்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

ஆண்கள் நல்லவர்களா? Empty Re: ஆண்கள் நல்லவர்களா?

Post by DERAR BABU Tue Jan 08, 2013 10:35 am

நாங்கல்லாம் ரெம்ப நல்லவுங்க .. நம்புங்க ........


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஆண்கள் நல்லவர்களா? Empty Re: ஆண்கள் நல்லவர்களா?

Post by Ahanya Tue Jan 08, 2013 10:42 am

முற்றிலும் உண்மை பவுன்ராஜ்...... ஆமோதித்தல்


ஆண்கள் நல்லவர்களா? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஆண்கள் நல்லவர்களா? Empty Re: ஆண்கள் நல்லவர்களா?

Post by Ahanya Tue Jan 08, 2013 10:44 am

V.BABU wrote:நாங்கல்லாம் ரெம்ப நல்லவுங்க .. நம்புங்க ........

பைத்தியம்


ஆண்கள் நல்லவர்களா? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஆண்கள் நல்லவர்களா? Empty Re: ஆண்கள் நல்லவர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum