ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதமாற்றம் செய்யலாமா?

Go down

மதமாற்றம் செய்யலாமா?  Empty மதமாற்றம் செய்யலாமா?

Post by சாமி Mon Jan 07, 2013 2:33 pm

கட்டாய மதமாற்றம், மத சுதந்தரம், மத அவமதிப்பு ஆகிய ஒவ்வொன்றுக்கும் நம் நாட்டில் தனிச் சட்டங்கள் உள்ளன. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டதை பற்றி தெரிந்து கொள்ளும் தருவாயில் மத சுதந்திரம் மற்றும் மத அவமதிப்பு பற்றி சட்டங்கள் என்ன சொல்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். முதலில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைப் பற்றி பார்ப்போம்.

கட்டாய மதமாற்றம்
மதமாற்றம் தவறில்லை. ஆனால் கட்டாய மதமாற்றம் குற்றம். அதுவும் ஒரு சில மாநிலங்களில்தான். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மதமாற்றச் சட்டம் இயற்றப்படவில்லை. மத்தியப் பிரதேசம், ஒரிசா, சத்திஸ்கர், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் இயற்றபட்டு அமல்படுத்தபட்டது. ஆனால் அதை செயல்படுத்த தேவையான விதிகள் இயற்றப்படவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது, ஆனால் ஆளுநர் (அப்போது இருந்தவர் திருமதி பிரதீபா பாட்டீல்) கையெழுத்துப் போட மறுத்துவிட்டார்.

தமிழ்நாட்டிலும் 2002ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா முதலமைச்சாராக இருந்தபொழுது கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் பொருட்டு ஓர் அவசரச் சட்டத்தை கொண்டுவந்தார். Tamil Nadu Prohibition of Forcible Conversion of Religion Ordinance. அந்தச் சட்டம் 2004 ஆம் ஆண்டு அதே ஜெயலலிதா அரசால் ரத்து செய்ப்பட்டது.

மேற்சொன்ன சட்டத்தின்படி யாரேனும் ஒருவர் மற்றவரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ, ஆசை காட்டியோ, ஏமாற்றியோ அவருடைய மதத்திலிருந்து வேறோர் மதத்துக்கு மாற்றுவது குற்றமாகக் கருதப்பட்டது. இந்தக் குற்றத்தை செய்பவருக்கும், குற்றம் நடப்பதற்குத் தூண்டுதலாக இருப்பவருக்கும் மூன்றாண்டு சிறை தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே குற்றத்தை இளையோரிடமும் (மைனர்), பெண்களிடமும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரிடமும் நிகழ்த்தினால், குற்றம் செய்தவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ஒரு லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டச் சட்டத்தில் உள்ள ஷரத்துக்களே மற்ற மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்திலும் இடம்பெற்றிருந்தன. குற்றாவாளிக்கு வழங்கப்படும் தண்டனையில்தான் வித்தியாசம் இருந்தது.

மதமாற்றத் தடைச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் மட்டும்தான் மதமாற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதுவும்கூட மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிகளைப் பின்பற்றினால் மட்டுமே. ஒருவர் தன்னுடைய மதத்தின் அருமை, பெருமைகளைச் சொல்லி மற்றவரை அவரது மதத்தை ஏற்றுக்கொள்ள வைத்தால் அது சட்டப்படி குற்றமாகாது. அத்தகை மதமாற்றச் சடங்குகளில் ஈடுபடுபவரும், அச்சடங்கை நடத்தி வைப்பவரும் அந்தச் சடங்கு நடைபெற்ற சம்பவத்தை, குறிப்பிட்ட காலத்துக்குள் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் தெரிவிக்கவேண்டும். இல்லை என்றால் அதுவும் குற்றமாகக் கருதப்பட்டுத் தண்டனை வழங்கப்படும்.

மத சுதந்தரம்
இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 25 முதல் 28 வரையிலான ஷரத்துக்களின்படி இந்திய குடிமகனாகிய ஒருவர் தனக்குப் பிடித்த மதத்தை பின்பற்றலாம். அந்த மதத்தைப் பற்றி மக்களிடயே பிரசாரம் செய்யலாம். அது அந்த குடிமகனின் அடிப்படை உரிமை (Fundamental Right).

ஒவ்வொரு மதத்தவரும் தம் மத நம்பிக்கைக்கு ஏற்ப கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் கட்டிக்கொள்ளலாம். மதக்கோட்பாட்டுக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை நடத்தலாம். தர்மாலயங்கள் நிறுவி தர்மம் செய்து வரலாம். ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய மதநிர்வாகத்துக்காக தேவையான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கலாம்.

அதே சமயம், மத நம்பிக்கைக்குத் தொடர்புடைய பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவும் சீரமைக்கவும் தேவையான சட்டங்களை கொண்டுவர அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. இந்து சமயத்துக்கு உட்பட்ட வழிபாட்டுத் தலங்கள், கோவில்கள், மடாலயங்கள் ஆகியவற்றை இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து ஜாதியினரும் பயன்படுத்த அரசால் வழிவகைச் செய்யமுடியும். முழுக்க முழுக்க அரசு வருவாயிலிருந்து நடத்தப்படும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதம் சம்பந்தமான கோட்பாடுகளை, மதம் சம்மந்தப்பட்ட பாடங்களை மாணவர்களுக்கு போதிக்கக்கூடாது.

மத அவமதிப்பு
ஒருவருடைய மதத்தை அவமதிப்பது குற்றமாகும். இதற்கான சட்ட விதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றிவிட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (இ.பி.கோ) கொண்டுவரப்பட்டது. இ.பி.கோ 295 ஆம் பிரிவிலிருந்து 298 வரை உள்ள பிரிவுகளில் மத அவமதிப்பு சம்பந்தமான குற்றங்களும் அதற்கான தண்டனைகளும் விளக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில், கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் மத அவமதிப்பு குற்றத்தில் ஈடுபட்டவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யமுடியும்.

நாம் இ.பி.கோவுக்கு மறுபடியும் வருவோம். ஒரு மதத்தை அவமதிக்கும் பொருட்டு அந்த மதத்தின் வழிபாட்டுத் தலங்களுக்குச் சேதம் விளைவித்தாலோ, புனிதமாகக் கருதப்படும் பொருள்களை அவமதித்தாலோ அச்செயல் குற்றமாகக் கருதப்பட்டு, தவறு இழைத்தவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். (இ.பி.கோ 295 வது பிரிவு).

ஒரு மதத்தின் நம்பிக்கைகளை இழிவு செய்யும் நோக்கத்தோடு அல்லது அந்த மதத்தைப் புண்படுத்தும் பொருட்டு, கெட்ட எண்ணத்துடன் வார்த்தைகளாலோ, எழுத்துகளாலோ செய்கையாலோ இழிவுபடுத்தினால், இழிவுபடுத்தியவர்க்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். (இ.பி.கோ 295 ஆவது பிரிவு).

ஒரு மதக்கூட்டத்தின் போதோ அல்லது மதம் சம்பந்தப்பட்ட விழாக்களின் போதோ அல்லது பண்டிகைகளின் போதோ யாரேனும் பங்கம் விளைவித்தால், அல்லது அமைதியை குலைத்தால், கலவரம் உண்டுசெய்தால், அவ்வாறு செய்பவர்களுக்கு ஓர் ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். (இ.பி.கோ 296 வது பிரிவு).

ஒருவருடைய மத நம்பிக்கைகளைக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அல்லது இவ்வாறு செய்தால் ஒருவர் காயப்படுவார் என்று தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் அவருடைய வழிபாட்டு இடத்தில் நுழைவதோ, அவர் சம்பந்தப்பட்ட சமூகத்துக்குச் சொந்தமான சமாதி, கல்லறை, இறுதிச் சடங்கு செய்யும் இடங்கள் ஆகியவற்றுள் அத்து மீறி நுழைவதோ அல்லது கிடத்தப்பட்டிருக்கும் சடலத்துக்கு அவமரியாதை செய்வதோ அல்லது ஈமச்சடங்கு செய்யவிடாமல் தடுப்பதோ சட்டப்படி குற்றமாகும். குற்றமிழைத்தவர்களுக்கு ஓர் ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். (இ.பி.கோ 297 வது பிரிவு).

ஒருவருடைய மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்தில் வார்த்தைகளால் உச்சரிப்பது அல்லது சப்தங்களால் காதுபட கூச்சலிடுவது போன்ற அவமதிப்புச் செயல்களில் ஈடுபடுதல் அல்லது மற்றவருடைய மத உணர்வுகள் பாதிக்கப்படும் விதத்தில் செய்கை செய்வது அல்லது அவர் கண்ணில் படும்படி ஒரு பொருளை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கான தண்டனை ஒர் ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரணடும். (இ.பி.கோ 298 வது பிரிவு).

நம் நாட்டில் மத சுதந்தரம் உண்டு. யார் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், போதிக்கலாம். ஆனால், மற்றவர்கள் தன் மதத்துக்கு மாறவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. தான் பின்பற்றுகிற மதம்தான் சிறந்தது என்ற நோக்கில் மற்ற மதங்களை இழிவுபடுத்தக்கூடாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை.

நன்றி - S.P. சொக்கலிங்கம்/தமிழ்பேப்பர்.நெட்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum