புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Poll_c10ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Poll_m10ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Poll_c10 
28 Posts - 53%
heezulia

12 Posts - 23%
Dr.S.Soundarapandian

6 Posts - 11%
T.N.Balasubramanian

3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 2%
prajai

rajuselvam

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Poll_c10ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Poll_m10ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Poll_c10 
216 Posts - 43%

200 Posts - 40%

24 Posts - 5%
i6appar

16 Posts - 3%
mohamed nizamudeen
ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Poll_c10ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Poll_m10ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Poll_c10ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Poll_m10ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Poll_c10 
13 Posts - 3%

12 Posts - 2%

5 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு... ரியலுக்கு இல்லை!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 06, 2013 9:08 pm

கரணம் தப்பினால் மரணம்'' என்று கூத்தாடிகளைப் பார்த்துக் கூறுவது முன்னோர் வழக்கம். இந்த முதுமொழிதான் சர்க்கஸ் குடும்பத்தினரின் தாரக மந்திரம் என்று கூட சொல்லலாம்.
÷ திரும்பிப் பார்ப்பதற்குள் நமது வாழ்க்கையின் பக்கங்கள் காலத்தால் எப்படியெல்லாமோ புரட்டிப் போடப்படுகின்றன. அடுத்த விநாடி என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும், துணிந்து உயிரைப் பணயம் வைத்து, விரும்பி இந்தத் தொழிலில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதுடன், நம்மையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார்கள், சர்க்கஸ் கலைஞர்கள். இவர்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்வியல் பாடங்கள் நிறைய
உள்ளன.
÷இந்தி நடிகர் ராஜ்கபூர் நடித்த "மேரா நாம் ஜோக்கர்', கமலஹாசன் நடித்த "அபூர்வ சகோதரர்கள்' போன்ற படங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாது. அப்படங்கள் ஜெமினி சர்க்கஸில்தான் படமாக்கப்
பட்டுள்ளன.
கமலா, பாரத், நியூ கிரான்ட் போன்ற சர்க்கஸ் கம்பெனிகள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்ட நிலையில், "சர்க்கஸ் என்றாலே அது ஜெமினி சர்க்கஸ்தான்' என்று சின்னக் குழந்தையும் கூறும் அளவுக்கு கடந்த அறுபது ஆண்டுகளாக, 1951 முதல் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறது இந்நிறுவனம். தந்தை ஆரம்பித்த ஜெமினி சர்க்கஸ் கம்பெனியைத் தொடர்ந்து தமையன்கள் இருவரும் வெற்றிப் பாதையில் கொண்டு செல்கின்றனர். அவர்களுக்கும் சில மனக்குறைகள், வருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ஜெமினியின் வெற்றிக்குப் பல காரணங்களைச் சொல்லமுடியும். பொதுவாக, சர்க்கஸ் தொழில் நலிவடைவது ஏன் என்றால், அதற்கு ஒரே காரணம் மத்திய அரசின் உதவியின்மைதான். சர்க்கஸ் கலைஞர்கள் முன்வைக்கும் நியாயமான சில வேண்டுகோளை ஏற்று, அவர்கள் மனக்குறையைப் போக்கி, அவர்கள் வாழ்வில் ஒளிவிளக்கேற்ற வேண்டிய கடமை நம் மத்திய அரசுக்கு உண்டு என்பதை இங்கு பதிவு செய்தே தீரவேண்டும்.
ஆண்டுதோறும் சென்னையில் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள திடல் களைகட்டத் தொடங்கிவிடும். ஆம்; வழக்கம்போல் இந்த ஆண்டும் மக்களை மகிழ்விக்கக் கூடாரம் அமைத்துள்ளது ஜெமினி சர்க்கஸ் குழு. மதிய இடைவேளையின் போது ஜெமினி சர்க்கஸ் குடும்பத்தின் மேனேஜரான பவித்திரனை சந்தித்தோம். தொடுத்த வினாக்களுக்கெல்லாம் அவர்
முகமலர்ச்சியோடு விடையளித்தார்:
ஜெமினி சர்க்கஸின் உதயம் எப்போது...?
1951-இல் ஜெமினி சங்கர் இதைத் தொடங்கினார். கேரளாவில் உள்ள சர்க்கஸ் கலை அகாதெமியில் இளம் வயதில் சேர்ந்து ஆர்வத்தோடு பயிற்சி பெற்றவர் அவர். அவருடன் உடன் பயிற்சி பெற்ற கலைஞர்கள் சகாதேவன், குஞ்சுக்கண்ணன். இம் மூவரும் இணைந்து சிறிய அளவில் நடத்திவந்த நிகழ்சிகளைப் பின்னாளில் பெரிய அளவில் எடுத்து நடத்தத் தொடங்கிய போதுதான் "ஜெமினி' உதயமானது. தந்தை ஜெமினி சங்கருக்கு தற்போது 89 வயது. அவரின் பணியைத் தொடர்ந்து சகோதரர்கள் அஜய் சங்கர், அஷோக் சங்கர்
நடத்திவருகின்றனர். இந்நிறுவனம் தற்போது ஜெமினி, ஜம்போ, ராயல் ஆகிய மூன்று கிளைகள் பரப்பி இருக்கிறது.
சர்க்கஸ் கலைஞர்கள் எப்படி வருகிறார்கள்?
விளம்பரம் கொடுப்பதில்லை. தானாகவே வருகிறார்கள். வெளியில் சென்று ஆட்களைத் தேட வேண்டிய அவசியமும் இல்லை. இங்கு கணவன்-மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்துடன் வாழ்பவர்களும் உள்ளனர். அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவும் தங்களுக்குத் தெரிந்தவர்களை அழைத்து வந்து சேர்த்து விடுகிறார்கள். மேலும் சில ஊர்களில் இதற்கென சில ஏஜென்டுகளும் உள்ளனர். அவர்கள் மூலமாகவும் சேருவார்கள். வீட்டை விட்டு வந்தவர்கள், அநாதைகள் போன்றவர்கள் இதில் சேர வந்தால், அவர்களின் குடும்பப் பின்னணியைப் பற்றி தீர விசாரித்த பின்புதான் சேர்த்துக் கொள்வோம். யாராவது பரிந்துரைத்தால்தான் சேர்த்துக் கொள்வோம்.
சர்க்கஸ் பயிற்சிக்கான பயிலரங்கம்
எங்குள்ளது?
கேரளாவில் "தலசேரி' என்ற இடத்தில்தான் முதன் முதலாக "சர்க்கஸ் கலை அகாதெமி' 1940-இல் உருவாக்கப்பட்டது. அங்குதான் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அகாதெமியில் பயிற்சி பெற்றவர்கள்தான் இப்போது பல சர்க்கஸ் கம்பெனிகளில் உள்ள கலைஞர்கள்.
இங்குள்ள கலைஞர்களின் உறவு முறைகள் எப்படி உள்ளது? அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டா?
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிக் கூடாரங்கள் உள்ளன. நல்ல உறவுமுறைதான் நிலவுகிறது. சிலர் இங்குள்ளவர்களைக் காதலித்து மணந்து கொண்டு இங்கேயே குடும்பத்துடனும் வாழ்கின்றனர். கணவன்-மனைவி குழந்தைகளோடு வாழ்பவர்களுக்குத் தனி கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இங்கு பயிற்சி பெறும் கலைஞர்களின் வாழ்க்கை நிலை எவ்வாறுள்ளது?
விரும்பி வருகிறார்கள். திறமைக்குத் தகுந்த வருமானம் தருகிறோம். மூன்று வேளை உணவு, மருத்துவ செலவு, சிகிச்சை, உறைவிடம் போன்றவற்றைத் தருகிறோம். விரும்பினால் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுவரலாம். மாதம் பிறந்ததும் முதல்நாள் சம்பளம் தருகிறோம். இருந்தாலும் பிரச்னை உண்டு. வேறொரு சர்க்கஸ் கம்பெனி அதிக சம்பளம் கொடுத்தால் அங்கு போய் விடுபவர்களும் உண்டு. காலையில் வேறு வேலைக்குச் சென்றுவிட்டு மதியம், இரவு வேளைகளில் சர்க்கஸ்ஸில் கலைஞர்களாக இருப்பவர்களும் உள்ளனர்.
காட்டு மிருகங்களைப் பயன்படுத்த தடைவந்த பிறகு தொழில் எப்படி நடக்கிறது?
மிகவும் சிரமம்தான். இந்தப் பொழுதுபோக்கு அம்சத்தில் சிங்கம், புலி போன்றவற்றைக் காண்பதில்தான் சிறுவர்களுக்கு மகிழ்ச்சி. அது இல்லை எனும்போது புதிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இப்போது யானை, குதிரை, ஒட்டகம், நாய், கிளி, நெருப்புக்கோழி ஆகியவற்றை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். இந்தியாவில் மட்டும்தான் இந்தக் கட்டுப்பாடு. வெளிநாடுகளில் காட்டு மிருகங்களைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை.
சர்க்கஸில் சாதனை படைத்தவர்களைப் பற்றி...?
சொல்ல நிறைய பேர் உள்ளனர். மோட்டார் கூண்டு விளையாட்டு, நெருப்பு வளையம், சைக்கிளிங், லேடர் பேலன்ஸ், ஆப்பிரிக்கன் அக்ரோபேட், ஃபயர் டான்ஸ், கேன்டில் டான்ஸ் போன்றவற்றைச் சொல்லலாம். அவர்கள் ஒப்பந்தத்தில் வருவதும் போவதுமாக இருப்பதால் யாரையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை.
பார் விளையாட்டில் வெளிநாட்டுப் பெண்மணிகளைப் பயன்படுத்துவது அவர்களின் அழகு, உடல்வாகு, வித்தை, பயிற்சி முதலியவற்றுக்காகவா? கவர்ச்சிக்காவா?
அழகும் கவர்ச்சியும் சினிமாவுக்குத்தான் தேவை; சர்க்கஸ்ஸýக்கு அல்ல. இங்கு திறமைக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. நல்ல பயிற்சி, திறமை இருப்பவர்களைத்தான் இதற்குப் பயன்படுத்துகிறோம். அவர்கள் இயற்கையாகவே கவர்ச்சியாகவும் அழகாகவும் அமைந்துவிடுகிறார்கள். இதுதான் உண்மை.
மேனேஜருடன் பேசிக்கொண்டிருந்த போது நிறுவனர் மகன் அஜய் சங்கர் வந்து இணைந்து கொண்டு நம் கேள்விகளுக்கு விடையளித்தார்:
மறக்க முடியாத சம்பவம்?
சொல்ல நிறைய இருக்கிறது. ஒன்றை மட்டும் கூறுகிறேன். 1998-இல் சர்க்கஸ் கூடாரத்தைக் காலி செய்துகொண்டு பனாரஸ்(காசி) சென்று கொண்டிருந்தபோது, ஒரு வேனில் நான்கு புலிகள் இருந்தன. அந்த வேன் ஒரு காட்டுப் பகுதியில் அதாவது கோரக்பூர் அருகில் ஒரு மரத்தில் மோதி அந்தக் கூண்டு திறந்துகொண்டு அதிலிருந்த நான்கு புலிகளும் வெளியேறி காட்டுக்குள் சென்றுவிட்டன. 48 மணி நேரத்தில் மூன்று புலிகளையும் வலைகளை வைத்துப் பிடித்துவிட்டோம். ஒரு புலி மட்டும் அருகில் இருந்த கிராமத்துக்குள் சென்றுவிட்டதால், அந்த கிராம மக்கள் அதைக் கொன்று விட்டனர். இப்படி பல சம்பவங்களைச் சொல்லலாம். இந்தத் தொழிலில் நிறைய ரிஸ்க் இருக்கிறது.
விலங்குகளைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் எவை?
மிருகங்களுக்கு உணவு, தண்ணீர் போன்றவைகள் தரவேண்டும். அதற்கான பராமரிப்பு செலவு இப்போது கூடுதலாக உள்ளது. மிருகங்களுக்கான தண்ணீரைக் கூட அரசு இலவசமாகத் தருவதில்லை. காசு கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. அவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுசெல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம் தேவை.
சர்க்கஸ் தொழிலிலுள்ள சிரமத்தையும் உங்கள் குறைகளையும் அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்றதுண்டா?
பலமுறை எடுத்துச் சொல்லி விட்டோம். எந்தப் பலனும் இல்லை. சினிமாவில் காட்சிகளை கட் செய்து ரீலாக்குகிறார்கள் ஆனால், சர்க்கஸில் ரியலாக நடத்திக் காட்டுகிறோம். ரீலுக்குத்தான் மதிப்பு இருக்கிறது; ரியலுக்கு இல்லை. சினிமாக்காரர்களுக்கு விருதுகள் கொடுக்கப்படுகிறது. காட்சிகளை ரியலாக செயல்படுத்திக் காட்டும் கலைஞர்களுக்கு இதுவரை விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. இது மிகப்பெரிய குறை. அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட வேண்டும். ÷சுமார் 135 ஆண்டுகளாக தொடர்ந்து இன்றுவரை எந்த சர்க்கஸ் கலைஞருக்கும் எந்தவொரு விருதும் வழங்கப்படவில்லை. இதை மத்திய அரசுதான் தந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
÷மேலும், எங்களுக்கு நிரந்தரமாக ஒரு இடம் (திடல்) கிடையாது. சென்னையில் ரயில்வேக்குச் சொந்தமான இந்த இடத்தில்தான் தொடர்ந்து நடத்துகிறோம். ஒரு நாளைக்கு 6000 ரூபாய் வாடகை. இதைத் தவிர மின்சாரம் எங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 11 ரூபாய். வீடுகளுக்கு வழங்கப்படும் அதே யூனிட்தான் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
எங்கள் குழுவில் 250 கலைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவு, மருத்துவச் செலவு, இருப்பிடம், மற்றும் மிருகங்களுக்கான உணவு, தண்ணீரெல்லாம் பேரல் பேரலாக காசு கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. சுமார் 40 வேன்களுக்கான பொருள்களை மாதம்தோறும் இடம் மாற்றியாக வேண்டும். அதற்கான டீசல் செலவு, போக்குவரத்து செலவு எல்லாம் தற்போது அதிகமாகியுள்ளன. இவை தவிர நிறைய விளம்பரங்கள் தருகிறோம். இதனால் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, மற்ற நாடுகளில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது. இந்திய சர்க்கஸ் கலைஞர்களுக்கு ஓய்வூதியம், பி.எஃப் என்று எதுவும் தரப்படுவதில்லை. கேரளாவில் மட்டும் ஓய்வூதியம் ரூ.500 தரப்படுகிறது. இது எப்படி அவர்களுக்குக் கட்டுப்படியாகும்?
÷ரஷ்யாவில் உள்ள கலைஞர்களுக்கு அவர்கள் சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாகத் தருகிறார்கள். இது தொடர்பாக பலமுறை தில்லி அரசுக்குக் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டோம். மத்திய அரசுதான் இத்தகைய கலைஞர்களுக்கு ஒரு நல்லவழி காட்டி, இத்தொழில் நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும்.

÷மகிழ்ச்சியோடு கூடாரத்துக்குள் நுழைந்த நாம் வருத்தத்துடன் திரும்ப வேண்டிய சூழல். டூப் போட்டு எடுக்கும் திரைப்படங்களை நிஜம் என நம்பி பணத்தை வாரி இறைக்கும் மக்கள், நிஜமாக தங்கள் உயிரைப் பணயம் வைத்து காட்சிகளில் தோன்றும் இத்தகைய கலைஞர்களுக்கு இனிமேலாவது உற்சாகமும் ஊக்கமும் தர வேண்டும்.
÷எந்தவொரு கலையும் அழிக்கப்பட்டு விடக்கூடாது; நம் தலைமுறை எந்தவொரு கலையையும் இழந்துவிடக் கூடாது.

நன்றி தினமணி - இடைமருதூர் கி.மஞ்சுளா

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Jan 06, 2013 9:21 pm

சென்னையில் ரயில்வேக்குச் சொந்தமான இந்த இடத்தில்தான் தொடர்ந்து நடத்துகிறோம். ஒரு நாளைக்கு 6000 ரூபாய் வாடகை. இதைத் தவிர மின்சாரம் எங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 11 ரூபாய். வீடுகளுக்கு வழங்கப்படும் அதே யூனிட்தான் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
எங்கள் குழுவில் 250 கலைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவு, மருத்துவச் செலவு, இருப்பிடம், மற்றும் மிருகங்களுக்கான உணவு, தண்ணீரெல்லாம் பேரல் பேரலாக காசு கொடுத்துதான் வாங்க வேண்டியுள்ளது. சுமார் 40 வேன்களுக்கான பொருள்களை மாதம்தோறும் இடம் மாற்றியாக வேண்டும். அதற்கான டீசல் செலவு, போக்குவரத்து செலவு எல்லாம் தற்போது அதிகமாகியுள்ளன. இவை தவிர நிறைய விளம்பரங்கள் தருகிறோம். இதனால் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
தினமும் ஒரு லட்சம் ருபாய் செலவு ஆகும் போல தெரிகிறதே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! 1357389ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! 59010615ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Images3ijfஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Images4px
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 07, 2013 12:30 am

சோகம் சோகம் ஆறுதல்

ஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Mஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Uஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Tஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Hஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Uஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Mஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Oஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Hஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Aஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Mஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! Eஜெமினி சர்க்கஸ் : ரீலுக்குத்தான் மதிப்பு...  ரியலுக்கு இல்லை! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக