ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் ஆடையும், வன்முறையும்!

Go down

பெண்களின் ஆடையும், வன்முறையும்! Empty பெண்களின் ஆடையும், வன்முறையும்!

Post by Powenraj Fri Jan 04, 2013 12:08 pm

ஒரு பெண் மீதான வன்முறை இடம் பெறும்போதெல்லாம் பெண்களின் ஆடைகள் குறித்து மட்டுமே அதிகமாகப் பேசப்படுகின்றன.
:-
ஒரு பெண் அணிந்திருக்கும் உடை குறித்து மோசமான வசைச் சொற்களால் தாக்கும் சைக்கோக்களிற்கு கலாச்சாரக் காவலர்கள் அந்தஸ்தைக் கொடுக்கும் மனநிலை பிறழ்ந்த சமூகம்நம்மிடையே உண்டு.
:-
கலாச்சாரம், பண்பாடு குறித்து பெருமை பேசிக்கொள்ளும் அதே சமூகத்தின் பிரதிநிதிகளான நானும் என் நண்பனொருவனும் ஒருமுறை கடுமையாக வாதிட்டுக் கொண்டோம் - பத்து வருஷத்துக்கு முதல்! நண்பன் பெண்கள் ஜீன்ஸ் அணிவதை விமர்சித்தான். ஒரு பெண்அணியும் ஆடை குறித்து அவளைத் தவிர யாரும் அக்கறை கொள்ள வேண்டியதில்லையே. அவளது அம்மாவிற்கு இருக்கும் அக்கறையைவிட நமக்கு என்ன அதிக அக்கறை வேண்டியிருக்கு?
:-
அங்கே அது ஒரு குற்றம் மாதிரியே பார்க்கப்பட்டது. ஜீன்ஸ் அணிந்த ஒரு பெண்ணைப்பார்த்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் பகிரங்கமாகப் பேசலாம். அது அங்கே தவறில்லை. அதுவும் தவிர மேலதிகமாகஉங்களுக்கு கலாச்சாரக் காவலர் என்ற அங்கீகாரமும் கிடைக்கும். இன்றுவரை அதுதான் நிலைமை என நம்புகிறேன். அதனால்தான் எப்போதுமே அங்கிருந்து வரும் பெரும்பாலான பெண்களின் முதல் காரியம், ஒரு ஜீன்ஸ் வாங்கி அணிவதாகவே இருக்கிறது.
:-
பெண்கள் மீதான மோசமான பார்வைகள், வக்கிரமான பேச்சுகள். ஒரு முறையாவது தனியாக ஒரு கும்பலைக் கடக்க நேரும்போது, மிகுந்த மன உளைச்சல் அடையாத பெண்கள் யாராவது இருப்பார்களா? இந்த மாதிரியான சமூகத்தில் ஒரு தங்கையையோ, அக்காவையோ சினிமாவுக்குக் கூட்டிச் செல்ல முடிந்ததில்லை. சனநடமாட்டம் மிகுந்த எந்த இடத்திற்குமே போக முடிந்ததில்லை. இரவு ஏழுமணிக்கு மேல், வீதியால் செல்லும் ஒரு கும்பல், வீட்டின் பூட்டிய வாயிற்கதவுக்கப்பால் நிற்கும் பெண்ணைப் பார்த்து தகாத வார்த்தைகளால் பேசிச் சென்றதை ஒருமுறையேனும் எதிர்கொள்ளாத பெண் இருக்க முடியுமா?
இதெல்லாம் ஏழெட்டு வருஷங்கள் முன்புவரை இருந்தது. இப்போது எப்படியோ தெரியவில்லை.
:-
பெண்களை ஆண்கள் கிண்டல்செய்வதும், ஆண்களைப் பெண்கள் கிண்டல் செய்வதும் இயல்பானதுதான். அது நண்பர்களுக்கிடையே மட்டும் இருக்கும்வரையில். அந்தப் பெண்ணின் காதுகளுக்குப் போகும்போது, வார்த்தைகளின் தன்மை குறித்து அப்பெண்ணிற்குமன உளைச்சலைக் கொடுக்குமானால் அது தவறே! அதுவும் மோசமாக வசைபாடும் போது உடனிருக்கும் பெருசுகள்அதைக் கண்டிக்காதது மட்டுமன்றி, சம்பந்தப்பட்ட சைக்கோக்களிற்கு கலாச்சாரக் காவலர்கள் அங்கீகாரத்தை வழங்கும் கேடுகெட்ட சமூகத்தை என்னெவென்று சொல்வது?
:-
“இவையள் இப்பிடித்திரிஞ்சா அவங்கள் சொல்லுவாங்கள் தானே!” - ஒரே வார்த்தையில் எவ்வளவு இலகுவாக ஒரு சைக்கோ சமூகத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.இப்படி வளர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் இதே மனநிலையோடுதானே இருப்பார்கள்?
:-
இங்கே கொழும்பில்கூட தமிழ்ப்படங்கள் திரையிடும் சினிமா ஒன்றில் குடும்பத்துடனோ, சகோதரிகளுடனோ, ஒரு நண்பியுடனோ செல்ல முடியுமா? நாகரிகமாக படம் பார்க்க முடியுமா?கதாநாயகி திரையில் தோன்றும்போது கொடுக்கும் வரவேற்புக் குரல்கள் அப்படியிருக்கும். இதுவே, எம். சி. திரையரங்கில் பிரச்சினையின்றி பார்க்கலாம். அதைவிட சவோய் திரையரங்கில் இன்னும் தயக்கமின்றிப் போய்ப் பார்க்கலாம். காரணம் தமிழ்சினிமா திரையிடுவதில்லை (சவோயில் மிக அரிதாக). ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம்பெருமை பேசிக் கொள்ளும்தமிழ்ச் சமூகத்திலிருந்து இங்கேவருபவர்கள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவு. வருபவர்களும் அடக்க ஒடுக்கமாக இருக்கிறார்கள்.
:-
"ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழைய முடியுமா?" என்றொரு சமூக விஞ்ஞானி நீதிமன்றத்தில் கேட்டாராம். பலாத்கார வழக்கொன்றில் தன் கட்சிக்காரரைக் காப்பாற்ற அவர் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகம் அது. இதனை ஒரு அரிய கண்டுபிடிப்பாகக் கொண்டாடும், பெருமைப் பட்டுக்கொள்ளும் அறிவுஜீவிகள் நிறைந்த சமூகத்தில், இன்றளவும் இதைச் சொல்லிச் சொல்லியே வாழ்ந்து, அடுத்த தலைமுறைக்கும் இந்த அபத்தமான வரலாற்றைச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கும் மொள்ளமாரித்தனமான ஒரு சமூகத்திடமிருந்து வேறுஎன்ன எதிர்பார்க்க முடியும்?
:-
தனி ஒரு ஆணால், மன உறுதியும் உடல்வலுவும் கொண்ட ஒரு பெண்ணை பலவந்தப்படுத்துவது கடினம் என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை, ஒரு ஆண் அத்துமீறும்போது உடலியல் ரீதியாக ஓரளவிற்குமேல் சாதாரண பெண்ணால் எதிர்க்க முடியாது என்பதும்! இதுபற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாது போகிற போக்கில் அடித்துவிடப்பட்ட அரைகுறையான ஒரு மசாலா சினிமாத்தனமான 'பஞ்ச் டயலாக்' போன்ற ஒன்றை காலங்காலமாகக் கொண்டாடும் வரையில், ஒரு சமூகம் தனிமனித ஒழுக்கம் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளுமா?
:-
பலாத்காரம் செய்வது ஆணின் ஏகபோக உரிமை, அதற்கு இடம் கொடுக்காமல் இருப்பதுதான் பெண்களின்கடமை எனும் மன(நோய்)நிலைஇன்றுவரை மாறவில்லை. தனிமனித ஒழுக்கம் என்பது பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
நான் மனதளவில் விரும்பாத ஒரு பெண்ணின்பக்கம் என்பார்வை திரும்பாது எனும்போது, நான் என் கட்டுப்பாட்டிலேயே எப்போதும் இருப்பேன் எனும்போது ஒரு பெண் அரைகுறை ஆடை அணிந்திருந்தாலென்ன?
ஆடையே அணியாமல் இருந்தாலென்ன?
:-
என்னதான் தனிமனித ஒழுக்கம் பற்றி பேசினாலும், ஓரிரு தடவை தாங்க முடியாத மன உளைச்சலில், பொறுமையிழந்து எனது தனிமனித ஒழுக்கத்தை நானே சுயபரிசோதனை செய்துகொள்ளும் அளவிற்குப் பேசியிருக்கிறேன். ஏதோ ஒரு சமயத்தில் ஓர் ஆணாதிக்கவாதிபோல மூர்க்கமாகவும் நடந்துகொண்டிருக்கிறேன்.
காரணம், எல்லை தாண்டி அத்துமீறுபவர்கள், மன நிலை பிறழ்ந்தவர்கள், மோசமான சைக்கோக்கள் ஆண்களில் மட்டுமல்ல, பெண்களிலும் இருக்கிறார்கள்.
:-
நன்றி வானம் தாண்டிய சிறகுகள் முகநூல்


Last edited by Powenraj on Fri Jan 04, 2013 12:13 pm; edited 1 time in total (Reason for editing : முகநூல் பெயரிட)
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum