புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 I_vote_lcapஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 I_voting_barஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 I_vote_lcapஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 I_voting_barஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 I_vote_rcap 
432 Posts - 48%

305 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 I_vote_lcapஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 I_voting_barஇவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Jan 03, 2013 3:39 pm

First topic message reminder :

எனது வலைப்பூவில்: http://kakkaisirakinile.blogspot.in/2013/01/blog-post.html

இது என்னோட 2013 வது புத்தாண்டின் முதல் பதிவு ஆனா பேசப்போறது 2012 ஆண்டு புத்தாண்ட பத்தி. என்னடா சம்மந்தமே இல்லமா ஒருவருஷம் பின்னாடி போயி பேசுறேன்னு பாக்குறிங்களா ..? சம்மந்தம் இருக்குங்க. அதுவும் என்னான்னு கொஞ்சம் பாக்கலாம் வாங்க.

அது என்னவோ தெரியலைங்க. வீட்ல சாம்பார்ல இருந்து பொறியல் வரைக்கும் எதுலயாவது ஒரு சின்ன எறும்பு விழுந்தாகூட வேற யாரு கண்ணுலயும் படாது. என் கண்ணுல மாட்டிக்கும். அதுக்கப்பறம் என்ன, எங்க அம்மா காதுல பஞ்சு வச்சுக்க வேண்டிய தான் பாக்கி. இப்ப நான் வெளியூர்ல இருக்கறதால என் அம்மா கொஞ்சம் சந்தோசமா இருக்கும்னு நெனைக்கிறேன். ஏனா, வீட்ல என் அம்மாவை எப்பவும் திட்ற ஒரே ஜீவன் நானாதான் இருப்பேன் (நீ பக்கத்துல இருந்து திட்டமா இப்பல்லாம் ரொம்ப போர் அடிக்குதுடானு போன்ல அப்பப்ப காலாய்க்க வேற செய்யிறாங்க). இது மாதிரி தான் போன 2012 புதுவருட நீயா நானா ஸ்பெஷல் ஷோல சிலர் என் கண்ணுக்கு மாட்டுனாங்க (சத்தியமா இந்த வாட்டி கோபிய விமர்சிக்கலங்கோ). ஆனா அதப்பத்தி எழுதனும்னா 2012 முடியும் வரம் காத்திருந்துதான் ஆகணும். அப்படி ஒரு கட்டயாம். அதுக்கு முன்னாடிஎழுதிருந்தா என்ன முட்டாள்னு முத்திரை குத்தீருப்பாங்க. ஏனா டாபிக் அப்படி.

அது என்ன ஷோ ? தலைப்பு என்ன ? அதுல என்ன பிரச்சன ? யார் அந்த நண்பர்கள்னு பாக்கா அப்படியே ஒருவருஷம் பின்னாடி போலாமா ..?

2012 வருஷ நீயா நானா ஸ்பெசல் ஷோல பேசப்பட்ட தலைப்பு "2012 ஆண்டில் ஜோதிடம் என்ன சொல்கிறது" என்பதுதான். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பலன், ஒவ்வொரு ராசிக்கும் உரிய பலன் அப்படின்னு நெறைய விவாதிச்சாங்க. அதுல, கோபி ஒரு கேள்விய கேட்டாரு. 2012 இல் நான் இதைக் கணித்திருக்கிறேன். அது கண்டிப்பாக நடக்கும் என எந்த நிகழ்வையாவது உங்களால் சொல்ல முடியுமா என்று.

அதுக்கு வந்த பதில்கள் நிறைய. அதுல முக்கியமான ரெண்டு, 2012 முடியறதுக்குள்ள "ராஜபக்சே கட்டாயமாக ஆட்சியை விட்டு இறங்குவார்" , "இந்திய-சீன போர் வரும்" என்பதே.

இதுல எதாச்சும் நடந்ததா ..? அவர்கள் பேசிய பகுதியை மட்டும் இந்த காணொளில் ஒரு முறை பார்க்கவும். மீதியை பிறகு பேசுவோம்.

அதுமட்டுமில்லாம, அந்த ஜோசியர்களிடே கூட சரியான உடன்பாடில்லை. ஒருவர் ராஜபக்சே ஆட்சியை விட்டு விலகுவார்னு சொல்றாரு, மற்றொருவர் கண்டிப்பா இல்லன்னு எதிர்கிறாரு. அவங்களுக்குள்ளேயே எது சாரின்னு தெரியல. எல்லாரும் ஒரே ஜாதகத்தத்தான படிச்சிருப்பாங்க.? அப்ப ஏன் இந்த மாறுபட்ட கருத்துக்கள் .? இவர்கள் எப்படி நம்மளுடைய வாழ்கைய ஜாதகம் என்கிற போர்வையில தீர்மானிக்க முடியும். இவர்களை நம்பி நாம் ஏன் போகவேண்டும். இவர்கள் என்ன கடவுளா..? நாமளும் கொஞ்சம் யோசிக்க வேண்டாமா ..?

அதோட இங்க நீங்க இன்னும் ஒன்ன சரியா புரிஞ்சுக்கணும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோசியர்கள் எல்லாரும் தமிழ் நாட்டில் பிரபலமான பெரிய ஜோசியர்கள் என்று சொல்லப்படுபவர்கள். ஷெல்லி என்கிறவர் அடிக்கடி டிவில வாரத பாத்துருப்பிங்க. அவர்தான் ராஜபக்சே 2012 குள்ள ஆட்சியை விட்டு வெளியேற்றப்படுவார்னு சொன்னார். ஆனா நமது உறவுகளை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த அவன் என்னவோ சுகபோகமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஜோசியத்தில் அனைத்தையும் அறிந்த, தமிழ் நாட்டின் பெரிய ஜோசியர்கள் என்று சொல்லப்படும் இவர்கள் வார்த்தைகளே பொய்த்து போகிறதே, அப்ப நம்ம ஊரு அரைகுறை ஜோசியர்களின் கதி என்ன ..? அவர்களை நம்பி நாம ஏன் ஊர் ஊரா கோவில் கோவிலா சுத்தணும், வாழ்க்கைய அழிச்சுக்கணும் ..?

அடுக்கடுக்காக வைக்க என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தது. அந்த கேள்விகளை ஒட்டுமொத்தமாக "சங்கரி ராஜ்குமார்" என்ற ஒரு இயக்குனர் தன்னோட படத்து கடைசி காட்சில சமூதாயத்திற்கு ஒரு சாட்டையடியாக பதிவு செய்தார். அந்தப் படம் வேற எதுவும் இல்ல. யாருமே பெருசா கவனிக்காத, இப்படி ஒரு படம் வாந்துச்சானு கூட பலருக்கு தெரியாத படம் "வெங்காயம்". நான் பார்த்த சமூக கருத்துள்ள படங்களில் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் படம் இது.

அந்த படத்தின் ஐந்து நிமிட கடைசி காட்சியை இங்கு இணைக்கிறேன். கட்டாயம் பாருங்கள்.

இத்தனை கேள்விகள் உதாரணங்கள் கொடுத்தும், நீ என்ன அவ்ளோ பெரியாளா .? உனக்கு அப்படி என்ன தெரியும் ..? உன்ன பெரிய அறிவாளின்னு காட்டிக்க முயற்சி பண்ட்ரியானு தலைப்ப மட்டும் பாத்துட்டு கல்ல விட்டு அடிக்க நம்ம ஊர்ல பல நண்பர்களும் இருப்பாங்க. அடிக்கறதா இருந்தா கொஞ்சம் சின்ன கல்லா வச்சு அடிங்க பாஸ். ஆனா அடிச்சிட்டு, குறைந்த பட்சம் இந்த மூட நம்பிக்கைகளை விட்டு விலகினா ரொம்ப சந்தோசப்படுவேன்.

இத்தனை சொல்லியும்.. உனக்கு என்ன தெரியும், இந்த கட்டுரை உன்னோட அறியாமையைக் காட்டுது அப்படின்னு நம்மாளுக கமெண்ட் அடிக்காம இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு மட்டும் என் வாழ்கையை ஒரு உதாரணமாகச் சொல்லி இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்.

2011 ஆகஸ்ட் 18 தேதி, நான் இந்த உலகில் ஒரு தனிமரம் என்று நினைத்துக் கொண்ட நாள். என் வாழ்க்கையில், ஈடு செய்ய முடியாதா ஒன்றை இழந்த நாள். என் வாழ்வில் இதற்கு மேலும் ஒரு பெரிய இழப்பு வர இயலாத, அந்த இழப்பு என் அண்ணன் என்பதை இன்னும் ஜீரணித்துக் கொள்ள முடியாத நாள். ஒரு விபத்தில் சிக்கி, சில லட்சங்கள் செலவு செய்தும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தபின் 29 வது வயதில் எனது அண்ணனின் உயிர் பிரிந்தது. என் அப்பாவிற்கு ஜாதகத்தில் அதீத நம்பிக்கை. ஆனால் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை.

அந்த நம்பிக்கையால் உயிர் பிரிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னும் என் அப்பா, என் மாமாவிடம் சொல்லி எனது அண்ணனின் ஜாதகத்தைப் பார்க்கச் சொன்னார். ஜோசியர் சொன்னது, "இவரின் ஆயுள் கெட்டியானது. எதற்கும் பயப்படாதீர்கள். இப்போது எதுவும் ஆகாது. கண்டிப்பாக திரும்பிவருவார் என்பதே". என் அண்ணனும் திரும்பி வந்தார், ஆனால் உயிர் மட்டும் இல்லை.

என் அண்ணனின் ஆயுள் ஜாதகம், எங்களுடைய சுற்றுப்புற ஊர்களிலேயே மிகவும் பிரபலமான ஜோசியர் ஒருவரால் முத்தான எழுத்துக்களில் 73 வயதுவரை வாழ்வார் என எழுதப்பட்டு, அதற்கு மேலும் ஆயுள் உண்டு என்ற குறிப்போடு இன்னும் எங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தனை மாதங்களாகியும் உயிருக்கு இணையான என் அண்ணனைப் பற்றி சிந்திக்கவே எனது மனம் இன்னும் பக்குவப்படவில்லை. இருந்தும் இந்த உதாரணத்தைத் தர காரணம், சிலருக்காவது உதவும் என்ற நம்பிக்கையில்.

யோசிப்பீர்கள் என்று நம்புகிறேன்..!

நன்றி,

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 05, 2013 2:52 pm

சதாசிவம் wrote:[quote=
ஜோதிடம் பொய் என்று சொல்பவர்கள் மதம் பொய், அனைத்து மத நம்பிக்கையும் பொய் கடவுள் பொய் என்று சொல்வதில்லையே, ஒரு நம்பிக்கை உண்மை, ஒன்றின் உட்பிரிவான ஜோதிடம் பொய் என்று கூறுவது எப்படி பகுத்தவறிவாகும் ?.... பொய் என்று முடிவு செய்தால் அனைத்தும் பொய்யே, வானஅறிவியல் உட்பட, ஏனென்றால் அதில் பல கோட்பாடுகள் இன்று வரை ஊகங்களாகத் தான் உலவுகிறது....

அப்படியென்றால் இறை மறுப்பாளர்கள் வந்து ஜோதிடம் பொய் என்று சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா நண்பரே?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jan 05, 2013 4:52 pm

அவர் சொன்ன பதில் ஒத்து கொண்டு தான் ஆகவேண்டும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 05, 2013 5:06 pm

தர்மா wrote:அவர் சொன்ன பதில் ஒத்து கொண்டு தான் ஆகவேண்டும்
எவர் சொன்ன பதில் அண்ணே.தெளிவா சொல்லுங்க சிரி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Jan 05, 2013 5:07 pm

நம்ம சதாசிவம் சொன்னது தான் ராஜா

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 05, 2013 5:15 pm

தர்மா wrote:நம்ம சதாசிவம் சொன்னது தான் ராஜா
நன்றி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 06, 2013 6:44 pm

பார்த்திபன் wrote:
சதாசிவம் wrote:
தர்மா wrote:மறுபடியும் குழப்புரீர்கள். வான சாஸ்திரம் நீங்கள் கூறுவது எல்லாம் வான் ஆராய்ச்சியை பற்றியே மனிதன் எப்படி இருப்பான் என்ற ஆராய்ச்சி அல்ல . இனியும் ஜோதிடம் சொல்லி உலகை ஏமாற்ற முடியாது. விலங்கிடம் இருந்து நல்லவற்றை கற்றுகொள்ளுங்கள் அவை செய்யும் தீயவைகளுக்கு உங்கள் மனம் ஏன் போகிறது என்று தெரியவில்லை.

தெளிவு வரும் வரை குழப்பம் இருக்கத்தான் தான் செய்யும், மனிதன் செய்யும் செயல்களை விலங்கோடு ஏன் ஒப்பீடு செய்ய வேண்டும்...ஆ ஊ என்றால் வான அறிவியல் ஆதாராமாகப் பேசுவதால் அவ்வறிவியலில் உள்ள தத்துவங்கள் பல ஊகமே, ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்கள் உண்டு என்ற உண்மையும் மக்கள் உணர வேண்டும் என்ற காரணமும் தான்.

மனிதனைப் பற்றி ஆராயும் உளவியல் மருத்துவத்திலும் புரியாத புதிர்கள் உள்ளது.. இவைகளை நாம் புறக்கணிப்பதில்லை....

அறிவியலில் உள்ள முரண்பட்ட கருத்துகள் மற்றும் புரியாத புதிர்கள் என்று எதைச் சொல்கிறீர்கள்?

அறிவியலில் அண்டம் அல்லது universe தோன்றியதற்கான மிகவும் பிரபலமான பேசப்பட்ட theory , bigbang theory,

இவை நாம் பள்ளிக்கூடத்தில் படித்த தத்துவம் தான். இத்தத்துவத்தின்படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஒரு வெடிப்பு ஏற்பட்டு, அவ்வெடிப்பின் இருந்தே பால்வெளி மண்டலம், நட்சத்திரம் தோன்றியதாகக் கூறுகிறது. இவை 40 ஆண்டுகளுக்கு மேலாக அறிஞர்களால் நம்பப்பட்டது. சமீபத்தில் oscillating universe theory என்ற ஒன்று வந்தது. இது அண்டம் பெண்டுலம் போல் சுருங்கி விரிகிறது, தோன்றி, மறைந்து, பின்பு தோன்றுகிறது என்று, கிட்டத்தட்ட மத நூல்கள் கூறுவது போல். பிரளயம் வந்து, அதன் பிறகு புதிய உலகம் தோன்றுகிறது என்பதைப் போல்..

Big baag யை பலர் ஒப்புக்கொண்டாலும், வெடிப்பதற்கு முன் என்ன இருந்தது என்ற கேள்விக்கு விடை இல்லை. இதற்கு விடைகாணும் முயற்சியில் New ekpyrotic cosmology என்ற ஒரு தேற்றத்தை 2007 வெளியிடப்பட்டு அது இன்னும் அறிவியல் அறிஞர்களால் கேள்வி கேட்கப்பட்டு ஒரு முடிவுக்கு வராமல் இருக்கிறது..

இதை விட்டுவிடுங்கள், மேலும் universe என்பது ஒன்றல்ல பல இருக்கிறது, MULTIVERSE குறித்த தேற்றமும் கிடப்பில் இருக்கிறது....அதாவது ஈரேழு உலகம் என்று புராணங்கள் சொல்கிறதே அதைப்போலே..

சரி மேற்சொன்னவற்றை விட்டுவிடுங்கள்,,,சூரியன் வெடித்து அதில் இருந்து விழுந்த துகள்களே கிரகங்கள் என்று PLANET theory கூறுகிறது. இது உண்மையானால் விழுந்த கிரகத்தை விட சூரியன் வேகமாகச் சுற்ற வேண்டும், ஆனால் சூரியன் அவ்வளவு வேகமாக சுற்றவில்லை, தாயைப் போல் தானே சேயும் இருக்க வேண்டும், ஆனால் சூரியக்குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் தனித்தன்மை வாய்ந்தவை....ஒன்றில் இருக்கும் உலோகமும், வாயும் மற்றொன்றில் பொருந்தி வரவில்லை,,,அப்போ சூரியனில் இருந்து பிரிந்து வந்ததாக கூறும் தேற்றம், இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. கோள்கள் அந்த அந்த இடங்களிலே இருந்தது, இவை இணைந்து சூரியக்குடும்பமாகி இருக்கலாம் என்ற புது கருத்தை அறிவியல் உலகம் எடுத்து வைக்கிறது.

சரி சரி அவ்வளவு தூரம் வேண்டாம், நம்ம சந்திரனை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு தேற்றம் எங்கேயோ போய்க்கொண்டிருந்த விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையால் அதன் பக்கம் வந்து சுற்றிக்கொண்டிருக்கிறது என்றும், இல்லை இல்லை வேகமாகச் சுழலும் பூமியில் இருந்து உடைந்த துண்டு தான் சந்திரன் என்ற ஒரு தேற்றமும் உள்ளது. இவை இரண்டில் எதை நம்புவது....?

இந்நிலையில் மரத்தடி ஜோசியன் மட்டும் 200 % துல்லியமாகக் கணிக்க வேண்டும் என்றால் என்னத்த சொல்வது...

சரி நாம வானத்தில் இருந்து கீழே வருவோம், டார்வின் theory பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதில் பல மாறுபட்டக் கருத்துகள் இன்று வரை உண்டு. இறைவனின் வடிமாகத் தான் மனிதன் தோன்றினான் என்ற வேத வசனத்துக்கெதிராக மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான் என்ற அவருடைய கருத்து மிகவும் கண்டனத்துள்ளாகியது, இதை ஏற்காத அறிஞர்களும் இன்றுவரை உண்டு. பல அறிவியல் கருத்துகளும் இவை பொருந்தும்.....

இது போன்ற மாறுபட்ட கருத்துகள் சாதாரண மனிதனிடம் இருந்து வரவில்லை, எல்லாம் பல டிகிரி படித்த scientist களிடம் இருந்து தான் வந்துள்ளது. இதில் சிலர் நோபல் பரிசும் வாங்கி இருக்கின்றனர். ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்தை நீயா நானாவில் சொன்னதால் ஜோதிடம் பொய் என்று முடிவு செய்யும் நாம், இது போன்ற மாறுபட்ட கருத்தை சொல்லும் scientific தேற்றத்தை ஏன் பொய் என்று சொல்வதில்லை.

ஜோதிடத்தை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பாக கொண்டு வர முயற்சி செய்தபோது, இது ARTS ஆ science-சா என்ற சர்ச்சை எழுந்து இதுவும் கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட science தான் என்று பல பல்கலைக்கழகங்கள் ஒத்துக் கொண்டுள்ளது, இந்தியாவில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் இது பட்டப் படிப்பாக உள்ளது.

சித்த வைத்தியம், ஆயுர்வேதம் ஆரம்ப காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஆனால் இன்று இவையும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவம்.....

உளவியலில் சில மன நல நோயாளிகள் பௌர்ணமி, அமாவாசை காலங்களில் மாறுபட்டு நடக்கின்றனர் என்பதை ஒப்புக்கொள்கின்றனர். இது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. ஜோதிடத்தில் சந்திரனைத் தான் மனோகாரகன் என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் கிறுக்குதனமாக நடந்து கொள்பவரை LUNATIC என்று அழைக்கின்றனர், இது ஏன்?

சதாசிவம்
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 06, 2013 6:51 pm

ஜோதிடத்தை பொது மேடைகளில் விவாதிக்கும் பொழுது உங்களின் தனிப்பட்ட கருத்து என்று ஒரு சில சாம்பிள்களை வைத்து முழு ஜோதிடமும் பொய் என்ற கருத்தை எடுத்துக் வைப்பதில் தான் எனக்கு உடன்பாடு இல்லை.
சதாசிவத்தின் இந்த கருத்து.... மிக ஆழமானது....பாராட்டுக்கள் மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 06, 2013 6:56 pm

பார்த்திபன் wrote:
சதாசிவம் wrote:[quote=
ஜோதிடம் பொய் என்று சொல்பவர்கள் மதம் பொய், அனைத்து மத நம்பிக்கையும் பொய் கடவுள் பொய் என்று சொல்வதில்லையே, ஒரு நம்பிக்கை உண்மை, ஒன்றின் உட்பிரிவான ஜோதிடம் பொய் என்று கூறுவது எப்படி பகுத்தவறிவாகும் ?.... பொய் என்று முடிவு செய்தால் அனைத்தும் பொய்யே, வானஅறிவியல் உட்பட, ஏனென்றால் அதில் பல கோட்பாடுகள் இன்று வரை ஊகங்களாகத் தான் உலவுகிறது....

அப்படியென்றால் இறை மறுப்பாளர்கள் வந்து ஜோதிடம் பொய் என்று சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா நண்பரே?

சில மதங்களில் ஜோதிடம் பற்றிய கருத்துகள் சொல்லப்படாததால், அவர்கள் ஜோதிடம் பொய் என்று கூறுகிறார்கள், அதுமட்டுமல்லாமல் முன் ஜென்மம் இல்லை, ஆனால் பாவம், புண்ணியம் உண்டு, கடவுள் உண்டு என்று கூறுகிறார்கள்..இது அவர் அவர் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஒன்றை வைத்து மற்றொன்றை எடைப்போடக்கூடாது.

ஜோதிடம் இந்தியா, ரோமானியா, எகிப்து, சீனம், கிரேக்கம் என்று பல வளர்ந்த நாகரீக மனிதக் கூட்டத்தில் வலம் வந்திருக்கிறது என்ற வரலாற்று உண்மையை நாம் மறுக்கக்கூடாது. உலகெங்கும் இந்நம்பிக்கை வெவ்வேறு வடிவங்களில் உள்ளது.

கடவுள் மறுப்புக் கொள்கையினரும் சங்கர மடத்தின் வாசலில் தான் கோஷம் போடுகின்றனர், பிற மதத்தின் முன்பு கோஷம் போடுவதில்லை...அவர்களிடையேயும் தெளிவு இல்லை....இந்நிலையில் அவர்கள் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்.

மனிதன் ஆதாரமில்லாத அனைத்து நம்பிக்கைகளிலும் இருந்து விடுதலை அடைகிறான் என்ற நிலையில், அவன் ஜோதிடத்தில் இருந்தும் விடுதலை அடையலாம் ஆதாரத்துடன்..

ஜோதிடத்தை சந்தேகியுங்கள், அல்லது கேள்வி கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையெனில் விட்டுவிடுங்கள். இதை விடுத்து அது வெறும் கண்கட்டி வித்தை, முற்றிலும் பொய் என்று அதை முழுக்க படித்து உணர முயற்சி செய்யாமல் முடிவு செய்யாதீர்

சதாசிவம்
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 06, 2013 7:28 pm

ஜோதிடத்தை சந்தேகியுங்கள், அல்லது கேள்வி கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையெனில் விட்டுவிடுங்கள். இதை விடுத்து அது வெறும் கண்கட்டி வித்தை, முற்றிலும் பொய் என்று அதைப் முழுக்க உணர முயற்சி செய்யாமல் முடிவு செய்யாதீர்,

ஜோதிடம் மட்டுமல்ல எல்லாவிஷயத்திலும் இவ்வாறே இருந்தால் ரொம்ப நலம் அருமை சதாசிவம் ஐயா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 07, 2013 10:36 am

கே. பாலா wrote:
ஜோதிடத்தை பொது மேடைகளில் விவாதிக்கும் பொழுது உங்களின் தனிப்பட்ட கருத்து என்று ஒரு சில சாம்பிள்களை வைத்து முழு ஜோதிடமும் பொய் என்ற கருத்தை எடுத்துக் வைப்பதில் தான் எனக்கு உடன்பாடு இல்லை.
சதாசிவத்தின் இந்த கருத்து.... மிக ஆழமானது....பாராட்டுக்கள் மகிழ்ச்சி

மிக்க நன்றி.... நன்றி

சதாசிவம்
இவ்ளோதான்யா நீங்களும் உங்க ஜாதகமும். ஆதாரங்களுடன் ஒரு அதிரடி - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக