ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2013ல் 13ஐ தொடும் டீன் ஏஜ்களின் கனவுகள்

Go down

ஈகரை 2013ல் 13ஐ தொடும் டீன் ஏஜ்களின் கனவுகள்

Post by அச்சலா Tue Jan 01, 2013 10:52 pm

2013ல் 13ஐ தொடும் டீன் ஏஜ்களின் கனவுகள்

2000ம் ஆண்டில் பூமித் தாயின் மடியில் பிறந்த குழந்தைகள் இந்த ஆண்டில்(2013), 13 வயதை அடைய உள்ளனர். "டீன் ஏஜ்' பருவத்திற்குள் செல்லும் சிறுவர், சிறுமிகள் அவர்கள். அறியாப் பருவமாய்... எதையும் புரிந்து கொள்ள நினைக்கும் "துருதுரு' பருவம். "ஹார்மோன்' மாற்றத்தால், தன்னைப் பெரியவனாய், பெரியவளாய் உணர வைக்கும் பருவம். சிறுவர்களின் சின்னஞ்சிறு உலகில், 2013ன் கனவுகள், டீன் ஏஜ் கனவுகள் என்னவாக இருக்கும்?

2000 ல் பிறந்த குழந்தைகளைதேடினோம்... மழலைத் தனமாய், குறும்பாய்... இதோ... அவர்களே கனவுகளை நம்மோடு பங்கிடுகின்றனர்.

எம்.நித்யா, கேப்ரன் ஹால் மேல்நிலைப் பள்ளி,மதுரை: காலையில் படுக்கை விரிப்பை மடித்து வைப்பேன். சாயந்திரம் வீட்டை சுத்தம் செய்வேன். இப்ப வரைக்கும் 80 சதவீத "மார்க்' எடுக்கறேன். இனிமேலும் நல்லா படிப்பேன். போன வருஷம் எங்கப்பா, மீன் வாங்கி கொடுத்தார். அஞ்சு மீன்கள் வளர்க்கறேன். இந்த வருஷம், அந்த மீன்கள் இன்னும் பெரிசா வளரணும். நாய்க்குட்டி வாங்கி கொடுத்தா நல்லாயிருக்கும்.

ஜி.தனுஷ், வி.எம்.ஜெ., மேல்நிலைப் பள்ளி, மதுரை: இப்பல்லாம் "டிவி' பார்க்கறத நிறுத்திட்டேன். "ஸ்கூல்ல' "கேரம், ஷட்டில், டென்னிஸ்' விளையாடுவேன். வாரத்துக்கு ஒருநாள் தான் கால்பந்து பயிற்சி கிடைக்கிறது. இன்னமும் நிறைய பயிற்சி பெறணும். அம்மாவுக்கு உதவியாய், கடைக்கு போவேன். அக்கா வெளிய போயிருந்தா... வீட்டை சுத்தம் பண்ணித் தருவேன். இந்தத் தரம் வெளியூருக்கு போனதால... "மார்க்' ரொம்ப குறைஞ்சுருச்சு. 2013ல் வர்ற முதல் பரீட்சையில்... நிறைய "மார்க்' வாங்கணும். வரும் ஆண்டுகள் என்னுடைய ஆண்டுகள். "இன்ஜினியரா' ஆகணும்.

ஏ.கருப்புமணி, அச்யுதா அகாடமி, திண்டுக்கல்: சண்டை, சச்சரவு இல்லாமல் அமைதியாக வாழ வழிசெய்ய வேண்டும். அண்டை மாநிலத்தவர்கள் உதவும் மனப்பான்மையுடன் திகழ வேண்டும். கல்வி கட்டணம் குறைந்து உயர்கல்வி பயிலும் வாய்ப்பு, அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். குப்பை இல்லாத சுத்தமான நகரங்கள் உருவாக வேண்டும். சிறந்த மாணவியாக திகழ உறுதி எடுப்பேன்.

எம்.இளவரசன், ஜான் பால் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்: மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் வகையில், தொலை நோக்கு திட்டங்களுடன் பாடத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். புதிய தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய நூலகங்கள், பள்ளிகளில் அமைக்கப்பட வேண்டும். சர்வதேச அளவில் சாதனை படைக்கும் வகையில் விளையாட்டு பயிற்சிகள் அளிக்க வேண்டும். கல்வி கற்று பெரிய ஆளாக வருவதே கனவு.

பி.கவிதா, பி.சி., கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, தேனி: என்னை போன்ற குழந்தைகள் தொழிலாளர்களாக மாறக்கூடாது. 2013 மாணவர்களின் கல்வி ஆண்டாக, கல்வியுடன், பண்பும், அன்பும் கற்றுத்தரும் ஆண்டாக அமைய வேண்டும். தற்போது மூன்றாவது "ரேங்க்' கில் இருக்கிறேன். வரும் புத்தாண்டில் பள்ளியில் முதலிடம் பெறுவேன். எனது தெருவில் உள்ள சிறிய மாணவர்களுக்கு தினமும் இலவச டியூஷன் வழங்குவேன்.

ஜெ.என். மாதவ்ராம், கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி, தேனி: மாணவர்கள் பெற்றோர், ஆசிரியரை மதிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் நிறைந்த ஆண்டாக உருவாக வேண்டும். ஒழுக்கம் அதிகரிக்கும் போது, மாணவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கும். படிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடிப்பதே லட்சியம்.

எம். கவிதா, டி.டி., தர்ம தாவள விநாயகர் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: பள்ளி நேரம் தவிர, வீட்டில் தாயார் சமைக்கும்போது காய்கறி நறுக்குவது, தண்ணீர் பிடிப்பது, வீட்டு வேலைகள் செய்வேன். 2013ல், தடகளப் போட்டியில் சாதனை புரிந்து, எனது வெற்றியை பெற்றோருக்கு பரிசாக அளிக்க விரும்புகிறேன். இது தான் எனது, புத்தாண்டு, டீன்ஏஜ் கனவு.

எஸ்.குணாளன், செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்: படிப்பைத் தவிர, மற்ற நேரங்களில் "டிவி' பார்க்க மாட்டேன். தாயாருக்கு முடியாத நேரங்களில், வீட்டை சுத்தம் செய்வேன். பொதுஅறிவு புத்தகங்கள், நாளிதழ்கள் படிப்பேன். விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் உண்டு. சிலபோட்டிகளில் தோற்றாலும்,புத்தாண்டில் "ஷட்டில் காக்'கில் சாதிப்பேன். தமிழ், ஆங்கிலம், கம்ப்யூட்டரில் தனித்திறனை வளர்த்துக் கொள்வேன்.

ஏ.ஆயிஷாகனி, அழகப்பா மெட்ரிக் பள்ளி, காரைக்குடி: வீட்டில் தம்பி,தங்கைக்கு பாடம் சொல்லி கொடுப்பேன். எல்லோருக்கும் உதவி செய்வேன். சுத்தமே நோய் நிவாரணி என்பதால், என் வீட்டை சுத்தமாக வைத்திருப்பேன். இந்த ஆண்டில், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.

ஆர்.சாத்தப்பன், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, காரைக்குடி: அம்மாவுக்கு உதவி செய்வேன். என்னுடைய தெருவில் உள்ள குப்பையை, குப்பைத் தொட்டியில் போட முயற்சி செய்வேன். புத்தாண்டில், அனைவரும் சுகாதார முறைகளை பின்பற்ற வேண்டும். இளம் பருவத்திலேயே நல்ல பழக்கத்தை உருவாக்க வேண்டும். அதற்கு நான் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பது எனது கனவு.

ஏ.வர்ஷா, சத்திரிய பெண்கள் பள்ளி, விருதுநகர்: பரதநாட்டியத்தில் சாதனை படைக்க வேண்டும். பள்ளியிலே பரதநாட்டியம் என்றால், வர்ஷா தான் என பெயரெடுத்துள்ளேன். வெளி நாடுகளுக்கு சென்று, நமது பண்பாடுகளை பரதக்கலை மூலம் பரப்புவதே எனது நோக்கம். படிப்பிலும் இன்று வரை முதலிடம் பெற்றுள்ளேன். இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே கனவு.

எஸ்.அகமது அர்ஷத்கான், கே.வி.எஸ்.,மெட்ரிக்., பள்ளி, விருதுநகர்: விண்வெளி வீரராக வேண்டும் என்பதே எனது லட்சியம். நிலவு, நட்சத்திரங்களை பூமியில் இருந்து பார்த்த நான், அங்கு சென்று அழகை ரசிக்க வேண்டும். அப்துல் கலாம் போன்று உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும். "நாசா கிட்ஸ்' கிளப்பில் உறுப்பினராக உள்ளேன். விண்வெளி ஆய்வில் அமெரிக்காவை போல் இந்தியா வளர்ச்சி பெற்று, முதலிடம் பெற வேண்டும்.

பசி பெருக்கும் பருவம்: டாக்டர் சுஜாதா சங்குமணி, மகப்பேறு நிபுணர், மதுரை: "டீன் ஏஜ்' பருவத்தில் நாம் தரும் சத்தான உணவுகள், அக்குழந்தைகளின் 50 வயது வரையான எலும்பு அடர்த்தி, வளர்ச்சி, பலத்தை தீர்மானிக்கும். இயல்பாகவே "ஹார்மோன்' வளர்ச்சியால், பசி சற்று அதிகமாகும். அசைவ உணவுகள், உளுந்து, பருப்பு, வெல்லம், எண்ணெய், பால் சாப்பிட கொடுக்கலாம். அடிக்கடி உளுந்து, வெந்தய களி செய்து, எண்ணெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

தினமும் பால் அவசியம். பாலுடன் சத்துமாவு கலந்து தரலாம். பழங்களை கழிக்காமல், எல்லாவற்றையும் விரும்பி உண்ண வைக்க வேண்டும். அரிசிமாவுடன் வெல்லம் சேர்த்து கொடுத்தால், பூப்பெய்யும் போது ஏற்படும் உதிரப் போக்கால், இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கலாம். பெண் குழந்தைகளுக்கு தரும் சத்தான உணவு, "மெனோ பாஸ்' நிலைக்குச் செல்லும் போது வரை, எலும்பைப் பலப்படுத்தும்.

பெண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சியும், உயரமும் அதிகரிக்கும். பூப்பெய்த முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சீரற்ற மாதவிடாய் ஏற்படும். திடீரென மாதவிடாய் வரும். அடுத்த 3 மாதங்களுக்கு வராது. அந்தநேரத்தில், சுத்தமாக இருக்க வேண்டியது, "நாப்கினை' மாற்ற வேண்டியதன் அவசியத்தை கூற வேண்டும். எல்லா பெண்களுக்குமே மாதந்தோறும் வரும் இயல்பான விஷயம் என்பதை, அம்மா தான், பக்குவமாக புரிய வைக்க வேண்டும்.

ஆண்பிள்ளைகளுக்கு 13வயது முதல் அரும்பு மீசை வளரும். தசை வளர்ச்சி பெறும். குரல் உடையும். ஆண்களைப் போல, உடற்கட்டு மாற்றமடையும். உடலில் ஏற்படும் மனதிலும் ஏற்படும். இந்த வயதுக்குரிய சாதாரண மனவளர்ச்சி தான், என்பதை புரிய வைக்க வேண்டும்.
பெற்றோரால் குழந்தைகளின் உடல், மனவளர்ச்சியை எடுத்துக் கூற முடியாவிட்டால், குடும்ப டாக்டர்களை அணுகலாம்.

மனம் விட்டு பேசுங்கள் ! பெற்றோரோ, ஆசிரியரோ... "டீன்ஏஜ்' குழந்தைகளை கையாள்வதில், நேர்மறை அணுகுமுறை தேவை. அவர்களிடம் அதிக நேரம் மனம்விட்டு பேச வேண்டும்; கலந்துரையாட வேண்டும். இந்த பழக்கம் தான், குழந்தைகளை நாளைய சமுதாயத்தில் சான்றோராக உயர்த்தும். அதற்கு பெற்றோரும், ஆசிரியரும் ஒத்துழைக்க வேண்டும்."டீன்ஏஜ்'குழந்தைகளை கையாளுவது எப்படி என விவரிக்கிறார் மதுரை மனநல டாக்டர் விக்ரம் ராமசுப்ரமணியன்.

பெற்றோருக்கு : "டீன்ஏஜ்' பருவத்திற்கு செல்லும் குழந்தைகளை கையாள்வதில், அவர்களை நெறிப்படுத்துவதில், அவர்களுக்கு வழிகாட்டுவதில் பெற்றோருக்கு அதிக பொறுப்பு உள்ளது. டீன் ஏஜ் பருவம் துவங்கும் போது, தன்னைப் பற்றிய அடையாளம் அப்போது தான் தெரியும். அனைத்தையும் கற்றுக் கொள்ள ஆசைப்படுவர்.

அப்பா, அம்மா, சகோதரர், உறவினர் அல்லது சினிமா நட்சத்திரங்களை, தங்களது "ரோல் மாடலாக' நினைக்க ஆரம்பிப்பர். இந்த நேரத்தில் அன்னையின் தோழமை உணர்வோடு பேசும் போது, நீங்கள் சொல்வதை குழந்தை கவனிக்கும். அதன்படி நடந்து கொள்ளும். "இரவில் வெளியே செல்லக்கூடாது' என்று ஒற்றை வார்த்தையில் கட்டளையிடுவதை விட, "ஏன் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும்' என்கிற, உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். எதற்கெடுத்தாலும்"செய்யாதே, போகாதே...' என, எதிர்மறையாகவே பேசக்கூடாது.

குழந்தையிடம் இருந்து நீங்கள் விலகும் போது, தவறான நட்பு வட்டாரம் அணைத்துக் கொள்ளும். குழந்தை செய்வது தவறாக இருந்தால், உடனடியாக நமது எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடாது. உங்களிடமிருந்து விலகி, நண்பர்களிடம் வெளி விஷயங்களை பகிர்ந்து கொள்வர்.

ஆசிரியருக்கு:இந்த பருவத்து குழந்தைகள் அதிக நேரத்தை வீட்டை விட வகுப்பறையில் தான் செலவிடுகின்றனர். எனவே பள்ளியில் ஆசிரியர்கள், ஆசான்களாய் மட்டுமல்லாமல், பெற்றோராகவும் செயல்பட்டு நல்வழிப்படுத்த வேண்டும்.வகுப்பறையில் ஆசிரியர் தான், மாணவர்களின் "ரோல் மாடல்'. எக்காரணம் கொண்டும், மாணவர்களை படிக்கும், படிக்காத மாணவர் என்று பாரபட்சம், பாகுபாடு காண்பிக்கக்கூடாது. தவறு களுக்கு, தண்டனை தீர்வல்ல. அதேபோல, பலர் முன்னிலையில் "பெஞ்சில்' நிற்க வைப்பது, திட்டுவது கூடாது. தனியாக கூப்பிட்டு கண்டிக்கலாம். அல்லது அவர்களை கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம் தண்டிக்கலாம்.

மாணவர்கள் செய்யும் சிறு விஷயங்களுக்கு கூட பாராட்டு முக்கியம். அதை மற்றவர்கள் முன்னிலையில் செய்யும் போது, "இன்னும் நிறைய நல்லதைச் செய்யலாமே' என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை, அவர்களது வயதுக்கேற்ப சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

-தினமலர்


2013ல் 13ஐ தொடும் டீன் ஏஜ்களின் கனவுகள் Paard105xz2013ல் 13ஐ தொடும் டீன் ஏஜ்களின் கனவுகள் Paard105xz2013ல் 13ஐ தொடும் டீன் ஏஜ்களின் கனவுகள் Paard105xz2013ல் 13ஐ தொடும் டீன் ஏஜ்களின் கனவுகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum