ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை இன்பத்திற்கு.

3 posters

Go down

வாழ்க்கை இன்பத்திற்கு. Empty வாழ்க்கை இன்பத்திற்கு.

Post by அச்சலா Mon Dec 31, 2012 2:18 am

உங்கள் வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுவையாக அமைய வேண்டுமா? நீங்கள் உங்கள் வாழ்வில் யாரையாவது மிக முக்கிய முன்னோடி மனிதராக கருதி, அவரை பின்பற்றி வாழ விரும்புகிறீர்களா? அந்த முக்கியமான மனிதர் வேறு யாருமல்ல அது நீங்கள் தான்! இதை நீங்கள் உணர்ந்தீர்களானால், உங்கள்வாழ்க்கை சுகமாக அமையும்' என்கிறார், முற்போக்குச் சிந்தனையாளர் சித்ரா ஜா.


தொடர்ந்து அவரது சிந்தனைக் கருவூலங்கம் உங்கள் கவனத்திற்கு...


1. `நான் நல்லவனா?' -இந்தக் கேள்வியை உங்களுக்குள்ளே அடிக்கடி கேட்டுக் கொள்ளுங்கள்.`உங்களுக்குள் இருக்கும் சுயநலம் தான் உங்களை உங்களிடமிருந்தே தூரமாக்குகிறது!' என்பதை நீங்கள் விடையாகக் கொண்டால், அந்த எண்ணம் உங்களை முதிர்ச்சியுற்ற பண்பாளனாக பரிமளிக்கச் செய்யும். எந்த ஒரு அர்த்தமற்ற பொருளையும் பிறரிடமிருந்து எதிர்பார்த்து நிற்கும் எண்ணத்தை மாற்றி அமையுங்கள்! இலவசம் இனிது என்ற சிந்தனை உங்களை இன்னொருவரை நம்பி வாழும் நிலைக்குத் தள்ளிவிடும்.


2. சிலர் தங்களால் முடிகிற காரியத்தை செய்ய முயலாமல் நொண்டிச்சாக்கு சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவ்வாறே உங்களிடமும் எந்த ஒரு காரியத்திற்கும் நொண்டிச்சாக்கு சொல்லும் பழக்கம் இருந்தால், அதைக் கைவிடுங்கள்!


3. வாழ்க்கை போக்கில் சில தடைகள் உங்களை மேற்கொள்ள பார்க்கலாம். தடைகளைத்தாண்டி வாழ்க்கையை முன்நடத்திச் செல்லக் கற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த ஏதாவது ஒரு சிறு குற்றத்திற்காக உங்கம் மனதை வீணாக அலட்டிக்கொள்ளாமல் சுதந்திரமாக செயல்படுங்கள்.


4. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டு மனதை வருத்திக் கொண்டிருக்காதீர்கள்.


5. உங்கம் முயற்சி அல்லது முயலாமை குறித்து அதிகநேரம் சிந்தித்து காலவிரயம் செய்யாதீர்கள்.


6. `ஒரு காரியத்தை செய்து முடித்தபிறகு `அதை அப்படிச் செய்திருக்கலாமே... இதை இப்படிச் செய்திருக்கலாமே..!' என்று மாறிமாறி சிந்தித்து, குழம்பிக் கொண்டிருக்காதீர்கள்.


7. உங்கள் ஒவ்வொரு செயலுக்கும் அதன் விளைவுக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்பதில் தெளிவாயிருங்கள். ஏதேனும் தவறு நேர்ந்தால் நீங்களே பொறுபேற்றுக் கொள்ளுங்கள். பிறர் மீது பழிபோடும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.


8. உங்கள் வாழ்வில் உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நல்ல சந்தர்பத்தையும் நழுவ விடாமல், அதனை முழுமையாக பயன்படுத்துங்கள்.


9. கடந்த கால சிந்தனைகளில் அதிக நேரம் ஆழ்ந்து விடாமல் நடப்பு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவை நல்லபடியாக நடப்பதற்கு, முழுக்கவனத்துடன் செயல்படுங்கள்.


10. முன்னேற்றம் பற்றியே எப்போதும் சிந்திங்கள். சிலநேரங்களில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைக் கண்டு ஒருபோதும் பின்னோக்கி போய்விடாதீர்கள்.


11. அறிந்தோ, அறியாமலோ யாருக்கேனும் உங்களால் சிறு தீங்கு நடந்திருந்து அதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைத்தால், அதை உடனே கேட்டு விடுங்கள். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போடாதீர்கள்.


12. உங்கள் வாழ்வில் நிகழும் எல்லா செயல்களுக்கும் நீங்கள்தான் காரணம் என்பதை பகுத்துணர்ந்து கொள்ளுங்கள். பிறர்மீது பழிபோடுவது முட்டாள்தனமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


13. சந்தேகம் ஏற்படுகிற காரியங்களில் `நாம் செய்வது சரிதானா? சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறோமா?' என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

நன்றி:முற்போக்குச் சிந்தனையாளர் சித்ரா ஜா.


வாழ்க்கை இன்பத்திற்கு. Paard105xzவாழ்க்கை இன்பத்திற்கு. Paard105xzவாழ்க்கை இன்பத்திற்கு. Paard105xzவாழ்க்கை இன்பத்திற்கு. Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

வாழ்க்கை இன்பத்திற்கு. Empty Re: வாழ்க்கை இன்பத்திற்கு.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 31, 2012 12:17 pm

முற்போக்கு சிந்தனையாளரின் நற்சிந்தனைகளை பதிவிட்டமைக்கு நன்றி அச்சலா அவர்களே.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

வாழ்க்கை இன்பத்திற்கு. Empty Re: வாழ்க்கை இன்பத்திற்கு.

Post by chinnavan Mon Dec 31, 2012 1:00 pm

நல்ல சிந்தனைகள் பகிர்ந்தமைக்கு நன்றி



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

வாழ்க்கை இன்பத்திற்கு. Empty Re: வாழ்க்கை இன்பத்திற்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum