ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

+3
Sivakali
Kuzhali
சாமி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Empty அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

Post by சாமி Sun Dec 30, 2012 11:27 pm

28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை. தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.

இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது.

மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்றும் இதற்கான செய்திகள் அவ்வப்போது இந்து நளிதழ் உட்பட பல்வேறு மேலை நாட்டு செய்தித்தாள்களிலும் வெளிவந்திருக்கின்றன.

அடடா! “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று தமிழன் சும்மா பாட்டாக மட்டும் பாடி வைக்கவில்லை! ஓட்டிலும் எழுதி பல நாடுகளில் ஒட்டி வாழ்ந்திருக்கிறான் என்பது எவ்வளவு பெருமைபடத்தக்க செய்தி!

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஓட்டுச்சில்லு கோர் ரோரி (KHOR RORI) என்ற ஓமன் நாட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள். தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

(தொடரும்)
(நன்றி : ஆன்மிக மாத இதழ், டிசம்பர் 2012 “தெய்வ முரசு” ஆசிரியர் மேசை பகுதியிலிருந்து)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Empty Re: அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

Post by Kuzhali Mon Dec 31, 2012 10:26 am

படிக்க ஆவலாக உள்ளது தொடருங்கள்..........
Kuzhali
Kuzhali
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Empty Re: அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

Post by Sivakali Mon Dec 31, 2012 1:40 pm

நாம் நம்மையும் நம் மொழியில் உள்ள சிறப்பம்சங்களையும் நம்பாமல் இருக்கும் வரை அந்நியர்கள் நம்மை ஏமாற்றதான் செய்வார்கள். நல்ல செய்தி நண்பரே
Sivakali
Sivakali
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012

Back to top Go down

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Empty Re: அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

Post by Guest Mon Dec 31, 2012 1:43 pm

தொடருங்கள் நண்பா ,,, சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Empty Re: அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

Post by சாமி Fri Jan 04, 2013 9:39 pm

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள்.

தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை, பிராமி என்பது சமஸ்கிருத எழுத்தா? சமஸ்கிருதம் எப்போதுமே எழுதப்பட்டதே இல்லையே! அதற்குத்தான் எழுத்து வடிவமே கிடையாதே! எல்லாம் வாய்மொழியோடு சரி! அதனால்தானே வடவேதத்திற்குக் கூட எழுதாக்கிளவி என்று கூறினார்கள்.

பழங்காலத்தில் சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள் அதை ஏன் எழுதவில்லை? சிந்திக்க வேண்டிய விசயம்! உலகிலேயே முதன்முதலில் தான் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்! அதைக் கல்லிலும், ஓட்டிலும், ஓலையிலும் எழுதிப்பார்த்தவன் தமிழன்! சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவமே கிடையாது. இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு இரவல் வாங்கப்பட்ட எழுத்து வடிவில் எழுதிப்படிக்கிறோம். இது இரவல் வாங்கியது! சமஸ்கிருதத்திற்குச் சொந்தமில்லாதது.

கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்திற்குத் தமிழ்நாட்டில் கிரந்தம் என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளடக்கிய எழுத்து வடிவம் தமிழ் சிவாச்சாரியார்களால் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் அதற்கு பல்லவ கிரந்தம் என்றே பெயர்.

அதற்குப்பின் பல நூற்றாண்டுகட்குப்பின் இந்தி மொழி உருவாகிய பின் வடநாட்டினர் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவத்தை இந்தி வடிவில் கொடுத்ததுதான் தேவநாகரி.
அப்படியானால் மிகப் பழங்காலத்தில் சமஸ்கிருதம் உருவான போது ஏன் எழுத்து வடிவம் அதற்கு இல்லை? ஒரு நொண்டிச் சமாதானம் அதற்குச் சொன்னார்கள் – எழுதினால் அதற்கு ஆற்றல் போய்விடுமாம்!

இது இப்படி இருக்க மேற்கண்ட தமிழ் எழுத்துக்கள் கிறித்து பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே எழுதப்பட்டு வந்திருக்கிறது என்று ஓமன் நாட்டில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லுகளைப்போல பல சான்றுகள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Empty Re: அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

Post by கரூர் கவியன்பன் Sat Jan 05, 2013 6:47 am

என் மனதிலும் இந்தக் கேள்வி நீண்ட நெடு நாட்களாகவே இருக்கிறது.எப்படி இக்கலப்பு நிகழ்ந்தது என்று ஆனால் இன்றளவும் எனக்கு புரிதல் ஏற்படவே இல்லை சோகம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Empty Re: அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

Post by சாமி Sat Jan 05, 2013 3:02 pm

கரூர் கவியன்பன் wrote:என் மனதிலும் இந்தக் கேள்வி நீண்ட நெடு நாட்களாகவே இருக்கிறது.எப்படி இக்கலப்பு நிகழ்ந்தது என்று ஆனால் இன்றளவும் எனக்கு புரிதல் ஏற்படவே இல்லை சோகம்

இதில் கலப்பு ஒன்றும் இல்லை நண்பரே !
கடன்வாங்கிய மொழி எப்படி நம் தமிழ் மொழியுடன் கலக்க முடியும்?
வடமொழி அன்பர்களின் சூதும் ...தமிழரின் தன் மொழி பற்றிய அக்கறை இன்மையும்தான்
இதற்கு காரணம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Empty Re: அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

Post by சாமி Sat Jan 05, 2013 9:39 pm

இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

அப்பெயரைக் கொடுத்த புண்னியவான்கள் இந்தத் தொல்லியல் துறையில் மிகுந்து காணப்படுகிற பிராமணர்கள். தமிழுக்கு முதன்மை வந்துவிடக்கூடாது என்று ஒரு சமஸ்கிருதப் பெயரான பிராம்மி என்ற ஒட்டுப்போட்டுக் கூறிவருகிறார்கள்.
உண்மையில் பல சமஸ்கிருத புராண நூல்களிலேயே – மொழிகளின் பட்டியல் ஒன்று வருகிறது. அதாவது கி.மு3 ஆவது நூற்றாண்டிலேயே எழுந்த ‘சமவயங்ககத்தா’ என்ற பிராகிருதத்தில் எழுதப்பட்ட சமண நூல் 18 வகை எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது.

அவையாவன.
1.பாம்பி
2.யவனானி
3.தோசபுரியா
4.கரோத்தி
5.புக்கரசரியா
6.போகவையா
7.பகாரியா
8.உயமித்ரகரியா
9.அக்கரபுட்டியா
10.தவனானியா
11.கிணிகையா
12.அங்காலிவி
13.கணிதாவிலி
14.காந்தவ்யவிலி
15.ஆடம்சாலிவி
16.மகாசனி
17.தமிழி
18.பொலிம்னி


இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து வடிவப் பட்டியலில் தமிழி இருப்பது காண்க. தமிழ்தானே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவம்? அப்படியானால் அதுதானே பட்டியலில் முதலில் இடம் பிடித்திருக்க வேண்டும்? ஏன் அது 17 ஆவதாகக் காட்டப்பட்டிருக்கிறது? காரணம், இப்பட்டியலை வடநாட்டினர் தயாரித்தனர். எனவே அவர்கள் தென்னாட்டுத் தமிழை இறுதியில் வைத்துவிட்டனர்.

சரி, கி.மு 3ஆம் நூற்றாண்டிலேயே தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்று கூறப்பட்டிருப்பதைப் பார்த்தோம். தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்பதுதானே சரியாக இருக்கமுடியும்! அதென்ன பிராமி?

மேற்கண்ட அசோகன் காலமான கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கூறப்பட்ட பட்டியலில் எங்காவது பிராமி என்று ஓர் எழுத்து வடிவம் வந்துள்ளதா? இல்லையே! அப்படியானால் தமிழோடு பிராமி என்று ஒட்டு சேர்த்தவன் வேண்டுமென்றே ஓர் உள்நோக்கத்துடன் ஒட்டு சேர்த்திருக்கிறான்! அந்த உள்நோக்கம் தமிழின் தொன்மையைக் குறைக்க வேண்டும் – மாறாக வட்மொழிக்கு முதன்மையை ஏற்ற வேண்டும் என்பதுதான். இது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Empty Re: அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

Post by rksivam Sun Aug 24, 2014 12:01 pm

திரு சாமி அவரகளுக்கு வணக்கம்,

உங்கள் ஆய்வு கட்டுரையில் ஒரு பகுதிதவிர மற்றவை அனைத்தும் நன்றாக இருக்கிறது. தமிழ் பிராம்மி என்று பெயரிட்ட பிராம்மணன் யார். சரி வேண்டாம் பெயரிட்டவர் யார். உங்களால் சுட்டி காட்ட முடியுமா.

சரியாக தமிழின் பெருமையை தக்கவைத்துக்கொள்ள இயலாமை நம்முடையது.

திராவிட பலவீனம் வலிமையானவர்களுடன் போட்டியிட இயலாமல் வலிமையற்ற எண்ணிக்கையில் குறைந்த ப்ராம்மனர்களுடன் போட்டியிட்டுக்கொண்டிருப்பது. அதனால்தான் தமிழ் மொழியை ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் காப்பாற்றுவதாக காட்டிக்கொள்கிறார்கள்.

அவர்கள் இனம் எங்கே வெளியில் தெரிந்துவிடப்போகிறதோ என்று பலவீனமான பார்ப்பன்னர்களை தமிழ் எதிரிகளாக காட்டி, பிழைப்பு நடத்தி வந்தார்கள் வருகிறார்கள்.

உண்மையில் வைணவ பார்ப்பன்னர்களின் தமிழ் பாசுரங்கள், உலகம் முழுவதும் தமிழ் மொழியில் அனைத்து கோவில்களிலும் பாடப்பட்டு வருகிறது, ஆதாரத்திற்கு திருப்பதி , மைசூர், திருவனந்தபுரம், நியூயார்க் கோவில்களுக்கு சென்று கேட்கவும். மிகவும் வேடிக்கையான விஷயம் படித்தவர்கள், அறிந்தவர்கள் கூட ஆராயாமல் இது போன்று கட்டுரை எழுதுவது நமது பலவீனத்தை காட்டுகிறது.

சிவம்.
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Empty Re: அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

Post by krishnaamma Sun Aug 24, 2014 2:24 pm

rksivam wrote:திரு சாமி அவரகளுக்கு வணக்கம்,

உங்கள் ஆய்வு கட்டுரையில் ஒரு பகுதிதவிர மற்றவை அனைத்தும் நன்றாக இருக்கிறது. தமிழ் பிராம்மி என்று பெயரிட்ட பிராம்மணன் யார். சரி வேண்டாம் பெயரிட்டவர் யார். உங்களால் சுட்டி காட்ட முடியுமா.

சரியாக தமிழின் பெருமையை தக்கவைத்துக்கொள்ள இயலாமை நம்முடையது.

திராவிட பலவீனம் வலிமையானவர்களுடன் போட்டியிட இயலாமல் வலிமையற்ற எண்ணிக்கையில் குறைந்த ப்ராம்மனர்களுடன் போட்டியிட்டுக்கொண்டிருப்பது. அதனால்தான் தமிழ் மொழியை ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் காப்பாற்றுவதாக காட்டிக்கொள்கிறார்கள்.

அவர்கள் இனம் எங்கே வெளியில் தெரிந்துவிடப்போகிறதோ என்று பலவீனமான பார்ப்பன்னர்களை தமிழ் எதிரிகளாக காட்டி, பிழைப்பு நடத்தி வந்தார்கள் வருகிறார்கள்.

உண்மையில் வைணவ பார்ப்பன்னர்களின் தமிழ் பாசுரங்கள், உலகம் முழுவதும் தமிழ் மொழியில் அனைத்து கோவில்களிலும் பாடப்பட்டு வருகிறது, ஆதாரத்திற்கு திருப்பதி , மைசூர், திருவனந்தபுரம், நியூயார்க் கோவில்களுக்கு சென்று கேட்கவும். மிகவும் வேடிக்கையான விஷயம் படித்தவர்கள், அறிந்தவர்கள் கூட ஆராயாமல் இது போன்று கட்டுரை எழுதுவது நமது பலவீனத்தை காட்டுகிறது.


சிவம்.
மேற்கோள் செய்த பதிவு: 1081964


ரொம்ப சரி.............அருமையாக சுட்டிக்காட்டி இருக்கீங்க சிவம் அவர்களே புன்னகை  அன்பு மலர்  அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  3838410834  அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  3838410834  அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  3838410834  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Empty Re: அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum