ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை

5 posters

Go down

புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை Empty புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை

Post by Powenraj Sun Dec 30, 2012 7:47 am

1, 10, 19, 28:
சூரியனின் அம்சத்திலும், ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு பல ஏற்றங்களையும் மாற்றங்களையும் யோக அம்சங்களையும் தரப்போகிறது.யோக கிரகங்கள், அதிர்ஷ்ட தேவதையின் அருள் உங்களுக்கு வந்து சேரும். நிறைய வாய்ப்புகள் கதவை தட்டும். பெரிய மனிதர்கள், பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துகளை மாற்றி அமைப்பீர்கள். வீடு, நிலம், தோட்டம் விற்க எடுத்த முயற்சிகள் கூடி வரும். ஒரு சொத்தை விற்று வேறொரு சொத்து வாங்குவீர்கள். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கு ஏற்ப நல்ல உத்யோகம் அமையும்.
:-
மார்ச் மாத வாக்கில் மிகப்பெரிய யோகம் வந்து சேரும். மகளிடம் இருந்து தாய்மை சம்பந்தமாக இனிக்கும் செய்தி வரும். நண்பர்கள் இடையே சில மனஸ்தாபங்கள் வரலாம். வீண் பேச்சுக்களை குறைப்பது நலம் தரும். பெண்கள் தங்க நகைகளை இரவல் வாங்குவதும், கொடுப்பதும் சில பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். அடிக்கடி செலவு வைத்த பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். கல்வி வகையில் செலவுகள் ஏற்படும். ஆன்மிக தாகம் அதிகரிக்கும். அடிக்கடி கோயில், குளம் என்று சென்று வருவீர்கள். மாமன் வகை உறவுகளால் ஆதாயம் உண்டு.
:-
மனைவி மூலம் சொத்து சேரும் பாக்யம் உண்டு. உத்யோகத்தில் நல்ல மாற்றங்கள் வரும். பதவி உயர்வுக்கான கிரக நிலைகள் உள்ளன. வெளியூரில் பணிபுரிபவர்களுக்கு சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். பணப் பற்றாக்குறை தீரும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உள்ளது.
:-
பரிகாரம்:
ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்து வணங்கலாம். கும்பகோணம் அருகே ஆடுதுறையில் உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம். ஞாயிற்றுக்கிழமைபசுமாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு வழங்கலாம்.
:-

2, 11, 20, 29 :
சந்திரனின் அம்சத்திலும், ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையின் வசந்த காலமாக இருக்கும். மிகப்பெரிய திருப்புமுனை ஆண்டாகவும் அமையும். பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக நன்மைகளும் முன்னேற்றங்களும் ஏற்படும்.நடக்குமா, நடக்காதா என்று ஏங்கித் தவித்த விஷயங்கள் தானாக கூடிவரும். பொருளாதாரத்தில் பெரிய ஏற்றமும் மாற்றமும் வரும். புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும். மாமன் வகை உறவுகள் கைகொடுத்து உதவுவார்கள். பிள்ளைகள் வழியில் கல்வி, கல்லூரி என செலவுகள் ஏற்படும்.
:-
நல்ல தொழில் அமையவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். புதிய தொழிலில் கால் பதிப்பீர்கள். கன்னிப் பெண்கள் சூழ்நிலை அறிந்து நடப்பது அவசியம். தாய் உடல்நலம் பாதிக்கப்படலாம். உறவினர் வகையில் விருந்து, விழா, சுப விசேஷ வகையில் பரிசுகள், மொய்ப்பணம் என்றுசெலவுகள் கூடும். கடல் கடந்து செல்ல யோகம் வந்துள்ளது. நில புலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றியடையும். இடைஞ்சலான வீட்டில் இருந்து பெரிய வீட்டுக்கு குடி போவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
:-
வைர, நவரத்தின ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சகோதர, நாத்தனார் உறவுகளால்சில சுமைகளும், செலவுகளும் வர வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும். சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமும் ஆதாயமும் வரும்.வியாபாரம் உச்சமடையும். புதிய தொழில் தொடங்குவீர்கள். கையில் காசு பணம் புரளும். வேலையாட்களால் சில சங்கடங்கள் வரலாம்.
:-
பரிகாரம்:
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசித்து வணங்கலாம். கும்பகோணம் அருகே திங்களூர் சந்திர ஷேத்திரத்துக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம்.ஏழை பெண்கள் திருமணத்துக்கு சீர்வரிசை சாமான்கள் வாங்கி தரலாம்.-

:-
3, 12, 21, 30 :
குரு பலத்திலும் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு கலவையான பலன்களை கொண்ட ஆண்டாக அமையும். பல அனுபவங்களையும்பக்குவங்களையும் பெறுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள். உறவினர்களின் குடும்ப விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நலம் தரும். பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து வரவேண்டிய சொத்து, பணம் வந்து சேரும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்யம் எதிர்பார்க்கலாம். மே மாதத்துக்குள் இனிக்கும் செய்தி உண்டு.
:
திசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு புதிய வீடு, பிளாட், நிலம் வாங்கும் யோகம் உள்ளது. மாணவர்களுக்கு விரும்பிய பள்ளி, கல்லூரியில் கேட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். பெண்களுக்கு அக்கம்பக்கம் இருப்பவர்கள்மற்றும் தோழிகளால் சில பிரச்னைகள் வரலாம். நண்பர்களுடன் நெருக்கத்தை குறைத்துக் கொள்வது அவசியம். வீட்டில் வளைகாப்பு, மஞ்சள் நீராட்டுவிழா போன்றவற்றுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். கடல் கடந்து செல்ல வேண்டும்என்ற நீண்ட நாள் ஆசை ஜூன், ஜூலையில் நிறைவேறும். சகோதரஉறவுகளால் அலைச்சல், செலவுகள் ஏற்படும்.
:-
வழக்கு சம்பந்தமாக சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். தாய் உடல்நலம் பாதிக்கப்படலாம். மருத்துவ செலவுகளுக்கும் இடமுள்ளது. உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு, திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அலுவலக சம்பந்தமான வழக்குகள் பைசலாகும். வியாபாரத்தில் லாபம் கொழிக்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.
:-
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசித்துவணங்கலாம். கும்பகோணம் அருகே ஆலங்குடி குரு ஸ்தலத்துக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம்.ஏழை மாணவர் பள்ளி, கல்லூரி செலவுகளுக்கு உதவலாம்.
[/color]
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை Empty Re: புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை

Post by Powenraj Sun Dec 30, 2012 8:26 am

4, 13, 22, 31:
ராகுவின் அம்சத்திலும், ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு அமைதி, ஆனந்தம் இணைந்த ஆண்டாக இருக்கும். உங்கள் எண்ணின் நாயகன் ராகு, சுக்கிரன் வீட்டுக்குபெயர்ச்சியாகி உள்ளதால், குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். மகன், மகளுக்கு பெரிய வசதியான இடத்தில் நல்ல சம்பந்தம் கூடி வரும். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள்பூரண குணமடைவார்கள். மார்ச்மாதத்துக்கு பிறகு இடமாற்றம் உண்டாகும். வீடு அல்லது கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள்.
:-
கணவன் - மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள், வருத்தங்கள் வரலாம். இருவரும் சேர்ந்து ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம். சகோதரி திருமண விஷயமாக அலைச்சல், செலவுகளுக்கு இடமுண்டு. வெளிநாட்டில் இருப்பவர்கள்சொந்த ஊருக்கு வரவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு சம்பந்தமாக சமாதான பேச்சுவார்த்தைகள் நடக்கும். அடிக்கடி செலவு வைத்துக் கொண்டிருந்த பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள்.
:-
மனம் ஆன்மிகத்தில் லயிக்கும். நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள்.பிரசித்தி பெற்ற ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வேலைச் சுமை கணிசமாக குறையும். விரும்பிய ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். தொழில், வியாபாரம் சாதகமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கதவை தட்டும். பண வசதி படைத்த உறவினர் உதவுவார்.
:-
பரிகாரம்:
பட்டீஸ்வரம் துர்கை அம்மனை தரிசித்து வணங்லாம். ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம். துப்புரவு தொழிலாளர்கள், நோயாளிகளுக்கு உதவலாம்.
:-

5, 14, 23 :
புதாத்திய யோகத்திலும் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு விருப்பு-வெறுப்பு, நிறை-குறைகள் கலந்த ஆண்டாக இருக்கும். மதில் மேல் பூனையாக இருந்த நிலை மாறி ஸ்திரமாக முடிவெடுப்பீர்கள். பூர்வீகசொத்து சம்பந்தமாக இருந்த தேக்க நிலை நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பங்குத் தொகை வந்து சேரும். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. மகள், மாப்பிள்ளை மூலம் சில வருத்தங்கள், திடீர் செலவுகள் உண்டாகும்.தடைபட்ட கட்டிட வேலைகள் மீண்டும் இனிதே தொடங்கும்.
:-
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள். தந்தையின் சொல்லுக்கும் கருத்துக்கும் செவி சாய்ப்பது நலம் தரும். ஏப்ரல், மே மாதங்களில் புதிய முயற்சிகள் வேண்டாம்.பயணத்தின்போது கவனம் தேவை. கைப்பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சகோதர, சகோதரிகளின் குடும்ப விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெண்கள் சமையலறைக்கு தேவையான மின் சாதனங்கள் வாங்குவார்கள். கண், காது சம்பந்தமாக உபாதைகள் வர வாய்ப்புள்ளது.
:-
சிறு உபாதைகளையும் அலட்சியம் செய்ய வேண்டாம். கன்னிப் பெண்களின் ஆசைகள் நிறைவேறும். உத்யோகத்தில் சாதக, பாதகங்கள் இருக்கும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது அவசியம். நிறைய சம்பளத்தில் வேறு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். கையில் காசு பணம் புரளும். பழைய கடன்களை அடைப்பீர்கள். உப தொழில்களுக்கு வாய்ப்புண்டு.
:-
பரிகாரம்:
மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்து வணங்கலாம். கும்பகோணம் அருகே திருவெண்காடு புதன் ஸ்தலத்துக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம்.மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்துக்கு உதவலாம்.

:-

6, 15, 24 :
சுக்கிர யோகத்திலும் அம்சத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு சாதகமான ஆண்டாக அமையும். பல வகைகளில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அதே நேரம், எதையும் ஒருமுறைக்கு பல முறை ஆலோசித்து செய்வது அவசியம்.அகலக்கால் வேண்டாம். குடும்பத்திலும் வெளியிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வசதி குறைவான வீட்டில் இருந்து பெரிய, வசதியான வீட்டுக்கு குடிபோவீர்கள். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. அக்கம்பக்கத்தினர்,தோழிகளிடம் பெண்கள் அளவோடு பழகுவது நல்லது.
:-
விலை உயர்ந்த பொருட்களை இரவல் வாங்குவது, கொடுப்பதுகூடாது. தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். ஜூன் மாதத்தில் அதற்கு அச்சாரம் போடுவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்கு உரிய பங்குத் தொகை வந்து சேரும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். கன்னிப் பெண்களின் எண்ணங்கள், ஆசைகள் நிறைவேறும். வழக்கு சம்பந்தமாக நல்ல முடிவுகள் ஏற்படும்.
:-
திசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு நான்கு சக்கர வாகன யோகம் உண்டு. வீட்டில் பெரியவர்கள் மூலம் மருத்துவ செலவுகள் வரலாம். உத்யோகத்தில் சாதகமான மாற்றங்கள் வரும். மதிப்பு, மரியாதை கூடும். சலுகைகள் கிடைக்கும். வாகன வசதிகளும் எதிர்பார்க்கலாம். வியாபாரம் ஸ்திரமாக இருக்கும். புதிய தொழில்கள்தொடங்குவீர்கள். பண வரவுகள், கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
:-
பரிகாரம்:
திருக்கடையூர் அபிராமி அம்மனை தரிசித்து வணங்கலாம். கும்பகோணம் அருகே கஞ்சனூர் சுக்கிர ஸ்தலத்துக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம்.முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவலாம்.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை Empty Re: புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை

Post by Powenraj Sun Dec 30, 2012 8:39 am

7, 16, 25 :
கேதுவின் அம்சத்திலும் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு வளர்பிறை, தேய்பிறை போல பலன்கள் மாறி மாறி இருக்கும். நடக்குமா, நடக்காதா என்ற நிலையில் இழுபறியாக இருந்துவந்த பிரச்னைகள் எல்லாம் சாதகமாக கூடி வரும். பணப் பிரச்னை, வழக்குகள் காரணமாகதடைபட்டிருந்த கட்டிட வேலைகள் மீண்டும் இனிதே தொடங்கும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்குநல்ல நிறுவனத்தில் வேலை அமையும். சகோதர உறவுகளால் அலைச்சல், செலவுகள், வருத்தங்கள் வந்து நீங்கும். மகன், மகள் திருமணத்தை ஜாம்ஜாம் என்று நடத்துவீர்கள்.
:-
மாமியார், நாத்தனார் உறவுகள் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். அவர்களால் அனுகூலம் ஏற்படும். கல்வி வகையில் செலவுகள் உண்டாகும். மாணவர்களுக்கு அலைச்சலும் மன சோர்வும் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான கால நேரம் வந்துள்ளது. ஒரு சொத்தை விற்று வேறு சொத்து வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு புது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்யும் யோகமும் உள்ளது. நண்பர்கள் இடையே சிறு மனஸ்தாபங்கள் வரலாம். கொடுக்கல், வாங்கலில் கவனமும் நிதானமும் தேவை. கண் சம்பந்தமாக உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. கண்ணாடி அணிய வேண்டி வரலாம்.
:-
உறவினர் குடும்ப விஷயங்களில் பெண்கள் தலையிடாமல் இருப்பது அவசியம். உத்யோகத்தில் அதிககவனம் தேவை. அலட்சியம், மறதியால் பொருள் இழப்பு ஏற்படலாம் என்பதால் பயணத்தின்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஜூலை மாத வாக்கில் புரமோஷன், டிரான்ஸ்பருக்கு வாய்ப்பு உண்டு, வியாபாரம் சுபிட்சமாக நடக்கும். பணப் பற்றாக்குறை தீரும். வேலையாட்களிடம் அனுசரணையாகபோகவும்.
:-
பரிகாரம்:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசித்து வணங்கலாம். கும்பகோணம் அருகே கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்துக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம்.காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு உதவலாம்.
:-

8, 17, 26 :
சனியின் அம்சத்திலும் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு அமோகமாக இருக்கும். 30 ஆண்டுகளுக்குஒருமுறை உச்ச பலம் பெறும் உங்கள் எண்ணின் நாயகன் தற்போது உச்சமாக இருக்கிறார். குடும்பத்தில்மகிழ்ச்சியும் ஆனந்தமும் தாண்டவமாடும். பூர்வீக சொத்துகளில் மாற்றம் செய்வீர்கள். நிலம், தோட்டம் ஆகியவற்றை விற்பதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாட்டில் இருப்பவர்கள்சொந்த ஊர் திரும்புவார்கள்.சகோதர உறவுகளின் குடும்ப விசேஷங்களை முன்நின்று நடத்துவீர்கள்.
:-
அவசர தேவைக்காகவும் சுப செலவுகளுக்கும் பணம் கடன் வாங்க நேரிடும். தந்தையின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. தாய் உடல்நலம் பாதிக்கப்படலாம். மருத்துவ செலவுகளுக்கும் இடமுண்டு. விரும்பிய பள்ளி, கல்லூரியில் மாணவர்களுக்குஇடம் கிடைக்கும். மகள், மாப்பிள்ளை மூலம் அலைச்சல்,செலவுகள் வரலாம். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியம். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வருவீர்கள். வழக்கு சம்பந்தமாக ஏற்பட்ட தடைகள் நீங்கும். சமாதான முயற்சிகளுக்கும் வாய்ப்புஉள்ளது.
:-
பிறந்த வீட்டில் இருந்து பெண்களுக்கு அனுகூலமும் ஆதரவும் உண்டு. உத்யோகத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். நின்று போன சலுகைகள் மீண்டும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி. எதிர்ப்புகள் மறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
:-
பரிகாரம்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வணங்கலாம். பவுர்ணமியன்று கிரிவலம் செல்லலாம். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம். மாற்று திறனாளிகளுக்கு உதவலாம்.
:-

9, 18, 27 :
செவ்வாய் அம்சம், ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு ஏற்ற-இறக்கம், நிறை-குறைகள் உள்ள ஆண்டாக அமையும். சகிப்புத்தன்மையுடன் சற்றுவிட்டுக் கொடுத்தும் போனால் பல விஷயங்களை சாதிக்கலாம். சொந்த வேலையுடன் அடுத்தவர்கள் வேலைகளை பார்க்க வேண்டி வரும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்லவேலை அமையும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்யம் எதிர்பார்க்கலாம். வீட்டில்பராமரிப்பு வேலைகள் செய்வீர்கள்.
:-
சிலர் வசதியான, பெரிய வீட்டுக்கு இடம் மாறுவார்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். சிறியஉபாதைகளைக்கூட அலட்சியம் செய்ய வேண்டாம். வீடு, மனை, நிலம் விஷயத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து செய்யவும். கடல் கடந்து செல்ல வேண்டும்என்ற ஆசை இந்த ஆண்டு நிறைவேறும். மனைவியால் திடீர் அதிர்ஷ்டம், சொத்து சேர்க்கை உண்டு. கன்னிப் பெண்கள் இடம் பொருள் சூழ்நிலை அறிந்து நடந்து கொள்வது நல்லது. தடைபட்டு வந்த நேர்த்திக் கடன்கள் இந்த ஜூன் மாதத்துக்குள் இனிதே நிறைவேறும்.
:-
உத்யோகத்தில் சாதக, பாதகங்கள் இருக்கும். நேரம்காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரலாம். கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும். வியாபாரம் இரட்டிப்பாகும். கடன் பாக்கிகள் வசூலாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் விட்டுக் கொடுப்பது அவசியம். புதிய தொழில் தொடங்கும் யோகமும் உண்டு.
:-
பரிகாரம்:
முருகப் பெருமானின் படை வீடுகளில் ஏதாவது ஒன்றுக்கு சென்று வணங்கலாம். கும்பகோணம் அருகே வைத்தீஸ்வரன்கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம். சாலையோரம் வசிப்போருக்கு ஆடை, போர்வை தானம் செய்யலாம்.
:-

நன்றி தினகரன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை Empty Re: புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை

Post by கே. பாலா Sun Dec 30, 2012 9:27 am

அருமையிருக்கு அருமையிருக்கு நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை Empty Re: புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை

Post by krishnaamma Fri Jan 04, 2013 8:45 pm

நன்றி புன்னகை நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை Empty Re: புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை

Post by கரூர் கவியன்பன் Sat Jan 05, 2013 6:38 am

பகிர்தலுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை Empty Re: புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை

Post by Ahanya Sat Jan 05, 2013 10:27 am

நன்றி பவுன்ராஜ்..... நன்றி


புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை Empty Re: புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum