ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா...

+2
Guna Tamil
அச்சலா
6 posters

Go down

ஈகரை பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா...

Post by அச்சலா Sun Dec 30, 2012 12:39 am

பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா...

பெங்களூரு புறநகர் ரயில் நிலையம்

நிலையத்தின் படிக்கட்டை ஒட்டியு நிரம்பிவழிந்த நிலையில் ஒரு குப்பைத்தொட்டி அதன் அருகே, சாப்பிட்டு பல நாளானதன் காரணமாக ஒட்டிய வயிறுடன், உயிரை கண்களில் பிடித்து வைத்துக் கொண்டு, ஒரு தொழு நோய் பாதித்த இளைஞன், தன் பக்கத்தில் வீசியெறியப்பட்ட, அழுகிய வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட நினைத்து, சிரமப்பட்டு உடம்பால் நகர்ந்து கொண்டு இருந்தான்.
இந்த காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கான பயணிகள் "உச்' கொட்டி பரிதாபட்டதோடு சரி, யாரும் பக்கத்தில் போகவில்லை, முதல் காரணம் அவசரம், முக்கிய காரணம் இளைஞனின் உடம்பை உருக்குலைந்து கொண்டிருந்த தொழுநோய் ஏற்படுத்திய அருவருப்பு.

இந்த நேரம் ரயிலில் இருந்து இறங்கிய முதுமையான தோற்றம் கொண்ட கிறிஸ்துவ சகோதரி ஒருவர், இளைஞனை பார்த்த மாத்திரத்தில் தன் வயதையும் பொருட்படுத்தாமல் ஒடோடிப் போய் "மைசன்' என்று தூக்கி தனது மடியில் கிடத்திக் கொண்டார், பிறகு பையில் இருந்த உணவை ஊட்டிவிட்டு, குடிக்க தண்ணீர் கொடுத்து, தலையைக் கோதியபடி "யாராப்ப நீ' என்று விசாரித்தார்.
கர்நாடக மாநிலம் மதுரகிரி என்ற ஊரைச் சேர்ந்த ரமேஷ் பாபுவிற்கு தொழு நோய் என்று தெரிந்த உடனே பெற்றோரே வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். இந்த துரத்தல் எல்லா பக்கமும் தொடர்ந்தது. தொழுநோயும் வளர்ந்தது.

ஒரு கட்டத்தில் நடமாட முடியாத நிலையில், இந்த ரயில் நிலையத்தின் மூலையில் தஞ்சம் அடைந்துள்ளதாக தனது கதையை கூறிய ரமேஷ்பாபு, பெற்ற தாய் கூட தொடத் தயங்கி, துரத்தி விட்ட தன்னை தூக்கி மடியில் கிடத்தி, உணவு ஊட்டிய கருணை தெய்வத்தின் கைகளை பிடித்துக் கொண்டு கதறி அழுதார். அந்த சகோதரியின் விரல்கள் பிடித்து தொழுதார்.

"நான் வந்துட்டேன்ல, இனி அழக்கூடாது என்று கூறிய சகோதரி, உடனே போன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் ஒரு வாகனம் வர, இருவரும் அதில் பயணப்பட்டனர்.
சில ஆண்டுகள் கழிந்தது

இப்போது ரமேஷ் பாபு பெங்களூரு மாநகராட்சியில் சுறு, சுறுப்பாக பணியாற்றும் உதவியாளர். "ரமேஷ்...ரமேஷ்'' என்று அலுவலகமே கூப்பிடுகிறது. கொஞ்சுகிறது. ஒரு காலத்தில் எனக்கு தொழுநோய் இருந்தது என்பதை இப்போது என்னாலயே நம்பமுடியவில்லை. தொழு நோய் முற்றிலும் குணமாகி ம‌ைனைவி குழந்தைகள், சொந்த வீடு என்று சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார்.
இந்த அதிசயம் எப்படி நடந்தது .

பெங்களூரு பக்கத்தில் உள்ளது சுமன்ன ஹள்ளி; இங்கு அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஓரு தொழுநோய் இல்லம் ஒன்று, அங்குள்ள கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தால் 77ம் ஆண்டு துவங்கப்பட்டது. தொழு நோய் இல்லம் தயராகிவிட்டது, தொழு நோயாளிகளும் வந்துவிட்டனர், ஆனால் அவர்களை பரிவுடன் பார்த்துக்கொள்ள ஒரு அன்புமயமான சகோதரி தேவைப்பட்டார். மாநிலம் முழுவதும் உள்ள சகோதரிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடப்பட்டது.
அப்போது சிக்மகளூரில் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சிஸ்டர் மேரியின் கைக்கும் இந்த வேண்டுகோள் கடிதம் கிடைத்தது. அடுத்த நிமிடமே தான் பார்த்த அரசு வேலையை தூக்கி எறிந்துவிட்டு, இந்த தொழுநோய் இல்லத்தின் பொறுப்பாளராக சேர்ந்துகொண்டார், இல்லையில்லை அர்ப்பணித்துக் கொண்டார் .

அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட 36 வருடங்களாக இந்த தொழுநோய் இல்லத்தில், கருணையே உருவான தாயாக புன்னகையுடன் வலம் வருகிறார் மேரி.
இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளை சரியான மருந்து மாத்திரை கொடுத்து குணப்படுத்துவதும், குணமான அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதும், வேலைக்கு தகுதியில்லாதவர்களுக்கு சிறு கடைகள் அமைத்து கொடுப்பதுமாக, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருகிறார், பின்னர் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, குடும்பம் நடத்தவும் ஏற்பாடு செய்து விடுகிறார்.

இப்போது கிட்டத்தட்ட ஐநூறு பேர் பெங்களூரில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கின்றனர், அந்த 500 பேரில் ஒருவர்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் இடம் பெற்ற ரமேஷ் பாபு, 800 பேர்வரை முழுமையாக குணமாகி அரசு கொடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.அத்தனை பேர் வீட்டு பூஜை அறைகளிலும் தவறாமல் மேரியின் படம் இடம் பெற்றிருக்கிறது.
இப்போது 75 வயதாகும் மேரிக்கு பல மாநில மற்றும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. உண்மையில் இதன் மூலம் விருதுகள் கவுரவம் தேடிக்கொண்டன.,அவரை பொறுத்தவரை "அம்மா, நான் இப்ப நல்ல இருக்கேம்மா'' என்று கைபிடித்து பேசும் முன்னாள் தொழுநோயாளியின் ஆனந்த கண்ணீர்தான் பெரிய விருது.

பெங்களூரில், வாழும் அன்னை தெரசாவாக வலம் வரும் சகோதரி மேரியை வாழ்த்த வயதும், தகுதியும் இல்லாததால் வணங்குவோம்.

- எல்.முருகராஜ்
---தினமலர்


பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Paard105xzபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Paard105xzபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Paard105xzபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா...

Post by Guna Tamil Fri Jan 11, 2013 1:18 pm

தலை வணங்குகிறேன் அந்த தாய்க்கு 🐰 🐰 🐰
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

ஈகரை Re: பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா...

Post by Muthumohamed Fri Jan 11, 2013 4:05 pm

மனிதாபிமான இந்த தாய்க்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் சமர்பிக்கிறேன்



பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Mபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Uபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Tபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Hபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Uபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Mபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Oபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Hபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Aபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Mபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Eபெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை "பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா"

Post by Powenraj Thu Jan 24, 2013 8:44 pm

பெங்களூரு புறநகர் ரயில் நிலையம்
நிலையத்தின் படிக்கட்டை ஒட்டி நிரம்பிவழிந்த நிலையில் ஒரு குப்பைத்தொட்டி அதன் அருகே, சாப்பிட்டு பல நாளானதன் காரணமாக ஒட்டிய வயிறுடன், உயிரை கண்களில் பிடித்து வைத்துக் கொண்டு, ஒரு தொழு நோய் பாதித்த இளைஞன், தன் பக்கத்தில் வீசியெறியப்பட்ட , அழுகிய வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட நினைத்து, சிரமப்பட்டு உடம்பால் நகர்ந்து கொண்டு இருந்தான்.
-
இந்த காட்சியை பார்த்த ஆயிரக்கணக்கான பயணிகள்"உச்' கொட்டி பரிதாபட்டதோடுசரி, யாரும் பக்கத்தில் போகவில்லை, முதல் காரணம் அவசரம், முக்கிய காரணம் இளைஞனின் உடம்பை உருக்குலைந்து கொண்டிருந்த தொழுநோய் ஏற்படுத்திய அருவருப்பு.
-
இந்த நேரம் ரயிலில் இருந்து இறங்கிய முதுமையானதோற்றம் கொண்ட கிறிஸ்துவ சகோதரி ஒருவர், இளைஞனை பார்த்த மாத்திரத்தில் தன்வயதையும் பொருட்படுத்தாமல் ஒடோடிப் போய் "மைசன்' என்று தூக்கி தனது மடியில் கிடத்திக் கொண்டார், பிறகு பையில் இருந்த உணவை ஊட்டிவிட்டு, குடிக்க தண்ணீர் கொடுத்து, தலையைக் கோதியபடி "யாராப்ப நீ' என்று விசாரித்தார்.
-
கர்நாடக மாநிலம் மதுரகிரி என்ற ஊரைச் சேர்ந்த ரமேஷ் பாபுவிற்கு தொழு நோய் என்று தெரிந்த உடனே பெற்றோரே வீட்டைவிட்டு துரத்திவிட்டனர் . இந்த துரத்தல் எல்லா பக்கமும் தொடர்ந்தது. தொழுநோயும் வளர்ந்தது.
-
ஒரு கட்டத்தில் நடமாட முடியாத நிலையில், இந்த ரயில் நிலையத்தின் மூலையில் தஞ்சம் அடைந்துள்ளதாக தனது கதையை கூறிய ரமேஷ்பாபு, பெற்ற தாய் கூட தொடத் தயங்கி, துரத்தி விட்ட தன்னை தூக்கி மடியில் கிடத்தி, உணவு ஊட்டிய கருணை தெய்வத்தின் கைகளை பிடித்துக் கொண்டு கதறி அழுதார். அந்த சகோதரியின் விரல்கள் பிடித்து தொழுதார்.
-
"நான் வந்துட்டேன்ல, இனி அழக்கூடாது என்று கூறிய சகோதரி, உடனே போன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் ஒரு வாகனம் வர, இருவரும் அதில் பயணப்பட்டனர்.
சில ஆண்டுகள் கழிந்தது
இப்போது ரமேஷ் பாபு பெங்களூரு மாநகராட்சியில் சுறு, சுறுப்பாக பணியாற்றும் உதவியாளர்."ரமேஷ்...ரமேஷ்' ' என்று அலுவலகமே கூப்பிடுகிறது. கொஞ்சுகிறது. ஒரு காலத்தில் எனக்கு தொழுநோய்இருந்தது என்பதை இப்போது என்னாலயே நம்பமுடியவில்லை . தொழு நோய் முற்றிலும் குணமாகி ம‌னைவி குழந்தைகள், சொந்த வீடு என்று சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார்.
-
இந்த அதிசயம் எப்படி நடந்தது .
பெங்களூரு பக்கத்தில் உள்ளது சுமன்ன ஹள்ளி; இங்குஅரசின் வேண்டுகோளுக்கிண ங்க ஓரு தொழுநோய் இல்லம் ஒன்று, அங்குள்ள கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தால் 77ம் ஆண்டு துவங்கப்பட்டது. தொழுநோய் இல்லம் தயராகிவிட்டது, தொழு நோயாளிகளும் வந்துவிட்டனர், ஆனால் அவர்களை பரிவுடன் பார்த்துக்கொள்ள ஒரு அன்புமயமான சகோதரி தேவைப்பட்டார். மாநிலம் முழுவதும் உள்ள சகோதரிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடப்பட்டது.
-
அப்போது சிக்மகளூரில் அரசுபள்ளி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்ட யிருந்த சிஸ்டர் மேரியின் கைக்கும்இந்த வேண்டுகோள் கடிதம் கிடைத்தது. அடுத்த நிமிடமே தான் பார்த்த அரசு வேலையை தூக்கி எறிந்துவிட்டு, இந்த தொழுநோய் இல்லத்தின் பொறுப்பாளராக சேர்ந்துகொண்டார், இல்லையில்லை அர்ப்பணித்துக் கொண்டார் .
-
அன்று முதல் இன்று வரை கிட்டத்தட்ட 36 வருடங்களாகஇந்த தொழுநோய் இல்லத்தில், கருணையே உருவான தாயாக புன்னகையுடன் வலம் வருகிறார் மேரி.
இல்லத்தில் உள்ள தொழுநோயாளிகளை சரியான மருந்து மாத்திரை கொடுத்துகுணப்படுத்துவது ம், குணமானஅவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதும், வேலைக்கு தகுதியில்லாதவர் களுக்கு சிறு கடைகள் அமைத்து கொடுப்பதுமாக, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருகிறார், பின்னர் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து, குடும்பம் நடத்தவும் ஏற்பாடு செய்து விடுகிறார்.
-
இப்போது கிட்டத்தட்ட ஐநூறுபேர் பெங்களூரில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கின்றனர், அந்த 500 பேரில் ஒருவர்தான் கட்டுரையின் ஆரம்பத்தில் இடம் பெற்ற ரமேஷ் பாபு, 800பேர்வரை முழுமையாக குணமாகிஅரசு கொடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.அத் தனை பேர் வீட்டு பூஜை அறைகளிலும் தவறாமல் மேரியின் படம் இடம் பெற்றிருக்கிறது .
-
இப்போது 75 வயதாகும் மேரிக்கு பல மாநில மற்றும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. உண்மையில் இதன் மூலம் விருதுகள் கவுரவம் தேடிக்கொண்டன.,அ வரை பொறுத்தவரை "அம்மா, நான் இப்ப நல்ல இருக்கேம்மா'' என்று கைபிடித்து பேசும் முன்னாள் தொழுநோயாளியின் ஆனந்த கண்ணீர்தான் பெரிய விருது.
பெங்களூரில், வாழும் அன்னை தெரசாவாக வலம் வரும் சகோதரி மேரியை வாழ்த்த வயதும், தகுதியும் இல்லாததால் வணங்குவோம்.
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா...

Post by பூவன் Thu Jan 24, 2013 8:47 pm

இந்த பதிவு ஏற்கனவே உள்ளது http://www.eegarai.net/t93782-topic
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா...

Post by பூவன் Thu Jan 24, 2013 8:49 pm

இரண்டு பதிவும் இணைக்கபட்டது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா...

Post by முத்துராஜ் Thu Jan 24, 2013 9:11 pm

அந்த தாய்க்கு எனது பரி பூரண நன்றி .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா... Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை Re: பெங்களூருவில் ஒரு அன்னை தெரசா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum