ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!!

3 posters

Go down

பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Empty பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!!

Post by Powenraj Sat Dec 29, 2012 4:56 pm

ஒரு ஊரில் பெரிய வாள்சண்டை வீரன் இருந்தான். அவன் வீட்டில் ராட்சத சைஸ் எலி ஒன்று தொல்லை கொடுத்து வந்தது. எவ்வளவோ முயன்றும் அதைக் கொல்ல வீரனால் முடியவில்லை.
அவனுக்குப் பக்கத்து வீட்டில் இருந்தவன் பூனைகள் வளர்த்து வந்தான்.எலிகளை விரட்டிப் பிடிப்பதில் மகா திறமைசாலியான பூனைகள் அவை.இதற்கென்ற தனி பயிற்சி வேறு கொடுத்திருந்தான். அந்தப் பூனைகளில் ஒன்றை ஒரு நாளைக்கு மட்டும் தனக்கு கொடுத்து உதவும்படி கேட்டான் வீரன்.
வாள் சண்டை வீரனுக்கு தன் ‘எலி எக்ஸ்பர்ட் பூனை’ ஒன்றைக் கொடுத்தான் பூனைக்காரன். அந்தப் பூனைக்கு கூரிய நகங்கள். ரொம்ப நம்பிக்கையோடு அந்தப் பூனையைக் கொண்டுபோனான் வீரன்.
:-
வீட்டுக்குப் போய் அந்த எலிக்கு எதிராக பூனையை நிறுத்தி, துரத்திப் பிடிக்கும்படி உத்தரவிட்டான் வீரன்.
ஆனால் எலியைப் பார்த்ததும் பூனை பயந்து பின்வாங்கிவிட்டது. பூனையைத் திருப்பிக் கொடுத்து விஷயத்தைச் சொன்னான் வீரன்.
‘ஓ அப்படியா… இந்த முறை நான் வேறு பூனை தருகிறேன்’,என்று கூறி, ஒரு கறுப்பு வெள்ளைப் பூனையைத் தந்தான்.
:-
‘எலி பிடிப்பதில் பல வருஷ பயிற்சி பெற்ற பூனை இது. ரொம்ப திறமைசாலி’ என்று சான்றிதழ் வேறு தந்தான் பூனைக்காரன்.
இந்தப் பூனை, எலியைக் கண்டு பின்வாங்கவில்லை. கடுமையாக சண்டையெல்லாம் போட்டாலும், கடைசியில் தோற்றுவிட்டது. எலிக்குதான் வெற்றி.
இரண்டாவது பூனையையும் திருப்பிக் கொடுத்து விஷயத்தைச் சொன்னான் வீரன். இம்முறை மூன்றாவதாகநல்ல கொழுத்த ஜெட் பிளாக் பூனையைக் கொடுத்தான் பூனைக்காரன்.
:-
“இந்த முறை கண்டிப்பாக எலிபிடிபட்டுவிடும். காரணம் நம்ம ஜெட் பிளாக் பூனைக்குதியானமெல்லாம் தெரியும். எப்பேர்ப்பட்ட திறமையான எலியையும் மடக்கிப் பிடித்துவிடும்,” என்றான்.
ஆனால் அந்தப் பூனையும் எலியிடம் தோற்றுத் திரும்பியது. வீரனுக்கு எலியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையே போய்விட்டது.
:-
இம்முறை பூனைக்காரன் ரொம்ப நம்பிக்கையோடு வேறொரு பூனையைக் கொடுத்தான்.
“என்னிடம் உள்ள பூனைகளிலேயே மூத்தது இந்தப் பூனைதான்… அபார திறமை… இதுவரை தோல்வியே கண்டதில்லை. ஆனால் பார்க்கத்தான் அத்தனை நன்றாக இருக்காது,” என்று கூறி கொடுத்தான்.
வீரனும் அந்த பூனையை எடுத்துக் கொண்டு வழக்கம்போல வீட்டுக்குப் போய் எலியைக் கொல்ல அனுப்பினான்.
பூனையைப் பார்த்ததும், மீண்டும் ஆவேசமாக அதன் மீது பாயத் தயாரானது எலி. ஆனால் இந்தப் பக்கம் பூனை எந்த ஆர்வமும் காட்டாமல், அமைதியாக உட்கார்ந்து கொண்டது. இப்போது எலிக்கு லேசாக பயம் வந்துவிட்டது. சற்று தயக்கத்தோடு அந்த பூனையை பார்த்துக் கொண்டிருந்தபோதே… சட்டென்று பாய்ந்து ஒரே அடியில் எலியைக் கொன்றது பூனை!
வீரனுக்கு நிம்மதி. பூனையைஅதன் சொந்தக்காரனிடம் கொண்டுபோனான்.
:-
“இவ்வளவு வயசான கிழட்டுப் பூனை அந்த வலிமையான எலியை ஒரேயடியில் கொன்றுவிட்டது.ஆனால் இதற்கு முன் நீ கொடுத்த அத்தனை பூனைகளும் நன்கு வலிமையாகக் காணப்பட்டும், தோற்றுவிட்டது எப்படி?” என்று கேட்டான்.
:-
உடனே பூனைக்காரன், ‘என் பின்னால் வா’ என வீரனை அழைத்தான். “எலி பிடிக்கும் கலை தெரிந்த என் பூனைகளுக்கு இது நிச்சயம் மானப் பிரச்சினைதான். என்னுடன் வா… அவை நிச்சயம் இதுபற்றிவிவாதித்துக் கொண்டிருக்கக் கூடும்,” என்றான்.
உள்ளே…
எலியிடம் தோற்ற பூனைகள் வட்டமாக அமர்ந்திருந்தன. நடுவில் எலியிடம் முதலில் தோற்ற பூனை நின்றுகொண்டிருந்தத. அவற்றுடன் எலியைக் கொன்ற மூத்த பூனையும்.
:-
முதல் பூனை சொன்னது… “என் பலத்தை யாராலும் சந்தேகிக்க முடியாது..” என்று ஆரம்பித்தது.
“அப்படியானால் ஏன் அந்த எலியிடம் தோற்று ஓடி வந்தாய்? வெறும் பலம் மட்டும் போதாது தம்பி… உன்னைவிட பலசாலியான எலியும் இருக்கக் கூடுமல்லவா?” என்று திருப்பிக் கேட்டது மூத்த பூனை.
:-
அடுத்து கறுப்பு – வெள்ளைப் பூனை:
“சரி… அவனை விடுங்கள்… நான் பலசாலி மட்டுமல்ல.. எலிகளைப் பிடிப்பதில் பல ஆண்டுகள் அனுபவம் உண்டு எனக்கு. அத்தனை வித்தைகளும் தெரியும்.. என்னால் அந்த எலியை தோற்கடிக்க முடியாதது ஏன்?”
:-
மீண்டும் மூத்த பூனை பதில்சொன்னது:
“நிஜமான களத்துக்கு வரும்போது, வெறும் பயிற்சியும், பலமும், வித்தைகளும் மட்டும் போதாதே..!”
அடுத்து பேசிய கறுப்புப் பூனை, “நல்ல பயிற்சி, தியானம் மூலம் என் உடலை அனைத்துக்கும் ஏற்ப பக்குவமாக்கிக் கொண்டிருக்கிறேன். எக்கச்சக்கமான உத்திகள் எனக்குத் தெரியும்… என்னையும்தான் அந்த எலி தோற்கடிச்சிடுச்சே!” என்றது.
:-
கறுப்புப் பூனைக்கும் மூத்த பூனை பதில் சொன்னது: “கண்ணா.. நீ நல்ல வீரன்., மகா திறமைசாலி, மனதாலும் உடலாலும் பலசாலி. ஆனால் உனக்கு எலியைக் கொல்ல வேண்டும் என்ற விருப்பமே இல்லாமல் ஏதோ கடனுக்குப் போய் நின்றாய். உன் மனதிலிருந்த அலட்சியம், இலக்கற்ற நிலையை எலி தெரிந்து கொண்டுவிட்டது என்று அர்த்தம். உன் பலம், உத்தி, தியானம் அனைத்தையும் ஒருநிலைப்படுத்த முடியாமல் போனதால் தோற்றாய்…” என்றது.
அப்படின்னா நீங்க மட்டும் எப்படி ஜெயிச்சீங்க என்று மூன்று பூனைகளும் திரும்பக் கேட்டன.
:-
அதற்கு மூத்த பூனை ஒரு சின்ன கதை சொன்னது…
“ஒரு ஊரில் எனக்குத் தெரிந்து பூனை ஒன்று… பனி மாதிரி வெள்ளை வெளேர் முடி. வயசும் அதிகம். அத்தனை பலசாலியும் கூட இல்லை. இறைச்சி கூட உண்ணாத சைவம் அந்த பூனை. எப்போதாவது கொஞ்சம் ஒயின் சாப்பிடும். பல வருடங்களாகஎந்த எலியையும் பிடித்தது கூட இல்லை.
ஆனால்… எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாத இயல்புடைய அந்தப் பூனை வீட்டுக்குள் காலடி வைக்கும்போதே, அத்தனை எலிகளும் ஓட்டமெடுக்கும். அப்படி ஒரு பயத்தை உருவாக்கி வைத்திருந்தது பூனை. தூக்கத்தில் கூட எலிகளைத் துரத்திக் கொண்டே இருக்கும் அந்தப் பூனை.
:-
அந்தப் பூனையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவரை வெற்றிகொள்ள வன்முறை, உத்திகள், திறமை போன்றவை முக்கியம்தான்… ஆனால் இவை அவ்வளவாக இல்லாவிட்டாலும்கூட, மனதை ஒருமுகப்படுத்தி ஒரு விஷயத்தில் இறங்குவது வெற்றியை எளிதாகத் தேடித் தரும்!”
:-
- நன்றி என்வழி தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Empty Re: பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!!

Post by கரூர் கவியன்பன் Sat Dec 29, 2012 7:03 pm

நல்ல கருத்துள்ள சிந்தனைக் கதை .பகிர்வுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Empty Re: பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!!

Post by கேசவன் Sat Dec 29, 2012 8:53 pm

பல வருடங்களாகஎந்த எலியையும் பிடித்தது கூட இல்லை.
ஆனால்…பூனை வீட்டுக்குள் காலடி வைக்கும்போதே, அத்தனை எலிகளும் ஓட்டமெடுக்கும். அப்படி ஒரு பயத்தை உருவாக்கி வைத்திருந்தது பூனை.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! 1357389பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! 59010615பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Images3ijfபூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!! Empty Re: பூனைகள் சபையில்… – ஜென் கதைகள்..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum