ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி

+4
Ahanya
அச்சலா
பாலாஜி
tnkesaven
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பழமொழி Empty பழமொழி

Post by tnkesaven Fri Dec 28, 2012 4:57 pm


மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது?
மழை எப்போது பெய்யும், கருவுற்ற பெண் எப்போது பிரசவிப்பாள் என்று தெரியாது அதற்காக இப்பழமொழி.


அடைத்த கதவு திறக்காத மழை
கோடை காலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்
ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும்
கார்த்திகை மாதம் கனமழை பெய்யும்
ஒரு நாள் முழுவம் தொடந்தது பெய்யும் மழையை அடைமழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்கிறனர்.


அந்தி மழை அழுதாலும் விடாது!
கோடை காலத்தில் அந்தி நேரத்தில் மழை பிடித்தால் நாள் முழுவதும் மழை பெய்யும் அதற்கு கூறிய மொழி தான் அந்தி மழை அழுதாலம் விடாது.


தவளைகள் போடும் சத்தத்தை தவளை, உடைக்கட்டா... தவக்கட்டா... என்று மழை கூறுவதாகக் கற்பனை செய்து கூறுகின்றார்கள். அதாவது வயல் வரப்புகள் எல்லாம் உடைத்துவிடும் அளவோடு மழை பெய்யப் போகிறது என்று தவளை ஆளுடம் சொல்வதாகக் கூறுகிறார்கள்.
மழை முகம் பாராத பயிரும்; தாய் முகம் பாராத பிள்ளையும் ஒன்று என்று கூறுகிறது ஒரு பழமொழி.


கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்சானாம்.
அடுத்தவன் பொருளை எடுத்து மற்றவருக்கு தருவது தானம் ஆகாது. இந்த கருத்தை தான் இப்பழமொழி உனர்த்துகிறது.


அரச மரத்தை சுற்றி வருவதற்குள் அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாளாம்
குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் தினமும் அரச மரத்தைச்சுற்றி வந்தால் குழந்தைபேறு உண்டாகும் என்பது ஒரு நம்பிக்கை இந்த பழமொழி கூறுவது அவசரம் பற்றியே மரத்தை சுற்றிக் கொண்டே வரும்போது அடிவயிறு பெருத்துவிடுமா என்ன? கரு உருவாக வேண்டும் மாதங்கள் சில போக வேண்டும் அல்லவா.


இருட்டு வீட்டுக்குப் போனாளும் திருட்டு கை நிக்காது
மனிதன் தன் செயலைமாற்றிக் கொள்வது கடினம்.இயல்பாய் அமைந்து விட்ட சுபாவம் எளிதில் மாறாது மறையாது.


கிழிஞ்ச சேலையும் புழுங்கரிசி திண்ண வாயும் சும்மா இருக்காது
சேலை பழசாகி விட்டால் கிழிந்து கொன்டே இருக்கும் நின்றால்,உட்கார்ந்தால் கூட கிழியும். சிலர் புழுங்கல் அரிசியை சதா வாயில் அடக்கி மெல்லுவார்கள்.இந்த பழக்கத்தால் அவர்கள் வாய் சதா அசை போட்டுகொண்டே இருக்கும்.


சும்மா இருந்த வாய்க்கு கொஞ்சம் அவல் கிடைத்த மாதிரி
சாதாரணமாகவே (வாய் சதா அசை) பிறர் பற்றி பொல்லாங்கு பேசும் ஒருவனுக்கு அவனை பற்றி செய்தி கிடைத்துவிட்டால் கேட்கவா வேண்டும்?


பந்திக்கு முந்து படைக்கு பிந்து
சாப்பிடுவதற்று நம் கை (வலது கை) முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில் (போர் புரியும் நேரம்) இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வார்கள். எவ்வளவு தூரம் கை பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாக செல்லும் இதுவே பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என்கிறார்கள்.


ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
பழங்கால சித்த மற்றும் நாட்டு மருத்துவத்தில் மூலிகை, சில பூக்கள், காய், விதை போன்றவற்றை போல சில மூலிகை (மருத்துவ குணம் கொண்ட) வேர்களும் முக்கிய பங்கு வகித்தன. அதன் பொருட்டே ஒரு வைத்தியன் அவனிடம் ஆயிரம் மருத்துவ வேர்களை வைத்திருந்தாலும், தெரிந்து வைத்திருந்தாலும் அவன் அரை வைத்தியகாரன் தான் என்று சொன்னார்கள்.


யாணைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
வலிமை யானவனுக்கு ஒரு நேரம் வந்தால் எளிமையானவனுக்கும் ஒரு நேரம் வரும் என்பதே இதன் பொருள்.


கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு
கைபுண் அல்ல"கைப்பூண்"அணியக்கூடிய ஆபரணம்,அதாவது கழுத்தில் அணியும் ஆபரணத்தைப் பார்க்க கண்ணாடி அவசியம்.ஆனால் கையில் அணியும் பரணத்தைப் பார்க்க கண்ணாடி தேவையில்லை நம் பக்கத்திலிருக்கும் மனிதனைத் தெரிந்துகொள்ள அல்லது புரிந்துகொள்ள மூன்றாவது மனிதனைக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதே இதன் உட்கருத்து.


கப்பலே கவிந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கப்பல் கவிழ்ந்து நீ ஏழையாகி விட்டாலும் அதற்க்காக மனம் நொந்து கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட்டால் போன பணமும், செல்வமும் திரும்பவா வந்துவிடும்.இது ஒரு கருத்து.மற்றொறு கருத்து. கன்னம் என்பதுமுகத்தில் உள்ள கன்னம் அல்ல."கன்னக்கோல்" கப்பல் கடலில் முழ்கி பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டாலும் நீ மீண்டும் உழைத்து சம்பாதிக்க வேண்டுமே தவிர, கன்னக்கோல் வைத்து திருடி பிழைக்கக் கூடாது. "கன்னக்கோல்"-அந்தக் காலத்தில் திருடர்கள் கன்னக்கோலைப் பயன்படுத்தி சுவற்றில் ஒட்டை போட்டு திருடுவார்கள்.


ஆட தெரியாதவனுக்கு தெரு கோணலாம்
நமது இயலாமைக்கு அல்லது தோல்விக்கு எதாவது ஒரு காரணம் கூறி தப்பிப்பதையே இப்பழமொழி விளக்குகிறது.

tnkesaven
tnkesaven
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

பழமொழி Empty Re: பழமொழி

Post by பாலாஜி Fri Dec 28, 2012 5:05 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழமொழி Empty Re: பழமொழி

Post by அச்சலா Fri Dec 28, 2012 5:13 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


பழமொழி Paard105xzபழமொழி Paard105xzபழமொழி Paard105xzபழமொழி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பழமொழி Empty Re: பழமொழி

Post by Ahanya Fri Dec 28, 2012 5:47 pm

பதிவுக்கு நன்றி அண்ணா


பழமொழி Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பழமொழி Empty Re: பழமொழி

Post by Dr.S.Soundarapandian Fri Dec 28, 2012 10:48 pm

’பந்தி’ என்றால் குதிரைப்படை ; ’படை’ என்றால் காலாட்படை ; குதிரைப்படை எப்போதும் முன் வரிசையில் நிற்கும் ; காலாட்படை பின்னே நிற்கும்; பழந்தமிழர் போர்முறையின் ஒரு கூறுதான் இது. இதைத்தான் பழமொழி சொல்கிறது.
‘தமிழில் பழமொழி இலக்கியம்’ என்ற எனது நூலில் பதிற்றுக்கணக்கான பழமொழிகளுக்கு உண்மைப் பொருள் வரைந்துள்ளேன்.
எனினும், தங்கள் முயற்சி பாராட்டற்குரியது!

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பழமொழி Empty Re: பழமொழி

Post by tnkesaven Sat Dec 29, 2012 7:46 am

பந்தி என்பது இங்கே ஆகு பெயர். சாப்பிடப்
போகிறவர்களைக் குறிக்கிறது. சாப்பிடப் போகிறவர்களுக்கு முன்னால் இரு என்று
சொல்கிறார்கள். முன்னால் இருக்கிறவன் என்ன செய்வான்? பரிமாறுவான். அதாவது
படைப்பான். அதனால்தான் படைக்கப் பிந்து என்றார்கள். அதாவது
மற்றவர்களுக்குப் படைப்பதற்காக பிந்தி சாப்பிடு என்றார்கள்.

எல்லாருக்கும் படைத்து விட்டு இறுதியில் சாப்பிடு என்பதையே, பந்திக்கு முந்து, படைக்கப் பிந்து என்றார்கள்

ந்திக்கு
முந்து படைக்கு பிந்து பந்தி எண்பது வரிசை . படை எண்பது நால்வகைப்
படைகள்.ஒரு அரசனும் படையெடுத்து செல்லும் போது தேர்ப்படை, யானைப்படை
,குதிரைப்படை ,காலாட்படை நிற்கும் . போர் முரசு கேட்டவுடன் வீரர்கள் தத்தம்
இல்லங்களில் இருந்து ஓடிவந்து பந்தியில் நிற்பார்கள் . அதாவது வரிசையில்
நிற்க முந்து (பந்திக்கு முந்து ) ஆனால் படையில் காலாட்படை கடைசியாகத் தான் செல்ல வேண்டும் அது தான் போர் முறை ..அதானால் படைக்கு பிந்து'
tnkesaven
tnkesaven
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

பழமொழி Empty Re: பழமொழி

Post by tnkesaven Sat Dec 29, 2012 7:51 am

நண்பர் முனைவர் சுந்தர ராசனுக்கு வணக்கம்;
திரு ஐயன்பெருமாள் கோனார் வெளியிட்ட கை அகராதி -
பந்தி-வரிசை/ஒழுங்கு/குதிரை,யானை,இவற்றை கட்டும் இடம்;உண்பவர் வரிசை எனவே தெரிவிக்கிறது
tnkesaven
tnkesaven
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

பழமொழி Empty Re: பழமொழி

Post by Dr.S.Soundarapandian Sat Dec 29, 2012 9:05 pm

என் பெயர் சு.சௌந்தரபாண்டியன்; சுந்தரராசனல்ல.
தாங்கள் பார்த்த அகராதியில் குதிரை ,யானை எல்லாம் நிற்கின்றன அல்லவா? அவற்றைப் பிடித்து வரிசையாக ( பந்தியாக) நிறுத்துங்களேன்; உங்கள் குழப்பம் நீங்கிவிடும்!
தொடரட்டும் உங்கள் ஆய்வு!

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[quote]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பழமொழி Empty Re: பழமொழி

Post by krishnaamma Tue Feb 12, 2013 8:20 pm

பழமொழி மற்றும் அவற்றின் விளக்கமான பகிர்வுக்கு நன்றி நண்பரே ! புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழமொழி Empty Re: பழமொழி

Post by kavarul Thu Aug 01, 2013 2:17 am

பகிர்விற்க்கு நன்றி ,,,,
kavarul
kavarul
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013

Back to top Go down

பழமொழி Empty Re: பழமொழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum