ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

2 posters

Go down

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? Empty புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

Post by Powenraj Tue Dec 25, 2012 3:02 pm

நண்பர்கள் பலரும் அலைபேசியில் அழைக்கும் போது, என்ன மாதிரி கணினி வாங்கலாம் என்று ஒரு கேள்வி கேட்கின்றார்கள்.நன்றாக கணினியில் இயங்கும் நண்பர்கள் என்ற போதும், நிறைய நண்பர்களுக்கு கணினி Configuration எனப்படும் ஒன்று தெரிவது இல்லை. அவற்றைப் பற்றி இன்று விரிவாக காண்போம். இதில்ஒரு புதிய கணினி, மடிக்கணினி நீங்கள் வாங்கும் போது இவற்றை தான் கட்டாயம் பார்க்க வேண்டும்.
:-
Monitor என்ற ஒன்றை தவிர மேசை கணினிக்கும், மடிக் கணினிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே கூறும் அனைத்தும் இரண்டுக்கும் சேர்த்தே.
இவை அனைத்தும் இன்றைய நிலைக்கு( 2012) க்கு சிறந்தவை. நீங்கள் இதை படிக்கும் நேரத்தில் புதியதாக மார்க்கெட்டில் என்ன உள்ளது என்று பார்த்து வாங்கவும்.
:-
1. Processor:
இது தான் உங்கள் கணினியின் மூளை போன்றது. நீங்கள் செய்யும் அத்தனை விசயங்களையும் இயக்குவது இது தான். இது இல்லை என்றால் எதுவுமே இல்லை. புதியதாக கணினி வாங்கும் நண்பர்கள், இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
:-
தற்போதைய நிலையில் எது புதியதாக வந்து உள்ளது என்று பார்த்து வாங்குதல் நலம். இப்போதைக்கு (2012), நீங்கள் வாங்கும் கணினியில்Processor Intel Core 2 Duo என்பதை கடைசியாக கொள்ளலாம். Pentium (1,2,3,4) வரிசை என்றால் தவிர்க்க முயலவும். அவை கொஞ்சம் பழையவை. சமீபத்திய ஒன்று Core i 7.
:-
அத்தோடு இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், Processor Speed. இதைப் பொறுத்தே உங்கள் உங்கள் கணினியின் செயல்பாடு அமையும். இது குறைந்த பட்சம்2.2 GHz என்ற அளவில் இருக்க வேண்டும்(ஏன் என்று விளக்க தனி பதிவே எழுத வேண்டும், எனவே அதை தனியே சொல்கிறேன்.).
:-
2. RAM:
உங்கள் கணினியின் இருதயம் என்றால் அது இது தான். Processor சொல்லும் வேலைகளை என்ன வேகத்தில் முடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் இதுவே. எனவேஇது மிகச் சிறந்த அளவில் இருந்தால் மட்டுமே உங்களால்வேகமாக இயங்க முடியும். இல்லை என்றால் SETC Bus கள் போல மெதுவாக தான் உங்கள் கணினி இயங்கும்.
:-
தற்போதைய நிலையில் ( 2012) 4GB RAM என்பது சரியானஒன்று. 2GB என்பது மெதுவான கணினிக்கு என்று மாறிவிட்டது. ஆனாலும் ஏற்கனவே கணினி உள்ளவர்கள் 2GB-யை பயன்படுத்தலாம். அதற்கும் குறைவாக இருந்தால்மாற்ற முயற்சித்தல் நலம். Photoshop போன்ற பணிகளில் ஈடுபடுவோர் 8GB RAM உள்ள கணினி வாங்குதல் நலம்.
:-
அதே போல DDR என்ற ஒன்றை சொல்லி தருவார்கள் புதியதாகவாங்கும் நண்பர்கள் DDR 3 தெரிவு செய்யலாம். DDR 2 கூட நல்லதே.
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும், புதிய கணினி வாங்கும் போது Processor மற்றும் RAM போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும். Core 2 Duo என்றால்4GB RAM போதும், I-7 என்றால் 8GB RAM சரியாக இருக்கும். மிகக் குறைந்த அளவு என்றால் 2 GB-க்கு கீழே மட்டும் புதியவர்கள் செல்ல வேண்டாம்.
:-
3. Hard Disk or HDD:
உங்கள் தகவல்கள் அனைத்தையும் சேமித்து வைக்கும் இதன் பணி அளப்பரியது. புதியதாக கணினி வாங்கும் நண்பர்கள் குறைந்தபட்சம் 320GB HDD வாங்கவும்..தகவல்கள் அதிகம் சேகரிக்க குறைந்த பட்சம் இது தேவை. அதிக பட்சம் எவ்வளவு என்பதை தெரிவு செய்வது உங்கள் விருப்பம்.
:-
4. DVD R/W Drive:
DVD Drive உங்கள் கணினியில் வன்தட்டு எனப்படும் CD, DVD களை இயக்க உதவுகிறது. இதற்குConfiguration என்று ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் கேபிள் மட்டும் SATA எனப்படும் 4-Pin உள்ளதா என்று கேட்டுக் கொள்ளவும். இன்றும்23-pin உள்ளவற்றை தள்ளி விடும் ஆட்கள் உள்ளார்கள்.
:-
5 . Mouse/Kayboard:
உங்கள் வேலைகளை நீங்கள் இவை இரண்டையும் பயன்படுத்தியே செய்கிறீர்கள். மௌஸ் இப்போதுஎல்லா இடத்திலும் optical வகைதான் வருகிறது அதில் பிரச்சினை இல்லை. Keyboard உங்கள் விருப்பம்.
:-
6. Graphics Card:
இது Gaming, Graphic Design போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு பயன்படும். இதை 1GB தெரிவு செய்யலாம்.
:-
7. Monitor :
கணினி என்றால் 17 Inch என்பதைமிகக் குறைவாக கொள்ளலாம். மடிக்கணினி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யலாம்.
:-
8. Pen Drive :
பல ஆயிரம் போட்டு கணினி வாங்கும் பலரும், இதில் தவறுசெய்வார்கள். 2GB Pen Drive வாங்கிட்டு வந்துட்டு பத்தாமே போயிடுச்சே என்று யோசிப்பார்கள். எனவே பென் டிரைவ் வாங்கும் போது தற்போதைய நிலையில் 16GB வாங்கலாம். இதனை வாங்கும் போது நல்ல நிறுவனத்தின் பென் டிரைவ் ஆக வாங்கவும். :-
இவைதான் புதியதாக கணினி வாங்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை. நீங்கள் படிக்கும்போது ஏதேனும் சந்தேகம் என்றால் என்னை prabuk@live.in என்ற முகவரியில் தொடர்பு கொண்டு மின்னஞ்சல் செய்யலாம். [புதிய கணினி குறித்த கேள்விகளுக்கு மட்டும் இந்தமுகவரிக்கு தொடர்பு கொள்ளவும்]. உடனடியாக பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.
:-
- பிரபு கிருஷ்ணா
நன்றி பவளம் தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? Empty Re: புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

Post by அப்துல் Wed Dec 26, 2012 6:50 pm

உங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது.மிக்க நன்றி நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum