ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!!

+2
ச. சந்திரசேகரன்
Powenraj
6 posters

Go down

இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!! Empty இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!!

Post by Powenraj Tue Dec 25, 2012 12:29 pm

அந்தக் காலம் இப்படியும் இருந்திருக்கிறது என்பதினை படிக்க படிக்க உறக்கமின்றி தவித்தேன்…
“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்றவிடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் .., முன்பகுதியிலேயே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.
:-
ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார்மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துக்கிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்குகோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவுவெள்ளந்தி…
:-
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. ஒரு அரசாணயை வெளியிட்டிருந்தது அரசு..அந்த உத்தரவை படித்துக்காட்டச்சொன்னார்..வீட்டிலுள்ளவர்களை..அதனைக் கேட்டதும் அழுது புரண்டு கதறினார்.’அரசாங்க உத்தியோகத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக் கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்தக்கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு வந்தார்.
:-
முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
என்னவென்று கேட்கிறார்.’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். அவரும் ஏதாவது சமாதானம் சொல்லணுமே என்று’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்பரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்கவேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.
:-
மண்ணாங்கட்டி புக்செய்தநேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.
மறுமுனையி ல் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை….
:-
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள்.முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி.முதல்வர் உங்களைக் கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் என புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.
:-
முதரல்வரின் அறையில் உள்ள சோஃபாவில், கன்னத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா…வாண்னேன். வந்துபக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
:-
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்பு பண்ணீட்டன் தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே…ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே….உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க…எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக்கூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்குவருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!! Empty Re: இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!!

Post by Powenraj Tue Dec 25, 2012 12:35 pm

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோதுவெறும் கையோட போகாதீங்க.ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய்க் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார்அந்த அதிகாரிகளிடம்.
:-
மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.
ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும்.ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்…
:-
நன்றி பவளம் தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!! Empty Re: இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!!

Post by ச. சந்திரசேகரன் Tue Dec 25, 2012 4:00 pm

பாம்பின் கால் பாம்பறியும்
மண்ணாங்கட்டியின் வலி மன்னருக்கும் தெரியும்
காமராஜருக்கும் போவன்ராஜுக்கும் நன்றி


இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!! 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!! Empty Re: இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!!

Post by அகிலன் Tue Dec 25, 2012 4:29 pm

காமராஜர் மிகப்பெரும் தலைவர், அப்படியான தலைவர்களின் காலத்தில் வாழ எங்களுக்கு அதிஷ்ட்டம் இருக்கவில்லை.


நேர்மையே பலம்
இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!! Empty Re: இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!!

Post by rameshnaga Tue Dec 25, 2012 7:27 pm

கடவுள்...இந்தப் பூமியிலும்....வாழ்ந்திருக்கிறார்தானே.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!! Empty Re: இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!!

Post by balakarthik Tue Dec 25, 2012 7:32 pm

அது அக்காலம்


ஈகரை தமிழ் களஞ்சியம் இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!! Empty Re: இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!!

Post by கரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 9:50 pm

இக்கட்டுரை ஏற்கனவே இங்குள்ளது என நினைக்கிறேன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!! Empty Re: இது கட்டுக் கதையல்ல! கண்ணீரால் நிறைந்த நிஜம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum