புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வணக்கம் நண்பர்களே...
இன்று இந்த அனுபவத்தை பெரும் மனச்சுமையோடு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். படித்துப்பார்க்கவும் வேண்டுகிறேன்.
எனது வலைபக்கத்திலும் இந்த பதிவை எழுதியுள்ளேன். http://kakkaisirakinile.blogspot.in/2012/11/blog-post_4.html
ஹைதராபாத் பிரயாணி
தற்போது நான் ஹைதராபாத்தில் வசிப்பது வருகிறேன். ஹைதராபாத்தின் சிறப்பு அங்கு கிடைக்கும் பிரியாணி என்பதை யாவரும் அறிவோம். ஆனால் இப்போதைய நிலை அப்படியல்ல. வெளியூர் உணவங்களில் கிடைக்கும் ஹைதராபாத் பிரியாணியைவிட இங்கு கிடைக்கும் பிரியாணி தரம்/ருசி குறைந்தவைகளாகவே காணப்படுகின்றன. ஆனாலும் மற்ற பிரபலமான உணவகங்களை ஒப்பிடுகையில் கச்சிபோவ்லி(Gachibowli) என்னுமிடத்தில் இருக்கும் கிரீன் பாவர்ஜி(Green Bawarchi) என்னும் உணவகத்தில் பிரியாணி சற்று சிறப்பாகவே இருக்கும். நானும் எனது நண்பரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்கு தவறாமல் செல்வது வழக்கம். அப்படிதான் இன்று மதியம் ஒரு மணியளவில் அங்கு போனோம்.
அந்த உணவகம் இருக்குமிடம் மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த மும்பை நெடுஞ்சாலை. சாலையின் இரண்டு புறங்களிலும் பேருந்து நிற்கும் இடங்களும் உண்டு. நாங்கள் உணவகத்தை அடைவதற்கு 200 மீட்டருக்கு முன்பாக வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அந்த இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவில் பேருந்து நிற்குமிடம் இருப்பதால் நெரிசல் இன்று அதிகம் என்று நான் என் நண்பனிடம் சொல்லிக்கொண்டே பைக்கை ஒட்டிக்கொண்டு போனேன். ஆனால் சாலையின் வலது புறம் சற்று கவனித்த என் நண்பர், ஏதோ விபத்து நிகழ்ந்ததாக சொல்லவே நானும் அதை கவனித்தேன். ஒரு இளம் பெண்ணின் கால் மட்டும் அந்த நெரிசலின் சந்தில் என் கண்களுக்கு தென்பட்டது. உடனே வண்டியை இடது புறம் நிறுத்திவிட்டு ஓடிப்போய் பார்த்தோம்.
உதவியிருக்க வாய்ப்பில்லை
அங்கு போனதும் ஒரு ஆணும் அந்த இடத்தில் கிடப்பது தெரியவந்தது. இருவரும் ஒரே பைக்கில்(ஸ்கூட்டி) பயணம் செய்த 30 வயதிற்கும் குறைவானவர்கள். இளம் தம்பதிகலாகவே இருக்கவேண்டுமென நினைக்கிறன். இரத்தகாயங்கள், ரத்த ஓட்டம்என்று பெரிதாக எதுவும் தென்படவில்லை. பின்தலையில் பலத்த அடியாகவே இருக்கவேண்டும். அவர்கள் கிடப்பதைப் பார்த்ததும் மனம் படபடத்தது. பைக்கின் மேல் ஒரு காலுடன் அந்த ஆணும் அவனருகே அந்த பெண்ணும் நடு சாலையில் கிடந்தனர். பைக்கில் பின்புறம் ARMY என்று எழுதப்பட்டிருந்தது. எனக்கு தெரிந்தவரை அவர்களைச் சுற்றி இருந்த யாரும் பெரிதாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
காரணம், முதலுதவி அளித்திருந்தால் குறைந்த பட்சம் அவர்களில் முகத்தில் நீரை இறைக்க/தண்ணீர் கொடுக்க அவர்களைத் தூக்கி இருக்கவேண்டும். அவர்களின் முகங்களை திருப்பி இருக்க வேண்டும். சாலையின் ஓரத்திற்கு அவர்களை தூக்கிக் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் விழுந்த இடத்தை விட்டு சற்றும் நகர்த்தப்படவில்லை. முகம் தரையை நோக்கி இருக்க, நடு சாலையிலேயே கிடந்தனர். மனதில் கோடாரியை வைத்து வெட்டி அளவிற்கு காயமும் கோபமும் அந்த காட்சியைக் காண்கையில் ஏற்படுத்தியது. இந்த விபத்து நாங்கள் அந்த இடத்தை அடைந்த 15 நிமிடங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது.
அவர்களுக்கு உதவ எண்ணி நெருங்கும் பட்சத்தில், அவர்களை துணியால் மூடினர் சிலர். அந்த இருவரும் மரணித்துப் போனது அப்போதே எனக்கு தெரியவந்தது. மனம் மிகவும் சஞ்சலத்திற்கு உள்ளானது. முற்றிலும் அமைதியை இழந்தது. இதுவரை இப்படியாக ஒரு தலை சுற்றல் எனக்கு வந்ததில்லை. அதை நண்பனிடம் கூறவே, என்னைத் தாங்கிக் கொண்டு சாலையைக் கடக்க வைத்து தண்ணீர் கொடுத்து முகம் கழுவவைத்து குடிக்க வைத்தார். மனதில் ரணம் சற்றும் குறையவில்லை. நண்பரும் வருத்ததோடு தேற்றினார்.
திறந்த வண்டியில் உடல்கள்
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் எதோ காரணத்தால் அவர்களை ஏற்றாமல் அது திரும்பிப் போகவே, சில நிமிடங்களில் மற்றொரு வண்டியில் அவர்களை ஏற்றினார்கள். அது 407 போன்ற திறந்த டெம்போ வண்டி. மழை சற்று தூறிக்கொண்டிருக்கும் அந்த வேளையில், திறந்த நிலையில் இருக்கும் அந்த வண்டியில் அவர்களை ஏற்றிச் செல்வதைப் பார்க்கையில் இன்னும் கொடுமையாக இருந்தது.
அப்போது, ஒருதாயின் தோளில் இருந்த சிறுகுழந்தை எனைப் பார்த்து சிரித்தது. இது போன்ற சூழ்நிலைகளில், இந்த குழந்தையைப் போல் நடப்பது அறியாமல் இருந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே, அது சிந்திய புண் சிரிப்பை என் சிந்தனையில் சேகரித்துக் கொண்டேன். அது ஆறுதலாய் இருந்தது.
மக்களும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். சாலை பழைய நிலையை சிறிது நேரத்தில் எட்டியது. அந்த இருவர் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களின் கனவுகள் சில நிமிடங்களில் முற்றிலுமாக தகர்க்கப்பட்டது.
செய்தித்தாள்களில் இதுபோன்ற செய்திகள் படிக்கும்போது அது வெறும் செய்தியாகவே நம்மை அடைகிறது. அதையே நேரில் காணும்போது மிகப்பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்று புரிந்துகொண்டே நாங்களும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.
கலையிலும் உணவு உட்கொள்ளாததால், வயிறு சற்று வம்பு பிடிக்கவே, எப்போதும் போகும் ஹோட்டலுக்கு போக மனமில்லாமல் அருகிலிருந்த உணவகத்தில்,தக்காளி சத்தத்தோடு எங்கள் மதிய உணவை முடித்துக் கொண்டோம். தலை சுற்றல் அதிகமாக இருக்கவே, என் நண்பர் வண்டியை ஓட்டினார். சற்று நேரத்தில் வீட்டை வந்து சேர்ந்தோம்.
கவனிக்க வேண்டிய சிலவிடயங்கள்
1. அக்கம் பக்கத்தில் என் நண்பர் விசாரித்ததில் இந்த விபத்திற்கு காரணம், பின்புறமாக வந்து ஒரு truck அவர்களை மோதியதே.மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுவிட்டான். ஏனோ தெரியவில்லை மணல், தண்ணீர் லாரி ஒட்டுனார்களில் பெரும்பாலானோர் கண்மூடித்தனமாக வண்டி ஓட்டுகிறார்கள். அது பல இழப்புகளுக்கு தொடர்ந்து வழிகோலுகிறது. truck ஓட்டுனர்கள் தயவு செய்து சற்று பொறுமையைக் கடைபிடிக்கவும். இது போன்ற உயிரிழப்புகளுக்கு நீங்கள் காரணமாக வேண்டாம்.
2. வண்டியில் பயணம் செய்த இருவருக்கும் அடி தலையில் மட்டுமே. கைகால் முறிவோ, ரத்தமோ வீணாகவில்லை. வண்டி ஓட்டிவந்த நாபரோ அந்த பெண்ணோ ஹெல்மெட் அணியவில்லை. இந்த இழப்பிற்கு காரணம் அவர்கள் தலையில் பட்ட அடி என்பதால், அவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கும் பட்சத்தில், அவர்களின் உயிர் சிறு காயங்களுடன் காப்பாற்றப் பட்டிருக்கலாம். பயணிகள் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளுங்கள். மறக்காமல் ஹெல்மெட் அணியவும்.
3. நான் முன்பே கூறியது போல் அவர்களுக்கு முதலுதவி செய்ததற்கான எந்த முகாந்திரம் எனக்கு தென்படவில்லை. சொல்லப்போனால் அவர்களை யாரும் நெருங்கக்கூட இல்லை. குறைந்தது மூன்று அடி தள்ளியே நின்றனர். முதலுதவி செய்திருந்தால், ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். தயவு செய்து யார் அடிப்பட்டாலும் போலீஸ் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமே என்ற சிந்தனையை மனதிலிருந்து தூக்கி எரிந்துவிட்டு உதவ முன்வரவும். உதவி செய்யாது விலகிச் செல்லும் வேலையில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாது "எப்போது நமக்கு உதவி தேவைப்படும் என்று".
கனத்த மனதுடன் இந்த அனுபவத்தை முடித்துக் கொள்கிறேன். நன்றி..

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வருத்தம் தரும் நிகழ்வு - அதே சமயம் நீங்கள் எழுப்பிய வினாக்கள் அனைவரும் சிந்திக்கத் தூண்டும்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சென்னையிலும் இது சகஜமான நிகழ்வாகவே இருக்கிறது...
பெரும்பாலான ஆட்டோக்காரர்களும் நமக்கென்ன என்றே ஓடுகின்றனர்...
அப்புறம் ஆந்திரா மட்டும் எப்படி இருக்கும்?...
உங்கள் மெல்லிய மனதுக்கு வாழ்த்துகள்...
வருத்தமானப் பதிவு...உங்கள் ஆலோசனைகளும் அருமை...

நன்றிகள் இனியன் மற்றும் ரா ரா அண்ணா.. நாம் அந்த நிலையில் இருக்கும் பட்சத்தில் என்ன எதிர்பார்ப்போம் என்று உணர்ந்தாலே போதும் என்று நினைக்கிறேன்... தானாக நமது கைகள் உதவிக்கரம் நீட்டும்...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரா.ரா3275 wrote:சென்னையிலும் இது சகஜமான நிகழ்வாகவே இருக்கிறது...
பெரும்பாலான ஆட்டோக்காரர்களும் நமக்கென்ன என்றே ஓடுகின்றனர்...
அப்புறம் ஆந்திரா மட்டும் எப்படி இருக்கும்?...
உங்கள் மெல்லிய மனதுக்கு வாழ்த்துகள்...
வருத்தமானப் பதிவு...உங்கள் ஆலோசனைகளும் அருமை...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
வண்டியில் பயணம் செய்த இருவருக்கும் அடி தலையில் மட்டுமே. கைகால் முறிவோ, ரத்தமோ வீணாகவில்லை. வண்டி ஓட்டிவந்த நாபரோ அந்த பெண்ணோ ஹெல்மெட் அணியவில்லை. இந்த இழப்பிற்கு காரணம் அவர்கள் தலையில் பட்ட அடி என்பதால், அவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கும் பட்சத்தில், அவர்களின் உயிர் சிறு காயங்களுடன் காப்பாற்றப் பட்டிருக்கலாம். பயணிகள் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளுங்கள். மறக்காமல் ஹெல்மெட் அணியவும்.
---------------------------------------------------------------------------------
ஒரு சிறு சம்பவம்
நான் ஒருமுறை காலையில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தேன், இடம் கோயம்பேடு ரோகினி திரையரங்கம் முன்பு சிறிது தூரம், எனக்கு முன்பு ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து கிடந்தார், எல்லோரும் ஒதுங்கி சென்று கொண்டு இருந்தனர், நானும் சில நண்பர்களும் சேர்ந்து அவரை அருகில் துக்கி வைத்து முதலுதவி செய்து, பார்த்து செல்ல வேண்டியது தானே என்று சொல்லி கொண்டிருந்தோம், முன்னால் நின்ற காரில் இருந்து நடுத்தர வயது மனிதர் ஒருவர் வந்து அடி எதாவது பட்டுள்ளதா, மருத்துவமனைக்கு அலது செல்கிறேன் என்று கூறினர். பிறகு தான் தெரிந்தது, அடி பட்டவர்தான் காரில் கொண்டு போய் இடிதுள்ளர் என்று. அவரின் மனிதநேயம் கண்டு வியந்தேன் இன்றளவும் என் மனதில் அந்த நிகழ்ச்சி உள்ளது. ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகள் யாரும் இதை கண்டுகொள்ளவேயில்லை.
தயவு செய்து விபத்து நடந்தால் ஒதுங்கி செல்லாமல் உங்களால் முடித்த சிறு உதவியையாவது செய்து விட்டு போங்கள்

அன்புடன்
சின்னவன்
வருத்தமானப் பதிவு... உங்கள் ஆலோசனைகளும் நன்று
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அகல் மற்றும் சென்னையன் அவர்களின் பதிவுகளில் இருந்து தெரிவது என்னவென்றால்... சாலையில் கவனமாக இருக்கவேன்டும்... மேலும் மனிதநேயத்துடன் நடந்துக்கொள்ளவேன்டும் என்பதே.. அதுதானே இன்றைய மக்களுக்கு தேவைப்படுகிறது.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இந்த சம்பவம் நடந்து சுமார் நான்கு வருடம் ஆகி விட்டது எனது உறவினர் வயது 40 மத்திய அரசில் தொழில் நுட்ப வல்லுனராக சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். ஒரு நாள் நடு ஜாமம் இரண்டு மணிக்கு பாடி காட் முனி சுவாமி கோயில் அருகே உள்ள பாலத்தில் வரும் பொழுது ஒரு லாரி இடித்து இரண்டு மணியில் இருந்து நான்கு மணி வரை உயிருக்கு போராடிகொண்டிருந்தார் யாருமே உதவவில்லை ஆனால் அவ்வழியில் ப்ரஸில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர் இவரை பார்த்தவுடன் அந்த சாமத்திலும் ஒவ்வொரு வண்டியாக நிப்பாட்டி உதவி கேட்டு அம்புலன்சுக்கு போன் செய்து அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் அங்கு அவர் இறந்து விட்டார். எந்த உதவியையும் எதிர்பார்க்காத திருநெல்வேலி அருகில் உள்ள கிராமத்தை சார்ந்த அந்த இளைஞர் செய்த அந்த உதவி இனியும் கண்ணில் நிற்கிறது.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
மனம் கனத்துப் போனது அண்ணேதர்மா wrote:இந்த சம்பவம் நடந்து சுமார் நான்கு வருடம் ஆகி விட்டது எனது உறவினர் வயது 40 மத்திய அரசில் தொழில் நுட்ப வல்லுனராக சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். ஒரு நாள் நடு ஜாமம் இரண்டு மணிக்கு பாடி காட் முனி சுவாமி கோயில் அருகே உள்ள பாலத்தில் வரும் பொழுது ஒரு லாரி இடித்து இரண்டு மணியில் இருந்து நான்கு மணி வரை உயிருக்கு போராடிகொண்டிருந்தார் யாருமே உதவவில்லை ஆனால் அவ்வழியில் ப்ரஸில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர் இவரை பார்த்தவுடன் அந்த சாமத்திலும் ஒவ்வொரு வண்டியாக நிப்பாட்டி உதவி கேட்டு அம்புலன்சுக்கு போன் செய்து அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் அங்கு அவர் இறந்து விட்டார். எந்த உதவியையும் எதிர்பார்க்காத திருநெல்வேலி அருகில் உள்ள கிராமத்தை சார்ந்த அந்த இளைஞர் செய்த அந்த உதவி இனியும் கண்ணில் நிற்கிறது.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2