புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Poll_c10தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Poll_m10தேன் சுவைத் துளிப்பாக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்  நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி . Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

Page 1 of 2 1, 2  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 22, 2012 6:23 pm

தேன் சுவைத் துளிப்பாக்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார்

நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .

பல்வேறு இதழ்களில் பிரசுரமான ,இணையங்களில் பதிவான துளிப்பாகளின் தொகுப்பு நூல். நேரில் சந்திக்காத , இணையத்தின் வழி தினமும் சந்திக்கும் நண்பரின் நூல்.துளிப்பாகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது .பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு .

விவசாயி கஷ்டப்பட்டு விளைவித்த பூசணிக்காயை சமைத்து உண்ணாமல் மூட நம்பிக்கையின் காரணமாக வீதியில் போட்டு வீணடித்து விபத்திற்கு வழி வகுக்கும் செயலை சாடும் விதமாக உள்ள துளிப்பா .

பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல் சிதறி பலி
ஆயுத பூஜை .

மனித நேயம் கேள்வி பட்டு இருக்கிறோம் .மரநேயம் என்று புதுச் சொல் பயன் படுத்தி உள்ளார். பாராட்டுக்கள். மரநேயம் விதைத்து உள்ளார் .

மரங்களின் தாலாட்டு
மனிதனுக்கு தூய காற்று
என்னே மரநேயம் .

தமிழக மீனவர்கள் தினந்தோறும் செத்து பிழைக்கின்றனர் .அவர்களை காக்க ஒரு நாதி இல்லை. இந்த அவல நிலை என்று மாறுமோ ? என்ற வருத்தத்தில் வந்த துளிப்பா .

கண்ணீரில் வாழ்கிறான்
தண்ணீரில் பிழைக்கிறான்
தமிழக மீனவன் .

மீனவர்களின் சோகத்தை கண்டு கேட்டு படித்து பார்த்து உணர்ந்து துளிப்பா வடித்துள்ளார் .

கடலில் அழும் மீன் போல்
கரையில் அழுகிறாள்
மீனவன் மனைவி .

தமிழக மக்கள் மாறி மாறி வாக்களித்த போதும் இன்னல் மட்டும் இன்னும் தீர்ந்தபடில்லை .மின் தடை ஒழிய வில்லை .இன்று மின்சாரம் என்பது அடிப்படை தேவை .அதைக் கூட ஆள்வோர் நிறைவேற்ற வில்லையே என்ற வேதனையில் உள்ளனர் .அதனை உணர்த்தும் துளிப்பா .

ஆட்சி மாறுகிறது
காட்சி மாறவில்லை
தமிழ்நாட்டில் .

சொல் விளையாட்டு விளையாடும் ஒரு துளிப்பா .ஒரு புறம் அரசியல்வாதிகள் கோடிகள் கொள்ளையடித்து அயல் நாட்டு வங்கிகளில் வருங்கால வாரிசுகளுக்கு சேர்த்து வைக்கின்றனர். மறுபுறம் வசிக்க வீடு இன்றி தெருக்களில் வாழும் வறுமை .இந்த முரணை உணர்த்திடும் துளிப்பா .

கோடிகளில் வாழ்வதும்
கோடிகளில் வாழ்வதும்
இதியாவில் மட்டுந்தான் .

ஆள்வோர் திட்டங்கள் தீட்டிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் ஏழ்மை மட்டும் இன்னும் ஒழிந்தபாடில்லை .

வயிற்றில் வலி இல்லை
வயிற்றில் ஈரத்துணி
கண்ணீரில் ஏழை .

சில துளிப்பாக்கள் மேற்கோள் காட்டவே தயங்கும் அளவிற்கு சாட்டை அடி துளிப்பாக்கள் நூலில் உள்ளது .

துளிப்பாவின் மூலம் உழைப்பின் மேன்மையையும் உணர்த்துகின்றார் .

வாழ்க்கை முழுக்க
ஓட்டப்பந்தயம்
கடிகார முட்கள் .

விலை நிலங்கள் விரைவாக அழிந்து வருகின்றது .விவசாயிகள் தற்கொலை தினமும் நடகின்றது .இந்த அவல நிலை தொடர்ந்தால் உண்ண சோறு கிடைக்காத அவல நிலை விரைவில் வரும் என்பதை உணர்த்தும் துளிப்பா .

விலை நிலங்களில்
ஓங்கி வளர்ந்தன
மாடி வீடுகள் .

வியப்பில் ஆழ்த்தும் துளிப்பா ஒன்று .

மீசையுடன்
குழந்தை பிறந்தது
பூனைக்குட்டி .

மனசாட்சி உள்ள ஒரு நேர்மையான படைப்பாளியால் ஈழக் கொடுமை பற்றி எழுதாமல் இருக்க முடியாது .கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் ஈழம் பற்றி எழுதி உள்ளார் .

இன வெறியால்
இடம் பெயர்கின்றன
ஈழத்துப் பறவைகள் .

நிலா பற்றி பாடாத கவிஞர் இல்லை .நிலாவைப் பாடதவர் கவிஞரே இல்லை என்பதும் உண்மை .நிலாவை வித்தியாசமாக பார்த்து உள்ளார் .

ஆழம் அதிகம்
நீந்தத் தெரியாமல்
நிலா .

நம் நாட்டில் வளர்ச்சி என்ற பெயரில் நல்ல மரங்களை வெட்டி வீழ்த்தி வீழ்ச்சிக்கு வழி வகுத்து வருகின்றனர் .வெட்டிய அளவிற்கு புதிய மரங்கள் நடுவதே இல்லை .

சாலை விரிவாக்கம்
சங்கு ஊதினர்
மரங்களுக்கு .

எள்ளல் சுவையுடன் கவிஞர்களின் சோகத்தை உணர்த்துகின்றார் .இன்று பிரபல கவிஞர்கள் கவிதை நூல் மட்டுமே புத்தக் கடைக்காரர்கள் வாங்குகின்றனர் .வாங்கி வைத்துக் கொண்டு நூல் விற்ற பின்பு பணம் தாருங்கள் என்றாலும் , நூலை வாங்க மறுக்கின்றனர்.

வில்லுப்பாட்டு கலைஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களிடம் காந்தி மகான் கதை சொல்லும்போது , அவரை சுட்டக் காட்சி வரும்போது தின்ந்தோறும் உங்களால் எப்படி அழ முடிகின்றது .என்று கேட்டபோது .அவர் .சொன்னது ."வீட்டில் விற்காமல் இருக்கும் என் நூல்கள் பற்றி நினைப்பேன் உடன் அழுகை வந்து விடும் ".என்றாராம் .அதனை நினைவிற்கு கொண்டு வந்த துளிப்பா .

கவிதை நூல் வெளியீடு
மகிழ்ச்சியில் திளைத்தன
கரையான்கள் .

காதிலில் தோல்வி அடிந்தவர்களின்மான நிலையை படம் பிடித்துக் காட்டும் துளிப்பா .

காதல் தோல்வி
அறுத்தெறிய முடியவில்லை
அவளின் நினைவுகள் .

பறவைக்கு உள்ள சுதந்திரம் கூடமனிதனுக்கு இல்லை .கடலில் ,காற்றில் தெரியாமல் படகு எல்லை தாண்டினால் சுட்டு வீழ்த்தும் கொடிய சிங்கள இலங்கை ராணுவத்தைச் சாடிடும் துளிப்பா .சிந்திக்க வைத்தது .

கடலெல்லையைத் தாண்டியும்
பறக்கும் பறவைகள்
கொல்லப்படும் மீனவன்

உள்ளத்து உணர்வை ஒளிவு மறைவு இன்றி அப்படியே பதிவு செய்துள்ளார் .ஒரு சில துளிப்பாகளில் ஆங்கிலச் சொல் வருகின்றது .வருங்காலத்தில் ஆங்கிலச் சொல் தவிர்த்து எழுதுங்கள் .தொடர்ந்து எழுத்துகள் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

--

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 22, 2012 6:30 pm

மரநேயம் புதிய வார்த்தை.. ஆனால் அதுவும் தேவை தானே கவிஞரே!

அருமை

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 22, 2012 8:30 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 22, 2012 11:44 pm

பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல் சிதறி பலி
ஆயுத பூஜை

அருமையான வரிகள் .....

இதனால் பாதையில்
பல்லுடைந்து எத்தனை பேர் பலி .....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Dec 22, 2012 11:57 pm

பூவன் wrote:
பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல் சிதறி பலி
ஆயுத பூஜை

அருமையான வரிகள் .....

இதனால் பாதையில்
பல்லுடைந்து எத்தனை பேர் பலி .....
இதனால் இரண்டு கால்களும் உடைந்தவரும் உண்டு.. (என்னைத்தான்)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 22, 2012 11:59 pm

இதனால் இரண்டு கால்களும் உடைந்தவரும் உண்டு.. (என்னைத்தான்)
.

நம்பிக்கை என்ற பெயரில் நம் கை கால்களை அல்லவா உடைக்கிறார்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 23, 2012 12:03 am

பூவன் wrote:
இதனால் இரண்டு கால்களும் உடைந்தவரும் உண்டு.. (என்னைத்தான்)
.

நம்பிக்கை என்ற பெயரில் நம் கை கால்களை அல்லவா உடைக்கிறார்கள்
பையா என் கால்கள் இரண்டும் உடைந்தது.. கை நல்லவேளையாக தப்பித்தது... நம்பிக்.கை. அவர்களுக்கு நம்பி.போன எனக்கு ?? அதனால் இதில் ஒரு பாடம் இருக்கிறது. நமது நம்பிக்கை மற்றவர்களை பாதிக்கக்கூடாது. அப்படி பாதித்தால் அது குருட்டு நம்பிக்கை!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 12:05 am

பையா என் கால்கள் இரண்டும் உடைந்தது.. கை நல்லவேளையாக தப்பித்தது... நம்பிக்.கை. அவர்களுக்கு நம்பி.போன எனக்கு ?? அதனால் இதில் ஒரு பாடம் இருக்கிறது. நமது நம்பிக்கை மற்றவர்களை பாதிக்கக்கூடாது. அப்படி பாதித்தால் அது குருட்டு நம்பிக்கை!

நம்பிக்கை குருடாகவில்லை , நம்பி இருப்பவர்கள் குருடாகவே

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 23, 2012 12:08 am

பூவன் wrote:
பையா என் கால்கள் இரண்டும் உடைந்தது.. கை நல்லவேளையாக தப்பித்தது... நம்பிக்.கை. அவர்களுக்கு நம்பி.போன எனக்கு ?? அதனால் இதில் ஒரு பாடம் இருக்கிறது. நமது நம்பிக்கை மற்றவர்களை பாதிக்கக்கூடாது. அப்படி பாதித்தால் அது குருட்டு நம்பிக்கை!

நம்பிக்கை குருடாகவில்லை , நம்பி இருப்பவர்கள் குருடாகவே
பூசணி உடைத்து கொல்லையில் போடாமல் தார் சாலையில் ஏன் போடுகிறார்கள்?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 12:10 am

பூசணி உடைத்து கொல்லையில் போடாமல் தார் சாலையில் ஏன் போடுகிறார்கள்?

அப்போ தானே இவர்கள் திருஷ்டி கழியும் , ரோட்டில் போறவர் காலும் உடையும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் ....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக