ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

+7
அசுரன்
Ahanya
Muthumohamed
யினியவன்
பூவன்
பாலாஜி
அபிரூபன்
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Empty சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

Post by அபிரூபன் Sun Dec 23, 2012 12:06 pm

First topic message reminder :

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பி.சி.சி.ஐ.,க்கு கடிதம் எழுதியுள்ளார். இத்தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் பி.சி.சி.ஐ., உறுதி செய்துள்ளது.

உலகிலேயே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்று இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் சச்சின் பல சாதனைகளை புரிந்திருந்தாலும் சமீப காலமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என சலசலக்கப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில், சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பி.சி.ச.ஐ.,க்கு கடிதம் எழுதியிருக்கிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் சச்சின் தெண்டுல்கர் ஓய்வு அறிவித்துள்ளார்.

சாதனை நாயகன் சச்சின் :39 வயதான சச்சின் டெண்டுல்கர் 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதன் முதலில் விளையாடினார். கடைசியாக அவர் விளையாடிய போட்டி கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியாகும்.

இதுவரை 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 18,463 ரன்கள் குவித்துள்ளார். இவற்றில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடங்கும்.

ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலில் இரட்டைச் சதம் அடித்த பெருமை அவரையே சேரும். 62 முறை ஆட்டநாயகன் விருதும், 15 முறை தொடர் நாயகன் விருதும் பெற்றிருக்கிறார்.

(இந்த பதிவு புதியதலைமுறை இணையதளத்தில் இருந்து எடுக்க பட்டது)
நன்றி புதியதலைமுறை


சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down


சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Empty ஒரே ஆண்டில் 12 சதங்களை அடித்து பட்டையை கிளப்பிய டெண்டுல்கர்

Post by பாலாஜி Sun Dec 23, 2012 2:10 pm

மும்பை: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர், ஒரே ஆண்டில் 12 சதங்களை அடித்து பட்டையைக் கிளப்பியவர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 100 சதங்களை அடித்த முதலாவது உலக வீரர் என்ற பெருமைக்குரியவர் சச்சின். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட்(11) மற்றும் ஒருநாள்(9) போட்டிகளில் மொத்தம் 20 சதங்களை அடித்திருக்கிறார். இலங்கைக்கு எதிராக 17 சதங்களை அடித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 12, இங்கிலாந்துக்கு எதிராக 9, நியூசிலாந்துக்கு எதிராக 9, ஜிம்பாப்வேக்கு எதிராக 8, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 7, பாகிஸ்தானுக்கு எதிராக 7, வங்கதேசத்துக்கு எதிராக 5, கென்யாவுக்கு எதிராக 4, நம்பீயவுக்கு எதிராக ஒரு சதம் என மொத்தம் 100 சதமடித்தவர் சச்சின். இதில் குறிப்பாக 1988-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 3 சதமும் ஒருநாள் போட்டிகளில் 9 சதமும் அடித்து ஒரே ஆண்டில் 12 சதங்களை அடித்து வெளுத்தவர் டெண்டுல்கர். 1996, 99, 2010 ஆகிய ஆண்டுகளில் ஒரே ஆண்டில் 8 சதங்களை அடித்தவர் சச்சின்.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Empty Re: சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

Post by balakarthik Sun Dec 23, 2012 2:11 pm

ஒருநாள் அனைவருமே ஓய்வு பெற்றுத்தானே ஆகவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Empty ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளைக் வாரிக் குவித்ததிலும் சச்சின்தான் நம்பர் ஒன்!

Post by பாலாஜி Sun Dec 23, 2012 2:12 pm

மும்பை: உலக அளவில் ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவிலான ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றதிலும் சச்சின் உலக சாதனை படைத்தவர் ஆவார். சச்சின் என்றால் சாதனைகள்தான் நினைவுக்கு வரும். எதில் அவர் சாதனை படைக்கவில்லை என்ற கேள்வியும் கூட வரும். அந்த அளவுக்கு தொட்டதெல்லாம் சாதனையாகத்தான் இருக்கிறதுசச்சின் விவகாரத்தில். ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்றதிலும் உலக சாதனை படைத்துள்ளார். இத்தனை கால தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் மொத்தம் 16 முறை தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார். இது ஒரு உலக சாதனையாகும். இதில் 2003 உலகக் கோப்பைப் போட்டியும் அடக்கம். அப்போட்டியில் மொத்தம் 673 ரன்களைக் குவித்திருந்தார் சச்சின். அதில் ஒரு சதம்,6 அரை சதம் அடக்கம். இதேபோல 62 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று உலக சாதனை படைத்துள்ளார் சச்சின்தான். எந்த ஒரு வீரரும் இத்தனை முறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 8 முறை இறுதிப் போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். உலககக் கோப்பைப் போட்டிகளில் 9 முறை வென்றுள்ளார். இந்தியா தோற்ற 6 போட்டிகளிலும் சச்சினுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது.


-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Empty Re: சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

Post by Muthumohamed Sun Dec 23, 2012 2:12 pm

பாலாஜி wrote:
மும்பை: சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும் பட்டையை கிளப்பியுள்ளார். 1989ம் ஆண்டு முதல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார். சச்சின் பிட்சில் இருந்தால் பேட்டிங்கில் பிச்சு உதறுவார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் சச்சின் சர்வதேச ஒரு நாள் போட்டியில் பவுலிங்கிலும் தூள் கிளப்பியுள்ளார். கடந்த 1993ம் ஆண்டு ஹீரோ கோப்பை போட்டியின் அரை இறுதியில் முகமது அசாருத்தீன் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 195 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா சூப்பராக விளையாடியது. இறுதி ஓவரில் தென் ஆப்பிரிக்கா 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. அப்போது அசாருத்தீன் 20 வயதே ஆன சச்சின் மீது நம்பிக்கை வைத்து அவரை பந்து வீசுமாறு கூறினார். இளம் சச்சினும் நம்பிக்கையுடன் பந்து வீசி அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதையடுத்து இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் பந்து வீசியது தென் ஆப்பிரிக்காவின் சிறந்த வீரரான பிரையன் மாக்மிலனுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

-தட்ஸ்தமிழ்

சூப்பருங்க



சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Mசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Uசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Tசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Hசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Uசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Mசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Oசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Hசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Aசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Mசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Eசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Empty Re: சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

Post by Muthumohamed Sun Dec 23, 2012 2:13 pm

பாலாஜி wrote:
மும்பை: ஒருநாள் போட்டிகளில் 49 முறை சதமடித்திருக்கும் சச்சின் தமது 50-வது சதத்தை அடிக்காமலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். தமது 16-வயதில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடத் தொடங்கிய டெண்டுல்கர் 39-வது வயதில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் மட்டும் 18,426 ரன்களைக் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் எடுத்த ரன்களின் சராசரி என்பது 44.83 ஆகும். ஒருநாள் போட்டிகளில் சச்சின் மொத்தம் 49 முறை சதமடித்திருக்கிறார். இது உலக சாதனையாகும். அதேபோல் 96 முறை அரை சதம் அடித்திருக்கிறார். இருப்பினும் ஒருநாள் போட்டியில் சச்சின் 50வது சதமடிப்பதை தாம் எதிர்பார்ப்பதாக அவரது மனைவி அஞ்சலி அண்மையில் கூறியிருந்தார். ஆனால் அந்த 50-வது சதத்தை எட்டாமலேயே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றிருக்கிறார். ஒருநாள் போட்டியில் முதலாவது சதத்தை கொழும்பில் நடைபெற்ற ஆச்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அடித்தார். இதேபோல் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதலாவது உலக வீரர் என்ற பெருமையும் சச்சினுக்கு உண்டு. ஒருநாள் போட்டிகளில் சச்சின் 154 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். சச்சின் வீசிய பந்துகளின் எண்ணிக்கை 8,032! ஒருநாள் போட்டிகளில் சச்சின் பிடித்த கேட்சுகள் எண்ணிக்கை 140!.

-தட்ஸ்தமிழ்

சூப்பருங்க



சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Mசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Uசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Tசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Hசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Uசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Mசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Oசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Hசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Aசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Mசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Eசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Empty 'ஓப்பனிங்'கில் அசத்திய சச்சின், கங்குலி

Post by பாலாஜி Sun Dec 23, 2012 2:13 pm

மும்பை: ஒரு நாள் கிரிக்கெட்டில் எப்படி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு கார்டன் கிரீனிஜ்டும், டெஸ்மான்ட் ஹெய்ன்ஸும் ஒரு காலத்தில் ரன் மெஷின்களாக இருந்தார்களோ அதேபோல இந்திய அணிக்கு சச்சினும், கங்குலியும் ரன்களை வாரிக் குவித்த சாதனையாளர்களாக உள்ளனர். சச்சினும், கங்குலியும் இணைந்து தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணிக்கு அதிக அளவில் ரன் சேர்த்துக் கொடுத்த சாதனையை கையில் வைத்துள்ளனர். இருவரும் இணைந்து தொடக்க ஆட்டக்காரர்களாக மொத்தம் 128 போட்டிகளில் ஆடிய சாதனையாளர்கள் ஆவர். இருவரும் இணைந்து தொடக்க பார்ட்னர்ஷிப்பாக 6278 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர். சச்சினும், கங்குலியும் இணைந்து தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடியபோதெல்லாம் இந்திய நிறைய ரன்களைக் குவித்துள்ளது. பல வெற்றிகளையும் பெற்றுள்ளது. இருவரும் இணைந்து 100 ரன்களுக்கும் மேலான பார்ட்னர்ஷிப்பை 22 முறை கொடுத்துள்ளனர் என்பது போனஸ் சாதனையாகும்.

-தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Empty டாப் 'டென்'டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் கணங்கள்!

Post by பாலாஜி Sun Dec 23, 2012 2:44 pm

உலக கிரிக்கெட்டிற்கு பல்வேறு மட்டத்தில் பெரிய பங்களிப்பு செய்த மாஸ்டர் பேட்ஸ்மென் மற்றும் உலகின் தலை சிறந்த பேட்ஸெமெனாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டின் 10 முக்கியக் கணங்களை தொகுக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக் மாறுபடினும், இந்த 10 கணங்களை சச்சினே மறக்கமாட்டார் எனலாம்.

1. ஏப்ரல் 2, 2011 உலகக் கோப்பை 2011:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் எப்போதுமே சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்துபவர். 2011 உலகக் கோப்பையின் 9 போட்டிகளில் 482 ரன்களை எடுத்தார் சச்சின் 120 ரன்களை இங்கிலாந்துக்கு எதிராக அவர் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆனால் அந்தப்போட்டி டிராவானது. உலகக் கோப்பை 2011-இல் சச்சின் 2 அரைசதம், 2 சதம் எடுத்தார். 52பவுண்டரிகள் 8 சிக்சர்கள் மற்றும் 91.98 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்.

இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக சச்சினே வெற்றி ரன்களை அடிக்க நினைத்திருப்பார் ஆனால் 18 ரன்களில் அவர் வீழ்ந்தார். பிறகு கம்பீர், தோனி இந்திய அணீயை வெற்றிபெறச் செய்தனர். இதனை தன் கிரிக்கெட் வாழ்வின் சிகரமான கணம் என்று சச்சினே பின்பு அறிவித்தார்.

2. சச்சினின் 100வது சதம்!

இது சச்சினுக்கு ஒரு பெரிய தலைவலியாக விடிந்தது. ஆனால் அவர் அத்தனை நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு ஆசியக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக இந்த 100வது சதத்தை எடுத்து முடித்தார். தோல்வி சச்சினுக்கு பிடிக்காத ஒன்று ஆனால் இந்த போட்டியில் சச்சின் உலக சாதனை புரிந்தும் இந்தியா தோல்வி தழுவியது. சச்சினுக்கு தோல்வி பிடிக்காது என்பது அவர் கேப்டனாக இருந்த காலத்தில் அடைந்த அவரது எரிச்சல் நிறைந்த வாசகங்களே தெரிவிக்கும். ஆனால் சாதனை சதம் என்பது சாதனை சதம்தானே!

3. பிராட்மேனின் கனவு அணியில் சச்சின் இடம்பெற்றது!

ஆஸ்ட்ரேலிய லெஜென்ட் டான் பிராட்மேன் அனைத்து கால சிறந்த அணியை அறிவித்தார். பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களுக்கே இந்த அணியில் இடமில்லை. ஆனால் பிராட்மேன் சச்சினை தேர்வு செய்திருந்தார். 69 வீரர்களை டான் பிராட்மேன் அலசி 11 பேரைத் தேர்வு செய்தார். இன்டக் 69 பேரில் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோரும் இருந்தனர்.

4. 2003 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 98 ரன்களை மறக்க முடியுமா?


2003 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் கடினமான காலக்கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றேயாகவேண்டிய நெருக்கடியில் இருந்தது. பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 270 ரன்களுக்கு மேல் குவித்தது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர் ஆகியோர் இருக்கும்போது இந்தியா ஜெயிக்குமா என்று பலரும் பேசினர். ஆனால் நடந்தது என்ன? சச்சின், சேவாக் இருவரும் அடித்த அடியில் முதல் 11 ஓவர்களில் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. சச்சின் ஷோயப் அக்தரை அடித்த அந்த அப்பர் கட் சிக்சரை இன்னும் மறக்க முடியாது. 98 ரன்கள் எடுத்தார் சச்சின் இந்தியா வெற்றி பெற்றது. சச்சினின் மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று.

5. உலக சாதனை இரட்டைச் சதம்!


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் இந்த அபார இன்னிங்ஸை ஆடினார். ஒருவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நினைத்து கூட பார்க்கமுடியாது டேல் ஸ்டெய்ன், மோர்கெல் இருக்கும்போது எங்கிருந்து 50 ரன் வரும் என்றே கூற முடியாது. ஆனால் 147 பந்துகளில் 200 ரன்களை விளாசினார் சச்சின் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்தார். இந்தியா உலக சாதனை 401 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இதற்கு முன்னர் நியூசீலாந்தில் 167 ரன்களையும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் 175 ரன்களையும் எடுத்தபோதே சச்சின் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

6. 1999 உலகக் கோப்பையில் உணர்ச்சிகரமான சதம்!

டெண்டுல்கரின் தந்தை இறந்து போன சமயம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சச்சின் விளையாடவில்லை. பிறகு கென்யாவுடன் விளையாட நேரிட்டது. இதற்கு முன்னர் 21 ஒருநாள் சதம் எடுத்திருந்தார் சச்சின், இந்த சதம் தந்தை இறந்தபிறகு உடனடியாக எடுத்த சதம் என்பதால் அவரது வாழ்வின் உணர்ச்சிகரமான சதமாக இது அமைந்தது. டெணுல்கர் இதில் 140 ரன்களை எடுத்தார்.

7. 1998ஆம் ஆண்டு ஷார்ஜாவில் அடித்த மணல் புயலும் சச்சின் புயலும்

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக எடுத்த் 143: இறுதிக்கு செல்ல இந்திய இத்தனி ரன்களை எடுக்கவேண்டும் என்பது நிர்பந்தம். பெவன் சதம் எடுக்க ஆஸி. 284 ரன்களை எடுத்தது. இந்தியா 285 ரன்களை எடுத்தா பிரச்சனையில்லை. அல்லது தோற்றால் குறைந்தது 254 ரன்களை எடுத்திருக்கவேண்டும். ஆனால் திடீரென மைதானத்தில் மணற் சூறைக்காற்று வீச இந்தியா வெற்றி பெற 276 ரன்களும் தகுதி பெற 237 ரன்களும் தேவை. மீண்டும் களமிறங்கிய சச்சின் தகுதி பெறுவதைக் குறிக்கோளாக வைக்காமல் உண்மையான வெற்றிக்காக ஆடினார். காச்பரோவிச்சை அடித்த சிகர்களை மறக்க முடியுமா கடசியில் ஆடிய பேயாட்டத்தை மறக்க முடியுமா? 131 பந்துகளில் 143 ரன்களை விளாசினார் சச்சின். கடைசியில் நடுவரின் மோசமான தீர்ப்புக்கு அவுட் ஆனார். இல்லையெனில் உண்மையில் இந்தப்போட்டியில் இந்தியா வெற்றியே கூட பெற்றிருக்கும்.

8. அதே ஷார்ஜா, இறுதிப் போட்டி சதம்!

24 ஏப்ரல் 1998 சச்சினின் பிறந்த தினம். அன்றைய தினம் அடித்த சதம் மறக்க முடியாதது. ஆஸ்ட்ரேலியா முதலில் பேட் செய்து 121/5 என்று திணறி பிறகு ஸ்டீவ் வாஹ், டேரன் லீமேன் இன்னிங்ஸ்கள்லினால் 272 ரன்கள் எடுத்தது. இந்தியா துரத்தக் களமிறங்கியவுடன் சச்சின் போட்டுத் தக்கவாரம்பித்தார். காஸ்பரோவிச்சை இரண்டு சிகர்கள் விளாசி அடிதடியைத் தொடங்கிய சச்சின் ஷேன் வார்ன் இதன் பிறகுதான் சச்சின் தனக்கு பயங்கர சொப்பனங்களை கொடுக்கிறார் என்றார். சச்சின் 134 ரன்கள் எடுத்தார் அந்தப்போட்டியில் ஒரு அபாரமான ஒருநாள் இன்னிங்ஸ் இதுவாகும்.

9. 2008ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலிய மண்ணில் முதல் ஒருநாள் சதம்

சச்சின் டெண்டுல்கர் அவ்வளவு ஆட்டங்களை ஆடியிருந்தாலும் ஆஸ்ட்ரேலிய மண்ணில் அவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 93 ரன்களாகவே இருந்தது. தோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் நுழைந்தது. இந்தப் போட்டியில் சச்சின் 126 ரன்களை எடுத்து இறுதி வரை ஆடி தனி மனிதனாக ஆஸ்ட்ரேலியா பந்து வீச்சை அடித்து நொறுக்கி வெற்றிபெறச்செய்தார். ஆஸ்ட்ரேலியா 239 ரன்களை எடுத்தது. ரோகித் ஷர்மாவுடன் இணைந்து சச்சின் 123 ரன்களை சேர்க்க ரோகித் 66 ரன்களை எடுத்தார். சச்சின் தனது 42வது ஒருநாள் சதத்தை எடுத்தார். இந்தியா வெற்றி பெற்றது.

அதே சிபி தொடர் இரண்டாவது இறுதிப் போட்டி சச்சின் அபாரம்!

முதல் போட்டியில் தோல்வியடைந்த கடுப்பில் ஆஸ்ட்ரேலியா இரண்டாவது இறுதிப்போட்டிக்கு வந்தது. ஆட்டம் அவர்களுக்கு சாதகமான பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது சச்சின் மற்றொரு சதத்திற்கான அபார இன்னிங்சை ஆடினார். சிறந்த கவர் டிரைவ்கள், அப்பர் கட்கள், புல் ஷாட்கள் என்று தூள் கிளப்பினார். ஆனால் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இது சச்சினின் டாப் ஒருநாள் இன்னிங்ஸ் என்பதில் ஐயமில்லை. இந்தியா 258 ரன்கள் எடுக்க ஆஸ்ட்ரேலியா 249 ரன்களி முடிந்தது. முதன் முறையாக சிபி தொடர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா சாம்பியன் ஆனது.

10. சச்சின் முதன் முதலாக ஒருநாள் போட்டியில் துவக்கத்தில் களமிறங்கிய போட்டி!

27 மார்ச் 1994- சச்சின் ஆக்லாந்தில் நியூசீலாந்துக்கு எதிராக அவராகவே கேட்டு வாங்கி துவக்கத்தில் களமிறங்கினார். சச்சின் என்றால் யார் என்றும் அவர் மீது ஒரு பயமும் ஏற்படுத்திய இன்னிங்ஸ் ஆகும் இது; பந்து வீச்சுக்கு சாதகமான கரடு முரடு பிட்சில் நியூசீலாந்து அணி 142 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா களமிறங்கும்போது இந்தப் பிட்சில் இந்தியா கஷ்டம் திக்குமுக்காட வேண்டும் என்றெல்லாம் வர்ணனையாளர்கள் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சச்சின் துவக்கத்தில் களமிறங்குவார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதுதான் நடந்தது.

டேனி மாரிசன், பிரிங்கிள், அடாது மழை பெய்தாலும் விடாது டைட்டாக வீசும் கெவின் லார்சன் என்று நியூசீ தன்னம்பிக்கைய்டந்தான் இருந்தது. ஆனால் என்னாவாயிற்று? சச்சின் புயல் போல் ஒரு இன்னிங்சை ஆடினார். 49 பந்துகளில் 82 ரன்களை விளாசினார் அதில் 15 பவுண்டரி 2 சிக்சர்கள். 13 ஓவர்களில் ஸ்கோர் 100-ஐ கடைந்தது. இந்தியா 23 ஓவர்களில் 143 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அப்போது துவங்கிய துவக்க வீரர் பயணம் பல அதிரடி இன்னிங்ஸ்களை கண்டபிறகே ஓய்ந்தது.

அதேபோல் என்றைக்கும் மறக்க முடியாத சச்சினின் முதல் ஒருநாள் சதம்!

சுமார் 78 போட்டிகளில் சதம் எடுக்க முடியாமல் 80களில் ஆட்டமிழந்த சச்சின் துவக்க வீரராக களமிறங்கி சில போட்டிகளேயாகிருந்தன. அப்போது இலங்கையில் சிங்க டிராபி கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 9 செப்டெம்பர் 1994ஆம் ஆண்டு சச்சின் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக தன் முதல் ஒருநாள் சததை எடுத்தார். டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்ய சச்சின், பிரபாகர் களமிறங்கினர். கிளென் மெக்ராவை சச்சின் புரட்டி எடுத்தார். அவர் 6 ஓவர்களில் 41 ரன்களை கொடுக்க கட் செய்யப்பட்டார். மெக்டர்மட் பந்தை பிளிக்கில் சச்சின் சிக்ஸ் அடித்ததை மறக்க முடியாது. 8பவுன்டரி 2 சிகர்களுடன் அவர் 110 ரன்களை எடுத்த இன்னிங்ஸில் ஷேன் வார்னும் சாத்து வாங்கினார். இந்தியா 246 ரன்களை எடுக்க ஆஸ்ரேலியா 215 ரன்களுக்குச் சுருண்டு காலியானது.

-வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Empty Re: சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

Post by ரா.ரமேஷ்குமார் Mon Dec 24, 2012 10:05 am

பாகிஸ்தான் தொடரில் விளையாடி விட்டு ஓய்வு அறிவிப்பார் என எண்ணினேன்... சோகம்
சச்சின் பற்றி பல சுவாரஸ்சியமான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி பாலாஜி அண்ணா... நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Empty Re: சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

Post by பாலாஜி Mon Dec 24, 2012 11:29 am

ரா.ரமேஷ்குமார் wrote:பாகிஸ்தான் தொடரில் விளையாடி விட்டு ஓய்வு அறிவிப்பார் என எண்ணினேன்... சோகம்
சச்சின் பற்றி பல சுவாரஸ்சியமான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி பாலாஜி அண்ணா... நன்றி

நானும் அப்படிதான் நினைக்கின்றேன் .. பாகிஸ்தான் தொடரில்தான் அறிமுகம் ஆனார் , இத்தொடர்வுடன் ஒய்வு பெற்றால் சிறப்பாக இருந்துயிருக்கும் . 50வது சதம் எடுத்தமாதிரியும் இருக்கும் .

அது அவரின் சொந்த விருப்பம் , அவரின் முடிவுக்கு தலைவணங்க வேண்டியதுதான் .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Empty சச்சின்: அனைத்துமே சாதனைகள்; ஒருநாள் கிரிக்கெட் சாதனைகள்!

Post by பாலாஜி Mon Dec 24, 2012 5:48 pm

ஒருநாள் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த, இதுவரை இல்லாத இனிமேலும் அவரது சாதனைகளை முறியடிக்கக் கடினமாகும் ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கர் இவர் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை எனலாம். அந்த வகையில் அவரது ஒருநாள் கிரிக்கெட் சாதனைகளைப் பற்றிப் பார்ப்போம்:

463 ஒருநாள் போட்டிகளில் 44.83 என்ற மிகச்சிறந்த சராசரியுடன் 18,426 ரன்களை குவித்துள்ளார் ரன் மெஷின், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.

அதிக போட்டிகள் : 463

அதிக ஆட்ட நாயகன் விருதுகள் : 62

ஒருநாள் தொடர் நாயகன் விருதுகள் : 15

அதிக நாள் கிரிக்கெட்டில் இருந்தது : 22 ஆண்டுகள் 91 நாட்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களுக்கும் மேல், 154 விக்கெட்டுகள், 140 கேட்ச்கள் என்று அரிய டிரிபிள் சாதனை சச்சினுக்கேயிரியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் : 18,426 ரன்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்: 49

ஒரே அணிக்கு எதிராக அதிக சதங்கள் : ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள்!

இரண்டு அணிகளுக்கு எதிரகா அதிக ஒருநாள் சதங்கள்: ஆஸி.க்கு எதிராக 9, இலங்கைக்கு எதிராக 8;.

50க்கும் மேலான ரன்கள் அதிக முறை: 145; 49 சதங்கள், 96 அரை சதங்கள்.

ஒரே ஆண்டில் அதிக ஒருநாள் போட்டி ரன்கள்: 1894 ரன்கள் (சராசரி 65.31), 34 போட்டிகள் இது நடந்தது 1998ஆம் ஆண்டு.

ஒரே ஆண்டில் 1000 ரன்கள் : சாதனையான 7 முறை.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக 90-கள் - 18 முறை; இது சதமாகியிருந்தால் இன்று சச்சின் சாதனைப் பட்டியல் மேலும் உக்கிரமாகக் காட்சியளிக்கும்.

அதிக பவுண்டரிகள் - 2016 பவுண்டரிகள்

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள்: 3077 ரன்கள், 71 போட்டிகள், சராசரி 44.59.

இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ரன்கள் : 3113, (43.84 சராசரி) - 57 போட்டிகள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள்: 5

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் : 2,556.

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள்- 5 (லாராவுடன் பகிருந்து கொள்ளும் ஒரே சாதனை)

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி 200 ரன்களை குவித்து சாதனை படைத்தார் சச்சின்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள்: 2,278 சராசரி 56.95, 45 போட்டிகள்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதம் - 6 (44 இன்னிங்ஸ்)

ஒரே உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்கள்: 673 ரன்கள் 2003 உலகக் கோப்பை, சராசரி 61.18 - 11 ஆட்டங்கள்.

இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 500 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்த ஒரே பேட்ஸ்மென் 2003-இல் 673 ரன்கள் 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 523 சராசரி 87.16.

-வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு - Page 2 Empty Re: சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum