புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் மனதில் குடியிருக்கும் குமுறல்கள்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 18, 2012 1:31 pm

சரியான நேரத்துக்குச் சத்தான சாப்பாடு... உடுத்திக்கொள்ள அழகான ஆடைகள்... இதையெல்லாம் கொடுத்து ஒரு நல்ல பள்ளியில் படிக்க வைத்துவிட்டால் போதும்... குழந்தைகளை நாம் நல்லபடியாக வளர்க்கிறோம் என்கிற நம்பிக்கை நம்மை ஆட்கொண்டுவிடுகிறது.
ஆனால்... 'அந்த பிஞ்சு மனதில் உணவு, உடை, விளையாட்டுப் பொருட்களைத் தாண்டி... என்னென்ன ஆசைகள் பொதிந்து கிடக்கின்றன?
:-
அம்மா, அப்பாவிடம் குழந்தைகள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள்?.
ஸ்கூலில் டீச்சர் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்?.
அம்மா,அப்பா, டீச்சர் பற்றியெல்லாம் அவர்களுடைய மனதில் படிந்திருக்கும் அபிப்பிராயங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்னென்ன?’
இப்படிப்பட்ட கேள்விகளை எப்போதாவது அவர்களிடம் எழுப்பியிருக்கிறோமா என்றுகேட்டால்...பெரும்பாலான பெற்றோரின் பதில்...' இல்லை' என்பதாகத்தான் இருக்கிறது இங்கு!
ஆனால், இனியும்கூட இத்தகைய கேள்விகளை எழுப்பி நாம் விடை காணாவிட்டால், நாளைய தலைமுறையைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள் அனைத்துமே தூள் தூளாகிவிடும் என்று எச்சரிக்கிறது... பிஞ்சுக் குழந்தைகளிடம் 'அவள் விகடன்'நடத்திய ஸ்பெஷல் சர்வே!
:-
சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்கள்; பழனி, கரூர், திருவண்ணாமலை, கோவில்பட்டி,உசிலம்பட்டி போன்ற நகரங்கள்; மண்மாரி, கீழ்நாச்சிப்பட்டு, வில்லிசேரி, தொட்டப்பநாயக்கனூர், சாமிநாதபுரம் போன்ற சிற்றூர்கள்... இங்கெல்லாம் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் 2,673 மாணவர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது.
:-
ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாரான 11 கேள்விகள் அடங்கிய தாளைக் கொடுத்து, அவற்றைப் படித்துச் சொல்லி 'அப்ஜெக்டிவ்' டைப்பில் அதை பூர்த்தி செய்ய வைத்தோம். சர்வே பேப்பரை மட்டுமே பூர்த்தி செய்து கொண்டுவராமல், குழந்தைகளிடம் நெஞ்சுக்கு நெருக்கமாக பேசிப்பேசி... பற்பல தகவல்களையும் பெற்று வந்துள்ளனர் இப்பணியை முன்னின்று செய்த... விகடன் மாணவ பத்திரிகையாளர்கள். குழந்தைகளின் மனதை முழுமையாகப் புரிந்துகொள்ள, தாய்மை நிரம்பிய அக்கறையுடன் அந்த முடிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுஉள்ளன.
:-
எல்லாக் குழந்தைகளும்... அம்மா மீது அதீதப் பாசத்துடனும் அன்புடனும் இருப்பதால், ''அம்மாவை மிகவும் பிடித்திருக்கிறது'' என்று சொல்லியுள்ளன. ஆனால், அம்மாவின் வகைவகையான சமையலும், வாங்கிக் கொடுக்கும் பொம்மைகளும்... அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். மாநகரம், நகரம், சிற்றூர் எனஎந்தக் குழந்தைகளும் இதில் வேறுபடவில்லை.
:-
குழந்தைகள் அப்பாவிடம் அதிக அன்பை எதிர்பார்க்கின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது. 'அப்பாஅவ்வப்போது பார்க், பீச், சினிமா, கோயில் என்று எங்காவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்' என்பதை பெரும்பாலும் வலியுறுத்தியிருக்கின்றன குழந்தைகள்.
:-
'அப்பாவிடம் பிடிக்காத விஷயம்..?' என்ற கேள்விக்கு 'அம்மாவிடம் சண்டை போடுவது','அம்மாவைத் திட்டுவது', 'சிகரெட், குடி என்று அப்பாவிடம் இருக்கும் தவறான பழக்க வழக்கங்கள்' என்று பெரும்பாலான குழந்தைகள் பட்டியலிட்டிருக்கின்றன.
:-
இந்த சர்வே முடிவுகளையெல்லாம் எடுத்துவைத்து, ''குழந்தைகளின் இந்தஎதிர்பார்ப்புகள் எல்லாம் எதனை உணர்த்துகின்றன?'' என்று மனநல ஆலோசகர் டாக்டர்ராஜ்மோகன் மற்றும் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி ஆகியோரிடம் கேள்விகளை எழுப்பியபோது... அவர்கள் தந்த பதில்கள்...
:-
''வேலைப்பளு, அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கிற சமூக நிர்ப்பந்தம் காரணமாக அப்பாக்கள் வேலை மற்றும் தொழில் சார்ந்து வீட்டுக்கு வெளியிலேயே அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். அதனால்தான் இன்றைய தலைமுறைக் குழந்தைகள், 'வெளியே போகும்போதாவது அதிகநேரம் அப்பா நம்முடன் இருப்பார்' என்கிற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றன.
அதிக நேரத்தை குழந்தையுடன் செலவிட முடியாத அப்பா, அதை ஈடு செய்கிறேன் பேர்வழி என்று நிறைய பொம்மைகள் வாங்கிக் கொடுத்துவிடுகிறார். 'குவாலிட்டி' நேரத்தை செலவிடமுடியாவிட்டால், அதனை பொருளாகக் கொடுத்து குழந்தையையும் பொருள்சார்ந்த வாழ்க்கைக்குள் இழுக்கிறார் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.
:-
குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவதுதான் இதற்கு ஒரே தீர்வு. எவ்வளவு நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதைவிட, எப்படி செலவிடுகிறீர்கள் என்பதும்முக்கியம். வீட்டில் காலையில் ஒரு மணிநேரம் இருக்கிறீர்கள் என்றால்... அதில் குழந்தைக்கு என்று சிலநிமிடங்களை செலவிடுங்கள் என்கிற படிப்பினையைத்தான் சொல்கிறது, உங்கள் சர்வே முடிவுகள்'' என்று அக்கறையுடன் சொன்னார் ராஜ்மோகன்.
:-
''இன்று பெரும்பான்மையான மத்தியதரக் குடும்பங்களில்வீட்டு லோன், டூ-வீலர் லோன்,கார் லோன் என்று பலதரப்பட்டலோன்களை வாங்கி வைத்துள்ளனர். அதையெல்லாம் அடைப்பதற்காக, எப்போதும் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறார் அப்பா. இத்தகைய பொருளாதாரம் சார்ந்த சுமைகள் அதிகமிருப்பதால்... குடும்ப உறவுகளுக்குள் சிக்கல் இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. மாறிவரும் கலாசார பொருளாதாரச் சூழலையும் நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்வது போல் இருக்கிறது இந்த சர்வே முடிவுகள்'' என்றார் ஜெயந்தினி.
:-
''முதல் காரணம், பொருளாதாரம்என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கார், வீடு என்று அதிகம் சம்பாதிக்க ஓடும்போது... குழந்தை, மனைவி என நேரம் செலவிட முடியாத சூழல் ஏற்படுகிறது. அது சண்டையாக வெடிக்கிறது. தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது அவசியம்'' என்று கூடுதல் விளக்கம் தந்தார் ராஜ்மோகன்.
:-
'அம்மாவிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம்?' என்ற கேள்விக்கு 'வெளியில் விளையாட அனுமதிக்காததுதான்'என்று சிற்றூர் குழந்தைகளும்... 'டி.வி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றை அனுமதிப்பது இல்லை' என்று நகர்ப்புறக் குழந்தைகளும் கூறியுள்ளன.
:-

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 18, 2012 1:37 pm

''விளையாட்டு என்பது, பெற்றோரைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க அலட்சியமான விஷயம் ஆகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. நகர்ப்புறக் குழந்தைகள் டி.வி, வீடியோ கேம்ஸ்க்கு முக்கியத்துவம்கொடுக்கின்றன. வெளியே சென்று விளையாடுவதற்கு இடம் இல்லாததாலும், பெரும்பாலும் ஒற்றைக் குழந்தைகளே இருப்பதாலும் நகர்புறத்தில் வாழும் குழந்தைகள் மனதளவில் இப்படி தயாராகிவிடுகின்றன. ஆனால், சிற்றூர்களில் வாழும் குழந்தைக்கு வாய்ப்பு இருந்தும்... படிப்பு, பாதுகாப்பு போன்ற காரணங்களால் விளையாட அனுமதி கிடைப்பதில்லை. விளையாடும் குழந்தைக்குத்தான் உடல், மனம் வலிமையாக இருக்கும்; விளையாட்டு புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் ஜெயந்தினி.
:-
டீச்சர்கள் நட்புடன் இருப்பதையும், தாங்கள் விரும்பும் வகையில் பாடம் நடத்துவதையுமே 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் விரும்புகின்றன. தண்டனை தருவது, போர் அடிப்பது போல் பாடம் நடத்துவது ஆகியவற்றை பிடிக்காத விஷயங்களாகவும் குழந்தைகள் வரிசைப்படுத்தியுள்ளன.
;-
''நட்புடன் சிரிக்கும் டீச்சரைத்தான் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்திருக்கிறது. அத்தகையஆசிரியர் நடத்தும் பாடத்தைத்தான் விரும்பிப் படிக்கின்றன குழந்தைகள். இதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஆசிரியருக்கு கிடைக்கும் தகவல்கள், இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக முன்கூட்டியே மாணவனுக்கும் கிடைத்துவிடுகிறது என்பதையும் ஆசிரியர்கள் உணர வேண்டும்.
ஒரு விதை எப்படி வளர்கிறது என்பதை கையில் விதையைக் கொடுத்து, மண்ணில் போட்டு வளர், செம்மண்ணில் வைத்து வெயிலில் படும்படி வை என்றெல்லாம் பிராக்டிகலாக சொல்லிக் கொடுப்பதற்கும், 'விதை வளர்வதற்கு சூரிய ஒளி,தண்ணீர், மண் வேண்டும்' என்று வாசித்து மனப்பாடம் செய்ய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதையும் ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் ஜெயந்தினி.
:-
குழந்தைகளின் மனங்களைக் குடைந்து, உள்ளே குடிகொண்டிருக்கும் குமுறல்களை இங்கே கொட்டிவிட்டோம். தீர்வு காணவேண்டியது... பெற்றோரும்... ஆசிரியர்களும்தான்!
:-
தொகுப்பு: நாச்சியாள்
:-
source: அவள் விகடன்.
:-
நன்றி Nidur.info தளம்

ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Postஆச்சார்யரஜ்னீஷ் Tue Dec 18, 2012 1:47 pm

நன்றி நண்பரே ... உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை .சிறக்க வாழ்த்துகள் .

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Dec 18, 2012 2:08 pm

நல்ல பதிவு நண்பரே ,



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 18, 2012 7:01 pm

இப்படி கேள்வி அடங்கிய தாளின் மூலமாகத்தான் குழந்தைகளின் மனநிலையை அறியமுடியும் என்ற நிலை மோசமானது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக