புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
1 Post - 25%
viyasan
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_lcapஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_voting_barஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Dec 16, 2012 9:23 pm

இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! 15cbmpconductor_924956f

இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’!

ஒரு பேருந்தின் நடத்துநர் எப்படி இருப்பார்? அவருக்கு தெரிந்த வார்த்தைகள் என்னவாக இருக்கும்?

கொஞ்சம் சிடு சிடு முகத்துடன், ‘சார்.. டிக்கெட்… டிக்கெட்… சில்லறையா கொடுங்க.. படிக்கட்டுல நிக்காதீங்க… உள்ள வாங்க… காலங்காத்தால 100 ரூபா நோட்டக் கொடுத்து இம்சை பண்ணா எப்படிங்க?’

ஆனால் கனகு சுப்பிரமணியைப் பார்த்தால், உங்கள் நினைப்பு அடியோடு மாறிப் போகும். பாட்ஷா பார்த்த பிறகு ஆட்டோக்காரர்களை பரிவுடன் பார்க்கத் தொடங்கியது போல, கனகுவைப் பார்த்த பிறகு கண்டக்டர்கள் என்றதும் ஒரு மரியாதை வந்துவிடும்.

அப்படி என்னதான் பெரிதாக செய்துவிட்டார் கனகு?

பெரிதாக அல்ல… தன்னால் முடிந்த ஒரு நல்ல விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.

எல் கனகு சுப்பிரமணியம் ஒரு அரசுப் பணியாளர். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநர் பணி.

கனகுவின் காலை திருக்குறளுடன் விடிகிறது. ஒரு குறளையும், அதற்கான விளக்கத்தையும் நன்கு படித்து வைத்துக் கொள்கிறார். ஓரிரு திருக்குறள் புத்தகங்களையும் உடன் எடுத்துக் கொண்டு மேட்டுப்பாளையும் பேருந்து நிலையத்துக்கு வருகிறார். காலையில் கிளம்பும் முதல் பேருந்தில் தன் பணியை ஆரம்பிக்கிறார். பயணிகளுக்கு சீட்டு கொடுத்துவிட்டு, அமர்கிறார்.

காலை 7.15 மணிக்கு பேருந்து கல்லார் என்ற இடத்தில் சில நிமிடம் நிற்கிறது. உடனே செயலில் இறங்குகிறார் கனகு. டிக்கெட் பையை வைத்துவிட்டு, பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணிகளை நோக்கி, “அன்பு பயணிகளுக்கு… காலை வணக்கம். உங்களுடைய இரண்டு நிமிடத்தை எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டுவிட்டு, ஒரு திருக்குறளையும் அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார் கனகு.

காலை நேர இதமான குளிரில், கனகுவின் திருக்குறள் விளக்கம் பயணிகளை சிலிர்க்க வைக்கிறது. அத்தோடு நில்லாத கனகு, அடுத்து பேருந்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், சாலையில் பாதுகாப்புடன் செல்லுங்கள் என பொதுவான விழிப்புணர்வு செய்திகளை சொல்கிறார்.

“பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், முடிந்த வரை மரங்கள் வளர்ப்போம், அட நட முடியாவிட்டாலும் பரவாயில்லை.. இருக்கும் மரங்களை அழிக்காமல் இருப்போம். ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்வோம், பல உயிர்களைக் காக்க அது உதவும்,” என்பதுடன் அவரது அன்றாட விழிப்புணர்வு பரப்புரை நிறைவடைகிறது.

அத்தோடு நில்லாமல், அடுத்து அவர் செய்வது பயணிகளை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அந்தப் பேருந்தில் பயணிப்பவர்களில் யாராவது பிறந்த நாள் அல்லது திருமண நாள் கொண்டாடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தைப் பரிசளிக்கிறார்.

அப்படி யாருமே கொண்டாடவில்லை என்றால், அந்தப் பேருந்தில் பயணிக்கும் ஒரு ஆசிரியர் அல்லது போலீஸ்காரருக்கு அந்தப் புத்தகத்தைக் கொடுத்து கவுரவிக்கிறார். அட, அலுவலகத்தில் ஓய்வு பெற்ற யாராவது வந்தாலும் இந்தப் பேருந்திலேயே பிரிவுபசார விழாவும் உண்டு!

இவ்வளவையும் மிகச் சில நிமிடங்களில் முடித்துவிட்டு, மீண்டும் பயணிகளுக்கு வாழ்த்துக் கூறுகிறார் கனகு. பேருந்து ஊட்டியௌ நோக்கிச் செல்ல, புது உற்சாகம், நிறைவான மன நிலையுடன் தொடர்கின்றனர் பயணிகள்.

கனகு சுப்பிரமணியத்துக்கு வேண்டியதெல்லாம் இந்த சந்தோஷமும் நிறைவும்தான். தன்னைப் பொறுத்தவரை, பயணிகளும் அவரது குடும்பத்தினரைப் போன்றவர்களே என்கிறார் கனகு. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரையிலான அந்த சிலமணி நேரப் பயணம் பயணிகளுக்கு பயனுள்ளதாக, விழிப்புணர்வு தருவதாக, மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என்பதுதான் அவரது இந்த பணியின் நோக்கம்.

எப்போதிலிருந்து இந்த சேவையை அவர் செய்கிறார்?

“ஒரு முறை இரு பயணிகள், பேருந்துக்குள் எழுதப்பட்டிருந்த குறள்களைக் காட்டி, இதுக்கெல்லாம் கண்டக்டருக்கும் டிரைவருக்கும் அர்த்தம் தெரியுமா?” என்று கிண்டலாகக் கேட்டனர். அன்று ஆரம்பித்ததுதான் இந்த திருக்குறள் பணி,” எனும் கனகு கடந்த 10 ஆண்டுகளாக திருக்குறள் புத்தகங்களைப் பரிசளித்து வருகிறார். பல நூறு பேர் இவரிடம் திருக்குறள் பரிசு பெற்றுள்ளனர்!

கனகுவின் இன்னொரு முக்கியப் பணி, தனது ஓய்வு நேரத்தில் கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு இலக்கிய வகுப்பு எடுப்பது. “சிறையில் உள்ள கைதிகள் விடுதலையாகி திரும்பும்போது மீண்டும் குற்றச் செயல்களுக்கு அவர்கள் மனம் செல்லக் கூடாது. அதற்கு இந்த வகுப்புகள் உதவக்கூடும். யார் கண்டார்கள், நாளை அவர்களில் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் கூட உருவாகக் கூடும்,” என்கிறார்.

இதுதவிர, இந்தக் கைதிகளுக்காகவே ஒரு இசை ஆசிரியரை தனது செந்தமிழ் அறக்கட்டளை மூலம் நியமித்துள்ளார். வாராவாரம் இவர் கைதிகளுக்கு இசை சொல்லித் தருகிறார். கைதிகளிள் திறமையுள்ளவரைப் பாட வைக்கவும் செய்கிறார்கள்.

வருகிற மகளிர் தினத்தன்று, சிறையில் உள்ள பெண் கைதிகள் இடையே ஒரு கருத்தரங்கமும் நடத்த திட்டமிட்டுள்ளார் கனகு.

பெண் கைதிகள் உள்ள பிரிவில் கனகுவை அடிக்கடி பேசச் சொல்லி கேட்பார்களாம். பழைய பாடல்கள், குறிப்பாக எம்ஜிஆர் பாடல்களை அருமையாகப் பாடுகிறார் கனகு. பெண் கைதிகள் மத்தியில் இவர் பாட்டுக்கு ஏக வரவேற்பு. குறிப்பாக ‘தாயில்லாமல் நானில்லை…’ என்ற பாடலைப் பாடும்போதெல்லாம், பாடும் இவரும், கேட்கும் பெண்களும் கண்ணீர் வடிப்பது வழக்கம் என்கிறார்.

தன்னுடைய இந்தப் பணிக்கு, சிறு வயதில் தான் கஷ்டப்பட்ட போது உதவிய ஆசிரியர் அற்புதராஜ்தான் காரணம் என்று நினைவு கூறும் கனகு, வாழ்க்கையில் தனக்கு வழிகாட்டியாகக் கூறுவது புரட்சித் தலைவர் எம்ஜிஆரைத்தான்.

“சின்ன வயதிலிருந்தே அவர் படத்தைத்தான் பார்த்து வளர்ந்தேன். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஒழுக்கம் தவறாமை, நல்ல பழக்கங்கள், பெரியவர்களை மதித்தல், முடிந்த உதவியைச் செய்தல் என எல்லாவற்றுக்கும் அவர்தான் எனக்கு வழிகாட்டி. எம்ஜிஆர் பாடல்களைப் பாடாமல் நான் என் பேச்சை ஒருபோதும் முடித்ததில்லை,” என்கிறார் உணர்ச்சிப் பொங்க!

கனகு சுப்பிரமணியத்தை பாராட்ட வேண்டும், பேச வேண்டும் என்று உங்கள் மனசு துடிப்பது தெரிகிறது… இதோ அவரது அலைபேசி எண்: 96009-87811

Courtesy: The ஹிந்து
http://www.thehindu.com/life-and-style/metroplus/article2896247.ece

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Mon Dec 17, 2012 11:44 am

அற்புதமான மனிதரைப்பற்றியப் பகிர்வு..ஆங்காங்கே இவரைப்போன்ற நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. என்ன, கெட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள் இதுபோன்ற நல்லவிசயங்களையும், நல்லவர்களையும் அடையாளங்காட்டினால் மற்றவர்களுக்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆர்வம் வரும்.. ஊடகங்கள் செய்யவேண்டிய வேலையை நம்போன்ற சமூகத்தளம் உபயோகிப்பவர்கள் செய்வொம்...நல்லதை பரப்புவோம்.பகிர்விற்கு நன்றி...புன்னகை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 17, 2012 1:44 pm

சூப்பருங்க அருமை பதிவு நண்பா... நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 17, 2012 1:53 pm

முதலில் நடத்துனருக்கு ஒரு சபாஷ் பதிந்த ரஷ்லக் அவருக்கும் நன்றிகள்




இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Mஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Uஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Tஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Hஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Uஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Mஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Oஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Hஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Aஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Mஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Eஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 17, 2012 4:07 pm

நடத்துனர் என்கிற சொல்லுக்கு இவர் மட்டுமே பொருத்தமானவர். பிறரை நல்வழியில் நடத்த முயலும் இவர் தான் உண்மையான நடத்துனர். நல்ல பகிர்வு. பாராட்டுகள்! மகிழ்ச்சி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 17, 2012 5:45 pm

நல்லதொரு மனிதர். மனிதம் இன்னும் செத்துவிடவில்லை.

வாழ்த்துக்கள் கனகு.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Dec 17, 2012 5:49 pm

நல்லபதிவு நன்றிகள்



நேசமுடன் ஹாசிம்
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 17, 2012 8:45 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 18, 2012 12:04 am

திரு. கனகு அவர்களுக்கு என் புகழாரம்.

சிடு சிடு முகமோ இல்லை
சில்லறைக்கு சண்டை இல்லை
சிரிப்பது தொலைவதில்லை
சிந்திக்க வைப்பதே எல்லை

தினம் ஒரு குறளது சொல்லி
திருத்துவார் மனிதர் தம்மை
தினம் ஒரு திருக்குறள் நூலை
திருப்தியாய் தருவதே வேலை

பேருந்தைப் பேணிக் காக்கும்
சுற்றுப்புற சூழல் காக்கும்
சாலைகள் சோலைகள் காக்கும்
கனகுவை தெய்வம் காக்கும்

பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்பார்
மரங்களை நடுவோம் என்பார்
மரம்நட முடியா விட்டால்
நட்டதை வெட்டோம் என்பார்

கைதிக்கு இயல் இசை
கைதிக்குக் கருத்தரங்கம்
கைதியின் இதயச் சிறையில்
கனகுதான் ஆயுள் கைதி

எம்ஜியார் எளியோரின் தலைவர்
கனகுவோ கைதிகள் தலைவர்
கைதியை நல்வழி திருத்துனர்
கனகுதான் என்னையும் நடத்துனர்.




இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! 425716_444270338969161_1637635055_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 12:34 am

பாராட்டு கவிதை சூப்பருங்க




இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Mஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Uஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Tஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Hஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Uஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Mஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Oஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Hஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Aஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Mஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! Eஇதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக