ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை

3 posters

Go down

சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Empty சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை

Post by றினா Sun Dec 16, 2012 10:38 am

குளர்மையுடையது எனப் போற்றப்படும் இது இடைவெப்ப வலயத்திற்குரிய மரம். Lythraceae குடும்பத்தைச் சார்ந்தது.

  • ஈரான் ஆப்கனிஸ்தான் நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.

  • எகிப்து இஸ்ரேலில் காட்டுச் செடியாக வளர்ந்தது.

  • பின் மத்தியதரைக் கடல் நாடுகளுக்கு பரவியது என்கிறார்கள்.

  • இமாலயா பகுதியில் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Photo0321-001
தோட்டத்தில் பூவாக காயாக பழமுமாக

மாதுளை, மாதுளங்கம், என்ற பெயர்களில் அழைப்பார்கள். தாவரவியல் பெயர் Punica Granatum. இதில் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு என மூன்று வகைகள் உள்ளன. இதை "சூப்பர் புருட் " (Super fruit ) என்றும் அழைக்கின்றார்கள்.

வீட்டுத் தோட்டங்களிலும் சிறிய இனங்களை பெரிய சாடிகளிலும் பயிரிட்டுக்கொள்ளலாம். இம் மரத்தின் பூ, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவ குணமுடையது என்கிறார்கள்.

சிறிய மரம் 8 மீற்றர் உயரம் வரை வளரும். 100- 150 பழங்கள் வரை கொடுக்கும். நல்ல வடிகால் கொண்ட வண்டல் மண் மாதுளம் செடி வளர்வதற்கு ஏற்றது.

பொதுவாக மழைக்கால டிசம்பரில் வெட்டிவிட்டால் பெப்ரவரி மார்ச்சில் பூத்து யூன் ஆகஸ்டில் பழம் கிடைக்கும் என்கிறார்கள்.

வரிசைக்கு வரிசை நாலு மீற்றரும் செடிக்கு செடி 2 மீற்றரும் இருக்குமாறு மாதுளை நடவு செய்வது சிறந்தது என்கிறார்கள்.

சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Piantagione_di_melograni_cultivar_Wonderful
மாதுளம் பயிர்ச் செய்கை

கறுத்தத் தோலுடைய மாதுளம் பழம் பார்த்திருக்கிறீர்களா, Saveth இனம். கறுத்த இனத்திற்குள் இருப்பதும் சிவத்த முத்துக்கள்தான்.

சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Pomegranateblacksaveh
கருப்பு மாதுளை

சித்த ஆயுள்வேத மருத்துவங்களில்

சித்த ஆயுள் வேத மருத்துவ முறைகளில் இதற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  • இரத்த விருத்திக்கு நல்லது.

  • இதயத்திற்கும் மூளைக்கும் சக்தியைத் தரவல்லது.

  • குடற்புண்களைக் குணப்படுத்துகிறது.

  • நோயினால் பாதிப்படைந்தவர்கள் உடல் தேறவும் பலம் பெறவும் இப்பழம் பெரிதும் உதவும்.


மேலும்.....

  • பித்தத்தைத் தவிர்க்கும்.

  • மலட்டுத்தன்மையை நீக்கும்.

  • உடற்சூட்டைத் தணிக்கும்.

  • மாதுளம் சாற்றுடன் தேன் கலந்து பருக வாந்தி நிற்கும்

  • மாதுளம் பழம் விதையுடன் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும்.


என ஆயுள்வேத சித்த வைத்தியங்களில் சொல்லப்படுகிறது.

சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Pomegranate+jpg
முத்தனைய மாதுள முத்துக்கள்

உணவுவகைகள்

தாகத்தைத் தணிக்கும். என்பதால் கோடையில் சாப்பிடச் சிறந்தது. ஜீசாகவும் மில்க் ஜேக், சர்பத், மாதுளை லசி, மாதுளம் சாதம், மாதுளம் சலட், புருட் சலட், பஞ்சாமிர்தம், எனத் தயாரித்து உட்கொள்ளலாம்.

புடிங் வகைகளில் கலக்கலாம்.

வாட்டிய இறைச்சி வகைகளிலும் சலட்இலைகளுடன் கலக்கின்றார்கள்.

பேசியன் சூப்பில் போடுகின்றார்கள்.

மாதுளம் பானமாகவும் விற்கப்படுகிறது.

ஆர்மேனியாவில் வைன் தயாரிக்கிறார்கள்.

கலிபோர்ணியா, அரிசோனாவிலும் ஜீஸ் தயாரிக்கப் பயிரிடுகின்றார்கள்.

இந்தியாவில் மஹாராஸ்ரா குஷராத் மாநிலங்களில் அதிகளவில் பயிராகிறது.

விஞ்ஞான ஆய்வுகளில்

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை இப் பழத்திற்கு உண்டு என்கிறார்கள் ஆராச்சியாளர்கள். இப்பழத்தில் Phytochemical உள்ளது. எலஜிக் அமிலம் என அழைக்கபடும் இது புற்றுநோய் கலங்களைக் கட்டுப்படுத்த உதவும் என்கிறார்கள். இது ஆய்வக முடிவுதான். இன்னமும் மனிதர்களில் பரீட்சித்துப் பாரக்கவில்லை.

மேலும் சுவாசப்பை புற்று நோய், புரஸ்ரேட் புற்று நோய், ஆகியவை தோன்றுவதற்கான சாத்தித்தைக் குறைக்கும் என எலிகளில் செய்யபட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அல்சிமர் நோய் தீவிரமடைவதைத் தாமதமாக்கும் என எலிகளில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு தெரிவித்தது.

எலும்புத் தேய்வு நோயான ஒஸ்டியோ ஆரத்திரைடிஸ் நோயில் குருத்தெலும்பு தேய்வதைக் குறைக்கக் கூடும் என மற்றொரு ஆய்வு தெரிவித்தது.

சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை 101212121741-large
மாதுளை ஜூஸ்

தினமும் 1.7 அவுன்ஸ் மாதுளம் சாறு குடித்தால் உயர் இரத்த அழுத்தமானது 5 சதவிகிதத்தால் குறையும் என ஒரு ஆய்வு கூறியது.

அதேபோல பற்களுக்கும் முரசுகளுக்கும் இடையே காரை படிவது dental plaque குறையலாம் எனவும் வேறொரு ஆய்வு கூறியது.

இத்தகைய ஆய்வுகளும் பெரும்பாலும் மாதுளை உற்பத்தியாளர்களின் அனுசரணையுடன் செய்யப்பட்டதால் நம்பகத்தன்மை குறைவு என்கிறார்கள்.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை இவற்றின் நன்மையை உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஆண்மைக் குறைப்பாடு பற்றி செய்திகளுக்கு உதவுவது பற்றி ஆதாரம் இல்லை என்கிறது.

இதில் உள்ள போஷணைப் பொருட்கள் என்ன? எவ்வளவு இருக்கின்றன? அமெரிக்காவின் USDA தரும் தகவல்கள் கீழே உள்ளன

Pomegranate, arils only
(Nutritional value per 100 g (3.5 oz))
Energy 346 kJ (83 kcal)
Carbohydrates 18.7 g
Sugars 13.7 g
Dietary fiber 4.0 g
Fat 1.2 g
Protein 1.7 g
Thiamine (vit. B1) 0.07 mg (6%)
Riboflavin (vit. B2) 0.05 mg (4%)
Niacin (vit. B3) 0.29 mg (2%)
Pantothenic acid (B5) 0.38 mg (8%)
Vitamin B6 0.08 mg (6%)
Folate (vit. B9) 38 μg (10%)
Vitamin C 10 mg (12%)
Calcium 10 mg (1%)
Iron 0.30 mg (2%)
Magnesium 12 mg (3%)
Phosphorus 36 mg (5%)
Potassium 236 mg (5%)
Zinc 0.35 mg (4%)


குறைந்தளவு கலோரிச் சத்தும் கொழுப்பும் இருப்பதால் உடலுக்கு தீமையளிக்காது. சிறிதளவாவது நன்மையளிக்கும் என நம்பலாம். அழகிய பழமாகவும் கவர்வதால் விரும்பி உண்ணப் படுகின்றது. சுவையாகவும் இருக்கின்றதல்லவா அதனால் உண்பது நல்லதே.

சலட் செய்ய...

தேவையானவை

மாதுளம் பழம் - 1
தயிர் - 1 கப்
கப்பல் வாழைப்பழம் - 2
சீனி - 1 ரீ ஸ்பூன்
உப்பு சிறிதளவு

தயாரிக்க...

தயிரை நன்கு அடித்து சீனி, உப்பு கலந்துவிடுங்கள்.
பழங்களைக் கழுவி தோல் நீ்க்கி எடுங்கள்.
வாழைப்பழத்தை 1/2 அங்குல வட்டமாக வெட்டி அடித்து வைத்த தயிரில் கலவுங்கள்.
மாதுளை முத்துக்களை உடைத்து எடுத்து கலந்துவிடுங்கள்.
குளிரூட்டியில் வையுங்கள்.
கண்ணுக்கு கலர்புல்லாக இருக்கும். நாவுக்கு குளிர்ச்சியான சலட்.

தனியாகவும் சாப்பிடலாம், சாதத்துடன் கலந்து சாப்பிட கோடை வெப்பத்திற்கு குளிர்ச்சி தரும்.

-நன்றி:சின்னு-


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Empty Re: சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை

Post by மாணிக்கம் நடேசன் Sun Dec 16, 2012 10:53 am

நன்றி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Empty Re: சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை

Post by Muthumohamed Sun Dec 16, 2012 11:37 am

தகவல் சூப்பருங்க



சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Mசுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Uசுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Tசுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Hசுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Uசுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Mசுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Oசுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Hசுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Aசுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Mசுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Eசுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை Empty Re: சுவீற் அன்ட் சவர் சலட் - மாதுளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum