புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_m10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_m10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_m10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10 
3 Posts - 6%
heezulia
சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_m10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_m10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_m10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_m10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_m10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_m10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_m10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_m10சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 2:40 pm

சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி

ஒவ்வொரு மாநிலமும், அம்மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில், மரபுசாரா மின்சக்தியைக் குறிப்பிட்ட அளவு பயன்படுத்த வேண்டும் என்பதை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் அப்ளிகேஷன்) 2010 -ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் துவக்கப்பட்ட இத்திட்டம் தற்போது பல்வேறு தடைகளைச் சந்தித்து வருகிறது.2011 -2012 ஆண்டிற்கான ஆர்.பி.ஓ., திட்ட வரைவுப்படி, பல்வேறு மாநிலங்களால் நிர்வகிக்கப்படும் அனேக மின்வினியோக நிறுவனங்கள் (டிஸ்காம்ஸ்) மற்றும் தனியார் நிறுவனங்களும் இதைச் செய்யத் தவறிவிட்டன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இண்டியா உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் அடங்கும். இந்த ஆர்.பி.ஓ., திட்டத்தின் வளர்சிக்காக, மாநில மின் துறை ஒழுங்கு ஆணையம் புதுப்பிக்கவல்ல மின் கொள்முதல் திட்ட இலக்கினை நிர்ணயிக்க வேண்டும். "டிஸ்காம்' மற்றும் மாநில அரசின் ஒப்புதலோடு இயங்கும் புத்தாக்க சக்தி வளங்கள், இதர நடைமுறையில் இல்லா சக்தி வளங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இந்த இலக்கு அவசியமாகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் இந்நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட அளவிலான மின்சாரத்தை வாங்குவது இதன் இலக்காகும். இத்திட்டத்தினை ஊக்கப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்தியாவிலுள்ள பல்வேறு வளங்களிலிருந்து மின் சக்தியைப் பெறுவதில் ஆர்.பி.ஓ., சிறந்த துவக்கத்தைக் கண்டுள்ளது. 2003 -ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆர்.பிஓ., வுக்கான சட்டப் பிரிவு 86 (1), 86 (1) (e)ன்படி மாநில ஆணையங்கள் புத்தாக்க சக்தி மற்றும் மின் உற்பத்தி மூலம் மின் உற்பத்தியை ஊக்கப்படுத்த, மத்திய மின் க்ரிட்டுடன் (Grid) இணைப்புக்கான வழி, யாருக்குத் தேவையோ அவர்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்தல், மின்சாரத்தை வாங்குதல் மற்றும் குறிப்பிட்ட சதவிகித மின்சாரத்தை வினியோக உரிமையுடன்அப்பகுதியில் பயன்படுத்துதல் ஆகியவற்றை இப்பிரிவு ஊக்கப்படுத்துகிறது.ஒவ்வொரு நிதியாண்டுக்கும் மாற்றம் பெறும் இக் கொள்கையில், வரும் ஆண்டில், ஆர்.பி.ஓ., திட்டத்தின் படி செயல்படாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும்படி மின்தொகுப்பு ஒழுங்காணையத்துக்கு, புது மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சகம் (Ministry of New & Renewable Energy MNRE) ஆலோசனை வழங்கவுள்ளது. ஆர்,பி,ஓ.,வின் கொள்கைப்படி, இத்திட்டம் இந்தியாவில் இன்னும் நிலைபெறவில்லை. சிலர் நினைப்பது போல் இதை செயல்படுத்துவதும் அத்தனை எளிதல்ல. திவாலான நிலையிலுள்ள அல்லது மோசமான செயல்திட்டங்களுடன் கூடிய மாநில மின் வாரியங்கள், விழிப்புணர்வின்மை, ஆர்.பி.ஓ., செயல்பாட்டில் மோசமான தொழில்நுட்பம் போன்றவற்றால் இத்திட்டம் சந்திக்க சில சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத மற்றும் நிலையற்ற நிதி ஆதாரங்களாலும் இத்திட்டம் மோசமான சூழலைச் சந்தித்து வருகிறது. புத்தாக்க சக்தி உற்பத்திக்கான செலவும் அதிகம் என்பதால் பல மாநிலங்கள் இத்திட்டத்தினை ஆலோசனை அளவிலேயே வைத்துள்ளன; சில மாநிலங்களே வரும் ஆண்டில் இவற்றை செயல்படுத்த உள்ளன. மின் வாரியத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் யூனிட் ஒன்று ரூ,4 முதல் 5 -க்குக் கிடைக்கையில் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்துக்கு ரூ.10 முதல் 12 கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், "டிஸ்காம்'கள் இத்திட்டதை செயல்படுத்துவதில் மலைப்புக் காட்டுகின்றன. எனவே, இந்த மாறுபட்ட விலைப்பட்டியலில் மாற்றம் கொண்டுவர வேண்டியுள்ளது; அதுவும், கூடிய விரைவில் செய்யப்பட வேண்டும். மத்திய அரசு ஒவ்வொரு நேரத்திலும் தேசிய மின்சாரக் கொள்கை, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை மாநில அரசுடன் கலந்தாலோசித்து, அதன் ஒப்புதலோடும், தனித்தன்மையோடு இயங்கும் அமைப்புகளை (புத்தாக்க சக்தி வளங்கள் மற்றும் இதர நடைமுறையில் இல்லா சக்தி வளங்களைப் பயன்படுத்துபவை) உத்தேசித்தும் கட்டணம் வரைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், ஆர்.பி.ஓ.,வின் செயல்பாட்டில் உள்ள தடைகள் விலகும்.ஆர்.பி,ஓ., திட்டத்தின் பங்களிப்பு தெளிவுபடுத்தப்பட்டால் மட்டுமே வருங்காலத்தின் மின்தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தை "டிஸ்காம்'கள் திட்டமிடும். இதனால், மாநிலங்களுடனான மின்சாரக் கொள்முதலுக்கான நீண்டகால உடன்படிக்கை (Power Purchase Agreements PPA) மற்றும் ஆர்.இ.சியில் செய்யப்படும் முதலீடும் சாத்தியமாகும். மேலும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மின்பகிர்வுப் பயன்பாடு மற்றும் பெரிய அளவிலான புத்தாக்க சக்தி ஒருங்கிணைப்புக்கு ஆர்.பி.ஓ., வின் நிலையான செயல்பாடு, ஒரே மாதிரி மாதிரியான செயல்திட்டங்களும், கட்டணப் பட்டியலும் கொண்டு வரப்பட வேண்டும்.

ஒளியிலே தெரிவது...!

கூடலூரில், நூற்றாண்டு காலமாக மின் வினியோகம் இல்லாத மேலம்பளம் ஆதிவாசி கிராமத்தில், சூரிய மின்சக்தி சேமிப்பு நிலையம் அமைத்து, வீடுகள், தெரு விளக்குகளுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூரில், ஆதிவாசி இனத்தை சேர்ந்த பனியர், குரும்பர், காட்டுநாயக்கர் மக்கள் வனப் பகுதியை ஒட்டிய குக்கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதியின்றி குடிசைகளில் வசித்து வந்த இவர்களுக்கு, தற்போது, அரசு தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், இலவச கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், பல கிராமங்களில் வனத்துறையின் விதிகள் காரணமாக, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க முடியாத நிலையுள்ளது. இதனால், பல ஆதிவாசி கிராமங்களுக்கு, சூரிய மின் சக்தி மூலம், மின் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற் கட்டமாக, மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து, கூடலூர் ஸ்ரீ மதுரை மேலம்பளம் மற்றும் மானிமூலா பனியர் காலனியில், தலா ஒரு யூனிட்டுக்கு ஒரு கிலோ வாட் சக்தி கொண்ட சூரிய மின் சேமிப்பு நிலையம் அமைத்து, அதிலிருந்து வீடுகளுக்கும், தெருவிளக்குகளுக்கும் மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. இதனால், மேலம்பளம் கிராமத்தில் 28 வீடுகளிலும், மானிமூலாவில் 16 வீடுகளிலும் பயன் அடைந்துள்ளன.தெருவிளக்குகள், மாலை 6:00 முதல் காலை 6:00 மணி வரை மட்டும் எரிந்து அணையும் வகையில், சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. கிராமத்தில், பொதுவான ஓர் இடத்தில் மொபைல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆதிவாசி மக்கள் கூறுகையில், "சூரிய ஒளி மின்சக்தி திட்டம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது; தொடர்ந்து பராமரிக்கவும், கூடுதல் மின் விளக்குகள் மற்றும் "டிவி' பயன்படுத்தும் வகையிலும், கூடுதல் மின் சப்ளை வழங்க வேண்டும்' என, அப்பகுதியினர் தெரிவித்தனர்.

"அமுல்' வழியில் "அமலாகு'மா சோலார் மின்திட்டம்?



அமுல் பால் கூட்டுறவுத் திட்டத்தின் வெற்றிச் செயல்பாடு, சோலார் மின் திட்டம் சார்ந்த இந்திய கிராமப்புறங்களுக்கு மாதிரியாய் இருக்குமா? அமுலின் இந்த "வெண்மைப் புரட்சி', மின்சாரம் இல்லாமல் கெரசினை சமையலுக்கும் விளக்கெரிக்கவும் பயன்படுத்தி வரும் 400 மில்லியன் இந்திய மக்களின் "ஒளி புரட்சி'க்கு வித்திடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. விவசாயிகள் தினமும் கூட்டுறவு பால் பண்ணைக்கு எப்படி பால் அனுப்புகிறார்களோ அதுபோல, தங்கள் வீட்டுக் கூரைகளையோ, நிலங்களையோ சோலார் பேனல்கள் அமைக்கக் வாடகைக்குக் கொடுக்கலாம்.சோலார் மின்திட்டம் மூலம் பெறப்படும் மின்சாரம் சொந்தத் தேவைகள் போக, மீதமுள்ளவற்றை மின் க்ரிட்டுகளில் சேமித்து வைத்து, இரவு நேரங்களிலோ அல்லது மேகமூட்ட காலங்களில் பயன்படுத்தலாம். உள்ளூரில் வளர்க்கப்படும் பசு மாடுகள் எப்படி உள்ளூர் பால் தேவையைப் பூர்த்தி செய்கின்றவோ அதேபோல, சோலார் பேனல்களும் அந்தந்த ஊரின் மின் தேவையைப் பூர்த்தி செய்வனவாய் இருக்கும்."அமுல் செயல்படுத்தி வரும் கூட்டுறவு பால் பண்ணை முறை நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள கிராமப்பகுதிகளின் வாழ்வாதாரத்துக்கும், விவசாயத்தின் பல்முனை வளர்ச்சிக்கும், பெண்களின் வேலை உறுதியளிப்புக்கும் வழிகோலும்' என குஜராத் கூட்டுறவு பால் விற்பனை ஸ்தாபனம் (Gujarat Cooperative Milk Marketing Federation GCMMF) தலைவர் வர்க்கீஸ் குரியன் தெரிவித்துள்ளார். கூட்டுறவுப் பண்ணைகள் சோலார் மின் உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலம் இத்தகைய லாபங்களை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டம், 1960 களில், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் என 5 மாநில கிராமப்புறங்களில் உள்ள மின் கூட்டுறவு மையங்களில் பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தப்படுத்திப் பார்க்கப்பட்டது. ஆனால், இது பெரும் ஏற்றம் பெறவில்லை; காரணம் தன்னாட்சி இல்லாமையே.மின்பகிர்வுக்கு இந்த மின் கூட்டுறவு பண்டக சாலைகள் மாநில மின்வாரியத்தையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால் ,இந்த மாநில மின் வாரியங்களோ அரசியல் சார்ந்த திட்டமான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் மற்றும் சரியான ஆளுமையில்லாமலும் திணறிக் கொண்டிருந்தன.2005 -ல் இந்தியாவில் ராஜிவ் காந்தி கிரமின் வித்யுதிகரன் யோஜனா(Rajiv Gandhi Vidyutikaran Yojana RGGVY)திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் கிராமப்புற மின் உற்பத்தியில் குறிப்படும்படியான பங்கினை வகித்தது. அமெரிக்காவில் 30 மில்லியன் மக்களுக்கு, 1000 கிராமப்புற மின் கூட்டுறவு மையங்கள் உள்ளன. கிட்டத்தட்ட, மின் பகிர்வின் பாதியளவினையும் நாட்டின் நான்கின் மூன்று பங்கு நிலப்பரப்பையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.மின் உபயோகிப்பாளர்களான நமக்கு, நம் விட்டுக்குள் வரும் மின்சாரம் நீண்டதூரம் கடந்து ஒயர் வழியாக வருகிறதா அல்லது கூரைகளின் மேல் அமைக்கப்பட்ட சோலார் பேனல்கள் வழியாக வருகிறதா என கவலையில்லை. சுவிட்சைத் தட்டினால் வெளிச்சம் பரவவும், குளிர்விக்கவும், சூடேற்றவும் வேண்டும் என்ற அளவிலேயே உள்ளோம்.சீனா, சோலார் மின்திட்டங்களுக்காக பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இதனால் அங்கு குறைந்த கட்டணத்திலான மின்சாரம் சாத்தியமாகிறது.தொலைபேசித் திட்டங்களில் எப்படி ஒயர்லெஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுத்தப்பட்டதால் செலவுகள் எப்படிக் குறைந்ததோ அதேபோல, மின்துறையிலும் கொண்டுவரப்பட்டால் திட்டம் வலுப்பெறும். கேபிள்கள் பதிக்க குழி தோண்டுவதும், அதற்காகச் செலவிடுவதும் குறையும். ஒயர்களால் இணைக்கப்படும் திட்டம்தான் மின்திட்டம் என்றாலும் போட்டோவோல்டிக் சோலார் முறையில் ஒயர்கள் இல்லா முறை சாத்தியமாகிறது. இத்தகைய திட்டத்தால், இணைப்பு வேலைகள், காப்பர் ஒயரின் பயன்பாடுகளுக்கான செலவுகள் குறையும்.குஜராத்திலுள்ள ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 12 மில்லியன் மக்கள், 200 பால் பண்ணைகள், புதிய செயல்திட்டங்கள் என தனியார் அமைப்பான அமுல் மூன்றடுக்கு செயல்திட்டத்தால் சோலார் மின் உற்பத்தியில் சாதித்து வருகிறது. இதற்கு, கைதேர்ந்த பணியாளர்கள், ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள செயல்திட்டங்கள் போன்றவை அவசியமாகிறது என்கிறார் ஜிசிஎம்எம்எஃப் தலைவர் வர்க்கீஸ் குரியன். தலைமைப்பண்பு, தொலைநோக்குப் பார்வை, சிறந்த பணியாற்றும் பண்பு, போன்றவையே இதற்குத் தேவையாக உள்ளன.இவற்றைச் செயல்படுத்துவதில் மாநில அரசின் பங்கு அத்தியாவசியமானதாய் உள்ளது. கொள்கை அடிப்படையிலான திட்டமிடல், முதலீடு, லோன் வழங்குதல் போன்றவற்றில் மாநில அரசின் பங்கு முக்கியமானதாய் கருதப்படுகிறது.


"சோலார் ஐவி' கொடியில் மின்சாரம்:

உலகம் முழுவதும் பற்றாக்குறையாக இருப்பது மின்சாரம். தேவை அதிகரித்து வருவதால், மின் உற்பத்தியில், அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மின்சாரத்துக்கு மாற்றாக, சோலார் பவர் பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையும் பரவி வருகிறது. சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் வாட்டர் ஹீட்டர்கள், மின் விளக்குகள் உட்பட ஏராளமான சாதனங்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தற்போது "சோலார் ஐவி' என்ற மின்சாரம் தயாரிக்கும் கொடி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.நியூயோர்க் சஸ்டெயினப்ளி மைன்டட் இன்டராக்டிவ் டெக்னாலஜி (எஸ்.எம்.ஐ.டி) நிறுவனம் மற்றும் உத்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, டாம் மெல்பர்ன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆராய்ச்சிக்கு பின், சூரிய ஒளியை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் சோலார் இலைகளை கொண்ட கொடிகளை தயாரித்துள்ளனர். ஏராளமான செயற்கை இலைகளை கொண்டு கொடிகளாக தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு, "சோலார் ஐவி' என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த கொடிகளை, வீட்டு வெளிப்புற சுவர்களில் படரவிட்டால் போதும். சூரிய ஒளியை கொண்டு உடனடியாக மின்சாரம் உற்பத்தி செய்யத் துவங்கும். அதன் மூலம் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளலாம். அதிக பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சோதனை அடிப்படையில் வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "சோலார் ஐவி, மின்சாரத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை, வீட்டின் வெளிப்புற சுவர்களில் பொருத்தினால் போதும். இயற்கையான கொடிகளை போன்று கண்ணைக் கவரும் விதமாக, அழகாக படர்ந்திருக்கும். வீட்டுக்கு தேவையான மின்சாரத் தேவையையும் இதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம். இதில், நுண்ணிய போட்டோ வோல்டெய்க் பேனல்கள் என்ற தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை, சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும். தேவைப்படும் மின்சாரத்துக்கு ஏற்ப கொடிகளை படரவிடலாம். பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் கொடிகள் கிடைக்கும். இதனால் எந்த பாதிப்புகளும் இருக்காது. இறுதிகட்ட ஒப்புதலையடுத்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது' என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

முதலும்... முன்னோடியும்...!

"நாட்டின் மத்திய மின்தொகுப்பிலிருந்து, தங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என, பல மாநிலங்கள் கூறிவரும் நிலையில், அந்த மத்திய மின்தொகுப்புக்கே, தாங்கள் மின்சாரம் தர தயார்' என்று, குஜராத் அரசு தெரிவித்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.மத்திய மின் தொகுப்பிலிருந்து உத்தரபிரதேச மாநிலம் அதிகளவு மின்சாரத்தை எடுத்துக் கொண்டதன் விளைவாக, டில்லி மட்டுமல்லாது 15க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருளில் மூழ்கின. நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் (சுமார் 60 கோடி மக்கள்) இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால், இதற்கெல்லாம் மாற்றாக, குஜராத் மாநிலம் திகழ்ந்து வருகிறது. அம்மாநிலத்தில், நிருபர்களை சந்தித்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் கூறியதாவது:நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், கடும் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் பொருட்டு, மத்திய மின்தொகுப்புக்கு 2,000 மெகாவாட்ஸ் மின்சாரம் வழங்க தங்கள் மாநிலம் தயாராக உள்ளது. மாநிலத்தின் மின்தேவையைக் காட்டிலும், தங்கள் மாநிலம் அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இதனால், மாநிலத்தில் உள்ள பாமர மக்களும், தாங்கள் நினைத்த நேரத்தில். நினைத்த மின் உபகரணங்களை இயக்க முடியும். இதற்கு எந்தவொரு தடையுமில்லை. 1961ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை, 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வந்த தங்கள் மாநிலம், கடந்த 10 ஆண்டுகளில், மின் உற்பத்தி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மாநிலத்தின் தற்போதைய நிலவரப்படி, 15 ஆயிரத்து 906 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், ஆனால், மாநிலத்தின் மின்தேவை 12 ஆயிரம் மெகாவாட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 15 ஆயிரத்து 906 மெகாவாட் அளவுக்கு உள்ள மின் உற்பத்தியை, 18 ஆயிரம் மெகாவாட்ஸ் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

"மலை'யில் குடிகொண்ட சூரியன் :

உடுமலை அருகேயுள்ள மலைக்கிராம மக்கள், எட்டு ஆண்டுகளாக, சூரிய ஒளி சக்தி மூலம், தங்களது மின் தேவையை நிறைவேற்றி வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகப் பகுதிகளில், தளிஞ்சி, கோடந்தூர், ஈசல்திட்டு, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு உட்பட 14 வனக்குடியிருப்புகளில், 2,500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். எட்டு ஆண்டுகளுக்கு முன், வனப்பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் அளிக்கும் வசதி, வனத்துறையால் ஏற்படுத்தப்பட்டது. உடுமலை, அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்ட 14 வனக்குடியிருப்பு பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட்டன.தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு பகுதிகளில் கொடுக்கப்பட்ட திட்டத்தை, மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். துவக்கத்தில், ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக கிடைத்த மின்சாரத்தை, மின் விளக்குகளுக்கு மட்டும் பயன்படுத்தி வந்த மக்கள், பின், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளியில், தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் கற்பிக்கவும், பெரிதும் பயன்படுவதாக பெருமிதம் தெரிவிக்கின்றனர்.தளிஞ்சி மலைவாழ் மக்கள் கூறுகையில், "எட்டு ஆண்டுகளுக்கு முன், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து கொள்ள தேவையான பேட்டரிகள், உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதனால், இருளில் மூழ்கியிருந்த கிராமத்துக்கு வெளிச்சம் கிடைத்தது. குழந்தைகள் கல்வி பயிலவும், பொழுதை போக்க, தொலைக்காட்சி பார்க்கவும், இது கைகொடுத்து வருகிறது' என்றனர்."வனச்சூழல், வன விலங்குகள் பாதிக்காத வகையில், இயற்கையாக சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மலைவாழ் குடியிருப்பு மட்டுமின்றி, வனத்திலுள்ள வேட்டை தடுப்பு முகாம், வனப்பணியாளர் குடியிருப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது, மலைவாழ் மக்களுக்கு வரப்பிரசாதம்' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

கொடுக்கும் உங்களுக்கு வெளிச்சம்...!

சூரியனைப் பார்த்து நேரம் சொன்னது அக்காலம்; மின்சாரம் "கட்' ஆகும் நேரம் பார்த்து சொல்கின்றனர், இப்போது. இதனால், சூரிய ஒளி மின்சாரம் மீது, பலரின் பார்வை திரும்பியுள்ளது. பலரும், சூரிய ஒளி மின்சாரத்தை நோக்கி செல்லத் துவங்கி இருப்பது ஆச்சரியமூட்டும் வளர்ச்சி. சூரியஒளி மின்சார உற்பத்தியில், தமிழக அரசும் விரைவில் இறங்கப் போவது, ஆரோக்கியமான விஷயம். மின் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இந்நேரத்தில், நமக்கான மின்சாரத்தை நம் வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கான ஆரம்பச் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ஒரு முறை செலவு செய்தால் அது இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் வரை வரும். சில சின்னச் சின்ன பராமரிப்புச் செலவுகள் தவிர, வேறு பெரிய செலவு எதுவும் கிடையாது. வீடு கட்டும் போதே இதற்கான செலவையும் செய்து விட்டால், ஆயுசு முழுக்க மின் தட்டுப்பாடும் இருக்காது. மின் கட்டணம் கட்ட வேண்டிய அவசியமும் இருக்காது.ஒன்று, சோலார் பேனலிலிருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன்படுத்துவது. மற்றொன்று, பேட்டரியில் சேமித்து பயன்படுத்துவது. பகல் நேரங்களில் நேரடியாகவே பயன்படுத்திக் கொண்டு, இரவு நேரங்களில் பேட்டரி மூலம் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சோலார் பவரை இன்னும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் போது, அதற்கான செலவு கணிசமாக குறைய வாய்ப்புண்டு.மின் தட்டுப்பாடு பிரச்னையை சமாளிக்க, எல்லோரும் இன்வெர்ட்டர் வாங்குகின்றனர். இன்வெர்ட்டர் என்பது, ஒரு மின் கடத்தி தான். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாற்று எரிசக்தி கிடையாது. மின்சாரம் இருக்கும் போது, சார்ஜ் ஏற்றிக் கொண்டு, பவர்-கட் ஆனதும், அந்த சார்ஜ் மூலம் இயங்குகிறது. ஆனால், சோலார் சிஸ்டம் என்பது, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனம். இந்த தொழில்நுட்பம் 25 வருடங்களாக இருக்கிறது. இதற்கான உற்பத்தி செலவு முன்பு அதிகமாக இருந்தது. மைனஸ் 35 டிகிரியிலும் மின்சாரம் பெற முடியும். இந்த பேனல் மீது, மழைத் தண்ணீர் விழுந்தாலும் எவ்வித பாதிப்பும் இருக்காது. 500 வாட்ஸ் மூலம், இரண்டரை யூனிட் மின்சாரம் பெற முடியும். இதன் மூலம், அத்தியாவசிய வீட்டுத் தேவைகளை எளிதில் சமாளிக்க முடியும். இதற்கு 50 ஆயிரம் ஆகும் என கணக்கிடப்படுகிறது. மின்சாரப் பிரச்னைக்கு அரசாங்கம் தீர்வு காணும் வரை காத்திருக்காமல், நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயார் செய்து கொள்ள சிறந்த வழி, சூரிய சக்தி தான்.

நன்றி:தினமலர்



சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Paard105xzசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Paard105xzசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Paard105xzசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 16, 2012 8:26 am

நல்ல பகிர்வு - அரசை நம்பி பிரயோஜனம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டதே




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 12:37 pm

தகவலுக்கு நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 12:41 pm

இபோதைக்கு தமிழகத்துக்கு தேவையான பதிவு நன்றி அச்சலா சூப்பருங்க




சோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Mசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Uசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Tசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Hசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Uசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Mசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Oசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Hசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Aசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Mசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி Eசோலார் ஸ்பெஷல்: மாற்று மின்சக்திக்கான புது முயற்சி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 16, 2012 5:40 pm

நல்ல தகவல்கள்.

இதை வீடுதோறும் செய்துவிட்டாலே போதும்.

இன்னொன்றை நம்பத் தேவையில்லை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக