ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? Empty சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 14, 2012 5:19 am

சிறுகதை - "நம் அகங்காரமா?" "மகனின் எதிர்காலமா?"

குமரன் கோமதி தம்பதியினருக்கு இரு பிள்ளைகள். அவர்களுடைய மூத்த மகன் ரவி பள்ளி இறுதித் தேர்வு எழுத உள்ளான். குமரன் மகனின் எதிர்காலம் கருதி தன் எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு மகனின் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தார். மகன் எந்த ஒரு விதத்திலும் படிப்பில் இருந்து கவனம் சிதறாமல் இருக்க, தன்னால் இயன்ற அளவு உதவிக் கொண்டிருந்தார்.

மகன் வாலிபப் பருவத்தின் முதல் நிலையில் இருந்ததால் பல சூழ்நிலைகளில் கவனம் சிதற வாய்ப்புள்ளது என்பதால் முடிந்தவரை அறிவுரைகள் கூறி அவனை ஒருநிலைப்படுத்த குமரன் முயன்று கொண்டு இருந்தார். அந்த முயற்சியில் படிப்படியாக வெற்றியும் கண்டுகொண்டிருந்தார்.

இந்த சூழலில், குமரன் தன் மனைவியிடம் தன் மகனின் படிப்பில் தான் காணும் வளர்ச்சி பற்றி தினமும் கூறிக்கொண்டிருப்பது வழக்கம். அவரின் மனைவியும் மகனுக்கு அறிவுரைகள் கூறியும் எதிர்காலத்திற்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்று உணர்த்திக்கொண்டிருப்பார்.

இப்படி இருக்க, ஒரு நாள் குமரன் மாலை வேலையில் அலுவலகத்தில் இருந்து அப்போதுதான் வீட்டில் நுழைகிறார். வந்தவருக்கு கோமதி தண்ணீர் கொடுத்தார். பிறகு, உடை மாற்றி முகம் கழுவி தன் மகன் படிக்கும் அறைக்குச் சென்று, மகனிடம் படிப்பு பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். கணவருக்கு தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு கோமதி மெதுவாக "உளுந்து வாங்கிவரச்சொல்லியிருந்தேனே, மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே. நாளைக்கு அமாவாசை. இட்லிக்கு மாவு அரைக்கணும். உளுந்து இப்ப ஊறப் போட்டத்தான், படுக்கும் முன்னால மாவு அரைத்து முடிக்க முடியும் " எனக் கேட்க
குமரன் "ஆமாமாம், அலுவலக வேலை அவசரத்தில் நீ சொன்னதையே மறந்து விட்டேன். இப்பப் போய் வாங்கிட்டு வந்திடறேன்" என கிளம்பப் போனார்.
ஆனால் கோமதி "இப்பத்தானே வந்தீங்க, களைப்பாக இருப்பீங்க. நான் ரவியை அனுப்பறேன்" எனக்கூற,
உடனே குமரன் "அவன் படித்துக்கொண்டிருக்கிறான். அவன ஏன் தொந்தரவு பண்ணனும். நான் போய் வாங்கிக்கிட்டு வந்துடறேன்" எனக் கூறி எழுந்தார்.
மீண்டும் கோமதி "இல்ல, இல்ல நான் அவனை அனுப்பறேன். நீங்க இருங்க" என்று கூறிக் கொண்டே, "ரவி, கொஞ்சம் கடைக்குப் போய், ஒரு கிலோ உளுந்து வாங்கிக்கிட்டு அப்படியே பச்ச மிளகாயும், தேங்காயும் வாங்கிட்டு வாப்பா எனக் கூற,
குமரன் மீண்டும் மறுத்து, "நான் போறேம்மா, அவன் படிக்கட்டும்" என்று கூறிக் கொண்டே தன் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார்.
கோமதி "நான்தான் சொல்றேனே அவன் போகட்டும்னு. நீங்க ஏன் இப்படிப் பண்றீங்க?" என்று சற்று கோபமாகவே கேட்டார்.
குமரன் "அவன் கவனம் சிதற வேண்டாம்னு தான் சொல்றேன். நீ ஏன் கேட்க மாட்டேன்கிறாய்?" எனச் சற்று சத்தமாகக் கேட்டார்.
கோமதி "இப்ப கடைக்கு போறதுல தான் படிப்பு கேட்டுப் போய்டுமாக்கும்? நான் அவன வேலை சொல்ல, நீங்க அவனுக்கு ஆதரவாப் பேச, அவன் என் பேச்ச மதிக்கக் கூடாது. அப்படித்தானே?" என உச்சக் குரலில் கேட்க,
குமரன் "இதில் என்ன இருக்கிறது? உனக்குத் தேவை உளுந்து. அதை யார் வாங்கி வந்தால் என்ன? " என ஏளனமாகக் கேட்டார்.
அதற்கு கோமதி "அப்போ, நான் சொல்லி கூட அவனை நீங்க அனுப்ப மாட்டீங்க. அப்படித்தானே?" என கண்களின் கண்ணீர் கன்னத்தில் வழிய, அதை துடைத்துக்கொண்டே கேட்டார்.
பதிலுக்கு குமரன் "ஆமாம், அனுப்ப மாட்டேன். எனக்கு அவன் படிப்புதான் முக்கியம். இப்ப என்னன்ற நீ?" என ஆண் என்ற ஆணவம் பேச்சில் தெரிய பொரிந்து தள்ளினார்.
கோமதி "பசங்க, என்ன மதிக்கலைனா உங்களுக்கு சந்தோஷம் தானே?" எனப் புலம்ப,
குமரன் "ஆமா, பசங்க என்னை மட்டும் தான் மதிக்கணும், உன்னை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை" என தடம் மாறி ஆவேசமாய்க் காத்த ஆரம்பித்தார்.
அவர்களின் சண்டை தொடக்கத்தில் "மகனின் படிப்பு, கவனச் சிதறல்" குறித்து ஆரம்பித்து, தற்போது தடம் மாறி இருவரின் சுயமரியாதைப் பிரச்சனையாக மாறிக் கொண்டிருந்தது. கோபம் இருவரையும் வாழ்க்கையின் முக்கியமான இலட்சியத்தையே மாற்றி தவறான பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தது............................................................


மேற்சொன்ன கதையின் அடுத்த சில வசனங்களை உறவுகளே உங்களிடம் விட்டுவிடுகிறேன். உங்கள் அபிப்பிராயம் சேர்த்து அடுத்த வசனங்களை இட்டு, கதையை தலைப்பின் ஒரு பகுதியான "அகங்காரம்" அல்லது மறு பகுதியான "மகனின் எதிர்காலம்" இவைகளில் ஒரு பக்கம் கொண்டு சென்று முடிக்கவும்.

உங்களின் மேலான கருத்துக்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.


இனியவரின் இனிய முடிவு அற்புதம். கீழே செல்லவும்.

அதற்கும் கீழே எனது முடிவை காணவும்.





Last edited by ச. சந்திரசேகரன் on Sun Dec 16, 2012 4:03 am; edited 1 time in total


சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? Empty Re: சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

Post by யினியவன் Fri Dec 14, 2012 9:59 am

நல்ல முயற்சி சந்திரா - பிறகு வருகிறேன் இங்கே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? Empty Re: சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 14, 2012 1:19 pm

யினியவன் wrote:நல்ல முயற்சி சந்திரா - பிறகு வருகிறேன் இங்கே.
தங்களின் கதைப்போக்கை காணும் ஆவலுடன் ச. சந்திரசேகரன்.


சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? Empty Re: சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

Post by ச. சந்திரசேகரன் Fri Dec 14, 2012 10:23 pm

இப்போது வரை 66 பேர் படித்துள்ளனர். ஆனால் கதையின் அடுத்த சில வரிகளை யாரும் ஏன் எழுத எத்தனிக்கவில்லை? இக்கதையின் முடிவு நாளை இரவு எழுதப்படும். உறவுகள் அதற்குமுன் எழுத முயற்சிக்கவும். ஆவலுடன் ச. சந்திரசேகரன்.


சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? Empty Re: சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

Post by யினியவன் Fri Dec 14, 2012 10:27 pm

யாராவது எழுதுவாங்கன்னு காத்திருந்தேன் - சரி நான் எழுதறேன் நீங்கள் பதிவிடும் முன்னர் சந்திரா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? Empty Re: சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

Post by யினியவன் Fri Dec 14, 2012 11:58 pm

உள்ளே படித்துக் கொண்டிருந்த ரவி புத்தகமும் கையுமாக ஓடி வந்தான் வரவேற்பறைக்கு தாயும் தந்தையும் கடிந்த சொற்களால் ஒருவரை ஒருவர் குறை கூறுவது கேட்டு.

ரவி வந்தவுடன் குமரனும் கோமதியும் சிறிது அமைதியானார்கள்.

குடுங்கம்மா பைய நானே கடைக்கு போயி வாங்கிட்டு வர்றேன் என்றதை கேட்டு குமரன் இல்லப்பா நான் போயிட்டு வரேன் - நீ உனது பாடத்தை படி என்றார்.

இல்லப்பா இவ்வளவு நேரம் படித்ததால் சிறிது நேரம் விட்டு படிக்கலாம்ன்னு நானே தம்பியுடன் கொஞ்சம் விளையாட நினைத்தேன் - அதற்கு பதில் அவனோடு கடைக்கு சென்று வருகிறேன் என்றான்.

அப்பா அம்மா நீங்கள் இருவரும் எனக்கு படிக்க சிறிது உதவனும் என்றான் ரவி. குமரனும் கோமதியும் ஒருசேர சொல்லுப்பா என்றனர்.

எனக்கு இந்த இரு குறளுக்கும் நல்ல விளக்கம் எளிமையா வேணும் - நாளை இந்த குறள்கள் இரண்டையும் அசெம்பிளியில் நான் மாணவர்கள் அனைவருக்கும் சொல்லி விளக்க வேண்டும் என்று சொல்லி கீழ்க்கண்ட குறள்கள் உள்ள நோட்டை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு தம்பியுடன் கடைக்கு சென்றுவிட்டான் அமைதியாக.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்

குமரனும் கோமதியும் வள்ளுவரின் வாக்கை படித்து அப்படியே அமைதியாகி வெட்கி தலை குனிந்தனர். ஒருபுறம் நல்ல மகனை பெற்றெடுத்த பெருமை இருந்தாலும் மறுபுறம் இருவருக்குமே தாங்கள் அப்படி சண்டை இட்டுக்கொண்டது சங்கடத்தை தந்தது.

குறளின் அர்த்தம் புரிந்த இருவரும் இனி இவ்வாறு நடப்பதில்லை என மனதில் எண்ணிக் கொண்டே கண்களால் ஒருவர் மற்றவரிடம் மன்னிக்க வேண்டினர்.

தங்களை அறியாமலே இருவரின் கைகளும் இனைந்து கொண்டன - ஒருசேர அவர்கள் பார்வையில் ரவியின் ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது.....



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? Empty Re: சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

Post by ச. சந்திரசேகரன் Sat Dec 15, 2012 12:50 am

இனியவரின் இனிய கதையோட்டத்துக்கு நன்றி

நாளை எனது முடிவு காண்பீர். இரவு வணக்கங்கள்.


சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? Empty Re: சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

Post by ச. சந்திரசேகரன் Sun Dec 16, 2012 4:46 am

ச. சந்திரசேகரன் wrote:சிறுகதை - "நம் அகங்காரமா?" "மகனின் எதிர்காலமா?"

அவர்களின் சண்டை தொடக்கத்தில் "மகனின் படிப்பு, கவனச் சிதறல்" குறித்து ஆரம்பித்து, தற்போது தடம் மாறி இருவரின் சுயமரியாதைப் பிரச்சனையாக மாறிக் கொண்டிருந்தது. கோபம் இருவரையும் வாழ்க்கையின் முக்கியமான இலட்சியத்தையே மாற்றி தவறான பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருந்தது............................................................

கதையின் கடைசி காட்சிகள்.

இருவரின் சண்டை முற்றி, தொடர்ந்து பேசிய கோமதியின் கன்னத்தில் குமரன் அரக்கத்தனமாய் ஒரு அறை விட்டார். விழுந்த அறையின் பலம் அதிகமாக இருக்கவே அதே வேகத்தில் கோமதி அருகில் இருந்த சுவரின் விளிம்பில் இடித்து நிலை தடுமாறி கீழே விழ, கோமதியின் நெற்றியிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. பக்கத்து அறையில் இருந்த ரவியும், மற்றொரு அறையில் இருந்த அவனது தம்பியும் ஓடி வந்தனர்.
ரத்தத்தை கண்டதும் குமரன் செய்வதறியாது உடனே கோமதியை வாரியெடுத்துக் கொண்டார். ரவியிடம் உடனே ஒரு ஆட்டோ கொண்டு வருமாறு கூறிக் கொண்டே கோமதியை தூக்கிக்கொண்டு வாசலுக்கு ஓடினார்.
இரு தினங்களுக்குப் பிறகு,
மருத்துவமனையில், நெற்றியில் கட்டோடு கோமதி படுத்திருக்க, அருகில் இரு மகன்களும் குமரனும் இருந்தனர்.
குமரன் மெல்ல கோமதியின் கையை பிடித்துக் கொண்டு, "கோமு, என்னை மன்னிச்சிடும்மா. பையன் படிப்பு மேல உள்ள அக்கறையில அரக்கத்தனமா நடந்துகிட்டேன்." என மன்னிப்புக் கேட்க,
கோமதி "இல்லங்க, தப்பு என் மேலதான். அன்னைக்கி நான் அப்படி பேசியிருக்கக் கூடாது." எனச் சொல்ல,
ரவி "ரெண்டு பேர் மேலயும் தப்பே இல்லை. நான்தான் தப்பு பண்ணிட்டேன். இந்த மாதிரி சின்ன சின்ன வேலைகளை தினமும் செய்து பழகாம விட்டுட்டேன். இனி நானும் ஒழுங்கா நடந்துப்பேன். தம்பிக்கும் கற்றுத் தருவேன். என்னை ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க" என மன்னிப்புக் கேட்க,
ரவியின் தம்பி "கடவுள் புண்ணியத்துல அம்மவுக்கு ஒண்ணும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு. நான் உங்க எல்லாரையும் மன்னிச்சிடுறேன்." என்று கூறி சிரிக்க,
குமரன் செல்லமாக அவனை கன்னத்தில் கிள்ளினார்.
ஒரு வாரத்தில் கோமதி குணமாகி வீட்டுக்கு வந்தார்.
ரவி மிக அக்கறையோடு படிப்பை தொடர்ந்தான்.
குடும்பமே அவனுக்கு பக்கபலமாக இருந்தது.
ரவி பள்ளியிலேயே முதல் மாணவனாக தேறினான்.
IIT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, அவனுக்கு விருப்பமான துறையில் சேர்ந்து தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்தான்.

உறவுகளே நீங்களும் இந்த கதைக்கு இனியவன் அவர்கள் மேலே கூறியதைப் போல வேறு முடிவுகளை இங்கு பகருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மற்றவர்கள் தங்கள் மேலான கருத்துக்களை வழங்குவீர்களா?



சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? Empty Re: சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

Post by யினியவன் Sun Dec 16, 2012 7:44 am

உங்கள் முடிவும் நன்று சந்திரா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? Empty Re: சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

Post by ச. சந்திரசேகரன் Sun Dec 16, 2012 12:33 pm

யினியவன் wrote:உங்கள் முடிவும் நன்று சந்திரா.
இனியவருக்கு நன்றிகள்.


சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா? Empty Re: சிறுகதை - நம் அகங்காரமா? மகனின் எதிர்காலமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum