ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல்

+2
சதாசிவம்
அச்சலா
6 posters

Go down

ஈகரை மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல்

Post by அச்சலா Tue Dec 11, 2012 11:39 pm

மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து 2 டெஸ்டில் தோற்றதால் கேப்டன் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த நிலையில் டோனி டெஸ்ட் அணிக்கு தகுதியானவர் இல்லை. அவரை நீக்க வேண்டும் என்று முன்னாள் பிரபல வீரரும், தேர்வு குழு தலைவருமான மொகீந்தர் அமர்நாத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

கடந்த ஒரு ஆண்டுகளாக டோனியின் ஆட்டம் சிறப்பாக இல்லை. மோசமாகவே விளையாடி வருகிறார். அவர் அணியில் எப்படி இடம் பெற்று இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவரது ஆட்டத்திறனை பார்க்கும்போது அவர் அணிக்கு தகுதியானவராக இல்லை. இதனால் தேர்வு குழுவினர் டோனியை நீக்க வேண்டும்.

நான் அவருக்கு எதிரானவர் இல்லை. முன்பு சிறப்பாக ஆடியதை வைத்து தற்போது ஒப்பிடக்கூடாது. தெண்டுல்கர் ஒரு சிறந்த வீரர். அவர் பல ஆண்டுகள் விளையாடிவிட்டார். தொடக்க காலங்களில் விளையாடியதுபோல் தற்போது அவரால் விளையாட முடியவில்லை. இது மாதிரியான நேரம் எல்லோருக்கும் வரும். இதனால் தெண்டுல்கர் ஓய்வு முடிவை அறிவிக்க இது சரியான நேரமே.

இந்திய அணிக்கு இளம் ரத்தம் தேவை. இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். வீரர்களின் திறமையை அறிய ஐ.பி.எல். போட்டி அளவுகோல் இல்லை. ஐ.பி.எல். போட்டி கிரிக்கெட் அல்ல. அது பொழுதுபோக்கான போட்டியாகும். இந்திய அணியில் எந்த நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி) விளையாட ஐ.பி.எல். போட்டி உதவியாக இருக்காது.

இவ்வாறு மொகீந்தர் அமர்நாத் கூறினார்.

வடக்கு மண்டல தேர்வு குழு உறுப்பினராக பணிபுரிந்த அவர் சமீபத்தில்தான் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட தோல்வியால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு டோனி கேப்டனாக நீடிக்ககூடாது என்று அப்போதைய தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்திடம் அமர்நாத் வாக்குவாதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு குழு முன்னாள் தலைவரும், முன்னாள் கேப்டனுமான துலீப் வெங்சர்க்கார் கூறியதாவது:-

தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் பங்காற்றி உள்ளார். தற்போது அவருக்கு 39 வயதாகிறது. அவர் தொடர்ந்து ரன்களை எடுக்கிறார். ஆனால் அதே வேகத்தில் ரன்களை குவிக்க முடியவில்லை. கடந்த காலங்களை போல் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜாகீர்கான், ஹர்பஜன்சிங், யுவராஜ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-மாலைமலர்


மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல் Paard105xzமோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல் Paard105xzமோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல் Paard105xzமோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல்

Post by சதாசிவம் Wed Dec 12, 2012 10:24 am

இவர் நடித்த விளம்பரப் படங்களை பார்த்து முடிவு செய்யுங்கள். என்னமா விளாசுகிறார்?


சதாசிவம்
மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை Re: மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல்

Post by யினியவன் Wed Dec 12, 2012 10:28 am

2014 2015 வரை விளம்பரங்களுக்காக பல பல கோடிகள் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

தற்பொழுது விலகினால் அவற்றை திருப்பி கொடுக்கவேண்டும் என்பதால் தான் நீடிக்கிறார் என்று எங்கேயோ படித்தேன்.

ஆகவே விளம்பரங்களில் விளாசுவார் நன்றாகவே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல்

Post by DERAR BABU Wed Dec 12, 2012 10:30 am

IPL க்குன்னு தனியா ஒரு ஆட்டம் ஆடுகிறார்கள் .. எல்லாம் பணம் ....


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரை Re: மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல்

Post by பாலாஜி Wed Dec 12, 2012 10:52 am

கேப்டன் என்ற போர்வையில் ஒரு வருடமாக மோசமாக அடினாலும் அணியில் இடம் பிடித்துவிடுகிறார் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 12, 2012 11:14 am

பணம் வந்து விட்டது.. தோனி க்கு தலைகனமும் அதிகரித்து விட்டது



மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை Re: மோசமான ஆட்டத்தால் டோனியை நீக்க வேண்டும்: அமர்நாத் வலியுறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோசமான ஆட்டத்தால் விரக்தி கதவை உடைத்தார் பான்டிங்
»  ரமலான் முதல் அமர்நாத் யாத்திரை வரை தாக்குதல் வேண்டாம்: மெஹபூபா வலியுறுத்தல்
» அமைதி காக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்
» திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்
» அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் ஓட வேண்டும்: நிதின் கட்கரி வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum