ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லிம் மாயன்கள்...

5 posters

Go down

முஸ்லிம் மாயன்கள்... Empty முஸ்லிம் மாயன்கள்...

Post by றினா Tue Dec 11, 2012 9:26 pm

முஸ்லிம் மாயன்கள்... Bismillah_2
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.மாயன்கள் - இந்த பழங்குடியினத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் திரைப்படமான '2012' மிகவும் பிரபலமாக்கியது. மாயன்களின் காலண்டர் Dec, 2012-டுடன் முடிவதாகவும், அதுவே உலகின் அழிவுக்காலம் என்பது போலவுமான புரளிகள் உலகை வலம் வர ஆரம்பித்து, "யார் இந்த மாயன்கள்?" என்று இவர்களைப் பற்றி அறிந்திடும் ஆர்வத்தை தூண்டின.

யார் இவர்கள்?

மத்திய அமெரிக்காவின் பூர்வக்குடிமக்களான இவர்களின் நாகரிகம் மிகவும் பழமையானது. கி.மு 2600-வாக்கில் தோன்றியதாக கணக்கிடப்படும் மாயா நாகரிகம், பல ஆச்சர்ய தகவல்களை தன்னிடத்தே கொண்டதாக அமைந்துள்ளது. (வட, மத்திய மற்றும் தென்) அமெரிக்காவின் பண்டைய நாகரிகங்களிலேயே முழுமையான எழுத்து மொழியை கொண்டிருந்த இவர்கள், கணிதம், கட்டிடக்கலை என்று பல துறைகளில் மேம்பட்டிருந்தாக அறியப்படுகின்றது.

இன்றைய மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுரஸ், குவாதமாலா, பெலிஸ், எல் சால்படோர், மெக்ஸிகோ போன்ற நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்திருக்கின்றது மாயா நாகரிகம்.

முஸ்லிம் மாயன்கள்... MayaArea

பல்வேறு மொழிகளை பேசிய இவர்கள் சிறு சிறு குழுக்களாக இருந்திருக்கின்றனர். இந்த நாகரிகம் வீழ்ச்சியடைந்தற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன. பஞ்சம் போன்ற இயற்கை சீரழிவுகளால் சிதைந்து போயிருந்த இந்த இனத்தவரை மேலும் சீரழித்தார்கள் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளர்கள்.

ஆம், பதினைந்தாம் நூற்றாண்டில் கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி வைத்த பிறகு, ஸ்பெயின் தன்னுடைய காலனி ஆதிக்கத்தை அமெரிக்காவில் நிலைநாட்ட தொடங்கியபோது, பல்வேறு பழங்குடியினர் கொன்றொழிக்கப்பட்டனர். அதற்கு மாயன்களும் விதிவிலக்கல்ல.

மாயா நாகரிகம் வீழ்ச்சியடைந்தது.

மாயன் இனத்தவரின் இன்றைய நிலை:

இன்றளவும், சுமார் ஆறு லட்சம் மாயன்கள் மத்திய அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கின்றனர்.

ஆனால், இவர்கள் மீதான அடக்குமுறை மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. இனவெறி தலைவிரித்தாடுகின்றது.

இவர்கள் அதிகம் வாழும் மெக்ஸிகோவின் தென்மாநிலமான ஷீயபாஸ் (Chiapas) போன்ற பகுதிகளில் கூட இவர்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். நடைப்பாதையில் வெள்ளையின மக்கள் எதிரே வந்தால் இவர்கள் நடைபாதையில் இருந்து சாலைக்கு இறங்கி விட வேண்டுமாம்.

சகிக்க முடியாத இந்த இனவெறிதான், சில மாயன்களை போராடத் தூண்டி, மெக்ஸிகோ அரசுக்கு எதிரான புரட்சிப்படையை உருவாக்க வைத்தது.

1990-க்களின் மத்தியில், ஸபதிஸ்தா தேசிய விடுதலை ராணுவம் (Ejército Zapatista de Liberación Nacional, EZLN) என்ற அரசுக்கு எதிரான அமைப்பை துவங்கி, இனவெறி மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினர் மாயன்களில் ஒரு பகுதியினர். இன்றளவும் போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

முஸ்லிம் மாயன்கள்:

2005-ஆம் ஆண்டு, ஜெர்மனியின் பிரபல ஊடகமான தே ஷ்பிகேல் (Der Spiegel), பலரது கவனத்தையும் ஈர்க்கும்படியான ஒரு செய்தியை வெளியிட்டது.மெக்ஸிகோவில் வாழும் பழங்குடியின மாயன் மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்லாத்தை தழுவி வருவதாக கூறிய தே ஷ்பிகேல், பல சுவாரசிய தகவல்களை அந்த கட்டுரை முழுக்க அள்ளி தெளித்திருந்தது. அவற்றில் சில,
  • சுமார் 300 மாயன்கள் சமீப காலங்களில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.

  • பள்ளிவாசல், மதரசா, இஸ்லாமிய மையம் போன்றவை இவர்களிடையே இருக்கின்றது.

  • மாயன்கள் ஹஜ் செய்கின்றனர்.

  • ஷீயபாஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரான சன் கிறிஸ்டோபாலில், ஹிஜாப் அணிந்த பெண்களை காணுவது இயல்பாகி விட்டது.


தே ஷ்பிகேல் ஊடகத்தின் இதுப் போன்ற தகவல்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிறிய அளவிலான முஸ்லிம்கள் மெக்ஸிகோவில் வாழ்கின்றனர் என்பது பலரும் அறிந்திருந்த செய்திதான். ஆனால், மாயன் இனத்தவரில் முஸ்லிம்கள் என்பது பலருக்கும் தெரிந்திராத செய்தியாகவே இருந்திருக்க வேண்டும்.

உலகின் எங்கோ ஒரு மூலையில், தாங்கள் பெரிதும் அறிந்திடாத பழங்குடியினத்தவரில் தங்களின் மார்க்க சகோதரர்களை கண்டுக்கொண்டனர் முஸ்லிம்கள்.

முஸ்லிம் மாயன்கள்... Picture1

தே ஷ்பிகேலின் 2005-ஆம் ஆண்டு செய்தி, சுமார் முன்னூறு முஸ்லிம் மாயன்கள் மெக்ஸிகோவில் இருப்பதாக தெரிவித்தாலும், மிக சமீபத்திய அல்-ஜசீரா ஊடகத்தின் செய்தி சுமார் ஐநூறு முஸ்லிம் மாயன்கள் அங்கிருப்பதாக தெரிவிக்கின்றது.


மாயன்களிடையே எப்படி இஸ்லாம்?

1990-க்களின் மத்தியில், ஸ்பானிஷ் பேசும் ஐரோப்பிய முஸ்லிம்கள் இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்ள ஷீயபாஸ் மாநிலத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தலைமை தாங்கியவர் ஆவுரெலியனோ பெரெஸ் (Aureliano Perez) என்பவராவார்.

இனவெறிக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த ஸபதிஸ்தா போராளிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த பெரெஸ், இஸ்லாமிய போதனைகளுக்கு மாயன் பழங்குடியினத்தவர் ஆர்வம் காட்டுவதை அறிந்துக்கொண்டார்.

ஷீயபாஸ்சில் இவர்களது அழைப்புபணிக்கு, இறைவன் கிருபையால், மகத்தான ஆதரவு கிடைக்க அதிக அளவிலான மாயன்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

Code:
...there have been reports of indigenous Mayans and Tzotzils converting to Islam in large numbers - wikipedia.

பழங்குடியின மாயன்கள் அதிகளவில் இஸ்லாத்தை தழுவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன - (extract from the original quote of ) wikipedia

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால், இப்படி இஸ்லாத்தை தழுவியவர்கள், தங்களோடு அதனை நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் குடும்பத்தாரிடையே இறைச்செய்தியை கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, தே ஷ்பிகேல் ஊடகம், ஆனஸ்டசியோ ரொமெஸ் (Anastasio Gomez) என்ற மாயன் முஸ்லிம் சகோதரரை பேட்டி கண்டிருந்தது. இந்த சகோதரர் தன் குடும்பத்தார் அனைவரையும், இறைவன் கிருபையால், இஸ்லாத்தின்பால் கொண்டுவந்து விட்டார். இதில் அவரது நூறு வயது பாட்டியும் அடக்கம்.

தற்போது இப்ராஹீம் என்று அறியப்படும் ரொமெஸ் தன் போன்ற பதினைந்து பழங்குடியினருடன் சேர்ந்து ஹஜ் செய்திருக்கின்றார்.

முஸ்லிம் மாயன்கள்... Picture2

'இஸ்லாத்தில் இனம்/ஜாதி போன்றவற்றிற்கு இடமில்லை' என்று மகிழ்ச்சியுடன் கூறும் மாயன்களை, மது மற்றும் வட்டி மீதான இஸ்லாத்தின் கடுமையான அணுகுமுறை பெரிதும் கவர்ந்திருப்பதாக RNW (Radio Netherlands Worldwide) தெரிவிக்கின்றது.

அதிவிரைவான மாற்றங்கள் மாயன்களிடையே நடப்பதைக் கண்ட மெக்ஸிகோ அரசு கலவரமடைந்தது. மாயன் முஸ்லிம்களுக்கும், அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாமென வெளிப்படையாக குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமல்லாமல், மாயன்களை தீவிரமாக கண்காணிக்கவும் தொடங்கியது. மெக்ஸிகோ அரசின் இந்த குற்றசாட்டிற்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்கின்றது RNW.

மாயன்களோ இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுக்கின்றனர். மெக்ஸிகோவிற்கு வெளியேயான முஸ்லிம்களுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என்று கேட்கின்றனர் அவர்கள்.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையேயும் இஸ்லாம் தொடர்ந்து மாயன்களை தன்னுள் அரவணைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் மாயன்கள்... Picture4

"இந்த பள்ளிவாசலை சார்ந்து தற்போது பதினேழு முஸ்லிம் மாயன் குடும்பங்கள் உள்ளனர். படிப்படியாக நிறைய மக்கள் இஸ்லாத்தை பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்" என்று கூறுகின்றார் சன் கிறிஸ்டோபால் நகருக்கு அருகில் உள்ள பள்ளிவாசலின் இமாமான சால்படோர் லோபெஸ் (Salvador Lopez).

"இஸ்லாம் மெதுவாக, அதே நேரம் உறுதியாக இங்கு வளர்ந்து வருகின்றது. Yes, I think we are here to stay"
இன்ஷா அல்லாஹ், இன்றிலிருந்து நம்முடைய துஆக்களில் இவர்களையும் சேர்த்துக்கொள்வோம்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Topic Initiation:
1. Brother Peer Mohamed.

German and Spanish Pronunciations helped by:
1. Sister Shameena.

My sincere thanks to:
1. Der Spiegel.
2. Radio Netherlands Worldwide.
3. Br. Peer Mohamed.
4. Sr. Shameena

References:
1. Praying to Allah in Mexico, Islam Is Gaining a Foothold in Chiapas - Spiegel Online, 28th May 2005. ling
2. Islam is the new religion in rebellious Mexican state Chiapas - RNW, 17th December 2009. ling
3. Inside Mexico's mud-hut mosque - Aljazeera, 30th August 2011. ling
4. Islam in Mexico - wikipedia. ling
5. Maya Indians - howstuffworks. ling
6. El Islam en México - M Semanal. 15th May 2011. ling
7. மாயன் நாகரீகம்-நவீன நாகரீகத்தின் திறவுகோல் - உயிர்மை. ling
8. மாயன் நாகரீகம் - Ehow, 25th June 2011. ling
9. Mayans and Muslims? - ALAMEDA ISLAMICA, 6th May 2008. ling
10. Islam spreading in southern Maya Mexico - Catholic Online, 31st Aug 2011. ling
11. Muslims In Mexico Under Greater Scrutiny From U.S - Islamophobia today, 23rd May 2011. ling
12. Spiegel Online, Der Spiegel, 2012 Phenomenon, RNW, Tzotzil people, Tzotzil Lanugauge, Mayan Languages - wikipedia.


வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ.

-நன்றி: எதிர்க்குரல்-


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

முஸ்லிம் மாயன்கள்... Empty Re: முஸ்லிம் மாயன்கள்...

Post by ரா.ரா3275 Tue Dec 11, 2012 9:54 pm

மிக மிக அபூரவ்மான செய்திகள் றினா... சூப்பருங்க
அத்தனையும் பாதுகாக்க வேண்டிய தகவல்கள்... அருமையிருக்கு
பகிர்வுக்கு நன்றி... நன்றி


முஸ்லிம் மாயன்கள்... 224747944

முஸ்லிம் மாயன்கள்... Rமுஸ்லிம் மாயன்கள்... Aமுஸ்லிம் மாயன்கள்... Emptyமுஸ்லிம் மாயன்கள்... Rமுஸ்லிம் மாயன்கள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முஸ்லிம் மாயன்கள்... Empty Re: முஸ்லிம் மாயன்கள்...

Post by அச்சலா Tue Dec 11, 2012 10:33 pm

ஆமாம் மிக முக்கியமான பகிர்வு...
பலே வாழ்த்துக்கள்..


முஸ்லிம் மாயன்கள்... Paard105xzமுஸ்லிம் மாயன்கள்... Paard105xzமுஸ்லிம் மாயன்கள்... Paard105xzமுஸ்லிம் மாயன்கள்... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

முஸ்லிம் மாயன்கள்... Empty Re: முஸ்லிம் மாயன்கள்...

Post by Muthumohamed Tue Dec 11, 2012 11:02 pm

நல்ல உபயோகமான பதிவு நன்றி றினா நன்றி



முஸ்லிம் மாயன்கள்... Mமுஸ்லிம் மாயன்கள்... Uமுஸ்லிம் மாயன்கள்... Tமுஸ்லிம் மாயன்கள்... Hமுஸ்லிம் மாயன்கள்... Uமுஸ்லிம் மாயன்கள்... Mமுஸ்லிம் மாயன்கள்... Oமுஸ்லிம் மாயன்கள்... Hமுஸ்லிம் மாயன்கள்... Aமுஸ்லிம் மாயன்கள்... Mமுஸ்லிம் மாயன்கள்... Eமுஸ்லிம் மாயன்கள்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முஸ்லிம் மாயன்கள்... Empty Re: முஸ்லிம் மாயன்கள்...

Post by றினா Wed Dec 12, 2012 11:52 am

நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார் பதிவு செய்தேன்.
நன்றிகள் அவருக்குத்தான் சொந்தம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

முஸ்லிம் மாயன்கள்... Empty Re: முஸ்லிம் மாயன்கள்...

Post by கரூர் கவியன்பன் Wed Dec 12, 2012 2:35 pm

இது புதுத் தகவல்கள் .பகிர்வுக்கு மிக்க நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

முஸ்லிம் மாயன்கள்... Empty Re: முஸ்லிம் மாயன்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum