புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_m10வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Dec 11, 2012 5:22 pm

First topic message reminder :

இந்த அண்டவெளியில், நாம் தனியாக இருக்கிறோமா? அதாவது, நமது பூமியைத் தவிர வேறு எங்காவது உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவா?

பில்லியன் டாலர் மதிப்புடைய கேள்வி. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் எப்போதாவது, ஏதோ ஒரு வடிவத்தில் எழும் கேள்வி இது. இதற்கு விடை, அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்துவிடக்கூடிய அளவு சுலபம் அல்ல என்பது இந்தக் கேள்வியை இன்னும் மர்மமாக மாற்றுகிறது.

உயிர்மையில் நமது ராஜ் சிவா எழுதிய ’2012இல் உலக அழிவும், மாயா இன மக்களும்‘ என்ற தொடரை வெகு சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. அந்தத் தொடரைப் படிக்கையில், எனது சிறுவயதில் வானமண்டல மனிதர்கள் பற்றிய புத்தகங்களைப் படித்தது நினைவு வந்தது. அந்த நினைவுகள் உந்தித் தள்ள, இணையத்தில் ஒரு முழு நாள் இது பற்றிச் செலவிட்டேன். சிறுவயதில் படித்த புத்தகங்களைத் தேடிப்பிடித்தது மட்டுமல்லாது, இந்த 20 வருடங்களில் மேன்மேலும் வந்திருக்கக்கூடிய பல ஆராய்ச்சிக்கட்டுரைகள், புதிய புத்தகங்கள் ஆகியனவற்றையும் ஒரே மூச்சில் படித்தேன்; படித்துக்கொண்டும் இருக்கிறேன். படித்ததை நண்பர்களுடன் பகிரலாம் என்பதே நோக்கம். இது ஒரு விவாதமாகவும் இருக்கட்டும். படிக்கும் நண்பர்கள், உங்கள் கருத்துகளையும் எழுதலாம். ஒருவகையில் பார்த்தால், மறந்தே போயிருந்த பல விஷயங்கள், ராஜ் சிவாவினால் நினைவு வந்தன. ஆகவே, அவருக்கே முதல் நன்றி.

கட்டுரையை ஆரம்பிக்கும் முன்னர், இன்னொருவரைப் பற்றியும் விரிவாகச் சொல்லியே ஆக வேண்டும்.

விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்.

ஆவிகளைப் பற்றிப் படிக்கும் யாருக்கும் அவ்வளவு சுலபமாக மறந்துவிடாத பெயர். எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஆவிகளைப் பற்றியும், occult விஷயங்களைப் பற்றியும் எழுதிவருகிறார். இவர் எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் ‘அறிவுக்கு அப்பாற்பட்ட அதிசய சக்திகள்’. இந்தப் புத்தகத்தை, எனது தந்தையின் மூலம், எனது பத்தாவது வயதில் படிக்க நேர்ந்தது. அக்காலத்தில் எப்போது பார்த்தாலும் புத்தகங்களைக் கட்டிக்கொண்டு மாரடித்து வந்ததால், இப்புத்தகத்தைப் படிப்பது கடினமாக இருக்கவில்லை. அப்புத்தகத்தின் மூலம் பல அதிசய மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். ரஸ்புடீன், அரிகோ, யூரி கெல்லர், மாயன்களின் அரசன் குக்குல்கன், சகுந்தலா தேவி, நெப்போலியன் எகிப்து சென்ற மர்மம் ஆகிய பல விஷயங்கள் அவற்றில் விரிவாக எழுதப்பட்டிருக்கும். துறுதுறுப்பான ஒரு சிறுவனுக்கு இந்த விஷயங்கள் எப்பேர்ப்பட்ட ஒரு உலகத்தைத் திறந்துவிட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

அந்தப் புத்தகத்தில் நான் படித்த மறக்க முடியாத இன்னொரு பெயர்: Erich Von Daniken. பண்டைய காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்தது உண்மைதான் என்று பல புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கும் மனிதர் இவர். இவரைப் பற்றியும் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார். இரண்டு decades முன்பே. அதனைத்தொடர்ந்து, பள்ளி இறுதி ஆண்டுகளில் எரிக் வான் டேனிக்கென் எழுதிய ‘Chariots of Gods‘ புத்தகம் கிடைத்தது. அதுவும் ஒரு மறக்கமுடியாத புத்தகம்தான்.

இந்த டேனிக்கெனை விகடனில் மதன் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன்பு. அதைப் படித்ததும் நன்றாக நினைவிருக்கிறது. அதில், மதனை வரவேற்கும்போதே, ‘உங்கள் ஊர் ராமர் கூட வேற்றுக்கிரக வாசிதான் தெரியுமா?’ என்று டேனிக்கென் கேட்ட கேள்வியை மதன் எழுதியிருப்பார்.

அவர் எழுதிய பல விஷயங்கள் இப்போது ஹம்பக் என்று சொல்லப்பட்டு வருகின்றன. என்றாலும், அவற்றில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முடிந்தால் விபரமாகப் பார்ப்போம்.

அவரைப்போலவே இந்தத் துறையில் பல்லாண்டுகளாகப் பழம் தின்று கோட்டை போட்ட மனிதர்கள் எழுதிய சில புத்தகங்களையும் முடிந்தால் அலசலாம். அவற்றில் அவர்கள் எழுதியுள்ள விபரங்கள், ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருக்கும். அவைகளை உண்மை என்று எடுத்துக்கொள்ளாவிட்டாலும் கூட, சற்று நேரம் வேற்றுக்கிரக வாசிகள், UFOக்கள், அவர்களின் மொழிகள், பறக்கும் தட்டுகள் ஆகியவற்றின் நினைவில் ஆழ்ந்து இன்புறலாம் வாருங்கள்.

அப்படியே, இந்த விஷயங்கள் உண்மையா? அல்லது பொய்யா? என்ற வகையில் பல தகவல்களையும் பார்க்கப்போகிறோம். அதிலேயே மாயன்கள், சுமேரியர்கள் ஆகியவர்களைப் பற்றிய தகவல்களையும் தொட்டுச்செல்லலாம். பலவற்றை ராஜ் சிவா ஏற்கெனவே எழுதிவிட்டார். ஆகவே, அவற்றை ஒரு highlight போலப் பார்க்கலாம்.

சரி. முன்னுரை போதும். ஆரம்பிக்கலாமா?

1. சரித்திரம் சொல்லும் Alien கதைகள்

மனிதகுலத்தில் பல்வேறு இனங்களில் வழங்கி வரும் புராணங்களை எடுத்துக்கொண்டால், அவைகள் எல்லாவற்றிலும் பல ஆச்சரியங்கள் நிறைந்திருக்கின்றன. கிட்டத்தட்ட இவைகள் அனைத்துமே, வானில் இருந்து இறங்கிய ‘கடவுளர்’களைப் பற்றிப்பல தகவல்களைச் சொல்கின்றன. அவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். மனிதகுலத்தின் ஆதிமூலம், அவர்களது புராணங்களே என்பதால், இந்த referenceகள் அவசியம். மட்டுமில்லாமல், அவைகளில் சொல்லப்பட்டிருக்கும் fantasized விஷயங்கள் படிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்தியாவிலிருந்தே ஆரம்பிப்போம்.

நாம் எடுத்துக்கொள்ளப்போகும் புராணம், மஹாபாரதம். ராமாயணத்திலும் ஆச்சரியமான UFO குறிப்புகள் உண்டு என்றாலும் (புஷ்பக விமானம்), மஹாபாரதத்தில், உலகின் எந்த UFO குறிப்புகளையும் தூக்கிச் சாப்பிட்டுவிடக்கூடிய தகவல்கள் நிறைந்துள்ளதால், அதில் உள்ள விபரங்களைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். எனக்கு மஹாபாரதத்தைப் பற்றித் தெரிந்தவைகளையும் (அதிலிருக்கும் முக்காலே மூணு வீச கதைகள் எனக்கு அத்துப்படி), UFO ஆராய்ச்சியாளர்களின் கூற்றையும், மறந்துபோன சில தகவல்கள் இணையத்திலிருந்தும் கொடுக்கிறேன்.

மஹாபாரதத்தின் தொடக்கத்திலேயே, ‘கடவுளர்கள்’ குந்திதேவிக்குக் குழந்தைகளை அருளியது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. துர்வாசர் சொல்லிக்கொடுத்த ஒரு மந்திரத்தைச் சொல்லி ஒரு குறிப்பிட்ட கடவுளை நினைத்தால், அந்தக் கடவுளின் குழந்தை அம்மந்திரத்தைச் சொல்லும் பெண்ணின் வயிற்றில் உருவாகிவிடும். அப்படி அதனை உபயோகித்து உருவான குழந்தைகளே கர்ணன் (சூரியன்), யுதிஷ்டிரன் என்னும் தர்மன் (எமனின் குழந்தை), பீமன் (வாயு), அர்ஜுனன் (இந்த்ரன்), நகுலன் மற்றும் சகதேவன் (அஸ்வினி தேவர்கள்). இதில் நகுலனும் சகதேவனும் பாண்டுவின் இரண்டாம் மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர்கள்.

மஹாபாரதத்தில் சிவன் அழித்த மூன்று அசுரர்களைப் பற்றிய கதையும் வருகிறது. கர்ண பர்வத்தில் இக்கதை விபரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. த்ரிபுரர்கள் என்று சொல்லப்பட்ட மூன்று அசுரர்களுக்கு, மூன்று பெரிய நகரங்களை தேவர்களின் சிற்பியான மயன் வானில் கட்டிக்கொடுத்த கதையும், அந்த பிரம்மாண்டமான நகரங்கள் ஒரே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்ததும், அந்நகரங்களை எப்படி ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தி சிவன் அழித்தார் என்பதும் விபரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது (இதே கதையில், தனது புன்னகையாலேயே அந்நகரங்களை சிவன் அழித்ததாக மற்றொரு பாடபேதம் உண்டு). மூன்று நகரங்கள் வானில் சுற்றிக்கொண்டிருந்தன என்று பாரதத்தில் வருவது, ஒருவேளை ஏலியன்களின் பறக்கும் தட்டுதானோ?

மஹாபாரதத்தின் துரோண பர்வத்தில், 201 வது அத்தியாயத்தில், துரோணரின் மகனான அஸ்வத்தாமா, தண்ணீரிலிருந்து எப்படி ஆக்நேயாஸ்திரம் என்ற ஒன்றைப் பாண்டவர்களின் மீது பிரயோகித்தான் என்று விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அஸ்திரத்தை அஸ்வத்தாமா எய்தவுடன் – ‘அந்த ஆயுதத்திலிருந்து அம்பு மழை அர்ஜுனனின் மீது பொழிந்தது; உலகமே இருண்டு போனது; வானத்திலிருந்து எரிகற்கள் விழுந்தன; வெப்பம் கடுமையாக அதிகரித்தது; சூரியன் கண்ணுக்கே தெரியவில்லை; ஆயிரமாயிரம் ரதங்கள் ஒரே நொடியில் எரிக்கப்பட்டன; யானைகள் செத்து விழுந்தன; சில யானைகள் வெறிகொண்டு பிளிறியபடி அங்குமிங்கும் ஓடின; பாண்டவப் படையில் இருந்த பல வீரர்கள் முற்றியும் எரிந்து சாம்பலாயினர்; மொத்தத்தில், நெருப்பின் கடவுளான அக்னி, பாண்டவர்களைக் கபளீகரம் செய்ததுபோல் இருந்தது’ – என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அத்தனை symptomகளும், ஹிரோஷிமா அல்லது நாகசாகியிலிருந்துகொண்டு நேரடி ஒளிபரப்பு செய்ததைப்போல் இருக்கிறதல்லவா?

மஹாபாரதத்தில் வரும் extra terrestrial விஷயங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று இந்த alien ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

இது தவிர, அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் ஆப்பன்ஹீமர் – அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் – உலகின் முதல் ந்யூக்ளியர் குண்டு வெடிக்கப்பட்டபோது, அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று அவரைப் பத்திரிகை நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் சொன்ன quote உலகப்பிரசித்தி பெற்றது. அந்த quote, நமது பகவத்கீதையிலிருந்தே எடுக்கப்பட்டது. அர்ஜுனனுக்குத் தனது விஸ்வரூபத்தைக் கண்ணன் காண்பிக்கையில், பயத்தில் நடுநடுங்கிக்கொண்டே அர்ஜுனன் சொல்லும் ஒரு ஸ்லோகம் அது.

அவர் இந்த ஸ்லோகத்தைப் பற்றிப் பேசும் வீடியோ இங்கே காணலாம்.

[youtube][/youtube]

அவரிடம், இதுதான் உலகின் முதல் ந்யூக்ளியர் குண்டுவெடிப்பா என்று பத்திரிக்கையாளர்கள் வினவியபோது, ‘நவீனகாலத்தில் என்றால், ஆமாம்’ என்று பதிலளித்தும் இருக்கிறார்.

இப்படி, பண்டைய காலத்தில் ந்யூக்ளியர் குண்டின் சக்தியை ஒத்த ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டதே, அவைகளை பூமிக்குக் கொண்டு வந்த ஏலியன்களின் இருப்பை உறுதிப்படுத்துவதாக ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

இந்துமதத்தில் மட்டுமல்ல. வேறு பல மதங்களின் புராணங்களிலும் ஏலியன்களைப் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம். அப்படியே இந்தச் செய்திகள் உண்மையா டுபாக்கூரா என்றும் அலசலாம்.

தொடரும் . . . .


நன்றி : கருந்தேள்



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் - Page 3 Knight

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Dec 17, 2012 8:58 am

பகிர்வுக்கு மிக்க நன்றி... நன்றி
இந்த ஏலியன் பட லிஸ்ட்டை ஏறக்கட்டிவிட்டு, உலகின் பிற ஏலியன்தனமான (???!!) விஷயங்களை மறுபடி நோக்கலாம்
சூப்பருங்க காத்திருக்கிறேன்(I Am WAITING)... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 17, 2012 1:40 pm

சூப்பருங்க ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக