ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Poll_c10பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Poll_m10பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Poll_c10 
heezulia
பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Poll_c10பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Poll_m10பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Poll_c10 
Dr.S.Soundarapandian
பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Poll_c10பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Poll_m10பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ்

3 posters

Go down

பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Empty பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ்

Post by அச்சலா Tue Dec 11, 2012 2:33 pm

பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ்

பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Tamil_News_large_601745

இது இசைக் கச்சேரிகளின் சீசன், எங்கெல்லாம் சபாக்கள் உள்ளனவோ, அங்கெல்லாம், இசைக்குழுக்கள் மேடையேறி காதிற்கு தேமதுர இசையை வழங்குவர். இந்த நேரத்தில் முழுக்க, முழுக்க பார்வையற்றவர்களே பங்கேற்று பாடும், இசைக்கும் இசைக் குழுவான "தர்ஷன்' இசைக் குழு இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா... காற்றில் கலந்து வந்தபாடல் வரிகள் வசீகரித்தது.

பரபரப்பான சென்னை காந்தி நகர், காந்தி கிளப்பில் உடல் ஊனமுற்றோர் தினவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற விசேஷ இசை நிகழ்ச்சி அது.விசேஷத்திற்கு காரணம் இந்த கட்டுரையின் முதல் வரியிலேயே சொன்னது போல பாடுபவர்களும், பாடல்களை இசைப்பவர்களும் முழுக்க, முழுக்க பார்வையற்றவர்கள் என்பதுதான்.
ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ரசிகர்களிடம் இருந்து பலத்த கைதட்டல் எழுந்தது, கைதட்டல், கரகோஷம் அடங்கவும், இப்போது பாடிக்கொண்டு இருப்பவர்கள், "ப்ரீடம் அறக்கட்டளை' யைச் சேர்ந்த, "தர்ஷன்' இசைக் குழுவின் பார்வையற்ற குழந்தைகள் என்று அறிவிப்பு தொடரவும், கைதட்டல் ஒலி மீண்டும் எழுந்து அதிர்ந்தது.

மேடையில் அழகாய் உடை உடுத்தி, தங்களது குரலுக்குள் தேனையும், இனிமையையும், இனிய கானத்தையும், கம்பீரத்தையும் குழைத்து கொடுத்தபடி, சில பக்தி பாடல்களையும், பல மெல்லிசை பாடல்களையும் பாடி, இரண்டு மணி நேரம் அந்த இடத்தை அற்புதமான இசையால் நிரப்பினர்.
சத்யநாராயணன், மனோஜ், ஸ்ரீலேகா, அக்ஷயா, விஷ்ணுபிரியா, சவுபாக்யா, இந்து, சக்தி ஆகிய பாடகர்களுக்கு, பார்வையாளர்கள் பகுதியில் இருந்து பாராட்டும், விழா குழுவினரிடம் இருந்து பரிசுகளும் குவிந்தன.

பிரபல பாடகர்களே கூட, தாங்கள் பல முறை பாடிய பாடல் என்றாலும் மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் குறிப்பை பார்த்தபடிதான் பாடுவார்கள், ஆனால், இவர்களோ எவ்வித குறிப்புமின்றி, தங்கு தடையின்றி பாடி அசத்தினர், அதுவும் "கீபோர்டு' வாசிப்பவர், இவர்களை பாடவைக்கும் திறமையே அலாதியானது. பாடகர்களும் ஒவ்வொரு பாடலையும் நம்பிக்கையுடனும், சிரிப்புடனும், சந்தோஷத்துடனும் பாடி, அந்த சூழலையே கலகலப்பாக்கிவிட்டனர், இப்படி இவர்களது இசை நிகழ்ச்சியை கேட்கும் போது மட்டுமின்றி, பார்க்கும் போதும் மகிழ்ச்சி பொங்கியது.
யார் இவர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, சென்னை திருவான்மியூரில் இயங்கும் ப்ரீடம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் எஸ்.சுந்தர் கூறியதாவது, மாற்றுத் திறனாளிகளுக்கு, உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்பதைவிட, என்னால் என்ன செய்ய முடியும் என்று, என்னையே நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க உருவாக்கப்பட்ட, இந்த அறக்கட்டளையின் சார்பில், உடல் ஊனமுற்றவர்களுக்கு, நிறைய உதவி செய்து வருகிறோம், அதன் ஒரு கட்டம்தான் இந்த இசைக்குழு. மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உள்ள திறமைகளின் அடிப்படையில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதை செய்து வருகிறோம்.

அந்த வகையில், சென்னையில் உள்ள பார்வையற்ற பள்ளியில் படிக்கும் பார்வையற்ற மாணவ, மாணவியரில், பாடும் திறன் கொண்டவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு முறையான பாடல் பயிற்சி வழங்கி மேடையேற்றி பாடவைத்து வருகிறோம்.
அப்படி பாடுபவர்கள், ட்ரம்ஸ் இசைப்பவர், கீபோர்டு வாசிப்பவர் என்று, முழுக்க முழுக்க பார்வையற்றவர்களைக் கொண்டதுதான் "தர்ஷன்' இசைக்குழு. இந்த குழுவினர் அற்புதமாக கர்நாடகா இசைக் கச்சேரியும் செய்வர், திரைப்படப் பாடல்கள் பாடவும் செய்வர்.

குறைந்தபட்சமாக ரூபாய், 15 ஆயிரம் கொடுத்தால், இந்த குழுவினர், அவர்களாகவே வந்து உங்களது திருமணம், பிறந்த நாள் விழா, கருத்தரங்கம், ஆண்டுவிழா, கோயில் விழா போன்ற இடங்களில் அற்புதமாக பாடி விழாவினை சிறக்க செய்வர். பார்வையற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போமே என்று ஒரு முறை அழைத்தவர்கள், இவர்களது பாடும் திறமையை அறிந்து, இப்போது இரக்கத்திற்காக அல்லாமல் திறமைக்காக பல முறை அழைத்து வருகிறார்கள், இதைத்தான் இவர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த வருமானம் முழுவதும் இவர்களுக்கே போய்ச்சேரும்.
பார்வையற்ற குழந்தையாகிவிட்டதே என்று நித்தமும் சோகத்தில் ஆழ்ந்திருந்த இவர்களது பெற்றோர்களுக்கு, இந்த குழந்தைகள் பாடி பரிசும், பணமும் பெற்றுவரும்போது ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதை வார்த்தையில் கொண்டு வர முடியாது .

நீங்களும் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கி,அந்த நிகழ்ச்சியின் மூலம் உங்கள் உள்ளத்தையும், இல்லத்தையும் மகிழ்ச்சியால் நிறைவு செய்ய விரும்புகிறீர்களா அப்படியானால் இவர்களை ஒருங்கிணைப்பவரும், பாடல் ஆசிரியையுமான உஷாபரத்வாஜை தொடர்பு கொள்ளவும்.போன்: 9381023173.

-தினமலர்


பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Paard105xzபார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Paard105xzபார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Paard105xzபார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Empty Re: பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 11, 2012 2:36 pm

இவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் நமக்கு மகிழ்வுதான்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Empty Re: பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ்

Post by பூவன் Tue Dec 11, 2012 2:39 pm

இது மாதிரியான நிறைய இசை குழுக்கள் உள்ளன , அவை எல்லாம் உலகுக்கு வெளி கொணர வேண்டும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ் Empty Re: பார்வை இல்லாதவர்களால், பார் போற்ற நடத்தப்படும் "தர்ஷன்' இசைக்குழு - எல்.முருகராஜ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum