ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12

+5
கரூர் கவியன்பன்
றினா
அச்சலா
பூவன்
krishnaamma
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  - Page 2 Empty முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12

Post by krishnaamma Tue Dec 11, 2012 9:29 am

First topic message reminder :

முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  - Page 2 E_1354857918

கோல்கட்டாவில், "ஹவுஸ் புல்' போர்டு மாட்டாத குறைதான். "வேறு தேதின்னா பரவாயில்லை. அன்னிக்கு இதுக்கு மேல முடியாது...' என்று கை விரிக்கின்றனர். நீங்கள் நினைப்பது போல், இது திரைப்பட ரிலீஸ் விஷயம் இல்லை.
ஒரு குறிப்பிட்ட நாளில், தங்கள் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர், இது குறித்து மருத்துவமனைகளின் டாக்டர்களை வற்புறுத்த, அவர்களும் (சிசேரியன் முறையில் தான்) அந்த பிரசவங்களை நடத்தித் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஒரே ஒரு நிபந்தனை, அப்போது கருவுற்று ஒன்பது மாதங்களாவது ஆகியிருக்க வேண்டும் என்பது தான். ஆனால், தொடர்ந்து இது போன்ற கோரிக்கைகள் பலரிடமிருந்தும் வரவே, "சாரி' என்று உதட்டைப் பிதுக்கி விட்டனர் டாக்டர்கள்.
எதற்கு அந்த குறிப்பிட்ட தேதிக்கு இவ்வளவு மவுசு? அது, 12.12.12 என்பதால் தான். அதாவது, டிசம்பர் மாதம், 12ம் தேதி, 2012ம் ஆண்டு.
இந்த, 12.12.12 மிக அதிர்ஷ்டமான தேதி. அது ஆயிரம் ஆண்டுகளுக்கு, 12 முறை மட்டுமே வரும். இதை விளம்பரப்படுத்தும் சில பிரபல ஓட்டல்கள், தங்கள் அரங்குகளில் அன்று திருமணம் செய்து கொள்ளச் சொல்லி காதலர்களை வசீகரிக்கின்றனர். "மிகவும் எளிதாக உங்கள் திருமண நாளை நினைவு வைத்துக் கொள்ளலாம்...' என்று கூடுதல் தூண்டில் வேறு!
பன்னிரண்டு என்ற எண்ணுக்கு, பல மகத்துவங்கள் உண்டு. ஆண்டுக்கு, 12 மாதங்கள். ராசிகளின் எண்ணிக்கை, 12. ஒரு டஜன் என்றால் எவ்வளவு? 12 தானே! கடிகாரத்தை பாருங்கள், 12 என்ற எண் வரை எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கும். பன்னிரண்டு, ஆறு, நான்கு, மூன்று, இரண்டு ஆகிய அத்தனை எண்களாலும் பின்னம் இல்லாமல் வகுபடும் சிறிய எண் 12 தான்.
"மக்களுக்குக் கொண்டாட்டம், ரசிகர்களுக்குத் திருவிழா...' என்ற அறிவிப்புடன் வெளியாக உள்ளது சிவாஜி திரைப்படம் - முப்பரிமான வடிவில். டிசம்பர் 12 அன்று, இத்திரைப்படம் வெளியாக இன்னொரு காரணம், அன்று ரஜினிகாந்தின் பிறந்த நாள்.
அவ்வப்போது, இது போன்ற தினங்கள் குறித்து, (10.10.10 - 11.11.11 போன்று) பரபரப்போடு ஒரு பயமுறுத்தல் எப் போதும் எழுப்பப் படுவது வழக்கம். 12.12.12 அன்று உலகம் அழிந்து விடும் என்று, இப்போதும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
மேற்கத்திய ஜோதிடர்கள் கூறுவது இதைத்தான் 12.12.12 அன்று தொடங்கும் உலக அழிவு, டிச., 21, 2012 அன்று அந்த அழிவு முழுமையடைந்து, உலகமே காணாமல் போகும். அதாவது டிசம்பர் 21, 2012 அன்று சூரியன் பால்வெளி வீதிமண்டலத்தின் மையத்துக்கு மேல் உயரும். இதனால், உலகம் அழியலாம்.
இந்திய ஜோதிடர்கள், இப்போது நடப்பது கலியுகம் என்கின்றனர்.
இந்த யுகத்தின் முடிவு என்பது உலகின் அழிவு என்றும் கூறுகின்றனர். அதாவது, கலியுகத்தின் முடிவில், யுக புருஷன் குதிரையில் தோன்றுவான். வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றத்தினால் உலகம் அழிந்துவிடும் என்கின்றனர்.
இதற்கு முந்தைய யுகங்கள், எத்தனை வருடங்கள் கொண்டவையாக இருந்தன என்று பார்ப்போம். சத்ய யுகம் என்பது, 17,28,000 ஆண்டுகள் கொண்டதாகவும், திரேதா யுகம் என்பது, 12,96,000 ஆண்டுகள் கொண்டதாகவும், துவாபர யுகம் என்பது, 8,64,000 ஆண்டுகள் கொண்டதாகவும் இருந்தது. கலியுகம் என்பது, 4,32,000 ஆண்டுகள் கொண்டது என்கின்றனர். கலியுகம் பிறந்தது, கி.மு., 3102 அன்று. அப்படிப் பார்த்தால், இதுவரை, 5114 ஆண்டுகள் தான் முடிவடைந்துள்ளன. இன்னமும், 4,26,886 ஆண்டுகள் பாக்கி உள்ளன.
செவ்வாய் மற்றும் சூரியனால் கட்டுப்படுத்தப்படும் நாடுகள், சுனாமி, புயல், நிலநடுக்கம், எரிமலை ஆகியவற்றால், 12.12.12 அன்று பாதிக்கப்பட வாய்ப்பு உண்டாம். இது போன்ற நாடுகள், பெரும்பாலும் தீவுப் பகுதிகளாக உள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகியவை கூட அழிவை சந்திக்கலாம் என்கின்றனர்.
அமெரிக்காவின் பழங்குடி இனத்தவரிடையே வாய் மொழியாக நிலவி வரும் ஒரு காலண்டர், மிகவும் நீண்ட காலத்தை கொண்டது. 5125 ஆண்டுகள் கொண்ட, இந்த காலண்டரின் இறுதி நாள், 12.12.12. இப்படி யூகங்கள் கொடி கட்டிப்பறக்கின்றன.
நிபுரு என்ற கிரகத்தின் மீது, பூமி அன்று மோதப்போகிறது என்பதிலிருந்து, அன்று கொத்து கொத்தாக கோடிக்கணக்கான மக்கள் உலக வாழ்க்கையை துறந்து, ஆன்மிகத்தில் ஈடுபடப் போகின்றனர் என்பது வரை, பலவித பயமுறுத்தல்கள் உலவுகின்றன.
இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், புதிய தோஹா சர்வதேச விமான நிலையம், அன்றுதான் திறக்கப்பட உள்ளது. கத்தார் நாட்டில், ஒரே சர்வதேச விமான நிலையமாக இது விளங்கப் போகிறது.
அடுத்த, 2013ல் தான் உலக அரேபிய பந்தய குதிரை போட்டிகள் மாநாடு பிரான்சில் நடத்தப்பட உள்ளது. ஆனால், இதை அதிகாரப்பூர்வமாக அவர்கள் அறிவிக்கப்போவது, 12.12.12 அன்றுதான்.
அமெரிக்காவில் ஒரு விபரீதம் நடக்க வாய்ப்புண்டு என்று விஞ்ஞானிகளே பதறுகின்றனர். அங்குள்ள பத்து லட்சம் நாய்களின் உடலில், "ஹார்ட் வோர்ம்' எனப்படும் புழு பரவி, உள்ளன. இது பெரும் தொற்றுநோயாக பரவி, அமெரிக்கர்களை பாதிக்க வாய்ப்புண்டு. எனவே, 12.12.12 என்ற பெயரில், ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேற்படி பாதிப்பை தடுக்கும் வகையில், 12 டோஸ் தடுப்பு மருந்தை, 12 சதவீதம் பேருக்கு, 2012க்குள் அளிக்க இருக்கின்றனர்.
எப்படியோ, பலவித பயமுறுத்தல்களுக்கான விடை, 13.12.12 அன்று கிடைத்துவிடும்!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  - Page 2 Empty Re: முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12

Post by ஜாஹீதாபானு Wed Dec 12, 2012 11:33 am

அது சரி ... அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  - Page 2 Empty Re: முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12

Post by ஹிஷாலீ Wed Dec 12, 2012 11:44 am

பகிர்வுக்கு நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  - Page 2 Empty Re: முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12

Post by DERAR BABU Wed Dec 12, 2012 12:03 pm

தென் இந்திய புரோகிதர்கள் சங்க நிறுவனப் பொதுச் செயலாளர் ஆற்காடு ஆ.செ.நரசிம்ம அய்யர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாளை 12.12.12-ந்தேதி உலகில் பலபேரழிவுகள் உண்டாகுமென்று பின்னால் நடைபெறப் போகும் பல விபரீதங்களை முன்கூட்டியே தெரிவித்த மாயன் காலண்டர் ஆங்கில திரைப்படம் மற்றும் மேனாட்டு விஞ்ஞானிகள் ஒரு சேர கூறி உள்ளனர்.

இன்னும் ஒருபடி மேலே போய் உலகமே அழிந்துவிடும் என்றும் சிலர் பயமுறுத்துகிறார்கள். அவ்வாறு எதும் நடைபெறாது. உலகின் எந்தப் பகுதியிலாவது சில அசம்பாவிதங்கள் இயற்கை சீற்றங்கள் நடக்கக்கூடும், என அஞ்சப்படுகிறது.

அவ்வாறு எதுவும் நடைபெறாமல் இருக்கவும், உலக நன்மைக்காவும் இயற்கையை வேண்டியும் தென் இந்திய புரோகிதர்கள் சங்கம் சார்பில் புகழ்பெற்ற திருக்கோவிலூர் தென் பெண்ணை நதிக்கரையில் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் வாலாஜா தன்வந்திரிபீடம் ஞாகுரு டாக்டர் முரளிதரசுவாமிகள் காட்பாடி ஸ்ரீ வித்யாபீடம் ஸ்ரீ பாரதிமுரளீதரசுவாமிகள் மேலமங்கலம், திருவாவ டுதுறை ஆதினம் குமரன் தம்பிரான் சுவாமிகள் கலந்துக் கொண்டு துவக்கிவைக்கும் இந்திராதி ஆஷ்டதிக்பாலகர் சிறப்பு யாகங்கள் காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது

அன்று மதியம் 12 மணி 12 நிமிடத்திற்கு நாட்டிலுள்ள அனைவரும் 2 நிமிடங்கள் மவுனமாக உலக நன்மைக்காவும் இயற்கையை வேண்டியும் இறைவனை பிராத்தனை செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  - Page 2 Empty Re: முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» களப்பிர கால இலக்கியத்துள் சிலப்பதிகாரம் பெறும் முக்கியத்துவம்.
» முக்கியத்துவம் பெறும் "முன்னழகு"
» வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா?
» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
» ஜங்கிள் புக் மோஹ்லிய போல கர்நாடகாவில் குரங்குகளின் 2 வயது நண்பன்! டஜன் கணக்கிலான குரங்குகளுடன் குதூகலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum