ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை

5 posters

Go down

யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை Empty யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை

Post by Powenraj Mon Dec 10, 2012 2:42 pm

1. நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.
:-
2.சூரிய உதயத்திற்கு முன்னே காலைவேளை மனதிற்கு மிக மிக நல்லது. காலை மெதுவான சூரிய ஒளியில் செய்தாலும் நல்ல பலன் உண்டு.
:-
3.யோகா செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும். எழுந்தவுடன் நிறைய குளிர் தண்ணீர் குடித்துவிட்டு அரைமணி நேரம் கழித்து காலைக்கடனை முடித்துவிட்டு செய்யலாம்.
:-
4. வெறும் தரையில் செய்யக்கூடாது. தரையில் நல்ல மென்மையான விரிப்பை விரித்து அதன் மேல் செய்ய வேண்டும்.
:-
5. வியர்வை அதிகம் வராது. ஆதலால் உடை எந்த உடை ஆனாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகம் இறுக்காமல் தளர்ச்சியான மற்றும் யோகா செய்வதற்கு எளிதான உடை உடுத்திக்கொள்ளவும்.
:-
6.அவசர அவரசமாக செய்யக்கூடாது. மிக நிதானமாகவே செய்ய வேண்டும். அவசர வேலைகள் இருப்பினும் நிதானமாகவே குறைந்த நேரம் மிக முக்கியஆசனங்களை மட்டுமாவது செய்தால் மற்ற வேலைகளை சிறப்பாக செய்ய உத்வேகம் கிடைக்கும்.
:-
7. தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்கக்கூடாது. பழக பழக வந்துவிடும்.
:-
8.யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள்ளவும்.
:-
9. ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து விட்டு அடுத்த ஆசனத்தை தொடரலாம்.
:-
10.தியானம் செய்த பின் எவ்வாறு சாந்தியோகம் முக்கியமோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கியமாக செய்யவும்.
:-
11. யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய்யக்கூடாது. காலை சூரியஒளி பட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.
:-
12. சில முக்கிய ஆசனங்கள் அதிக நேரம் பயிலக்கூடாது.
:-
13. பக்கத்தில் சுவர் அல்லதுதூண் இருந்தால் அதன் துணையுடன் சிரசாசனம் செய்யலாம்.
:-
14. செய்து முடித்தபின் கடினஉணவானால் அரை மணி நேரம் கழித்தும் நீர் ஆகாரம் 15 நிமிடம் கழித்தும் உட்கொள்ளலாம்.
:-
15. மது, புகை, டீ, காப்பி, அதிக காரம், உப்பு, புளி, அசைவம் இவற்றை தவிர்க்கவும். உடனே விட்டுவிடவேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தால் போதுமானது.
:-
16. உடல் நோய் இருப்பின் அந்த நோய்க்கான யோகப்பயிற்சியை அதிக முனைப்புடன் செய்யவும்.
:-
17. மூளையை அதிகம் உபயோகித்து வேலை செய்பவர்கள் சிரசாசனம், யோகமுத்ரா போன்ற ஆசனங்களை கொஞ்சம் அதிக நேரம் செய்தால் மூளை சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இயங்கும்.
:-
18. ரொம்ப நேரம் கண்விழித்துவேலை செய்தவர்கள் 1 நிமிடம் சிரசாசனம் செய்துவிட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும்.
:-
19. பெண்கள் மாதவிடாய் காலங்களில் யோகாசனம் செய்ய வேண்டாம். தியானம் செய்வதற்கு தடை இல்லை.
:-
20. அதிக தலைவலி இருப்பின் யோகாசனம் செய்வதை தவிர்த்து சவாசனம் மற்றும் யோகநித்திரை செய்யவும்.
:-
21. யோகாசனம் கூறப்பட்ட அதே முறைப்படி செய்தால்தான் பலன் கிடைக்கும் என்றில்லை. எந்த அளவு செய்கிறோமோ அந்த அளவு பலன்கண்டிப்பாக கிடைக்கும்.
:-
22. யோகாசனம் செய்யும் போது மனதில் கோபம், பொறாமை, கவலைஇவற்றை அறவே ஒழித்துவிட்டு நல்ல தன்னம்பிக்கை எண்ணங்களை, சாதிக்க வேண்டியவைகளை நினைவுகூறலாம். அல்லது அமைதியான இசையை கேட்கலாம்.
:-
23. யோகாசனத்தை செய்வோர்கள் ஒரே காலகட்டங்களில் கடின உடற்பயிற்சியை கண்டிப்பாகசெய்யக்கூடாது. யோகா செய்து உடல் வளையும் தன்மைகொண்டிருக்கும் நேரத்தில்கடின உடற்பயிற்சி செய்தால் உடல் சுழுக்கிக்கொள்ள வாய்ப்புஇருக்கிறது.
:-
24. ஒவ்வொரு ஆசனத்திற்குமானமாற்று ஆசனம் செய்தால் அந்த ஆசத்திற்கான முழு பலன் கிடைக்கும்.
:-
25. கடினமான ஆசனங்களை ஆசிரியர் உதவியுடன் மட்டும் செய்யவும்.
:-
நன்றி மாலை மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை Empty Re: யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை

Post by றினா Mon Dec 10, 2012 5:24 pm

ஆரோக்கியமான தகவல்கள்.
அனைவரும் கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை Empty Re: யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை

Post by ஜாஹீதாபானு Mon Dec 10, 2012 5:29 pm

இதுக்கெல்லம் எங்க நேரமிருக்குது

பகிர்வுக்கு நன்றீ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை Empty Re: யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை

Post by அச்சலா Mon Dec 10, 2012 6:23 pm

நன்றி மிக மிக அருமையான பகிர்வு...வாழ்த்துக்கள்..
இப்போது தொடங்கிறேன் ..


யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை Paard105xzயோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை Paard105xzயோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை Paard105xzயோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை Empty Re: யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை

Post by கரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 7:59 pm

நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை Empty Re: யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum