ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

3 posters

Go down

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Empty ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

Post by ச. சந்திரசேகரன் Sun Dec 09, 2012 11:16 pm

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

போன வாரம்-2 வரை நடந்தது

//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு இன்று மாலை இதுகுறித்துப் பேச உள்ளார்.

மனைவி மித்ராவுடன் இதுபற்றி பேச அழைக்கும் போது அழைப்பு மணி ஒலிக்கிறது.

இனி ......//

சந்திரன் ஓடிச்சென்று கதவைத் திறக்க, வாசலில் பக்கத்து வீட்டுப் பையன் பாலன் நிற்கிறான். சந்திரன் "என்னப்பா, என்ன விஷயம்?" எனக்கேட்க
அந்தப் பையன் "அங்கிள், அப்பா நீங்க டுடே ஆர் டுமாரோ ப்ரீயா இருந்தா உங்ககிட்டே ஒரு விஷயம் பேசனுமாம். நீங்க இன்னைக்கு ஈவினிங் ப்ரீயா அங்கிள்?" எனக் கேட்டான்.
சந்திரன், "இல்லப்பா, இன்னைக்கு ஒரு வேலை இருக்கு. நாளைக்கு ஈவினிங் பார்க்கலாம்னு சொல்லு" எனக் கூறிவிட்டு கதவை மூடப் போனார். அதற்குள் கையில் தேநீரோடு வந்த மித்ரா "பாலன், இந்த டீய குடிச்சிட்டு போடா எனக்கூறி, அந்த டீயை நல்ல பக்குவமாக ஆற்றி பாலனிடம் கொடுத்தாள்.
சந்திரன் மித்ராவிடம், "ஏம்மா, நான் அனுபவிக்கிறது பத்தாதா? அவனும் நீ குடுக்கற சுடுத்தன்னிய டீனு குடிக்கணுமா?" என கேளிக்கையாக கேட்க, மித்ரா "பாரு, பாலன், நான் குடுத்த டீ சுடுத்தண்ணி மாதிரியா இருக்கு?" என ஆவலோடு கேட்க,
பாலன் முதலில் மறுத்து, பின் டீயை வாங்கிக்குடித்துவிட்டு "இல்ல...ஆனால் ஆமாம்" என வடிவேலு டயலாக் பேசிவிட்டு "தாங்க்ஸ், ஆண்ட்டி" என்று கூறிவிட்டு சிட்டாய்ப் பறந்தான்.
சந்திரன் சிரித்துக்கொண்டே, "மித்ரா, இப்படி வந்து உட்கார். உன்கிட்ட சீதாவைப் பற்றி பேசணும்" என்றார்.
மித்ரா "ஆமாங்க, நானே கேட்கனும்னு இருந்தேன், சீதா எப்படி இருக்காங்க? வைத்யா அப்பா இறந்த சோகம் குறைந்து, ஸ்கூலுக்கு போறானா? " என ஆவலாய்க் கேட்க,
சந்திரன், "உன்னுடைய இந்த குணம்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. பொதுவா பெண்கள், தன் வீடு, குடும்பம், கணவர், குழந்தைகள் என எப்போதும் ஒரு வட்டத்திலேயே இருக்க நீ மட்டும், அடுத்தவங்க துக்கத்துல பங்கெடுத்துக்கிட்டு ஆர்வமா விசாரிக்கிற பாரு. நீ எனக்கு மனைவியா கிடைச்சதுக்கு நான் ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கணும்" என நெகிழ
மித்ராவோ "இதிலே என்னங்க இருக்கு, ஒரு பொண்ணு மனசு மற்றொரு பொண்ணுக்குத்தானே தெரியும்" என பதிலளித்தாள்.
சந்திரன் தனது திட்டம் பற்றி சுருக்கமாக மித்ராவிடம் கூறிவிட்டு, இன்று மாலை நண்பன் வெங்கியை சந்திப்பது பற்றியும் கூறினார்.

அதே நேரம், சீதா வீட்டில்,
சீதா தன் மகன் வைத்யாவை பள்ளிக்குச் செல்வதற்காக எழுப்பினாள். எழுந்த மகனின் கண்கள் சிவந்து களைப்பாக உள்ளதை கண்டு சீதா "என்னப்பா நேற்று சரியா தூங்கலையா?" எனக் கேட்க,
வைத்யா "இல்லம்மா, அடுத்த வாரம் எனக்கு ப்ரீ போர்டு எக்ஸாம் வருது. அப்பாவின் கடைசி ஆசைப்படி நான் நல்ல மார்க் எடுக்கணும்னு, நேத்து ராத்திரி ஒரு மணி வரை படித்தேன். அதாம்மா" எனக் கூற,
சீதா "போய் குளிச்சிட்டு வந்து சாமிய வேண்டிக்க. அப்பா தெய்வமா இருந்து உனக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சு தருவாரு" என கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே சொன்னாள்.

இரவு எட்டு மணி இருக்கும். சந்திரன் வெங்கி வீட்டிற்க்குச் சென்றார். வெங்கியின் மனைவி சுமதி இருவருக்கும் தேநீர் கொடுத்துக்கொண்டே "எப்படி இருக்கீங்க, வீட்டிலே மித்ரா எப்படி இருக்காங்க? பெரியவன் பிளஸ் டூ வாச்சே, எப்படிப் படிக்கிறான்?" எனக் கேட்க,
சந்திரன் "அதை ஏன் கேக்கறீங்க, எப்போதும் கம்ப்யூட்டர் முன்னாடி தான் இருக்கான், ஏதோ 'மெட்டின் டூ'-னு ஒரு கம்ப்யூட்டர் கேம்ஸ். அதத்தான் விளையாடிக்கிட்டு இருக்கான். வித விதமான மிருகங்களோட சண்டை போட்டுக்கிட்டு இருக்கான். அந்த மிருகங்கள பார்த்தாலே எனக்கு குமுட்டிக்கிட்டு வருது. பத்தாததுக்கு, அவன் தம்பியையும் கூட உட்கார வச்சிக்கிட்டு கெடுக்கறான்" என புலம்ப,
வெங்கி "விடுடா, எல்லாம் நல்லா வருவான். நீ அப்போ எப்படி இருந்த, நீ ஆடாத ஆட்டமா? இப்போ நல்லபடியாத்தானே இருக்கே! அவனும் சரியாயிடுவான்" எனச் சொல்ல
சந்திரன், "நான் கில்லி, கோலி, காத்தாடி, பம்பரம், கிரிக்கெட் எல்லாம் விளையாடினாலும் மனதிற்குள் படிக்க வேண்டுமே என்ற பயம் இருக்கும். ஆனால் அந்த பயம் இந்த கால பசங்க கிட்ட இல்லையே." என ஆதங்கப்பட
வெங்கி, "இந்த காலப் பசங்க விவரமானவங்க. அதனால பயப்படுரதில்லே. எல்லாம் நல்லா வருவான். கவலைப்படாமே நீ வந்த விஷயத்தை சொல்லு" என்றான்.
சந்திரன் திட்டம் பற்றி சுருக்கமாக கூறி, அசோக்கை சந்திப்பதைப் பற்றிக் கூற, அசோக்கை சந்திப்பதற்காக எப்போது வரலாம் எனக்கேட்க அசோக்கிற்கு டெலிபோன் செய்தார். மறுமுனையில், அசோக்கின் மகள் ரேணுகா ரிசிவரை எடுத்து "ஹலோ" என்று கூற,
சந்திரன் "அப்பா இல்லையாம்மா?" எனக் கேட்க, ரேணுகா தன் அப்பாவிடம் ரிசிவரைக் கொடுத்தாள்.
அசோக் "என்ன சந்திரன், எப்படி இருக்கிறீங்க, வீட்டிலே எல்லோரும் சுகமா?" எனக் கேட்க,
சந்திரன் தன் விருப்பங்களை சுருக்கமாக விளக்கிகொண்டிருந்தார். பின்னணியில்,

"மெழுகுவர்த்தி எரிகின்றது, எதிர்காலம் தெரிகின்றது,
புதிய பாதை வருகின்றது ...................................................."

பழைய சிவாஜி பாடல் சூழ்நிலைக்கேற்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

(தொடரும்)


ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்) 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Empty Re: ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

Post by அச்சலா Mon Dec 10, 2012 12:07 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Paard105xzஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Paard105xzஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Paard105xzஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Empty Re: ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

Post by றினா Mon Dec 10, 2012 11:07 am

சூப்பர்.
தொடருங்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Empty Re: ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

Post by ச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 1:32 am

றினா wrote:சூப்பர்.
தொடருங்கள்.
நன்(றி)னா.


ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்) 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்) Empty Re: ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum