ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

+11
அசுரன்
DERAR BABU
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
ரா.ரா3275
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
Muthumohamed
ஜாஹீதாபானு
றினா
அச்சலா
15 posters

Page 35 of 37 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37  Next

Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Empty சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Mon Dec 31, 2012 1:24 am

1 லட்சம் பேருக்கு பட்டங்களை ஆளுநர் ரோசய்யா வழங்கினார்

சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடந்தது. ஆளுநர் ரோசய்யா தலைமை தாங்கி பட்டங்களை வழங்கினார். உயர்கல்விதுறை அமைச்சர் பழனியப்பன், தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவன தலைவர் ஜெனா பேசினர். துணைவேந்தர் விஸ்வநாதன், பதிவாளர் விஸ்வலிங்கம் பங்கேற்றனர்.

2010,2011ம் கல்வி யாண்டில் பிஎட் படித்த 58,853, எம்எட் படித்த 3,131, எம்பில் படித்த 7 மாணவர்களுக்கும், 2011, 2012ம் கல்வியாண்டில் பிஎட் படித்த 55,792, எம்எட் படித்த 2,705 என மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 481 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மர்ம மனிதனால் பரபரப்பு: பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் பழனியப்பன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி மேடைக்கு வந்த மர்மநபர், ஆளுநரிடம் சென்று மனு ஒன்றை கொடுத்தார். உடனடியாக ஆளுநரின் நேரடி பாதுகாவலர் அவரை மடக்கி பிடித்தார். பின்னர், அவரை அங்கு நின்றிருந்த துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மேடைக்கு பின்னால் அழைத்து சென்று விசாரித்தனர். இதனால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது.

-தினகரன்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Mon Dec 31, 2012 1:26 am

பாலியல் கொடுமை தடுக்க கடுமையான சட்டம் வரும்
சென்னை : மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சென்னையில் இருந்து நேற்று நண்பகல் விமானம் மூலம் பெங்களூர் சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் பாலியல் வன்கொடுமையை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது. தனிசிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.

காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது பற்றி மத்திய அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் இல்லாமல் சம்பா சாகுபடி பயிர் கருகி உள்ளது பற்றி மாநில அரசு விரிவான ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். மத்திய அரசு அந்த அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் வைத்து ஆலோசனை நடத்தி நிபுணர்குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்பிவைக்கும். அந்த குழு காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.

முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது, வஞ்சிக்கிறது என்றெல்லாம் பேசுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இன்னும் சொல்லப்போனால் 4 வழிப்பாதை, 6 வழிப்பாதை போன்ற நெடுஞ்சாலை பணிகளுக்கு இந்தியாவிலேயே தமிழகத்துக்குத் தான் அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில்தான் நீண்டதூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நமது நாட்டில் உள்ள அணு உலைகளில் விபத்து நடந்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்க 15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கிவைத்துள்ளது. அணு உலைகளுக்கான உபகரணங்களை வழங்கிய நிறுவனங்களிடமிருந்து முறையான இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வசூலித்துக்கொள்ளும் இதைப்போன்ற பொய் பிரசாரம் செய்பவர்கள் அதை நிறுத்த வேண்டும் என்றார்.

-தினகரன்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Mon Dec 31, 2012 1:28 am

முதல்வர் அறிவிப்பு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.72.8 கோடி மானியம்


சென்னை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.72.8 கோடி மானியமாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் நிதிநிலைமை சீராக்கப்பட, கடந்த ஆண்டு மானியமாக ரூ.82 கோடியே 54 லட்சத்து 57 ஆயிரத்து 662 வழங்கப்பட்டது. தற்போது மாநில அரசின் பங்காக 23 தகுதியுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்து 82 ஆயிரத்து 119 மானியமாகவும், ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை மற்றும் மதுரை ஆகிய நான்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மானியமாக ரூ. 70 கோடியே 20 லட்சத்து 70 ஆயிரத்து 191 என மொத்தம் ரூ. 72 கோடியே 8 லட்சத்து 52 ஆயிரத்து 310 மானியமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

-தினகரன்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Mon Dec 31, 2012 1:29 am

4 மணி நேரத்தில் முடிந்தது டெல்லி மாணவியின் உடல் தகனம்

புதுடெல்லி: டெல்லி மாணவியின் உடலை இன்று அதிகாலையில் தகனம் செய்ய போலீசார் ஏற்பாடுகள் செய்தனர். இதை ரகசியமாக வைத்திருந்தனர். டெல்லியின் தென் மேற்கு பகுதியில் துவாரா செக்டாரில் இந்திய கல்வி மற்றும் கலாசார மையம் நடத்தி வரும் தகன மேடைக்கு அனுமதி பெற முயற்சித்தனர். நேற்றிரவே மையத்தின் அதிகாரிகளை போலீசார் சந்தித்து அனுமதி கேட்டனர். அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் தகனம் செய்துவிட ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், இந்து முறைப்படி சில சடங்குகள் செய்ய வேண்டும். சூரிய உதயத்துக்கு முன்னர் தகனம் செய்ய கூடாது என்று பெற்றோரும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காலை 7.30 மணிக்கு மாணவியின் உடலுக்கு தந்தை தீ மூட்டினார். அப்போது மாணவியின் சகோதரர்கள், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர். டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் மற்றும் மீடியாக்களை அனுமதிக்கவில்லை. சிங்கப்பூரில் இருந்து 3.30 மணிக்கு மாணவியின் உடல் டெல்லி வந்த 4 மணி நேரத்துக்குள் தகனம் முடிந்து விட்டது. தகனம் செய்யும் நேரம், இடம் தெரிந்தால் ஆயிரக்கணக்கானோர் குவிவார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை இருந்தது. அதனால் உடனடியாக தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சப்தர்ஜங் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட்டிடம் 2 முறை மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட் பெண் நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர். இதற்காக சாட்சிகள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

=தினகரன்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Mon Dec 31, 2012 1:30 am

இலங்கை கடற்படை விடுவித்த
நாகை, காரைக்கால் மீனவர்கள் 27 பேர் இன்று ஊர் திரும்பினர்


நாகை: இலங்கை கடற்படை விடுவித்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 27 பேரும் இன்று காலை ஊர் திரும்பினர். நாகை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன், பாலு, செல்வமணி, அஞ்சப்பன், ரவிச்சந்திரன், மணிமாறன், செல்வம், சத்தியன், நாகமணி, கார்த்திகேயன், முருகேசன், காத்தான், கலைவாணன், வாஞ்சிநாதன் ஆகிய 14 பேர் கடந்த 21ம் தேதி 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் 23ம் தேதி மதியம் கோடியக்கரைக்கு கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், படகுகளுடன் 14 பேரையும் கைது செய்து, திரிகோணமலைக்கு அழைத்து சென்று போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் காரைக் கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 20ம் தேதி, கடலுக்கு மீன்பிடிக்க சென்ற முருகவேல், சிங்காரவேல், கந்தசாமி, வேதையன், ஜெயபிரகாஷ், மாணிக்கவேல், பிரபு, எஸ்.ராஜேந்திரன், வினித், பாலா, ஜீவானந்தம், வி.ராஜேந்திரன், காளிதாஸ் ஆகிய 13 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 27 பேரையும் திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததை அடுத்து அவர்களை இலங்கை கடற்படையினர், இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நேற்று காலை ராமேஸ்வரம் மண்டபம் வந்து சேர்ந்தனர். நாகை மீனவர்கள் 14 பேரும் இன்று காலை நாகை துறைமுகம் வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகளும், மீனவர்களின் உறவினர்களும் வரவேற்றனர். இதேபோல் காரைக்கால் மீனவர்கள் 13 பேரும் இன்று காரைக்கால் வந்தனர்.

-தினகரன்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Mon Dec 31, 2012 1:34 am

வங்கிகளிடம் ரூ.25,000 கோடி கடன் கேட்கிறது மத்திய உரத் துறை அமைச்சகம்

மானியம் வழங்குவதற்காக பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.25 ஆயிரம் கோடி கடன்பெற மத்திய உரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் உரத் துறை மானியம் ரூ.1,04,000 கோடி அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வங்கித் துறை சிறப்பு ஒப்பந்தத்தின் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலை உரத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.பொட்டாஷ், டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்களுக்கான மானியத்தை கடந்த ஜூலை மாதம் முதலும், யூரியாவுக்கான மானியத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதலும் உரத்துறை அமைச்சகம் செலுத்தவில்லை என்று உரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக பதிலளிக்க உரத்துறை அமைச்சக அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனினும், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.61,256 கோடியை உரத்துறை அமைச்சகம் ஏற்கெனவே செலவிட்டுவிட்டது. மானியங்களைச் செலுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்று அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், உரத்துறையிடம் இருந்து மானியம் கிடைக்காததால் நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொழில் அமைப்பான இந்திய உர நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது. உரத் தொழில்துறையில் காக்க ரூ.40 ஆயிரம் கோடி வரை அவசரமாகத் தேவைப்படுகிறது.அது கிடைக்காத பட்சத்தில் இத்துறையே முற்றிலுமாக முடங்கி, விவசாயிகளுக்கு உரங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும். எனவே இதுபோன்ற சமயங்களில் பொதுத்துறை வங்கிகளின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கும். 2008-09ஆம் ஆண்டில் உர நிறுவனங்களுக்கு உதவ இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்பட்டது என்று உர நிறுவனங்களின் கூட்டமைப்பின் இயக்குநர் சதீஷ் சந்தர் கூறியுள்ளார்.

-தினமணி


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Tue Jan 01, 2013 11:12 pm

திருத்தணி பெண்ணுக்கு 5 கிலோ எடை குழந்தை

திருத்தணி: திருத்தணியில் பெண் ஒருவருக்கு 5.1 கிலோ எடை கொண்ட குழந்தை பிறந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே. கே. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசுலு. இவரது மனைவி அனிதா (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனிதா திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை 11.38 மணிக்கு ஆபரேஷன் மூலம் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தையின் எடை 5.1 கிலோ என டாக்டர்கள் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டத்திலேயே இந்த அளவு அதிக எடை கொண்ட குழந்தை பிறந்துள்ளது இதுவே முதல் முறை என மருத்துவமனை டாக்டர்கள் வேத பிரியா மற்றும் மோகனன் தெரிவித்தனர்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Tue Jan 01, 2013 11:13 pm

உ.பி.,யில் மருத்துவ மாணவி பெயரில் பள்ளி

பாலியா( உ.பி): டில்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு, சிங்கப்பூரில் மரணமடைந்த மருத்துவ கல்லூரி மாணவியின் சொந்த ஊரான உ.பி.,யின் பாலியா மாவட்டத்தில் உள்ள மெட்வார் காலன் கிராமத்தில் உள்ள துவக்க பள்ளிக்கு, அந்த மாணவியின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவு, மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் எடுக்கப்பட்டதாக கிராம தலைவர் கூறினார். விரைவில் பஞ்சாயத்து கூட்டப்பட்டு பெயர் சூட்டுவதற்கான ஒப்புதல் பெறப்படும் என கூறினார். கிராமத்தில் மாணவியின் நினைவாக கட்டடம் மற்றும் கிராமத்தில் வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும் என மருத்துவ மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Tue Jan 01, 2013 11:14 pm

களி"மண்' சுரண்டலில் பல "கோடி'கள் இழப்பு
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சுற்றி நூற்றுக்கணக்கான கண்மாய்கள், மற்றும் பல லட்சம் ஏக்கர் நிலங்களில், சுரண்டப்படும் "களிமண்'ணால், அரசிற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மதுரை மெகா கிரானைட் சுரண்டலுக்கு, ஈடாக மாவட்டத்தில் களிமண் கொள்ளை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.

வறண்ட ராமநாதபுரம் மாவட்ட, "வானம் பார்த்த பூமி'யில், பரமக்குடி, நயினார்கோவில், போகலூர் உள்ளிட்ட பகுதிகளில், நூற்றுக்கணக்கான கண்மாய்கள் உள்ளன. மாவட்டத்தில் விவசாயம், பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மழையை நம்பி பல ஆயிரம் ஏக்கரில் விதைத்த விவசாயிகள், வைகை ஆற்று நீரை எதிர்நோக்கி இருந்தனர்.
வைகையில் இருந்து விவசாயத்திற்கு திறந்துவிடப்படும் நீர், பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து, சிவகங்கை, ராமநாதபுரம் கண்மாய்களுக்கு பிரித்து விடப்படுகிறது. வரத்து கால்வாய் மூலம் கண்மாய்க்கு தண்ணீர் வரும். ஆனால் சமீப ஆண்டுகளாக மழை இன்றியும், வைகை ஆறும் "கை'விரித்த விட்ட நிலையில், கண்மாய்களும் காய்ந்துள்ளன. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும், கரிமூட்டம், செங்கல் காளவாசல் தொழில் "களை' கட்டி வருகிறது.

பாதாள அளவிற்கு பள்ளம் தேண்டி :

செங்கல் தயாரிப்பில் பிரதானமாக சவடு மண்(களிமண்), மணல், தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக காளவாசல் வைத்திருப்பவர்கள், தனியார் நிலங்கள், மற்ற எந்த இடத்தில் மண் அள்ளினாலும், மாவட்ட கனிமவளத்துறையினரின் அனுமதியுடன் மட்டுமே எடுக்க முடியும். இவ்வாறு அனுமதி பெற்ற கண்மாய்களில் 3 மீட்டர், தனியார் நிலங்களில் 2.15 மீட்டர் ஆழத்தில் மட்டுமே களிமண் அள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், செங்கல் காளவாசல் அதிபர்கள் பலரும், ஆளும், ஆண்ட கட்சிகளின் பிரமுகர்களாக உள்ளதால், மண் கொள்ளை, அதிகாரிகளின் துணையோடு சக்கை போடு போடுகிறது. அதிகாரிகளுக்கு, தாராளமாக வாரி இறைக்கப்படுகிது. அரசு இயந்திரத்திற்கு "கண்'கள் கட்டப்பட்ட நிலையில், பெயரளவிற்கு அனுமதி வாங்கிக் கொள்கின்றனர். இதன் படி ஒவ்வொரு கண்மாய்களிலும், கருவேல மரங்களை வெட்டி வழி ஏற்படுத்திக் கொண்ட பின்னர், அதில் உள்ள களிமண்ணை இஷ்டத்திற்கு அள்ளிக் கொள்கின்றனர். மழைக்காலங்களிலும் களிமண் கொள்ளையை அரங்கேற்ற, ஒரு சில கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தாலும், மடைக் கண்களை கூட எட்டிப்பார்க்க முடியாத அளவிற்கு பாதாள அளவிற்கு பள்ளம் தேண்டி வைத்துள்ளனர். இதில் தஞ்சமடையும் தண்ணீர், பயன்பாட்டிற்கு வராமலேயே காய்ந்து விடுகிறது.

பல கண்மாய்கள் "கபளீகரம்':

வைகை ஆற்று மணல் கொள்ளையால், தரை தட்டிப் போன ஜீவநதிக்கு மத்தியில், கண்ணுக்கு தெரியாமல் பல கண்மாய்கள் "கபளீகரம்' செய்யப்படுவது தொடர்கதையாகியுள்ளது. இதன் மூலம் வறண்ட, "தண்ணி இல்லா காட்டிற்கு' மாறுதல் ஆகி வரும் அதிகாரிகள், ஓராண்டு பணியில் இருந்து சென்றாலும், சகல வசதியுடன் "பிரியாவிடை' பெற்று செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் கண்மாய்களில் குடிகொண்டுள்ள கருவேல மரங்கள், களிமண்ணை, அரசு முøறாக டெண்டர் விட்டு, பல கோடி வருவாய் ஈட்டி, மக்கள் பணிகளை வளமுடன் செயல்படுத்த முடியும். இது குறித்து நேர்மையான அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பல கண்மாய்களில், கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. இதனை பயன்படுத்தி அரசு கூறும் 3 மீட்டர் ஆழத்திற்கும் அதிகமாக களிமண் அள்ளப்பட்டுள்ளன. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் தேக்குவது என்பது கானல் நீராகியுள்ளது. மாவட்ட நிர்வாகம், தனி அதிகாரிகளை நியமித்து கண்மாய்களை ஆராய்ந்தால், பல கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டது அம்பலமாகும், என்கின்றனர். இயற்கை வளங்களை பாதுகாக்க, வருங்கால சந்ததிகள் வளமுடன் வாழும் நோக்கில், விவசாயம் செழிக்க களிமண் கொள்ளையை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Tue Jan 01, 2013 11:16 pm

பெண்கள் போன் செய்தால் போதும்: "கவனிக்க' அடியாட்களை அனுப்புகிறது சிவசேனா

மும்பை:டில்லியில் மருத்துவ மாணவி, பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்டதை அடுத்து, பெண்கள் பாதுகாப்பிற்காக, சிவசேனா இளைஞர் அணி, பெண்களுக்கான, "ஹெல்ப் லைன்' துவக்கியுள்ளது. மறைந்த பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அந்த தினத்தன்று, இளம் ஜோடிகளை அடித்து விரட்டிய அந்த கட்சி, இப்போது, பெண்களின் பாதுகாவலர்களாக மாறியுள்ளது.

பால் தாக்கரேயின் பேரன், ஆதித்ய தாக்கரே தலைமையிலான, "சிவசேனா யுவ சேனா' அமைப்பு, மும்பை பெண்களுக்கான, 24 மணி நேர, ஹெல்ப் லைனை ஏற்படுத்தியுள்ளது.
பிறரால் தங்களுக்கு தொந்தரவு என கருதும் பெண்கள், இந்த எண்களை தொடர்பு கொண்டால் போதும், அந்த இடத்தில் வந்திறங்கும் சிவசேனா கட்சியினர், தொந்தரவு செய்பவர்களை, நன்கு, "கவனித்து' விடுவர்.

டில்லி சம்பவத்தை அடுத்து, சில நாட்களுக்கு முன் தான், மும்பையில் இந்த வசதியை, ஆதித்ய தாக்கரே ஏற்படுத்தியுள்ளார். தினமும், 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாக கூறப்படுகிறது.அதுபோலவே, சிவசேனாவில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்து, முன்னணி தலைவராக விளங்கும், முன்னாள் முதல்வரும், இப்போதைய, மாநில அமைச்சருமான, நாராயண் ரானேயின் மகன், நிதேஷ் ரானே நடத்தி வரும், "சுவாபிமான் சங்கத்னா' அமைப்பும், பெண்களின் பாதுகாவலர்களாக மாறியுள்ளது.

இது பற்றி, ரானேயின் அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறியதாவது:எங்களுக்கு அழைப்பு வந்த உடனேயே அந்த இடத்தில் உள்ள எங்கள் கட்சியினரை உஷார்படுத்தி, சம்பவ இடத்திற்கு அனுப்பி, அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்குவோம். அடுத்த சில நிமிடங்களில், போலீசுக்கும் தகவல் தெரிவித்து, அவர்களும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்வோம். தொடர்ந்து சில நாட்களுக்கு அந்த விவகாரத்தை கண்காணிப்போம். இதனால் அந்த பெண்ணுக்கு, முழு அளவில் பாதுகாப்பு கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 35 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 35 of 37 Previous  1 ... 19 ... 34, 35, 36, 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum