புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
44 Posts - 43%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
3 Posts - 3%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
2 Posts - 2%
Barushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

Page 20 of 37 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 28 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 12:05 am

கர்நாடக மாநிலத்தை 2 ஆக பிரிக்க வேண்டும்: மாநில மந்திரி கருத்து

கர்நாடக மாநிலத்தை 2 ஆக பிரித்து வடக்கு கர்நாடகா என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என அம்மாநில வேளாண்மை துறை மந்திரி உமேஷ் கட்டி கூறியுள்ளார்.

கர்நாடக புதிய சட்டமன்றமான சுவர்ண சவுதாவில் உமேஷ் கட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

வரும் 2020க்குள் இந்தியாவில் 50 மாநிலங்கள் உருவாகிவிடும். இந்த மாநிலங்களில் ஒன்றாக வடக்கு கர்நாடகாவும் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒன்றுபட்ட கர்நாடகாவின் முதல் மந்திரியாக நான் இருந்தால், வடக்கு கர்நாடகாவின் முதல் மந்திரியாக என் மகன் இருப்பான்.

இவ்வாறு அவர் கூறினார்.

--மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 12:07 am

இலங்கை ராணுவத்தில் சேர்ந்த தமிழ் பெண்கள் சித்ரவதையா?: மயக்க நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி

இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ் பெண்கள் மயக்க நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ராணுவத்தில் சமீபத்தில் தமிழ் பெண்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் கிளிநொச்சிக்கு மேற்கே சுமார் 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணபுரம் என்ற இடத்தில் உள்ள பெண்கள் ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

முன்னர் இதை விடுதலைப்புலிகள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இலங்கை ராணுவத்தின் பெண்கள் படை பிரிவின் 6-வது பட்டாலியன் தளமாக இது திகழ்கிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு பயிற்சியில் ஈடுபட்டவர்களில் 16 பெண்கள் திடீரென மயக்கம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு பயங்கர சத்தம் கேட்டதை தொடர்ந்து பேய் பயத்தினால் மனரீதியாக பாதிக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால் 7 தமிழ் பெண்கள் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறியுள்ளார்.

பயத்தால் மனரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறுவதை அப்பெண்களின் பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர். உண்மையில் அங்கு ஏதோ சித்ரவதை நடந்துள்ளது. ஆனால்தான் தங்களது மகள்களுக்கு இக்கதி ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்கின்றனர்.

ஏனெனில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களை பார்க்க அவர்களது பெற்றோர் அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் அங்கு தனி அறையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ராணுவ டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மட்டுமே அவர்களை கவ னித்து வருகின்றனர்.

ஏற்கனவே பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பெண்களை முகாமுக்குள் சென்று சந்திக்க பெற்றோர் அனுமதிக்கப்படவில்லை. செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே தங்களது பெண்கள் சித்ரவதை கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம். அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் கருதுகின்றனர். சிகிச்சை பெற்று வரும் பெண்கள் யார் என்ற தகவல் தெரியாத நிலையில் இலங்கை ராணுவத்தில் சேர்ந்த தமிழ் பெண்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கலக் கத்துடன் ஆஸ்பத்திரி முன்பு கூடியிருந்தனர்.

இதற்கிடையே ராணுவத்தில் சேர்ந்துள்ள 103 தமிழ் பெண்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்து மனு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 12:08 am

அமெரிக்காவில் 2043-ம் ஆண்டில் வெள்ளையர்கள் மைனாரிட்டி ஆகிறார்கள்

அமெரிக்காவில் 2043-ம் ஆண்டில் வெள்ளைக்காரர்கள் மைனாரிட்டி ஆகிறார்கள் என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் வருகிற 2060-ம் ஆண்டில் மக்கள் தொகையின் நிலை என்ன என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அறிக்கையை மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம் வெளியிட்டது.

அதில் தற்போது மெஜாரிட்டி ஆக இருக்கும் வெள்ளைக்காரர்கள் வருகிற 2043-ம் ஆண்டில் மைனாரிட்டி ஆவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளையர்களோ அல்லது கறுப்பர்களோ மெஜாரிட்டி என்ற அந்தஸ்தை பெற முடியாது.

அவர்கள் இருவரும் சம அந்தஸ்தை பெறுவார்கள். தற்போது 37 சதவீதம் மைனாரிட்டி ஆக இருப்பவர்கள் 2060-ம் ஆண்டில் 57 சதவீதம் ஆக மக்கள் தொகையில் உயருவார்கள். இதன்மூலம் தற்போது 11 கோடியே 62 லட்சமாக இருக்கும் அவர்களின் மக்கள் தொகை 24 கோடியே 13 லட்சமாக உயரும்.

அதே நேரத்தில் 2024-ம் ஆண்டில் 19 கோடியே 78 லட்சம் ஆக இருக்கும் வெள்ளையர்களின் மக்கள் தொகை 2060-ம் ஆண்டில் படிப்படியாக 2 கோடியே 6 லட்சம் பேர் குறைவர்.

தற்போது அமெரிக்காவில் வாழும் ஆசிய மக்கள் தொகை இருமடங்கு அதிகரிக்கும். 2012-ம் ஆண்டில் வாழும் 1 கோடியே 59 லட்சம் பேரின் எண்ணிக்கை, 3 கோடியே 44 லட்சமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 12:09 am

சனிகிரக சந்திரனில் 400 கி.மீ. நீள ஆறு: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சனி கிரக சந்திரனில் 400 கி.மீட்டர் நீளத்துக்கு ஆறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா மையம் சனி கிரகத்தை ஆய்வு செய்ய 'ஹாசினி' என்ற செயற்கை கோளை அனுப்பியுள்ளது. அது கடந்த செப்டம்பர் 26-ந்தேதி துல்லியமாக எடுக்கப்பட்ட போட்டோவை அனுப்பியது.

அதன் மூலம் சனி கிரகத்தின் சந்திரன் (துணைக்கோள்) ஆன டைட்டனில் ஆறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டைட்டனின் வட பகுதியில் இருந்து புறப்பட்டு கிராக்கன்மரே என்ற கடலில் கலக்கிறது.

இந்த ஆறு சுமார் 400 கி.மீட்டர் நீளத்துக்கு பரந்து விரிந்து கிடக்கிறது. இதை குட்டி நைல் நதி என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் உள்ள நைல் நதி 6700 கி.மீட்டர் நீளம் கொண்டது.

இவை தவிர மழையின் மூலம் உருவாகும் திரவப்பொருள் ஏரிகள் மற்றும் ஆறுகள் வழியாக கடலில் கலக்கின்றன. இந்த திரவப் பொருளை தண்ணீர் என கருதமுடியாது. ஏனெனில் இது மீத்தேன் மற்றும் ஈத்தேன் அடங்கிய ஹைட்ரோ கார்பன்களின் கூட்டுப் பொருள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கு வெப்ப நிலை மிகவும் குறைவாக இருப்பதால் இந்த திரவம் உறைந்த நிலையில் காணப்படுகிறது. இது குறித்து 'நாசா'வின் ஜெட் ஆய்வக அதிகாரி ஸ்டீவ் வால் கூறும்போது, சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்த படியாக டைட்டனில் மட்டுமே பரந்த கடல் பகுதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்..

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 12:10 am

ஜெர்மனி நாட்டில் ரெயில் நிலையத்தில் கிடந்த பையில் வெடிகுண்டுகள்
ஜெர்மனி நாட்டில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பான் நகரில் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் நீலநிற டிராவல் பை ஒன்று நீண்ட நேரமாக அனாதையாக கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை கைப்பற்றி சோதனை நடத்திய போது வெடிகுண்டு மற்றும் அதை வெடிக்க செய்வதற்கான சாதனங்கள் இருந்தன.

உடனே அவற்றை போலீசார் கைப்பற்றி 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரி கூறும்போது, 'இது வெடித்திருந்தால் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். தக்கநேரத்தில் கைப்பற்றி செயல் இழக்க செய்து விட்டோம்' என கூறினார்.

-மாலைமலர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 12:33 am

ஒரே நாளில் 95 வழக்குகளில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி

இந்த மாதத்துடன் ஓய்வு பெற இருப்பதால், நேற்று ஒரே நாளில் 95 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர்.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகிப்பவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார். இவர் டிசம்பர் 30ம் தேதியோடு ஓய்வு பெற உள்ளார். இந்த மாதம் 17ம் தேதி முதல் 15 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் குளிர்கால விடுமுறை விடப்படவிருப்பதால், இன்றுதான் அவரது கடைசி பணிநாளாகும்.

இந்த நிலையில், தான் விசாரித்து வந்த 95 வழக்குகளை விரைவாக நடத்தி முடித்து, அவற்றுக்கான தீர்ப்பை நேற்று ஒரே நாளில் வழங்கி முடித்துள்ளார் சுவதந்தர் குமார்.

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பது உள்பட, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு என 95 வழக்குகளில் ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

-தினமணி

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 12:35 am

ஒன்றியத் தேர்தலில் வாக்குச் சீட்டைக் கிழித்துப் போட்ட கவுன்சிலருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத் தேர்தலின்போது, ஓட்டுச் சீட்டைக் கிழித்துப் போட்ட கவுன்சிலருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, அதனை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஒன்றிய துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில், 18 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

இந்த ஒன்றியத் துணைத் தலைவர் தேர்தலில் சீனிவாசன் என்ற கவுசிலரும், சாந்தகுமாரி என்ற கவுன்சிலரும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலின்போது, சீனிவாசனுக்கு ஆதரவாக 9 ஓட்டுகளும், சாந்தகுமாரிக்கு ஆதரவாக 8 ஓட்டுகளும் விழுந்தன. ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாகிவிட்டது. இதனை உறுதி செய்து வெளியிட்டார் தேர்தல் அதிகாரி.

ஆனால், தான் தோற்றது தெரிந்தவுடன் சாந்தகுமாரி வாக்குச்சீட்டுகளை கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதை அடுத்து தேர்தல் அதிகாரி தேர்தலை நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில் மீண்டும் சாந்தகுமாரி தரப்பு தாமாகவே ஒரு தேர்தலை வைத்து அவர்தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாம். இந்நிலையில், சீனிவாசன் இந்த விஷயத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று, உரிய நடவடிக்கை கோரி வழக்கு தொடுத்தார்.

இது தொடர்பான விசாரணை நீதிபதி தமிழ்வாணன் முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தில் நடைபெற்ற சம்பவங்களை எல்லாம் வீடியோவாகப் பதிவு செய்து, அந்த சி.டி.யினை நீதிமன்றத்தில் போட்டுக் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை ஒரு ஆதாரமாக சீனிவாசன் தனது தரப்பில் இருந்து அளித்திருந்தார்.

இரு தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் இந்த சி.டி.யைப் போட்டுப் பார்த்து, சாந்தகுமாரி ரகளையில் ஈடுபடுவதையும், ஓட்டுச் சீட்டுகளை கிழித்தெறிந்து ஆர்ப்பாடம் செய்வதையும், பெட்டிகளை உடைப்பதையும் கண்ட நீதிபதி, இன்று தனது தீர்ப்பினை அளித்தார்.

இந்தத் தேர்தலில் சீனிவாசன் வெற்றி பெற்றார், என்றும் சாந்தகுமாரி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது தெரிந்ததால் அவர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு இழப்பு ஏற்பட்டதால் ரூ.50 ஆயிரம் அபராதத்தை தேர்தல் ஆணையத்துக்கு அவர் அளிக்க வேண்டும் என்றும், இன்னும் 2 வார காலத்துக்குள் சீனிவாசன் வெற்றி பெற்றார் என்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்றும், ரகளையில் ஈடுபட்டு சேதம் விளைவித்த சாந்தகுமாரி மீது உரிய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார் நீதிபதி தமிழ்வாணன்.

இதில் குறிப்பிடத் தக்க விஷயம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், ஒரு ஆதாரத்தை சிடி மூலமாகப் பார்த்து தீர்ப்பு சொல்லப்பட்டது இதுவே முதல்முறை!

-தினமணி

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Dec 15, 2012 12:23 pm

அனைத்தும் அருமையிருக்கு
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 6:27 pm

சென்னை- மதுரை இடையே இ‌ன்று முத‌ல் துரந்தோ இரயில்!

சென்னை செ‌ன்‌ட்ரலில் இருந்து மதுரைக்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கும் புதிதாக துரந்தோ எக்ஸ்பிரஸ் இர‌யி‌ல்கள் இ‌ன்று முத‌ல் இய‌க்க‌ப்படு‌கிறது. முத‌ல்வ‌ர் ஜெய‌‌ல‌லிதா கொடியசை‌த்து தொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்.

துரந்தோ இரயில் என்பது வழியில் எங்கும் நிற்காமல் செல்லும் புயல் வேக இரயில் ஆகும். இதில் அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும். இந்த இரயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, இந்த இரு இரயில்களும் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

சென்னை-மதுரை இடையேயான துரந்தோ இரயில் (22205) திங்க‌ள், புதன் தோறும் சென்‌ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக சென்று மறுநாள் காலை 7 மணிக்கு மதுரையை சென்று அடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில், அந்த இரயில் (22206) மதுரையில் இருந்து செவ்வாய், வியாழ‌ன் தோறும் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்னை சென்‌ட்ரலை வந்து அடையும். இந்த இரயிலின் பயண நேரம் 8 மணி 30 நிமிடங்கள்.

சென்னை-திருவனந்தபுரம் துரந்தோ இரயில் (22207) சென்‌ட்ரலில் இருந்து செவ்வாய், வெள்ளி தோறும் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்று அடையும்.

மறுமார்க்கத்தில் அந்த இரயில் (22208) திருவனந்தபுரத்தில் இருந்து புதன், சனி தோறும் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்னை சென்‌ட்ரலை வந்து அடையும்.

இந்த இரயிலின் பயண நேரம் 12 மணி 45 நிமிடங்கள் ஆகும். சாதாரணமாக சென்‌ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில்களின் பயண நேரம் 16 மணி 45 நிமிடங்கள்.

இந்த இரு துரந்தோ எக்ஸ்பிரஸ் இரயில்களிலும் தலா 12 குளு குளு வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இதில் முதல் வகுப்பு ஏ.சி. ஒரு பெட்டியும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் மூன்றும், 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் ஒன்பதும் இடம்பெற்று இருக்கும்.

இந்த இரண்டு துரந்தோ இரயில்களின் தொடக்க விழா சென்னை சென்ட‌்ரல் இரயில் நிலையத்தில் இன்று மாலை 5.15 மணிக்கு கோலாகலமாக நடைபெற உள்ளது. ‌விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு கொடி அசைத்து துரந்தோ இரயில்களை தொடங்கி வைக்கிறார்.

நன்றி:வெப்தூனியா

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 6:29 pm

‌பி‌ச்சை எடு‌த்தாலு‌ம் எடு‌ப்பே‌ன், கோழையாக வாழ ‌‌விரு‌ம்ப மா‌ட்டே‌ன் - ர‌ஜி‌னிகா‌ந்‌த்

அர‌சியலு‌க்கு வருவது கு‌றி‌த்து உங்கள் நிலையை இ‌ப்போது தெரிவிக்கவில்லை என்றால், உங்களை கோழையாக நினைத்து விடுவார்கள் என்ற பே‌ச்சு‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த நடிகர‌் ர‌ஜி‌னிகா‌ந்‌த், ''நான் பிச்சை எடுத்தாலும் எடுப்பேன், கோழையாக வாழ விரும்ப மாட்டே‌ன்'' என கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் ‌ர‌ஜி‌‌னி‌யி‌ன் 63வது பிறந்த நாள் விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்‌றிரவு நடந்தது. இ‌ந்த ‌விழா‌வி‌ல் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கருணாஸ், பாண்டு, கே.ராஜன், பட அதிபர்கள் எஸ்.தாணு, எஸ்.வி.ரமணன் ஆகியோரும் பேசினர்கள்.

விழாவில் கலந்துகொண்டு நடிக‌ர் ரஜினிகாந்த் பேசுகை‌யி‌ல், பொதுவாக நான் என் பிறந்த நாளில் சென்னையில் இருப்பதில்லை. ஏதாவது வெளியூருக்கு சென்று விடுவேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒருமுறை நான் சென்னையில் பிறந்தநாளை கொண்டாடியபோது, வெளியூரில் இருந்து வந்த ரசிகர்கள் மூன்று பேர் ஊருக்கு திரும்பி போகும்போது, விபத்தில் சிக்கி இறந்து விட்டார்கள். அந்த ரசிகர்களின் பெற்றோர்கள் என்னை சந்தித்து, ஒரு கேள்வி கேட்டார்கள். என்னால் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

அதில் இருந்து நான் பிறந்த நாள் அன்று சென்னையில் இருப்பதில்லை. நான் உடல்நலக்குறைவாக இருந்தபோது, எனக்காக எத்தனையோ ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அந்த பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். அந்த ரசிகர்களை சந்திப்பதற்காகவே இந்த பிறந்தநாளின்போது சென்னையில் இருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு என் உயிர் நண்பன், என் வலது கை, எனக்கு அனுமார் மாதிரி இருந்த நண்பன் காந்தி மாரடைப்பால் இறந்து விட்டான்.

எங்க அப்பா, அம்மா, அண்ணன், சில நண்பர்கள் இறந்தபோதுகூட நான் அத்தனை துக்கப்பட்டதில்லை. அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. மறுநாள் காலை உங்களை எல்லாம் பார்த்ததில், எனக்கு மகிழ்ச்சி. அது, ஆண்டவன் செயல். காந்தியின் மரணத்தினால் ஏற்பட்ட சோகத்தை போக்க, ஆண்டவன் உங்களை அனுப்பியிருக்கிறார். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால்கூட, இது யாருக்கும் கிடைக்காது. நான் எதற்கும் கூட்டம் சேர்க்க ஆசைப்பட்டதில்லை. ‘ஷோ’ பண்ண வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டேன். என் பிறந்த நாள், மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது. ரசிகர்கள் ஊர்களுக்கு பத்திரமாக திரும்பி போக வேண்டும் என்ற கவலை எனக்கு உண்டு.

பெரிய பெரிய மகான்கள் தங்களுக்கு தெரிந்த வித்தைகளை தங்கள் சிஷ்யர்களுக்கு கற்றுக் கொடுத்து விடுவார்கள். அப்படி கற்றுக் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் பிரம்ம ராட்சதர்கள் ஆகிவிடுவார்கள். மரங்கள், குளங்களில்தான் அவர்கள் இருப்பார்கள். அதனால் எல்லா மகான்களும், சித்தர்களும் தங்கள் சிஷ்யர்களை தேடிப்பிடித்து, வித்தைகளை கற்றுக் கொடுத்து விடுவார்கள். அதுமாதிரி என் ரசிகர்கள் பலம் மிகுந்த ஆட்கள்.

நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று இங்கே சிலர் பேசினார்கள். அரசியல் கடல் மாதிரி. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். தமிழ் மக்களை சார்ந்தவன். தமிழ் மக்கள், என்னை வாழ வைத்த தெய்வங்கள். 1996ல் ஒரு சூழ்நிலை என்னை அரசியலில் ஈடுபட வைத்தது. இப்போது நீங்கள் உங்கள் நிலையை தெரிவிக்கவில்லை என்றால், உங்களை கோழையாக நினைத்து விடுவார்கள் என்றார்கள்.

நான் பிச்சை எடுத்தாலும் எடுப்பேன். கோழையாக வாழ விரும்ப மாட்டேன். நான் ஆதரித்து விட்டேன் என்பதற்காக, 5 வருடங்கள் அவர்களை ஆதரித்தேன். அப்புறம் நான் யாரையும் ஆதரிக்கவில்லை. பிறகு என் படம் தொடர்பாக, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது. அவர்களை கீழே தள்ள வேண்டும் என்று எதிர்க்கவில்லை. அந்த சமயத்தில் நான் சிகரெட் பிடிப்பதை விட்டேன். இன்றுவரை தொடவில்லை.

அரசியல் சாதாரண விஷயம் அல்ல. யாரையும் சந்தோஷப்படுத்துவதற்காக, பொய்யான வாக்குறுதியை அளிக்க நான் விரும்பவில்லை. அரசியல் தலைவர்கள் யாரும் ஜனங்களுக்கு கெட்டது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. நல்லது செய்யத்தான் விரும்புவார்கள். ஆனால் அவர்களால் செய்ய முடியாது. சிஸ்டம் அப்படி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும், நாட்டிலும் யார் தலைவராக வரவேண்டும் என்பதை நிர்ணயிக்க ஒரு சக்தி இருக்கிறது. ஒரு காலத்தில், நான் நிறைய குடித்தேன். குடி இல்லையென்றால் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன். திருமணம் ஆனபின், என் மனைவி லதாவின் அன்பினால் குடிப்பதை குறைத்துக் கொண்டேன். ஆனால், சிகரெட்டை மட்டும் விடமுடியவில்லை. என் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு அந்த சிகரெட்தான் காரணம். தயவுசெய்து ரசிகர்கள் யாரும் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள். அந்த பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள்.

நான், ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது, எனக்கு சுய நினைவில்லை. அதன்பிறகு சிங்கப்பூருக்கு போய் சிகிச்சை பெற்றேன். அங்கு கொடுத்த மருந்தின் பாதிப்பு 6 மாதங்களுக்கு இருந்தது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக 100 சதவீதம் நன்றாக இருக்கிறேன். டாக்டர்கள் எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். இது, ஒரு மிராக்கிள் என்கிறார்கள். அந்த மிராக்கிள் என் ரசிகர்களின் பிரார்த்தனைதான். பிரார்த்தனைகள்தான் என்னை வாழவைத்தது. உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அம்மா, அப்பாவை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையையும், வீட்டையும் சொர்க்கமாக்கிக் கொள்ளுங்கள் எ‌ன்று ரஜினிகாந்த் பேசினார்.

-வெப்தூனியா

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 20 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

Page 20 of 37 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 28 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக