ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா

+11
அசுரன்
DERAR BABU
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
ரா.ரா3275
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
Muthumohamed
ஜாஹீதாபானு
றினா
அச்சலா
15 posters

Page 17 of 37 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 27 ... 37  Next

Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Empty சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:03 pm

"கல்லறை செல்லும் வரை அ.தி.மு.க.,வில் இருப்பேன்' :நாஞ்சில் சம்பத் உருக்கம்

சென்னை: ""கல்லறைக்குச் செல்லும் வரை, அ.தி.மு.க.,வில் நீடிப்பேன்,'' என, நாஞ்சில் சம்பத் பேசினார்.
ம.தி.மு.க.,வில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத், சமீபத்தில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு, கட்சியின், துணை கொள்கை பரப்புச் செயலர் பதவியை, முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., பொதுக் கூட்டங்களில் பேசப் போவதாக சம்பத் அறிவித்தார். அவரின் முதல் பொதுக் கூட்டம், அ.தி.மு.க., இலக்கிய அணி சார்பில், சென்னை, மயிலை மாங்கொல்லை திடலில், நேற்று நடைபெற்றது.

இதில், சம்பத் பேசியதாவது: ஒரு காலை இழந்தவன், இன்னொரு காலை நேசிப்பதைப் போல, நான் அ.தி.மு.க.,வை நேசிக்கிறேன். ஏற்கனவே இருந்த இயக்கத்தில் கிடைத்த கசப்புகளை, கசக்கி எறிந்து விட்டு வந்திருக்கிறேன். இனி, அந்த இயக்கத்தைப் பற்றியோ, அதன் தலைமையைப் பற்றியோ, விமர்சிக்க மாட்டேன். அ.தி.மு.க., சிறப்புகளைப் பற்றியும், இந்த ஆட்சிக்கு கருணாநிதி கொடுக்கும் தொல்லைகள் பற்றியும் விரிவாகப் பேசுவேன். கருணாநிதி, இந்த ஆட்சிக்கு தோள் கொடுக்க முடியாவிட்டாலும், தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் போதும். காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போன்றவற்றில், தமிழகத்திற்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி. இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், துரோகத்தை தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் இன்று நிலவும், மின் வெட்டுக்கு காரணம், கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., ஆட்சி தான். மத்திய அரசிடம் உபரியாக இருக்கும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல், தடை செய்கிறார்.
மத்திய அரசில், வலுவாக இருக்கும் தி.மு.க., தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்கு, உதவி செய்யாமல், தடையாக நின்று வருகிறது. கட்சியிலும், ஆட்சியிலும், குடும்பத்தினரை முதன்மைப்படுத்தவே, கருணாநிதி விரும்புகிறார்.
"நான் தி.மு.க.,வில் சேரப் போகிறேன்' என, பொய் பிரசாரத்தையும் மேற்கொண்டனர். என் உயிருள்ள வரை, நான் அ.தி.மு.க.,வில் தான் இருப்பேன். தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் பாடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
இலக்கிய அணி செயலரும், சமூக நலத்துறை அமைச்சருமான வளர்மதி, கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சென்னை மேயர் சைதை துரைசாமி, எம்.பி., ராஜேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் செந்தமிழன், ராஜலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-தின மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:39 pm

வெனிசுலா அதிபரின் நிலைமை கவலைக்கிடம்: விரைவில் குணமடைய பிரார்த்தனைக்கு வேண்டுகோள்

வெனிசுலா நாட்டை கடந்த 14 ஆண்டுகளாக ஆண்டு வரும் அதிபர் ஹூகோ சாவெஸ் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார்.
குடல் புற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவருக்கு முன்பு கியூபாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு மீண்டும் கியூபாவில் புற்று நோய் ஆபரேஷன் நடந்தது. அறுவை சிகிச்சை மூலம் புற்று நோய் செல்கள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டதாகவும், தற்போது அவர் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் துணை அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்தார்.

ஆனால் அதிபரின் நிலை இன்று கவலைக்கிடமாக உள்ளது. எனவே நாடு இக்கட்டான ஒரு சூழ்நிலையை சந்திக்கவுள்ளது. அவர் பூரண குணம் அடைந்து நாடு திரும்ப நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய துணை அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால், மிகச்சிறப்பான ஆட்சி நடத்திவந்த அதிபர் ஹூகோ சாவெசின் 14 வருட கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இது வெனிசுலா மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:47 pm

இங்கிலாந்தில் இந்திய நர்சு தற்கொலை விவகாரம்: இறப்பதற்கு முன்பு எழுதிய 3 கடிதங்கள் சிக்கின

ஆஸ்திரேலிய ரேடியோ நிறுவனத்தினர் நகைச்சுவை நிகழ்ச்சிக்காக இங்கிலாந்து இளவரசி கேத்தே மிடில்டன் சிகிச்சை பெற்ற லண்டன் மருத்துவமனைக்கு போன் செய்தனர். அப்போது போனை எடுத்த இந்திய வம்சாவளி நர்சு ஜெசிந்தாவிடம் கேத்தே மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம்ஸ் குரலில் பேசி கேத்தே மிடில்டன் பற்றிய மருத்துவ குறிப்புகளை பெற்றனர்.

பின்னர் இது வானொலி நிகழ்ச்சி என்பது தெரிய வர, ராணி குடும்பத்தின் குடும்ப ரகசிய விவரங்களை தான் வெளியிட்டுவிட்டோமே என்று பயந்த நர்சு ஜெசிந்தா மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தற்கொலை செய்வதற்கு முன்பு தற்கொலை குறித்தது ஜெசிந்தா எழுதிய மூன்று கிடைத்துள்ளதாகவும், தூக்கிலிட்டு கொண்டபோது அவரது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணை செய்த காவலர்கள் தெரிவித்து உள்ளனர்.

வெஸ்ட் மினிஸ்டர் கொரொனெர்ஸ் கோர்ட் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. எனவே இதுகுறித்து மேல் விவரங்களை வெளியிட இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:48 pm

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ப.சிதம்பரம் தகவல்

காகித ரூபாய் நோட்டுகள் விரைவில் சேதம் அடைவதால் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை மத்திய மந்திரி ப.சிதம்பரம் உறுதி செய்தார். பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது கேட்டப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதலில் 10 ரூபாய் நோட்டு பிளாஸ்டிக்கில் வெளியிடப்படும். தொடர்ந்து மற்ற ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் தற்போது வெளியிடப்படும். காகித ரூபாய் நோட்டுக்கள் 1 வருடம் கூட உழைப்பதில்லை. எனவே பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதில் உள்ள தொழில் நுட்பத்தை சமூக விரோதிகள் கூட தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதிலும் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படலாம். எனவே சோதனை அடிப்படையில் தற்போது 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்களை அச்சடிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:50 pm

இந்திய நட்புறவை வளர்க்க 21 நாடுகள் வழியாக பயணம் செய்யும் பாகிஸ்தானியர்

இந்தியாவுடனான நட்புறவை வளர்க்க வலியுறுத்தி 2 நாடுகள் வழியாக பாகிஸ்தானியர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர் ஸ்டார் மாலிக். சமூக சேவகரான இவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அமைதியும், நட்புறவும் ஏற்பட நல்லெண்ண பயணம் மேற்கொண்டுள்ளார்.

தற்போது லண்டனில் வாழும் அவர் அபூர்வ நாளான நேற்று (12-12-12) இங்கிலாந்திலிருந்து கார் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். தான் பயணம் செய்யும் காரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் தேசிய கொடிகளை பறக்க விட்டுள்ளார். மேலும் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பேனரும் கட்டியுள்ளார்.

3 துணைக்கண்டங்களில் உள்ள 21 நாடுகள் வழியாக தனது பயணத்தை மேற்கொள்ள இவர் திட்டமிட்டுள்ளார். தொடக்கத்தில் ஐரோப்பா, பின்னர் மேற்கு ஆசியா நாடுகள் மற்றும் பாகிஸ்தான் வழியாக இறுதியில் இந்தியாவை வந்தடைகிறார்.

செல்லும் வழியில் இந்தியர்களையும், பாகிஸ்தானியர்களையும் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையே நட்புறவு மற்றும் சமாதானம் வளர்க்கும் முயற்சிக்கான ஆலோசனைகளை பெறுகிறார். தனது பயணத்தின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், இந்தி நடிகர்அமிதாப்பச்சன் ஆகியோரை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:51 pm

உனக்கு 27, எனக்கு 76: இத்தாலி முன்னாள் பிரதமர் இளம் பெண்ணுடன் காதல்

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி (76). கோடீஸ்வரரான இவர் அரசியல்வாதி ஆனார். செக்ஸ் மன்னன் ஆன இவர் பல பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்தார். இதனால் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது தன் மீது தொடரப்பட்டுள்ள லஞ்ச வழக்கு மற்றும் கற்பழிப்பு வழக்குகளுக்காக கோர்ட்டு படிகளில் ஏறி இறங்கி வருகிறார். இந்த நிலையில், தற்போது அவர் தன்னைவிட சுமார் 50 வயது இளைய பெண்ணை காதலித்து வருகிறார். அவரது பெயர் பிரான்சிஸ்கா பஸ்கல். 27 வயது நிரம்பிய இவர் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார்.

பெர்லஸ்கோனி கட்சியின் தீவிர உறுப்பினராக உள்ளார். வயது வித்தியாசமின்றி இவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிகின்றனர். சமீபத்தில் மிலன்நகரில் கால்பந்து போட்டி நடந்தது. அதில் பெர்லஸ்கோனியின் அணி விளையாடியது. இந்த போட்டியை பிரான்சிஸ்காவுடன் பெர்லஸ்கோனி ஜோடியாக அமர்ந்து பார்த்து ரசித்தார்.

அப்போது அவர்கள் இருவரும் போட்டோவுக்கு “போஸ்” கொடுத்தனர். இது இத்தாலி பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலியில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் பெர்லஸ்கோனி மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றால் 4-வது தடவையாக பிரதமராகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தபட்சத்தில் பிரான் சிஸ்கா இத்தாலியின் முதல் பெண்மணி (பெர்லஸ் கோனியின் மனைவி) என்ற அந்தஸ்தை பெறுவார் என இத்தாலியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:53 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.920 கோடி முதலீட்டில் சூரிய மின் சக்தி பூங்கா: ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் 920 கோடி ரூபாய் முதலீட்டில் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவும் திட்டத்திற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கும் திருவாளர்கள் ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த பூங்காவில் 100 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ல், தமிழகத்தில், வரும் 11 ஆண்டுகளில் சூரிய சக்தி மூலம் 5000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

மேலும், தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012-ல், தமிழகத்தில் 2015-ஆம் ஆண்டுக்குள் சுமார் 3000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டங்களை முதலீட்டாளர்கள் செயல்படுத்துவதற்கு ஏதுவாக சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக்கள் அமைக் கப்படுவதை ஊக்குவிப்பதும் இக்கொள்கையின் ஒரு அம்சமாகும்.

இந்த இலக்கினை எட்டும் வகையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் வரும் 5 ஆண்டுகளில் சுமார் 1000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக் களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிறுவுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 மெகா வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வகையிலான சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கும், திருவாளர்கள் ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரை வேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக அரசின் சார்பில் முதன்மைச் செயலாளரும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஹன்ஸ் ராஜ் வர்மா, திருவாளர்கள் ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நரசிம்மனும் கையெழுத்திட்டனர்.

இந்த சூரிய மின்சக்தி பூங்கா, சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை சிறப்பாக அமைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், வடிகால் வசதிகள், போதுமான தண்ணீர் வசதி, செம்மைப்படுத்தப்பட்ட நில வடிவமைப்பு, மின்சாரம் வெளியேற்று வசதிகள் போன்றவைகளை சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் அமைக்கப்படும். இதனால், இப்பூங்காவில் அதிக அளவில் சூரிய மின்சக்தி நிலையங்களை அமைப் பதற்கு முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவர். இந்த சூரிய மின்சக்தி பூங்காவானது அரசு மற்றும் தனியாருடைய கூட்டு முயற்சியில் இந்தியாவிலேயே முதன் முறையாக பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.

இந்த சூரிய மின்சக்தி பூங்கா திட்டம் 12 மாதங்களில் முடிக்க இலக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இந்தப் பூங்கா வானது, தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012-ன்படி அமைக்கப்படும் முதலாவது சூரிய மின்சக்தி பூங்காவாகும். நிகழ்ச்சியில் நிதி, மின்சாரம், தொழில்துறை முதன்மைச் செயலாளர், எரிசக்தித்துறை செயலாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எல். அன் டி நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ராஜவேல், கெனடியன் சோலார் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் வினய் ஷெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Thu Dec 13, 2012 11:55 pm

மயிலாடுதுறை அருகே 5 தலை நாகம் உருவில் பரங்கி செடி: பொதுமக்கள் திரண்டு வந்து வழிபாடு

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 F09b6041-5925-4279-90e4-2eff10c36707_S_secvpf

மயிலாடுதுறை அருகே விவசாயி ஒருவரது வீட்டு தோட்டத்தில் விளைந்த பரங்கி செடியில் 5 தலை நாகம் முழு உருவமும் பொரித்தாற்போல் வளர்ந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதிமக்கள் வைத்தீஸ்வரனே வந்ததாக எண்ணி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்துவருகின்றனர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்து தலைஞாயிறு ஊராட்சியில் உள்ள மன்னிப்பள்ளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் குணசேகரன். விவசாயி. இவருடைய வீட்டு தோட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பரங்கி விதை போட்டு பயிர்செய்துள்ளார். இது நாளடவில் வளர்ந்து அதனுடைய கொடியானது 5 தலை நாகம் கொண்ட உருவத்தை பெற்றிருந்தது.

இதனை கண்ட தோட்டத்தின் உரிமையாளர் குணசேகரன் ஆச்சரியப்பட்டு அப்பகுதி மக்களிடையே கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பொது மக்கள் அங்கு வந்து பரங்கி செடியை பார்த்து செல்கிறார்கள். சிலர் வழிபடவும் செய்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

குணசேகரன் தோட்டத்தின் அருகே பழமை வாய்ந்த ஆதிவைத்தீயநாத சுவாமி (ரத்தினபுரீஸ்வரர் சுவாமி) கோவில் பல வருடம் கழித்து தற்போதுதான் திருப்பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனுடைய பழைய வரலாறு தெரிந்தவர்கள் இதனை புதுபித்துவருகிறார்கள். கடந்த காலத்தில் இங்கே இருந்த வைத்தீயநாத சுவாமி தான் தற்போது வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ளதாகவும், அதன் ஒரு மாற்றமாகத்தான் இந்த பரங்கி செடியில் 5 தலை நாகம் உருவம் அமைப்புடன் காட்சியளிப்பதாக கருதுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த பரங்கி செடியை ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்து காணிக்கை செலுத்திவருகின்றனர்.

-மாலை மலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Fri Dec 14, 2012 11:06 am

ஆளுங்கட்சி பொதுக்கூட்டம் விளக்கு அலங்காரத்துக்கு "கொக்கி' போட்டு மின் திருட்டு

மின்வாரிய இணைப்பிலிருந்து மின்சாரத்தை திருடி, நாஞ்சில் சம்பத் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை, அ.தி.மு.க.,வினர் நடத்தியது, மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., இலக்கிய அணி சார்பில், சென்னை மயிலை மாங்கொல்லையில், பொதுக்கூட்டம் நடந்தது. ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்தின் முதல் கூட்டம் என்பதால், அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
அரசின் சாதனைகளைப் போற்றும் பதாகைகள், அலங்கார விளக்குகள், பொதுக்கூட்ட வரவேற்பு பேனர்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முதல்வரின் உருவ படம், இரட்டை இலை சின்னம் மற்றும் வண்ண, வண்ண விளக்குகள் கொண்ட தோரணங்கள் என, மயிலை மாங்கொல்லை திடலை, அ.தி.மு.க.,வினர் அமர்க்களப்படுத்தி இருந்தனர்.
கச்சேரி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட இடங்களில், ஏராளமான அலங்கார விளக்குகளை அமைத்திருந்தனர். மயிலை மாங்கொல்லை திடலுக்கு வரும் வழிகளில், "டியூப்' லைட்டுகளுடன், கட்சிக் கொடியையும் பறக்கவிட்டிருந்தனர்.
கூட்டத்திற்கு பல மணி நேரத்திற்கு முன்பாகவே, அனைத்து அலங்கார விளக்குகளும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கூட்டம் முடிந்து, நள்ளிரவுக்கு மேலும் விளக்குகள் எரிந்து கொண்டே இருந்தன. மேடையையும் பச்சை நிற விளக்குகளால் அலங்கரித்திருந்தனர்.
இந்த விளக்குகளுக்கான மின்சாரத்துக்கு, மேடை அருகே மட்டும் "ஜெனரேட்டர்' வைத்திருந்தனர். சாலைகளின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்த விளக்குகளுக்கான மின்சாரத்தை, மின்வாரிய லைனிலிருந்து "கொக்கி' போட்டு, எடுத்திருந்தனர்.
மாநிலத்தில் கடும் மின்வெட்டு நிலவும் நேரத்தில், பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு, "ஜெனரேட்டர்' வைத்து, பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கே மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
இந்நிலையில், மின்வாரிய லைனிலிருந்து, "கொக்கி' போட்டு மின்சாரத்தைத் திருடி, அலங்கார விளக்குகள் அமைத்திருந்தது, மயிலை பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு உள்ளது. இதனால், பெரிய வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்கள், அலங்கார விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில், அலங்கார விளக்குகளுக்கு தேவையான மின்சாரத்தை, மின் இணைப்பு பெட்டியில் இருந்து, திருடியள்ளனர். மின்வாரியமும் இதைக் கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து, மின்வாரிய வட்டாரங்கள் கூறுகையில், "பொதுவாக அரசியல் கட்சி கூட்டங்களில் நடப்பதை எங்களால் தடுக்க முடியாது. அதுவும், ஆளும் கட்சிக் கூட்டத்தில், எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. மின் திருட்டைத் தடுக்க, அமலாக்கப் பிரிவு தனியாக உள்ளது. அப்பிரிவு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

- நமது நிருபர் -தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by அச்சலா Fri Dec 14, 2012 11:07 am

ரவிசங்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வாஷிங்டன் :சிதார் இசை கலைஞர், பண்டிட் ரவிசங்கருக்கு, அமெரிக்காவின், கிராமி இசை விருது அமைப்பின் சார்பில், "வாழ்நாள் சாதனையாளர் விருது" அவரது இறப்புக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவைச் சேர்ந்த, உலக புகழ் பெற்ற சிதார் இசை கலைஞர் ரவிசங்கர், 92, இரண்டு நாட்களுக்கு முன், கலிபோர்னியா மருத்துவமனையில் காலமானார். இந்தியாவின் மிக உயரிய, "பாரத ரத்னா' விருது பெற்ற ரவிசங்கர், இசைக்கான, சர்வதேச, "கிராமி' விருதை மூன்று முறை பெற்றவர்.இசை துறைக்கு அவர் செய்த சேவையை பாராட்டி, கிராமி விருது அமைப்பினர், "வாழ்நாள் சாதனை' விருதை அறிவித்துள்ளனர். இந்த விருது, அவர் மறைவுக்கு பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, பிப்ரவரி, 10ம் தேதி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் விழாவில், இந்த விருது வழங்கப்பட உள்ளது.

நோரா ஜோன்ஸ் வருத்தம்:

அமெரிக்காவில் வசிக்கும், ரவிசங்கரின் முதல் மகள், கீதாலி நோரா ஜோன்ஸ், "பல கோடி ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்த என் தந்தையை இழந்து விட்டேன்' என, தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இசை கலைஞர், சூ ஜோன்சுக்கும், ரவிசங்கருக்கும் பிறந்தவர் நோரா ஜோன்ஸ். நோரா ஜோன்ஸ், பத்து முறை கிராமி விருதுகளை பெற்றவர். சூ ஜோன்சும், ரவிசங்கரும் சிறிது காலம் காதலித்து, பின், பிரிந்து விட்டனர்.ரவிசங்கரின் இரண்டாவது மகள் அனுஷ்கா. இவர், ரவிசங்கருக்கும், சுகன்யாவுக்கும் பிறந்தவர். அனுஷ்காவும் தந்தையை போல, சிதார் இசை கலைஞராக உள்ளார்.

-தினமலர்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 17 Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 37 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 27 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum