ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 10:37 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Today at 9:03 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Today at 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Today at 7:28 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (408)
by kandansamy Today at 7:18 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:10 pm

» ஒரு மொக்க ஜோக்!
by Dr.S.Soundarapandian Today at 12:55 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (70 - 72 )
by Dr.S.Soundarapandian Today at 12:50 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Today at 10:32 am

» அறிமுகம்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 10:50 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 3:30 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

» இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 5:56 pm

» பிரதமர் பிறந்தநாளில் 6 மணிநேரத்தில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:58 pm

» டார்க் தீம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:34 pm

» பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:18 pm

» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 9:38 pm

» மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் வேண்டும்
by Arivueb Thu Sep 16, 2021 8:22 pm

» ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:30 pm

» சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:59 pm

» கைபேசி (தனி) உலகம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:22 pm

» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:55 pm

» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:27 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

» புன் சிரிப்பு
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 11:13 am

» சன்னல்
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 10:07 am

» யோகாவின் எட்டு நிலைகள்..!
by shivi Wed Sep 15, 2021 9:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா? அலட்சியப்படுத்த வேண்டாம்!

2 posters

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா? அலட்சியப்படுத்த வேண்டாம்! Empty அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா? அலட்சியப்படுத்த வேண்டாம்!

Post by Muthumohamed Wed Dec 05, 2012 7:47 pm

நாம் சாப்பிடும் உணவு உடலுக்குள் எங்கெங்கு பயணப்படுகிறது, என்னென்ன மாற்றங்களை உடலுக்குள் சந்திக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? – அது ஒரு நீண்ட பயணம்! வாய் வழியாக சாப்பிடும் உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது.

அங்கு ஜீரண செயல்பாடுகள் நடந்து, தேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. தேவையற்றவை அனைத்தும் மலமாக பெருங்குடலை வந்தடைகிறது. சுமார் ஒன்றரை மீட்டர் நீளத்தில், அகன்ற கேள்விக்குறிபோல் தோன்றும் பெருங்குடல், மலத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதை இறுகவைத்து, மலக்குடலுக்குள் தள்ளும்.

அங்கிருக்கும் மெல்லிய தசை நாளங்கள் உடனே, மூளைக்கு ‘மலம் வந்திருக்கிறது’ என்ற தகவலை உணர்த்தும். அப்போதுதான் மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படும். மலத்தை வெளியேற்றுவதில் மலக்குடல், ஆசனவாய் போன்றவைகளின் பங்கு முக்கியமானது.

இவை இரண்டும் 15 செ.மீ. நீளம் கொண்டவை. நேரத்திற்கு சாப்பிட்டால், அளவோடு சாப்பிட்டால், பழம், காய்கறிகளை கொண்ட சமச்சீரான பாரம்பரிய சத்துணவுகளை சாப்பிட்டால், வாழ்வியல் முறைகளை நன்றாக அமைத்துக்கொண்டால் மேலே சொன்ன அந்த நீ..ண்..ட.. உணவுப்பயணம் சரியாக நிகழும். முறையாக, முழுமையாக ஜீரணமாகி மலமும் நன்றாக வெளியேறும்.
இவை சரியாக நடக்கும் வரை நமக்கு எந்த சிக்கலும் இல்லை. வயிற்றில் எந்த விதமான அசவுகரியமும் ஏற்படாமல் நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று வாழ்க்கை பயணம் இனிதே தொடர்ந்து கொண்டிருக்கும். மாறாக மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டால், நமது ஆரோக்கியத்திலேயே சிக்கல் ஏற்பட்டுவிடும்.

உலகில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேரும், இந்தியாவில் சுமார் 45 சதவீதம் பேரும், சென்னையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேரும் இந்த மலச்சிக்கலோடு வாழ்ந்து, நொந்து கொண்டிருக்கிறார்கள். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு இது அடிப்படை காரணமாக அமைகிறது.
பொதுவாக மலச்சிக்கல் என்று நாம் எப்போது குறிப்பிடுகிறோம்?
பெரும்பாலும் பலரும் ஒரு நாள் ஒரு தடவை, அதுவும் காலை நேரத்தில் காலைக்கடன் கழிக்கிறார்கள். சிலர் இரு நாட்களுக்கு ஒருமுறை கழிப்பதும் உண்டு. நாளுக்கு ஒரு முறையோ, இருநாளுக்கு ஒரு முறையோ அது இயல்பாக நெருக்கடி இன்றி வெளியேறாமல் முக்க வைப்பதும், ரொம்ப இறுக்கமாகி வெளியேற அவஸ்தை படுத்துவதும் மலச்சிக்கலாகும். அடிக்கடி மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதும், ஒரே நேரத்தில் வெளியேறாமல் மீண்டும் தங்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் மலச்சிக்கல்தான்.
மலச்சிக்கல் ஏற்பட என்ன காரணம்?
சாதாரண காரணங்களும் இருக்கின்றன. அசாதாரண காரணங்களும் இருக்கின்றன. பொதுவாக தினமும் 2 முதல் 3 லிட்டருக்கு குறைவாக தண்ணீர் பருகுவது. பழம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாதது. எண்ணை அதிகம் கலந்த வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது. சிவப்பு நிற இறைச்சி வகைகளை அதிகமாக சாப்பிடுவது. உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது..
இப்படிப்பட்டவை எல்லாம் சாதாரண காரணங்கள். இவை பெரும்பாலும் இளம் வயதினருக்கு உருவாகும் ‘லைப் ஸ்டைல்’ பிரச்சினைகள். அவைகளை தவிர்த்து மலக்குடலில் புற்றுநோயோ, கட்டிகளோ இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். மலம் சரியாக வெளியேறாமல் இருந்தாலோ, மீண்டும் மீண்டும் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டாலோ, அந்த நேரத்தில் வலி ஏற்பட்டாலோ அதற்குரிய சிறப்பு மருத்துவர்களை சந்திக்கவேண்டும்.

மலத்தோடு ரத்தம் கலந்து வந்தால், குடலிலே ரத்தக்கசிவு இருப்பதாக அர்த்தம். குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் போன்றவைகளின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். மலக்குடலில் இரு பகுதிகளிலும் குஷன் போன்ற மெல்லிய தசைப்பகுதி இருக்கிறது. மலத்தை வெளியேற்ற இதன் பங்களிப்பு மிக அவசியம். மலச்சிக்கல் ஏற்பட்டு, முக்கும்போது இந்த குஷன் பகுதி அழுத்தப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாகி கீழே இறங்கிவிடும்.

இதைத் தான் நாம் உள்மூலம், வெளிமூலம் என்று இரண்டு வித பாதிப்புகளாக குறிப்பிடுகிறோம். இந்த மூலநோய் நான்குவிதமான நிலைகளைக்கொண்டது. முதல் இருகட்ட பாதிப்பு வெளியே தென்படாமல் உள்ளேயே இருக்கும். 3, 4-ம் நிலை பாதிப்பு ஆசன வாய் வழியாக வெளியே தெரியும்.
மூல நோயின் அறிகுறி என்ன?
மலம் கழிக்கும்போது ரத்தம் கொட்டும். ஆனால் பெரும்பாலும் வலிக்காது. அசவுகரியமாக இருக்கும்.
ஆசன வாய் வெடிப்பு என்பது என்ன?
இறுகிய மலத்தை, முக்கி வெளியேற்றும் நிலை தொடரும்போது அது ஆசன வாய் பகுதியில் வெடிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பு கொண்டவர்கள் மலம் கழிக்கும்போது கத்தியால் குத்திக் கிழித்தது போன்ற வலியால் துடிப்பார்கள். அரைத்த கண்ணாடியை வைத்து தேய்த்ததுபோன்ற கொடுமையை அனுபவிப்பார்கள். ரத்தம் கொட்டும். புண்ணாகி அதிக தொந்தரவை ஏற்படுத்தும்.

‘பவுத்ரம்’ என்ற நோய் எதனால் ஏற்படுகிறது?
மலக்குடலின் இறுதிப்பகுதியும்- ஆசனவாய் தொடங்கும் பகுதியும் இணைந்த இடத்தில் ‘ஆனல் கிளான்ட்’ எனப்படும் சுரப்பிகள் உள்ளன. அவை ஈரத்தன்மையை உருவாக்குவதற்காக அமைந்துள்ளன. அந்த சுரப்பிகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடித்து, கட்டியாக மாறி ஆசன வாயின் சுற்றுப்பகுதிக்கு வந்து வெடித்து, ‘பைப்’ போன்று உருவாகிவிடும்.

மலம் கழிக்கும்போது அந்த ‘பைப்’க்குள்ளும் இறங்கிவிடும். சீழ்கட்டி மீண்டும் மீண்டும் உருவாகி வெடிக்கும். அந்த நிலையைத்தான் பவுத்ரம் என்கிறோம். இந்த நோய் ஏற்பட்டால் ஆசனவாய் வலிக்கும். சீழ் கசியும். ரத்தமும் வெளியேறும். மூல நோய், ஆசன வாய் வெடிப்பு நோயை விட இது கடுமையானது.

20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களை அதிகம் தாக்கும். ஆண், பெண் இருபாலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள். பெண்கள் கூச்சம் கொள்ளாமல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே கவனிக்கவேண்டும். பெண்களின் கூச்சம் இந்த நோயின் பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.
பெருங்குடல் புற்று நோய்க்கு என்ன அறிகுறி?
மூலம், ஆசனவாய் வெடிப்பு, பவுத்ரம் போன்றவைகளின் அறிகுறியே பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அதனால்தான் இந்த நோய்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்தியாவில் பெருங்குடல் புற்றுநோய் குறைவு.

ஆனால் மலக்குடல் புற்றுநோய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆண்களை அதிகம் தாக்குகிறது. இரும்பு சத்துபற்றாக்குறை கொண்ட ரத்தசோகை இருந்தால் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவைகளில் எதிலும் புற்றுநோய் இருக்கலாம். பெற்றோருக்கு குடல் புற்று நோய் இருந்தால், பிள்ளைகளையும் அது தாக்க அதிக அளவு வாய்ப்பிருக்கிறது.
இந்த வகை நோய்கள் இருந்தால், அவைகளை கண்டறியும் பரிசோதனை முறைகள் என்ன?
மலக்குடல், ஆசன வாய் பகுதிகளில் எத்தகைய நோய் இருக்கிறது, எந்த அளவுக்கு அது பாதித்திருக்கிறது என்பதை டாக்டரே விரலை பயன்படுத்தி பரிசோதிப்பார். பிராக்ட்டாஸ்கோபி முறையில் பெருங்குடலில் கேமிராவை நுழைத்தும் பரிசோதிக்கலாம். ‘கொலோனோஸ்கோபி’ முறையில் பரிசோதனையும் செய்யலாம்.

அது வழியாக சிகிச்சையும் கொடுக்கலாம். இரண்டு மீட்டர் நீள கேமிரா இணைப்பு பெருங்குடலுக்குள் செல்லும். அதன் மூலம் பரிசோதனையும், சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். அறிகுறிகளைக் கண்டு தொடக்க நிலையிலே சிகிச்சை பெறுவது நல்லது. இல்லாவிட்டால் அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோபி முறை சிகிச்சைகள் தேவைப்படும்.

அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு மூல நோய் ஏற்படும் என்பது சரியா?
சரியல்ல. அதிக உடல் சூடு கொண்டவர்களை மேற்கண்ட நோய்கள் தாக்கும் என்பதும் சரியல்ல. தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, உணவு முறை முரண்பாடுகள், வாழ்க்கை முறை முரண்பாடுகள், மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகள்தான் இத்தகைய நோய்களுக்கு காரணமாக இருக்கின்றன.

தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இதர தொழில்துறைகளில் பணியாற்றும் இளம் தலைமுறையினர் இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கை முறைகளை சரிசெய்து வருமுன் காப்பதும், வந்த உடன் சரியான சிகிச்சைகள் பெறுவதுமே இந்த நோய்களிடம் இருந்து தப்பிக்க சிறந்த வழி.

முகநூல்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா? அலட்சியப்படுத்த வேண்டாம்! Empty Re: அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா? அலட்சியப்படுத்த வேண்டாம்!

Post by அருண் Thu Dec 06, 2012 12:26 am

தகவலுக்கு நன்றி முஹம்மத்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை