ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

+5
Muthumohamed
Ahanya
யினியவன்
krishnaamma
DERAR BABU
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Empty படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Post by DERAR BABU Wed Dec 05, 2012 10:54 am

திருப்பூர்: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இன்றைக்கு காதல் கடிதங்களை எழுதுவதும், ஆர்டின் வரைந்து ராக்கெட் விடுவதும் சர்வ சாதாரணமாக நடப்பதாக புகார் எழுந்துள்ளது. பதின் பருவத்தை எட்டிய பள்ளி மாணவர்களை விட பத்து வயதைக்கூட தாண்டாத 3வது மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம்தான் காதல் பற்றி அதிகம் பேசப்படுகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.

காதல் பாடல்கள் மனப்பாடம்

திருக்குறளும், கொன்றை வேந்தனும் மனப்பாடம் செய்யவேண்டிய பள்ளி வயதில் இன்றைக்கு காதல் பாட்டுக்கள் சர்வ சாதாரணமாய் மாணவர்களின் காதுகளில் நுழைகின்றன. யம்மா யம்மா காதல் பொன்னம்மாவும், வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு.... ஆகிய பாடல்களை இன்றைக்கு சர்வசாதாரணமாக சிறுவர்கள் பாடுவதை கேட்கலாம்.

காதலைப்பற்றி என்ன தெரியும்?

திரைப்படங்களிலோ, டிவி சீரியல்களிலோ காதல் சீன்கள் வந்தால் அதை பார்க்கும் சிறுவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. பருத்தி வீரனோ, மைனாவோ பிஞ்சு பருவத்து காதலை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை மாணவர்கள் அதிகம் பார்க்கின்றனர் இதுவே பாதிப்பிற்கு உள்ளாகிறது

ஹார்மோன் பிரச்சினையா?

மேற்சொன்ன சம்பவங்கள் சின்ன உதாரணம்தான். இன்றைக்கு தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. 80, 90 களில் படித்த மாணவர்கள் ப்ளஸ் டூவில்தான் காதல் பற்றி அதிகம் பேசினார்கள். பதின் பருவத்தில் மாணவர்கள் காதல் பற்றி பேசியதற்கு ஹார்மோன்களின் சுரப்பே காரணமாக இருந்திருக்கிறது

குழந்தைகளின் அதீத வளர்ச்சி

அப்போதைய பெண் குழந்தைகள் 13 வயதில் தொடங்கி 16 வயதில்தான் பருவத்தை எட்டுவார்கள். ஆனால் இன்றைக்கோ 7 வயதில் தொடங்கி 11 வயதிற்குள்ளாகவே பெரும்பாலான பெண் குழந்தைகள் பருவ வயதை எட்டுவிடுகின்றனர். அதேபோல் ஆண் குழந்தைகளுக்கும் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது. இதுதான் பாலகர் பருவத்திலேயே காதலைப் பற்றிப் பேச காரணமாக அமைந்துவிடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

நீ இல்லைன்னா நான் இல்லை…

இதேபோல் கோவையில் பிரபல பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சிகரமானது. 5ம் வகுப்பு படிக்கும் மாணவி உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்திருக்கிறாள். இதனால் உடன் படித்த மாணவன் ஒருவன், இனிமேல் நீ லீவ் போடதே... நீ பள்ளிக்கு வராவிட்டால் என்னால் தாங்க முடியாது. உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாது என்று அவளிடம் பிதற்றியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் கூறவே பிரச்சினை வெடித்துள்ளது

கடிதம் கொடுத்த மாணவன்

திருப்பூரில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி. 75 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க அந்த பள்ளியில் 3ம் வகுப்பு மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளான். "நீ ரொம்ப அழகா இருக்கே. பெரியவன் ஆனதுக்கு அப்புறம் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று எழுதி அந்த மாணவியின் கையில் கொடுத்திருக்கிறான். அந்த மாணவி அதை வாங்க மறுக்கவே ராக்கெட் செய்து மாணவியின் மேல் அடித்துள்ளான். அதை எடுத்து நேராக வகுப்பு ஆசிரியரிடம் கொண்டு போய் கொடுக்கவே அடி பின்னிவிட்டார் .

பாலியல் துன்புறுத்தல்

எல்.கே.ஜி தொடங்கி 5ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதும் இதுபோன்ற அதீத வளர்ச்சியினால்தான். எனவே பெண் குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கையில் மட்டுமல்லாது ஆசிரியர்களின் கையிலும் அதிகப் பொறுப்பு உள்ளது. ஆனால் ஆசிரியர்களே சில நேரங்களில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர் என்பதுதான் வேதனை


அச்சத்தில் பெற்றோர்கள்

பெண்கள் வயதுக்கு வந்துவிட்டாலே வீட்டை விட்டு வெளியே அனுப்பாத நிலை இருந்தது. இன்று எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் இன்றைக்கும் கிராமப்புறங்களில் அச்சம் காரணமாக பெரும்பாலான பெண் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பாமல் வைத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளி பருவத்திலேயே காதல் பற்றி பேசுவது தெரிந்தால் இனி மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவது கூட கேள்விக்குறியாகிவிடும்.

மாணவர்களுக்கு ஆலோசனை

இதுபோன்று பள்ளிப்பருவத்திலேயே காதல் பற்றி பேசும் மாணவர்களுக்கு தண்டனை கொடுப்பது என்பது ஆறாத வடுவாகப் பதிந்துவிடுவதோடு வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். எனவே மாணவர்களுக்கு சரியான ஆலோசனை வழங்குவதோடு பாலியல் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அப்பொழுதுதான் காதல் பற்றியும், காமம் பற்றியும் அவர்களால் பிரித்து அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர்

பள்ளிக்கல்வித்துறையில் மாற்றம்

பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மட்டும் மாணவர்களை உருவாக்காமல் உலக நடப்புகளைப் பற்றியும், மனித மனங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வது பற்றியும் ஆசிரியர்கள் பாடம் நடத்தவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். பள்ளிக்கல்வித்துறையில் அரசு மாற்றம் கொண்டு வருமா என்பதும் பெரும்பாலோனோரின் கேள்வி ?................
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Empty Re: படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Post by krishnaamma Wed Dec 05, 2012 11:02 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மேலே சொன்ன மாற்றங்களுடன், இந்த டிவி சனியனில் போட்டதையே போடும் தேவை இல்லாத கண்ட்றாவி பாடல்களை பார்க்காமல் இருக்க சொல்லணும் குழந்தைகளை கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Empty Re: படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Post by யினியவன் Wed Dec 05, 2012 11:28 am

சிறுவர்களுக்கான ரியாலிடி ஷோ என்று சொல்லி கண்ட பாட்டுகளையும் பாட வைத்து, ஆட வைத்து வேடிக்கை காட்டும் காட்சிகளை பெற்றோர் நாமும் சேர்ந்து ரசிக்கும்போழுது அவர்களை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Empty Re: படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Post by Ahanya Wed Dec 05, 2012 11:31 am

krishnaamma wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மேலே சொன்ன மாற்றங்களுடன், இந்த டிவி சனியனில் போட்டதையே போடும் தேவை இல்லாத கண்ட்றாவி பாடல்களை பார்க்காமல் இருக்க சொல்லணும் குழந்தைகளை கோபம்


ஆமாம் கிருஷ்னாம்மா இது என்ன கொடுமை? சோகம்


படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Empty Re: படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Post by Muthumohamed Wed Dec 05, 2012 12:26 pm

யினியவன் wrote:சிறுவர்களுக்கான ரியாலிடி ஷோ என்று சொல்லி கண்ட பாட்டுகளையும் பாட வைத்து, ஆட வைத்து வேடிக்கை காட்டும் காட்சிகளை பெற்றோர் நாமும் சேர்ந்து ரசிக்கும்போழுது அவர்களை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்?

முடியாது தான்
நாம சரியாக இருந்த தானே புள்ளையும் சரியா இருக்கும்



படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Mபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Uபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Tபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Hபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Uபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Mபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Oபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Hபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Aபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Mபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Eபடிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Empty Re: படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Post by jenisiva Wed Dec 05, 2012 1:40 pm

krishnaamma wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மேலே சொன்ன மாற்றங்களுடன், இந்த டிவி சனியனில் போட்டதையே போடும் தேவை இல்லாத கண்ட்றாவி பாடல்களை பார்க்காமல் இருக்க சொல்லணும் குழந்தைகளை கோபம்

இப்போ காலம் தாண்டி போச்சு கிருஷ்ணா அம்மா
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Empty Re: படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Post by jenisiva Wed Dec 05, 2012 1:41 pm

Muthumohamed wrote:
யினியவன் wrote:சிறுவர்களுக்கான ரியாலிடி ஷோ என்று சொல்லி கண்ட பாட்டுகளையும் பாட வைத்து, ஆட வைத்து வேடிக்கை காட்டும் காட்சிகளை பெற்றோர் நாமும் சேர்ந்து ரசிக்கும்போழுது அவர்களை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்?

முடியாது தான்
நாம சரியாக இருந்த தானே புள்ளையும் சரியா இருக்கும்

இது என்னவோ உண்மைத்தான்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Empty Re: படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Post by jenisiva Wed Dec 05, 2012 1:43 pm

[quote="V.BABU"] "பதின் பருவத்தை எட்டிய பள்ளி மாணவர்களை விட பத்து வயதைக்கூட தாண்டாத 3வது மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம்தான் காதல் பற்றி அதிகம் பேசப்படுகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்."

இதை நான் அனுபவித்து கொண்டிருக்கிறேன் என் பிள்ளைகளிடம்



jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Empty Re: படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Post by ஜாஹீதாபானு Wed Dec 05, 2012 4:04 pm

எல்லாம் காலக்கொடுமை தான்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Empty Re: படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 4:10 pm

சின்ன புள்ளைல நான் எவ்ளோ நல்ல பையனா இருந்தேன்.. இப்போ எல்லாம் மாறிடுச்சு



படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல் Empty Re: படிக்கிற வயசுல காதலிக்கும் பாலகர்கள்…. ஓர் அதிர்ச்சித் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum