ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

+4
ஆரூரன்
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
krishnaamma
8 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! Empty ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by krishnaamma Tue Dec 04, 2012 10:24 am

ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய  சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.

இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.புன்னகை


Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:21 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! Empty ரசப்பொடி

Post by krishnaamma Tue Dec 04, 2012 10:37 am

தேவையானவை:

10 - 15 குண்டு மிளகாய்
800gm தனியா
200gm மிளகு
200gm துவரம் பருப்பு
2 - 3 தேக்கரண்டி சீரகம்

செய்முறை:

மேல் கூறிய எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு 'கர கரப்' பாக அரைக்கவும்
'ரச பொடி ' ரெடி.

குறிப்பு: மேல் கூறிய சாமான்களுடன் மஞ்சள் பொடி யும் போடலாம். நான் எப்பொழுதும் ரசம் வைக்கும் போது பருப்புடன் போடுவேன். உங்களுக்கு விருப்பமானால் மேல் கூறிய சாமான்களுடன் பத்து பல் பூண்டும் போட்டு அரைக்கலாம். ஆனால் அப்படி அரைத்தால், ரசப்பொடியை fridge இல் வைக்கணும். ஏன் என்றால் அது சற்று ஈரபசையுடன் இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! Empty மிளகு ரசம்

Post by krishnaamma Tue Dec 04, 2012 10:40 am

தேவையானவை:

ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
2 டீ ஸ்பூன் மிள்கு உடைத்த்து
1 ஸ்பூன் துவரம் பருப்பு உடைத்த்து
நெய் 2 ஸ்பூன்

செய்முறை :

வாணலி il நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்
நறுக்கி வைத்துள்ள தக்காளி மட்டும் கறிவேப்பிலை போடவும்
உப்பு போடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் துவரம் பருப்பை போடவும்.
மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது மிளகு ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.

குறிப்பு: ரசம் நாங்க ஈய பாத்திரத்தில் தான் செய்வோம். அது எல்லோரிடமும் இருக்காது என்று தான் நான் வாணலி என்று சொன்னேன். ஈய சோம்பு இருந்தால் அதில் வைக்கும் [b]சர்ற்றமுது (நாங்க ரசத்தை அப்படித்தான் சொல்வோம் புன்னகை ) கு ஈடு இணை இல்ல. ஆனால் ஈய சொம்பை அப்படியே அடுப்பில் வைக்க கூடாது. உருகிவிடும். புளி தண்ணி விட்டு தான் வைக்கணும். வேற வாணலி இல் தாளித்தம் செய்து அதில் கொட்டனும். மேலும் ஈய சொம்பில் எவ்வளவு திரவம் இருக்கோ அது வரை தான் தீ இருக்கணும் இல்லாட்டா உருகிடும். ஜாக்கிரதையாக கையாளனும் அந்த சொம்பை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! Empty சீரக ரசம்

Post by krishnaamma Tue Dec 04, 2012 10:49 am

தேவையானவை:

ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
வேக வைத்த துவரம் பருப்பு அரை கப்

தாளிக்க:

கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 1 ( விதைகள் நீக்கவும்)
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 ஆர்க்
நெய் 2 ஸ்பூன்
உடைத்த மிளகு மற்றும் சிறகம் 2 டீ ஸ்பூன்

செய்முறை :

வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
அதில் ரசப்பொடி, பெருங்கயப்போடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு போடவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி மட்டும் கறிவேப்பிலை போடவும்
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை போடவும்.
மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து வெந்த பருப்பை தண்ணீர் விட்டு கரைத்து விடவும்.
அது ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது சீரக ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்; சளி இருமலுக்கு நல்லது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! Empty பூண்டு ரசம்

Post by krishnaamma Tue Dec 04, 2012 10:53 am

மிளகு ரசத்திலேயே சிலர் பூண்டும் தட்டி போடுவார்கள் அப்படியும் செயலாம் அல்லது இப்படி தனியாகவே பூண்டு உரித்து போட்டு ம செயலாம். எப்படி செய்தாலும் சாப்பிட்டதும், கண்ணிலிருந்தும் மூக்கிலிருந்தும் ஜலம் வரணும் புன்னகை அது தான் கணக்கு , சரியா?

தேவையானவை :

கண்டத்திப்பிலி 2 ஸ்பூன் ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும - மைலாபூர் "டப்பா செட்டி கடை" ல கிடைக்கும் )
குண்டு மிளகாய் 2 -4
மிளகு 2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1 ஸ்பூன்
தனியா 1 - 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 -1 1/2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
வேகவத்த துவரம் பருப்பு 1/2 கப்
அல்லது துவரம் பருப்பு வேகவைத்த ஜலம் 1 கப்
உரித்த பூண்டு 1 கை நிறைய

செய்முறை:

ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் நெய் விட்டு, கண்டத்திப்பிலி, மிளகாய் ,மிளகு, துவரம் பருப்பு, தனியா எல்லாம் போட்டு வறுக்கவும்.
அதே வாணலி இல் மீதி நெய் யை விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து , பூண்டை நன்றாக வதக்கவும்
அதிலிருந்து ஒரு 10 பல் பூண்டு எடுத்து , வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் போட்டு , ஆறினதும் நல்ல விழுதாக தண்ணீர் விட்டு அரைக்கவும்
பூண்டு வதக்கிய வாணலி இல் 1 டம்ப்லர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் ஐ போடவும்.
நன்கு கலக்கவும் , நன்கு கொதிக்க விடவும்.
பூண்டு நன்கு வெந்ததும், அரைத்துவைத்துள்ளதை கொட்டவும்
மீண்டும் கொதிக்க விடவும்.
பருப்பை கரைத்துவிடவும அல்லது பருப்பு ஜலம் விடவு.
மீண்டும் நன்கு கொதித்ததும் இறக்கவும்
ரொம்ப வாசனையாக சூப்பராக இருக்கும்.
நல்ல சூடு சத்தத்தில் நெய் விட்டு இந்த பூண்டு ரசமும் விட்டு சாப்பிடணும்.
நல்ல தளர பிசையுங்கோ.
வேண்டுமானால் 1 கப் ரசம் குடியுங்கோ ரொம்ப நல்லது.

குறிப்பு: இதற்க்கு பருப்பு துவையல் செய்தால் தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும் . மிளகு அதிகமாய் மிளகாய் குறைவாய் இருக்கணும். சில பேர் பருப்புடன் பூண்டையும் வேக வெச்சுடுவா, அப்படி செய்தால் பூண்டு ரொம்ப குழியந்துவிடும் . இப்படி வதக்கி போட்டால் நல்லா கண்ணுக்கு தெரியும், கரண்டியால அரித்து போட்டுக்கலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! Empty இஞ்சி ரசம்

Post by krishnaamma Tue Dec 04, 2012 11:08 am

தேவையானவை:

இஞ்சி சாறு 1 /4 கப்
வேக வைத்த துவரம் பருப்பு அரை கப்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
தக்காளி 2 - 4 ( விதைகள் நீக்கவும்)
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 ஆர்க்
நெய் 2 ஸ்பூன்

செய்முறை :

வாணலி இல் நெய்விட்டு கடுகுதாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி மட்டும் கறிவேப்பிலை போடவும்.
கொஞ்சம் வதங்கினதும், 1 டம்பளர் தண்ணீர்விட்டு வேக வைத்த பருப்பை போட்டு கரைக்கவும்.
அதில் பெருங்கயப்போடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு போடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை போடவும்.
இஞ்சி சாறை விடவும் .
அது ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது இஞ்சி ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.

குறிப்பு: இஞ்சி சாறு விட்டதும் ரொம்ப கொதிக்க விடாதிங்கோ. கசந்துவிடும். இந்த ரசம் வயறு சரி இல்லாத போதும வைத்து சாப்பிடலாம். தக்காளிக்கு பதில் எலுமிச்சை உபயோகிக்கலாம். புளிததண்ணீரிலும் செய்யலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! Empty கொட்டு ரசம்

Post by krishnaamma Tue Dec 04, 2012 11:18 am

தேவையானவை:

ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
1 ஸ்பூன் துவரம் பருப்பு உடைத்த்து

தாளிக்க:

கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கொத்தமல்லி தழை 1 கை
நெய் 2 ஸ்பூன்

செய்முறை :

வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்
தக்காளி, உப்பு போடவும்; ரசப்பொடி , உடைத்து வைத்துள்ள துவரம் பருப்பை போடவும்.
அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து பெருங்கயப்பொடி மற்றும் மஞ்சள் பொடி போடவும்.
1 டம்பளர் தண்ணீர் விடவும்; அது நன்கு கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது கொட்டு ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.

குறிப்பு: பருப்பு வேகவைக்காமல் சீக்கிரம் செய்யக்கூடிய ரசம் இது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! Empty கொள்ளு ரசம்

Post by krishnaamma Thu Dec 06, 2012 10:58 am

தேவையானவை:

கொள்ளு 4 டேபிள் ஸ்பூன்
ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 ஆர்க்
நெய் 2 ஸ்பூன்


செய்முறை :

கொள்ளை நன்கு வறுத்து பிறகு குக்கரில் இல் வேக வைக்கவும்.
வாணலி இல் நெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
அதில் ரசப்பொடி, பெருங்கயப்போடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு போடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
பிறகு வெந்தகொள்ளை தண்ணீர் விட்டு கரைத்து விடவும்.
அது ஒரு இரண்டு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
உங்களது கொள்ளு ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
இந்த ரசம் நெஞ்சு கபம் கரைய உதவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! Empty Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by மாணிக்கம் நடேசன் Thu Dec 06, 2012 1:27 pm

கொள்ளு ரசம் சாப்பிட்டா கொழுப்பு குறையுமுல்ல, ம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! Empty Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by krishnaamma Thu Dec 06, 2012 6:02 pm

மாணிக்கம் நடேசன் wrote:கொள்ளு ரசம் சாப்பிட்டா கொழுப்பு குறையுமுல்ல, ம்

உங்களுக்கு தெரியாததா மாமா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! Empty Re: ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum