புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைகூ வானம். நூலாசிரியர் :வீ.தங்கராஜ். மதிப்புரை:முனைவர் ச.சந்திரா.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Dec 04, 2012 7:31 am

ஹைகூ வானம்.

நூலாசிரியர் :வீ.தங்கராஜ்.

மதிப்புரை:முனைவர் ச.சந்திரா.

கோபுர நுழைவாயில்:
அண்டசராசரத்தின் மூலமாம் 'அணுவில்' துவங்கி அமிழ்தினும் இனிய 'தமிழ்' எனும் சொல்லில் நிறைவுறுகின்றது கவிஞர் வீ.தங்கராஜ் அவர்களின் ஹைகூ வானம் நூல்!மண்ணில் இருந்து மலையேறி "குறிஞ்சிப்பூக்கள்" பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து தமிழன்னைக்குச் சூட்டி அழகுபார்த்த இக்கவி இன்று ஹைகூ எனும் ஏணி கொண்டு விண்ணுலகு ஏறி வானம் தொட்டிருக்கின்றார்! வாசிப்போரின் மனதில் ஹைகூவிற்கான ரிஷி மூலத்தையும் நதிமூலத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகின்றது இந்நூல்!
நாற்பாலா?நயம்பாலா?

ஐம்பெரும் பூதங்கள் முதற்பகுப்பாய்,ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையானது இரண்டாம் பகுப்பாய்,இவ்விரண்டின் மாசு-மாசுக்கட்டுப்பாடு மூன்றாம் பகுப்பாய்,ஐந்தறிவு மனிதனுக்கு ஆறாம் அறிவைச் சுட்டிக்காட்டுவது நான்காம் பகுப்பாய்-என நயமாகத் தொகுக்கப் பட்டிருப்பதால் வாசிப்போர் ஒரு நூறு பக்கங்களையும் எவ்வித அலுப்பும் சலிப்புமின்றி பாங்காய் கடந்து சென்றுவிடுகின்றனர் என்பது உண்மை! நாற்பாலின் தலைப்பிற்கு ஏற்றவாறு, கவி பாடுவதில் சிறந்த நம்மவர் நால்வர்-அயலவர் நால்வர் -என இவ்விருவர்களின் வார்த்தைகளை ஒவ்வொரு பகுப்பிலும் வரவேற்பு வளையமாய் வைத்திருப்பதால் அவை ஹைகூ வானத்தின் வானவில் போல் பரிமளிக்கின்றன!
அழகியல் உணர்வா?ஆக்கப்பூர்வ உணர்வா?

காற்றுவாக்கில் நம்மைக்கடந்து செல்கின்ற ,நாம் கண்டுகளிக்கின்ற காட்சிகளெல்லாம் இக்கவிஞருக்கு கருவாகிவிடுகின்றது!ஆம்!இவரது கரங்களில் வானம் நெசவு செய்கின்றது!மேகம் தலை துவட்டுகின்றது!மழைத்துளிகள் மடல் வரைகின்றன!பூக்கள் பூஜை செய்யப்புறப்படுகின்றன!பகலவனும் பால்நிலவும் பக்கத்திற்குப்பக்கம் போட்டிபோட்டு நகர்கின்றன!இரவும் பகலும் இடையிடையே தலைகாட்டுகின்றன!குளிர் காலம்-கோடைக்காலம் என பருவகாலங்களோ ஆங்காங்கே பளிச்சிடுகின்றன!மொத்தத்தில் கேள்விக்குறியும் ஆச்சர்யக்குறியுமாய்,படிமமும் குறியீடுமாய்,ஹைகூ அனைத்தும் முத்திரை பதித்துச் செல்கின்றன! சில ஹைகூ தத்துவங்களை உதிர்க்கின்றன!ஒருசில மானிடவாழ்விற்கு எச்சரிக்கை விடுக்கின்றன!இயற்கையை பற்பல ஹைகூக்கள் வர்ணித்துச் செல்கின்றன!சிற்சில சமூக இழிநிலையைச் சாடுகின்றன!மொத்தத்தில் அழகியல் உணர்வோடு ஆக்கப்பூர்வமான உணர்வுகளையும் இந்நூல் ஊட்டிவிடுகின்றது எனலாம்!

தத்துவார்த்த ஹைகூ ஒன்று!
"விதையின் வாழ்க்கை
மரணத்தின் தொடக்கம்
உயிர்த்தெழுதலின் அற்புதம்!(ப.45)

தற்பெருமையாளனுக்கானச் சாட்டையடிக் கவிதை இதோ!
"நித்தம் பயணித்தாலும்
சுவடுகள் பதிப்பதில்லை
நிலவும் சூரியனும் வானில்!"

மூடத்தனத்தை முறியடிக்கும் முத்திரை ஹைக்கூ:
அவன் தைத்த செருப்பில்
ஊரே நடக்கிறது!
அவனுடையது கக்கத்தில்!(ப.91)
எது முதல் எதுவரை?

சில்வண்டு முதல் சிட்டுக்குருவிவரை,கரையான் முதல் கரடிவரை,எலிமுதல் எருமைவரை,மின்மினிப்பூச்சி முதல் வண்ணத்துப்பூச்சிவரை,புற்றீசல் முதல் பூனைவரை -என ஓரறிவு உயிர் முதல் ஐந்தறிவு உயிர்வரை அனைத்தும் ஆறறிவு உயிர்களுக்கு முச்சிறுவரிகளில் பாடம் கற்றுத்தந்துவிடுகின்றன!தவளைகள் தத்துவம் பேசுகின்றன!எலிகள் எதிர்காலவாழ்விற்கு எச்சரிக்கை விடுக்கின்றன!
பலூன் பாடம் கற்றுத் தரும்விதம் இதோ!

"குடியரசுதின விழா!
வானில் வண்ணபலூன்கள்!
தேசிய ஒருமைப்பாடு!

கருவறை முதல் கல்லறை வரை,பூமி முதல் வானம்வரை-கவி வீ.தங்கராஜ் அவர்களின் ஹைக்கூப்பயணம் தொடர்கின்றது!இதோ மண்ணிலிருந்து விண்ணிற்குப்பாயும் கவியின் சாகசம்!

"இயங்காத விண்கலங்கள்!
விண்ணை மாசாக்கும்
வானக்குப்பை!"

ஒரே கல்லில் இரு மாங்காயாக ஒரு ஹைகூ!

"நூலக அடுக்கில்
வரிசை கலையாமல்
முதிர்கன்னியாய் புத்தகங்கள்!"

என்று கவி கூறுவதில் வாசிப்பின் குறைபாடும்,பெண்மை சந்திக்கும் அவலமும் ஒற்றை வரியில் சொல்லப்பட்டுவிடுகின்றது!
பெண்மையின் பேரவலம் சொல்விளையாடலில் இதோ!

"ஐம்பாலில்
பெண்ணுக்கு
கள்ளிப்பால்!"(ப.87)

அழகியலை ஊட்டும் அற்புத ஹைக்கூ!

"நீலப்பட்டில் முத்துமாலை!
கூடு திரும்புகின்றன
கொக்குகள்!"(ப.32)

மனதை ஈர்த்த ஹைக்கூ!

"மௌனமாய் வந்து
நிறைய பேசியது
தகரக்கூரையில் மழை!"(ப.35)

மனமார...
ஹைக்கூ எனும் சிறகு ஏற்று நாற்றிசையும் பறந்ததோடு மட்டுமல்லாமல்,மண்ணிலிருந்து விண்ணிற்கும் பயணித்து சமூகத்தை உற்றுநோக்கியிருக்கும் கவிஞர் வீ.தங்கராஜ் அவர்களின் இலக்கியப்பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!








































View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக