ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Poll_c10போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Poll_m10போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Poll_c10 
Dr.S.Soundarapandian
போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Poll_c10போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Poll_m10போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Poll_c10 
heezulia
போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Poll_c10போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Poll_m10போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Poll_c10 
i6appar
போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Poll_c10போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Poll_m10போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

+5
கரூர் கவியன்பன்
Muthumohamed
ஜாஹீதாபானு
யினியவன்
அச்சலா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

Post by அச்சலா Mon Dec 03, 2012 2:29 pm

போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Tamil_News_large_596993
போக்குவரத்து நெருக்கடிக்கு பஞ்சமில்லாத சென்னை மாநகரின் அபிபுல்லா சாலையில் ஒரு காலை வேளை.


நான்கு பக்கமும் இருந்து பாய்ந்துவரும் வாகன ஒட்டிகள் முந்திச் செல்வதில் காட்டிய ஒழுக்கமின்மையால், ஒருவருக்கு ஒருவர் திட்டிக்கொண்டும், முட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
போக்குவரத்து சீர்படுவதாகவும் இல்லை, அதுபற்றி யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.


அந்த நேரம் போலீஸ்காரர் போல சீருடை அணிந்த ஒரு வயதான ஆட்டோ டிரைவர், தனது ஆட்டோவில் இருந்து இறங்கிவந்து, போக்குவரத்து நெருக்கடிக்கு நடுவில் நின்றுகொண்டு, வாகனங்களை சீர் படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.
அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி குழந்தைகளை சுமந்து சென்ற வேன் டிரைவர்கள் உள்பட பலர், " நல்லவேளை பெரியவரே, நீங்க வந்தீங்க, ரொம்ப நன்றி'' என்று சொல்லிவிட்டு சென்றனர்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த இடத்திலேயே நின்று கொண்டு, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், சமூக அக்கறையுடன் செயல்பட்டு, பின் தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்ற அந்த பெரியவரின் தோற்றம் மட்டுமல்ல அவரது கதையுமே வித்தியாசமானதுதான்.
இன்றைக்கு 67 வயதாகும் ஆட்டோ டிரைவர் சந்திரன் வெள்ளந்தியாகவும், வெளிப்படையாகவும் தன்னைப்பற்றி சொல்கிறார்.


பசும்பொன் மாவட்டம் கமுதியில் பிறந்தவன் நான், அப்பாவின் கவனிப்பும், வளர்ப்பும் இல்லாததால் மகா மட்டமானவனாக வளர்ந்தேன், யாருக்கும் அடங்காத சேட்டைக்காரனாக விளங்கினேன், இதனால் இரண்டாம் வகுப்பிற்கு மேல் படிப்பு ஏறவில்லை, டான்ஸ் ஆடுவதில் ஆர்வம் ஏற்பட்டது, ரிக்கார்ட் டான்ஸ் குரூப்பில் சேர்ந்து ஊர், ஊராக போய் டான்ஸ் ஆடினேன், டி.ராஜேந்தரின் மனைவியான உஷா ராஜேந்தர் கூட எல்லாம் டான்ஸ் ஆடியிருக்கேன்.
ரிக்கார்ட் டான்ஸ் ஆடுறவன்ங்றதால எனக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை, என்னடாது நம்ம நிலமை இவ்வளவு மோசமாக இருக்கேன்னு நினைச்சு டான்ஸ் ஆடுறதை விட்டுவிட்டு, கார் டிரைவர் ஒருவரை பழக்கம் பிடிச்சு, அவரது காரை கழுவிக் கொடுத்து கார் ஒட்டக் கற்றேன். 35 ரூபாய் செலவழித்து லைசென்ஸ்ம் எடுத்தேன்.


ஆனால் யாரும் கார் ஒட்ட வாய்ப்பு கொடுக்கலை, அப்புறம் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஒட்டுவோம்னு ஆட்டோ ஒட்டத் துவங்கினேன், அப்படி ஆட்டோ ஒட்டத்துவங்கி கிட்டத்தட்ட 37 வருஷமாச்சு, இப்ப சொந்த ஆட்டோ, சொந்த வீடு, மனைவி, மகன், மகள், பேரன், பேத்திகள் என்று நல்லாயிருக்கேன்.
ஆட்டோ ஒட்ட ஆரம்பிச்சு மனைவியோட நிம்மதியா வாழ்வோம்னு நினைச்ச நேரத்தில எனக்கு மஞ்சள் காமாலை நோய்வந்து பொழப்பேனான்னு ஆகிப்போச்சு, இயேசுவிடம் பிரார்த்தித்ததன் அடிப்படையில் பிழைச்சு எழுந்தேன், சபை சகோதரிகள் , "உங்ககிட்ட இருக்கிற கெட்ட பழக்கங்களை ஒழிச்சிங்கன்னா உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லைன்னாங்க, அன்னைக்கு வரை எனக்கு பழக்கமாகியிருந்த மது, கஞ்சா, பீடி, சிகரெட் போன்ற சகல கெட்ட பழக்கங்களையும், "சீ சனியன்களா'' என்று தூக்கியெறிந்தேன், இன்னைக்கு வரை அதை தொடவில்லை, அதே போல எந்த நோய் நொடியும் அதற்கு பிறகு என்னைத் தொடவில்லை.


சமுதாயத்திற்காக நாமும் ஏதாவது செய்யணும்ணு யோசிச்சப்பதான் நான் ஆட்டோவ நிறுத்தற இடமான அபிபுல்லா சாலையில், காலையில் ஏற்படற போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யலாமேன்னு தோணுச்சு, அதன்படி ரோட்ல நின்னு சரி செய்தேன், எல்லோரும் நன்றி சொல்லி சென்றார்கள். அப்புறம் நான் சவாரி இல்லாம போகும்போது, எங்கே போக்குவரத்து நெருக்கடின்னாலும் உடனே இறங்கி அதை சரி செய்துவிடுவேன்.
இதை அடிக்கடி பார்த்த போக்குவரத்து டிஎஸ்பி ஒருவர், நமக்கு ஒத்தாசையா ஒருத்தன் எப்படி உழைக்கிறான் பாருன்னு சொல்லி ஸ்டேஷனுக்கு கூப்பிட்டனுப்பி பழைய போலீஸ் யூனிபாரம், பூட்ஸ், பெல்ட் போன்றவைகளை கொடுத்துவிட்டாங்க, அதையெல்லாம் போட்டுக்கிட்டதும் ஒரு கம்பீரம் வந்திருச்சு, அப்போதிருந்து என்னோட ட்யூட்டி நேரம் முழுவதும் எப்பவும் இந்த டிரஸ்ஸோடதான் இருப்பேன்.


எனக்குன்னு நிறைய வாடிக்கையாளர் இருக்காங்க, செக்கை கையில கொடுத்து பணமாக்கி கொண்டுவந்து தர்ர அளவிற்கு நான் நம்பிக்கையான ஆளாகிட்டேன், இதுனால ஒருத்தரு மொபைல் போன் கொடுத்தாரு, ஒருத்தரு "ப்ளூ டூத்' கொடுத்தாரு, ஒருத்தரு புதுசாவே காக்கிதுணியில டிரஸ் தைச்சு கொடுத்தாரு. துப்பாக்கி வச்சுக்கிற இடத்துல போன் வச்சுக்குவேன், போலீஸ் ஸ்டார் குத்திக்கிற இடத்துல ஏபிசி என்று சும்மா குத்திக்குவேன். என்னால போலீஸ் உடைக்கு களங்கம் வராம பார்துக்குவேன்.
காலை 8 மணிக்கு ஆட்டோ ஒட்ட ஆரம்பிச்சா மாலை 6 மணிக்கு வீட்டிற்கு போயிடுவேன், வீட்டில் மனைவி பேரன்களுடன் பொழுதை போக்குவேன், ஞாயிறு முழுவதும் சர்ச்சில் இருப்பேன், என் ஏரியாவில எந்த குழந்தை பார்த்தாலும் குட் மார்னிங் தாத்தான்னு சொல்லாம போகாதுங்க, அந்த அளவிற்கு குழந்தைகளிடம் அன்பாக இருப்பேன். பொதுவா எல்லோருக்கும் நல்லவனாக இருப்பதும், எல்லவற்றிலும் நல்லபடியாக இருப்பதுமே வாழ்க்கையின் இனிமை என்பதை அனுபவிக்கிறேன் என்ற சந்திரனின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.

நன்றி:தினமலர்


போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Paard105xzபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Paard105xzபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Paard105xzபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

Post by யினியவன் Mon Dec 03, 2012 2:36 pm

திருந்தி வாழும் பெரியவர் போக்குவரத்து நெரிசலை
திருத்தி வாழ்வதும் அருமை - பாராட்டவேண்டும் இவரை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

Post by ஜாஹீதாபானு Mon Dec 03, 2012 2:41 pm

ஒரு காலத்துல தப்பு செய்தா ஒரு கட்டத்துல திருந்தணும் அவன் தான் மனிதன்

திருந்தவே மாட்டேனு சில ஜென்மங்கள் அடம்பிடிக்குதே என்ன செய்ய....?


பகிர்வுக்கு நன்றி அச்சலா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

Post by Muthumohamed Mon Dec 03, 2012 3:25 pm

தவறு செய்பவன் மனிதன் திருந்துபவன் புனிதன்

பதிவுக்கு நன்றிகள்



போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Mபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Uபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Tபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Hபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Uபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Mபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Oபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Hபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Aபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Mபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Eபோலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

Post by கரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 4:06 pm

ஜாஹீதாபானு wrote:ஒரு காலத்துல தப்பு செய்தா ஒரு கட்டத்துல திருந்தணும் அவன் தான் மனிதன்

திருந்தவே மாட்டேனு சில ஜென்மங்கள் அடம்பிடிக்குதே என்ன செய்ய....?

சுட்டுத்தள்ளூ!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

Post by ஜாஹீதாபானு Mon Dec 03, 2012 4:12 pm

கரூர் கவியன்பன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஒரு காலத்துல தப்பு செய்தா ஒரு கட்டத்துல திருந்தணும் அவன் தான் மனிதன்

திருந்தவே மாட்டேனு சில ஜென்மங்கள் அடம்பிடிக்குதே என்ன செய்ய....?

சுட்டுத்தள்ளூ!

இதுகெல்லாம் டாட்டா காட்டிடுவாங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

Post by jenisiva Mon Dec 03, 2012 5:12 pm

கரூர் கவியன்பன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஒரு காலத்துல தப்பு செய்தா ஒரு கட்டத்துல திருந்தணும் அவன் தான் மனிதன்

திருந்தவே மாட்டேனு சில ஜென்மங்கள் அடம்பிடிக்குதே என்ன செய்ய....?

சுட்டுத்தள்ளூ!

உங்களுக்கு இவ்வளவு கோபம் ஆகாது
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ஈகரை Re: போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

Post by சிவா Mon Dec 03, 2012 6:11 pm

இதில் இடம்பெற்றுள்ள கமுதி என்னும் ஊர் பசும்பொன் மாவட்டத்தில் இல்லை, இராமநாதபுரம் மாவட்டத்தில் தான் கமுதி உள்ளது!

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
http://en.wikipedia.org/wiki/Kamuthi


போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

Post by அகிலன் Mon Dec 03, 2012 6:23 pm

ஜாஹீதாபானு wrote:ஒரு காலத்துல தப்பு செய்தா ஒரு கட்டத்துல திருந்தணும் அவன் தான் மனிதன்

திருந்தவே மாட்டேனு சில ஜென்மங்கள் அடம்பிடிக்குதே என்ன செய்ய....?

என்னைத்தானே சொன்னநீங்க மேடம்?


நேர்மையே பலம்
போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

Post by அசுரன் Mon Dec 03, 2012 7:30 pm

இதே போல ஒரு நடுவயது ஆட்டோ காரர் கெல்லீசுக்கு முந்தைய சாலையில் (மனநல மருத்துவமனை வழியாக) தினமும் காலை நேரத்தில் கையில் வெள்ளை உறை அணிந்து பள்ளி வாகனங்களையும் இதர வாகனங்களையும் நெரிசலான நேரங்களில் வந்து சரிசெய்வார். எனது மாணவர்களில் ஒரு குழுவை அனுப்பி அவரை பேட்டி எடுத்துவர ஏற்பாடு செய்துள்ளேன். அந்த விவரத்தை அடுத்த வாரம் வெளியிடுகிறேன்.

தாத்தாவின் சேவை பாராட்டுக்குரியது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum