ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த சிந்தனைகள்.........

+10
GOPIBRTE
ச. சந்திரசேகரன்
ஜாஹீதாபானு
அச்சலா
யினியவன்
jenisiva
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
ஹர்ஷித்
பூவன்
14 posters

Page 18 of 26 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 26  Next

Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 18 Empty சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 03, 2012 10:41 am

First topic message reminder :

வலைப்பதிவில் படித்து மனங்கவர்ந்த சிந்தனைகளை இங்கே பதிவிடுகின்றேன் ......


அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.


Last edited by பூவன் on Mon Dec 03, 2012 11:12 am; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


சிறந்த சிந்தனைகள்......... - Page 18 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 10, 2012 10:33 am

சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி
நாம் செய்ய வேண்டிய செயல்களை தகுந்த சமயத்தில் செய்யாமல் தள்ளிப்போடுகிறோம்.
இல்லாவிட்டால் இன்று சிறிது செய்யலாம்; நாளை அதிகமாகச் செய்யலாம் என்று என்று நினைக்கிறோம்.இதையே ஆன்மிகத்திலும் மனிதர்கள் செய்கிறார்கள். இளமையில் வேலை செய்து நிறைய பணம் சம்பாதிப்போம்.வயதான பிறகு பகவானை நினைத்து வழிபட்டுக் கொள்ளலாம் என்று எண்ணுகிறோம்.

முதுமையில் நாம் சரியாக பார்க்கவே முடியாது. காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விடும்.
பகவானின் நாமங்களை சொல்ல விரும்பினாலும், ஜபிப்பதற்கு சக்தி இல்லாமல் போய் விடும்.சில மாணவர்களும் இவ்வாறு தான் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் பாடத்தை விட்டுவிட்டு,பொழுதுபோக்குகளில் நேரத்தை கழிக்கிறார்கள். தேர்வு நேரத்தில் படித்தால் போதும் என எண்ணுகிறார்கள்.

காலத்தை வீணடித்து விட்டு, கடைசி நேரத்தில் படிப்பதால் குழப்பமே மிஞ்சும். தங்கள் சோம்பேறித்தனத்தால்,தேர்வில் தோல்வி அடைகிறார்கள். மனப்பக்குவம் அடைய விரும்பும் ஒருவன் "நாளை' பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அதற்கான முயற்சிகளை "இன்றே' ஆரம்பிக்க வேண்டும்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 18 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 10, 2012 10:34 am

சுவாமி கமலாத்மானந்தர்
* புலனடக்கமும், ஆன்மிக சாதனைகளும் நம் வாழ்வில் இணைந்திருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாத நிலையில் ஆன்மிக அனுபவங்கள் ஏற்படுவதற்கு வழியே இல்லை. வேலை செய்தால் தானே கூலி கிடைக்கும். வேலையே செய்யாதஒருவன் கூலியை மட்டும் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

* மனிதன் பிறருக்குப் பரோபகாரமாகவும், நல்லொழுக்கங்களுடன் வாழ்ந்து தவத்தில் சிறந்து விளங்கி,இறுதியில் இறைவனின் திருவடியில் இரண்டறக் கலப்பதே வாழ்வின் நோக்கமாகும்.

* எந்த அளவிற்கு உள்ளம் தூய்மையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவனிடம் மனச்சாட்சியும் விழிப்புடன் இருந்து அவனை நல்வழியில் செலுத்திக் கொண்டிருக்கும். அதனால் மனமே குருவாக இருந்து நமக்கு வழிகாட்ட வேண்டும்.

* ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் அமுத வாக்காகும். வெளியில் ஆலய வழிபாடு செய்வதோடு திருப்தி கொள்ளாமல் இதயத்தில் இருக்கும் கடவுளை அறிவதே நம் பெரியோர்களின் நோக்கமாகும்.

* இறைவனை உள்ளத்தில் உண்மையாகவே ஆராதிக்கத் தொடங்கினால், நான் என்ற அகந்தை எண்ணம் அழிந்து விடும்.ஒளி வந்தவுடனேயே இருள் நீங்குவதுபோல, இறைவன் இருக்கும் இடத்தில் தான் என்னும் அகந்தை நிற்க முடியாது.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 18 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 10, 2012 10:35 am

திருக்குர்ஆன்-நற் சிந்தனைகள்
* (இந்நயவஞ்சகர்கள்) இறைவனையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர்.ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரே அன்றி வேறில்லை;எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய நெஞ்சங்களில் நோயிருக்கிறது.
(திருக்குர்ஆன்2:9)

* ''பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்'' என அவர்களிடம் சொல்லப்பட்டால்,''நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்களே!'' என அவர்கள் கூறுகிறார்கள்-எச்சரிக்கை! நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகளாவர்.(திருக்குர்ஆன் 2:11,12)

* (நபியே) இந்நயவஞ்சகர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்து விடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள் (எதற்கும் உதவாதவர்கள்).இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய் கருதுகின்றனர். இவர்கள் தாம் கடும் பகைவர்களாவர்.(திருக்குர்ஆன் 63:4)

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 18 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 10, 2012 10:35 am

திரு.வி.க
* மனிதராகப் பிறந்தவர் எல்லாம் மனிதராக மாட்டார். இயற்கையை ஒட்டி வாழும் தெய்வீக வாழ்க்கையே பயனுடையதாகும். தன்னிடம் இருக்கும் தெய்வீகசக்தியை மனிதன் உணராமல் வாழ்வதில் பொருளில்லை.

* மனிதப்பிறவி விலங்கு உணர்விற்கும் தெய்வீக உணர்விற்கும் இடைப்பட்ட நிலையாகும். அதனால் தான் மனித மனங்களில் பொறாமை, காமம் போன்ற தீயகுணங்களும், அன்பு, கருணை போன்ற தெய்வீக குணங்களும் இருக்கின்றன.

* தீயகுணங்களை வளர்த்துக் கொள்ளத் துணிந்தால் அசத்தியத்தையும்,தெய்வீக குணங்களை வளர்த்துக் கொண்டால் சத்தியத்தையும் அடையமுடியும்.

* மனிதன் தனது அன்றாடக் கடன்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். விழித்திருக்கும் வேளையில் உறங்குவதோ, உறங்கும் வேளையில் விழித்திருப்பதோ முறையான செயல் அல்ல.

* மனிதன் முறையாக அன்றாடம் குறைந்தபட்சம் நான்குமணிநேரமாவது உறங்க வேண்டும். உறங்கும் நேரத்தில் விழித்திருப்பவர்களின் உடல்நலம் குலையத் துவங்கும். நாளடைவில் ஒழுக்கத்திலிருந்து விலகி ஒழுங்கீனமானவர்களாக மாறிவிடுவர்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 18 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 10, 2012 10:37 am

தாகூர்

* கடினமான நிலத்தைப் பண்படுத்தும் உழவனிடமும், சாலை அமைக்கும் போது கல்லுடைக்கும் தொழிலாளியிடத்தும் இறைவன் இருக்கின்றான். ஆனால், இறைவன் சாமானியர்களான நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

* மனிதன் மெய்யறிவு பெற்று விட்டால்,மீண்டும் குழந்தை நிலையை அடைகின்றான்.
அந்நிலையை எதிர்பார்த்து இறைவன் நமக்காக காத்து நிற்கிறான்.

* தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள்.அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும்.

* நாமோ கல்நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறோம். ஆனால், நம்மை எல்லாம் படைத்த இறைவன் கருணைஉள்ளம் கொண்டவனாக விளங்குகிறான்.

* பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது.வாழ்வின் இசை என்பதே பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.

* இறைவன் தனக்கான நண்பர்கள் கிடைப்பார்களா என்று தேடுகின்றான்.மனித மனங்களில் அன்பு இருக்கிறதா என்று எதிர்பார்க்கிறான்.

* மனித உறவுகள் அன்பினாலே பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு என்னும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான்,நம் வாழ்க்கை சுவையானதாகவும், பொருளுடையதாகவும், சுகமானதாகவும் இருக்கும்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 18 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 10, 2012 10:40 am

வியாசர்
* பக்தி ஒளி இருக்கும் மனதில் அறியாமை என்னும் இருள் இருப்பதில்லை.பதவி சாதிக்க முடியாததைக் கூட பக்தியால் சாதிக்க முடியும்.

* பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.

* பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே உண்மையான விரதம்.பிறருக்குத் தீமை செய்யாத எந்தத் தொழிலும் உயர்வானதாகும்.

* பேராசை குணம் மக்களின் வாழ்க்கையை திசை திருப்பத் தொடங்கினால்,அதன் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வர்.

* கடவுளுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்ப கட்டம். ஞானம் முதிரும் போது பயம் அன்பாக மாறுகிறது.பூரண அன்பு நம் மனதில் பரிணமிக்கும் போது, பயம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவிடுகிறது.

* புலன்களின் ஆதிக்கத்தில் அடங்கி நடக்கும் வாழ்க்கை உலக சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்தில் கொண்டுவந்து அடக்கி வாழும் வாழ்க்கை ஆன்மிக சம்பந்தமானது.

* நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனையே அழித்து விடுகின்றன.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 18 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 10, 2012 10:40 am

குருநானக்
* உண்மையோடும், அன்போடும் வாழ்வது தான் ஆன்மிக வாழ்வின் ரகசியம். நற்செயல் என்ற விளைநிலத்தைச் சீர்படுத்தி,அதில் இறைவனின் திருநாமம் என்னும் விதையைத் தூவுங்கள்.

* உள்ளத்தில் ஆண்டவன் திருநாமம் என்னும் தீபம் எரிந்து கொண்டிருந்தால் வேறு சிந்தனை ஏன் வரப்போகிறது?சிந்திப்பதாக இருந்தால் நல்ல விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

* பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை. திருப்தியிலும் சிறந்த இன்பம் வேறில்லை. ஆசையிலும் பெரிய தீமை இல்லை.கருணையிலும் சிறந்த அறம் கிடையாது. மன்னிப்பதை விட ஆற்றல் மிக்க ஆயுதம் வேறில்லை.

* ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கிறார்கள். ஆனால், மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதனால் இறைவனை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.

* சத்தியமாகிய பரம்பொருளை சிந்தித்தால் உள்ளத்தில் ஒளி பிறக்கிறது. உலகில் வாழ்வதற்கு ஒரே ஒரு மார்க்கம் தான் உண்டு.அது கடவுளிடம் பயமும் பக்தியும் கொண்டு நல்லவனாக வாழ்வது மட்டுமே.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 18 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 10, 2012 10:41 am

கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்
* ரோஜாவிடமிருந்து பூக்களைத்தான் பறிக்க வேண்டுமே ஒழிய,அதிலுள்ள முள்ளைச் சீவ வேண்டியதில்லை. அதுபோல,படிக்கும் சாஸ்திரங்களில் இருந்து சாரத்தை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர,சாரமில்லாத வேண்டாத விஷயங்களைத் தள்ளிவிட வேண்டும்.

* கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும்.
அதுபோல குதர்க்கபுத்தி கொண்டவர்களின் உள்ளத்தில் பலவிதமான சந்தேகங்கள் கிளம்பியபடியே இருக்கும்.அதை தீர்த்து வைப்பது என்பது சமுத்திரத்தை கட்டுப்படுத்துவது போலத்தான்.

* கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போலத் தோன்றினாலும்,அதை சாவி கொடுத்து இயக்கியவன் ஒருவன் இருக்கிறான் அல்லவா?அதுபோல,உலகவாழ்க்கை இயற்கையாகவே நடப்பது போல கண்ணுக்குத் தோன்றினாலும்,அதை இயக்குவிப்பவன் ஒருவன் இருக்கிறான். அவனையே பகவான் என்று அழைக்கிறோம்.

* உயிருக்கும் உயிராக இருப்பவர் கடவுள். உடலுக்குள் இருக்கும் உயிரையே யாராலும் காணமுடியவில்லை.அப்படியிருக்க உயிரின் உயிரை இவ்வுலகில் அறியவல்லவர் தான் யார்?

* ஈரமண்ணில் செடி கொடிகள் வளரும். காய்ந்த மண்ணில் செடி பட்டுவிடும். அதுபோல,இரக்கம் கொண்ட மிருதுவான இதயத்தில்தான் பக்தி வளரும். கடினமான இதயத்தில் பக்திக்கு இடமே இருப்பதில்லை.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 18 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 10, 2012 10:41 am

ஹரிதாஸ்கிரி சுவாமி
* நாம் விரும்பியதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இறைவனே நம்மை வழி நடத்துபவன். அதனால்,பக்தி மார்க்கத்தை விட்டு விலகுதல் கூடாது. அவன் நம் தகுதி அறிந்து நிச்சயம் அருள்செய்வான்.

* கலியுகத்தில் இறைவனின் திருநாமங்களை ஜெபிப்பது மட்டுமே இறைவனை அடையும் வழியாகும்.நாமங்களை ஜெபிப்பதற்கு குளிப்பது, பூஜை செய்வது போன்ற எந்த வரையறை எதுவும் தேவை இல்லை.

* பூஜை செய்தாலும், மந்திரங்களை ஜெபித்தாலும் இறைவனை நினைப்பது தான் முக்கியம்.இறைவன் நமக்கு துணை செய்கிறான் என்ற நம்பிக்கை மிகவும் தேவை. இதனால்,நாம் செய்யும் செயல்கள் சுலபமாகின்றன. மனதில் ஊக்கமும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது.

* குழந்தைகளுக்கு இறைவனின் திருநாமங்களைப் பெயரிடுங்கள். பிள்ளைகளை அன்போடு கூப்பிடும்போது,நம்மையும் அறியாமல் நாமஜபம் செய்த புண்ணிய பலனைப் பெற்றவர்களாகி விடுவோம்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 18 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by பூவன் Mon Dec 10, 2012 10:44 am

பாம்பன் சுவாமி-

*அரிது, அரிது மானிடராக பிறத்தல் அரிது' என்று புலவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்.இந்த மனிதப்பிறவி எவ்வளவு நல்ல விஷயமோ அதே அளவிற்கு அஞ்சத்தக்க விஷயமும் ஆகும்.ஏனெனில், மனிதர்கள் தங்கள் செய்கையால் இந்த பிறவியை மேலாகவோ, கீழாகவோ செய்கிறார்கள்.நல்லதைச் செய்தால் இதைவிட நற்பிறவி கிட்டும். தீமையை செய்தால் மீண்டும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும்.

* ஒரு மனிதனின் தயவைப் பெறுவதற்குக்கூட நீண்டநாள் போராடுகிறீர்கள். அரசாங்கத்தின் தயவு வேண்டுமானால் இன்னும் அதிகநாள் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சாதாரண ஜென்மங்களுக்கே இப்படி காத்திருக்க வேண்டியது என்றால்,கடவுளின் அருளைப் பெறுவதற்கு எவ்வளவுநாள் காத்திருக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.எனவே அவரது கருணையைப் பெற பொறுமையுடன் காத்திருங்கள். மிகப்பெரிய பலன் கிடைக்கும்.

* பாவம் செய்யும்போது எப்படி மறைவாக செய்கிறீர்களோ அதேபோல மிகுந்த புண்ணியமான அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும். அப்படியானால்தான் அந்த தானத்திற்குரிய பலன் வெகுவாக கிடைக்கும்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிறந்த சிந்தனைகள்......... - Page 18 Empty Re: சிறந்த சிந்தனைகள்.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 26 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 26  Next

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சிவசிவராத்திரி சிந்தனைகள் ராத்திரி சிந்தனைகள்
»  சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum