புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
59 Posts - 55%
heezulia
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
54 Posts - 55%
heezulia
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
2 Posts - 2%

D. sivatharan
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_m10இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்....

Page 1 of 3 1, 2, 3  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 12:09 am

இமயமலை

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Imamalai
இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரிய, மிக உயர்ந்த, மாபெரும் மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இந்த இமயமலைத் தொடர் ஆசியாவிலுள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடருக்கு வடக்கே 4,300 மீட்டர் உயரத்திலே திபெத் உயர் பீடபூமி உள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது.

உலகின் ஒப்பற்ற மிக உயர்ந்த கொடுமுடியாகிய எவரெஸ்ட் சிகரம் இவ் இமயமலையிலேயே உள்ளது. இவ்விமையமலைத் தொடர் எத்தனையும் பெரிய மலைத்தொடர் என்றால், இத்தொடரிலே 100க்கும் அதிகமான எண்ணிக்கையில் 7,000 மீட்டரையும் மீறியப் பேருயர் தனிமலைகள், கொடுமுடிகள் உள்ளன. ஆனால் இவ்விமய மலைத்தொடரைத் தவிர்த்து எஞ்சி உள்ள இப்பெருநில உலகில் ஒருமலையும் கூட 7,000 மீட்டர் உயரத்தை மீறி இல்லை. தென் அமெரிக்காவிலே அர்ஜெண்டைனாவிலே உள்ள அக்கோன்காகுவா பெருமலைதான் அடுத்த மிகப்பெரிய மலை (6,962 மீ உயரம்). இமயமலைத் தொடர் மிகப்பெரிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக 2,400 கி.மீ தொலைவு நீண்டு விரிந்துள்ளது.

இமயமலையின் அண்மை பகுதிகளேயே தெற்கு ஆசியாவின் தொன்மையான சமயங்களான இந்து மதம், புத்த மதம் உருவாகி வளர்ச்சியடைந்தது.

இமயமலைத் தொடர் அமைந்துள்ள நாடுகள்

இமயமலைத் தொடர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,இந்தியா. சீனா, பூடான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் வழியாக அமைந்துள்ளது.
[தொகு] இமயமலைத் தொடரில் உருவாகும் ஆறுகள்

இமயமலையின் பெரும்பாலான பகுதிகள பனிமலையால் சூழப்பட்டுள்ளன. இந்த பனிமலைகளிலிருந்து பல மிகப்பெரிய ஆறுகள் உருவாகுகிற்து. சிந்து நதி, கங்கை நதி, பிரம்மபுத்ரா, ஐராவதி மற்றும் யாங்சிகீ போன்ற ஆறுகள் முதன்மையானவைகளாகும்.

வரலாற்றில் இமயமலையின் பங்கு

இதன் உயரமான பரவலினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் இயற்கை அரணாக விளங்குகிறது. இந்திய துணைக்கண்டத்தின் மங்கோலிய, சீனா மக்களின் நாகரிகத்தில்ருந்து பிரிக்கின்றது. உதாரண்மாக செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்கு பங்கு உண்டு.

தமிழ் - சங்க இலக்கியங்களில் இமயம்

* சேரலாதன் கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பின்னர் இமயத்தில் வில்லைப் பொறித்தான் \ அகம் 127
* வஞ்சி நகருக்குப் பெருமை அதன் அரசன் வானவன் இமயத்தில் வில்லைப் பொறித்தது. அந்த இமயம் 'வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோடு' கொண்டது \ புறம் 39
* வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த ... இயல் தேர்க் குட்டுவன் \ சிறுபாணாற்றுப்படை 48-
* இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் தன் முத்திரையாகிய வில்லைப் பொறித்தான். \ பதிற்றுப்பத்து பதிகம் 2
* இந்தியாவில் இமயப் பகுதி அரசர்கள் குமரிமுனை வரையில் கைப்பற்றக் கனவு கண்டனர். இமையவரம்பன் அவர்களது கனவுகளைப் பொய்யாக்கித் தன் புகழை இமயம் வரையில் நிலைகொள்ளச் செய்தான். பதிற்றுப்பத்து - 2ஆம் பத்து - பாடல் 11
* வடதிசை எல்லை இமயமாகத் தென்திசைக் குமரிவரை ஆண்ட அரசர்களின் நாட்டை அழித்துப் போரிட்டவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் \ பதிற்றுப்பத்து 43
* கொண்டல் மழை இமயத்தைத் தீண்டிப் பொழியும் \ புறம் 34
* இமயம் போல உயர்ந்து வாழ்க \ புறம் 166
* வடதிசை இமயமும், தென்திசை ஆய்குடியும் உலகைச் சமனிலை கொள்ளச் செய்யும் \ புறம் 132
* தலைவி ஒருத்தி தன் காதலனை இமயம் ஆடினாலும் தன் காதலனின் பண்பு ஆட்டங்கூடக் காணாது என்கிறாள் \ குறுந்தொகை 158
* அரவணையான் புகழ் இமயத்துக்கு அப்பாலும் பரவ வேண்டும் என்று புலவர் திருமாலை வாழ்த்துகிறார். \ கலித்தொகை 105
* தென்கடல் பரப்பில் மேய்ந்த அன்னப் பறவை இமயமலையிலுள்ள வானர மகளிரிடம் இருப்புக் கொள்ளுமாம். அதுபோல, என் காதலியை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க மறுப்பவர்கள் என்றேனும் ஒருநாள் கொடுப்பார்கள் என்கிறான் தலைமகன் ஒருவன். \ நற்றிணை 356
* பொன்னுடை நெடுங்கோட்டு இமயம் போன்ற வேழம் பரிசாகத் தருக என்கிறார் ஒரு புலவர் \ புறம் 369
* என் காமம் இமயத்திலிருந்து இழிதரும் கங்கை ஆறு போல மாலை வேளையில் பெருகுகிறது என்கிறாள் ஒருத்தி \ நற்றிணை 369
* அந்தி வேளையில் அலையாமல் ஓரிடத்தில் தங்கும் விலங்கினம் போல ஆயத்தோடு ஆற்றுத்துறை மணல்மேல் ஒரிடத்தில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு நல்லவரைப் பார்த்தேன் என்று பரத்தைமாட்டுச் சென்ற தன் தலைவனைப்பற்றி ஒருத்தி குறிப்பிடுகிறாள் \ கலித்தொகை 92
* நம் காதலர் பொருள் தேடச் சென்றாரே அந்தச் செல்வம் இமயத்தைப் போன்றதா, அன்றி நந்தர் பாடலி நகரில் மறைத்து வைத்த நிதியம் போன்றதா? ஆயினும் அந்தச் செல்வம் நம்மைக் காட்டிலும் பெரிதா? என்று சொல்லித் தலைவி தோழியிடம் அங்கலாய்த்துக் கொள்கிறாள். \ அகம் 265
* சிவன் திரிபுரம் எரித்தபோது இமயம் அவனுக்கு வில்லாயிற்று. -கதை \ பரிபாடல் திரட்டு 1
* இமயத்தை வில்லாக்கிக்கொண்ட சிவன் கதை பேசப்படுகிறது \ கலித்தொகை 38
* அந்தி வந்ததும் அந்தணர் தம் கடமையாக முத்தீ வளர்க்கும் இடங்களுள் ஒன்று இமயம். மற்றொன்று பொதியில். அந்த முத்தீ விளக்கொளியில் பெரிய பெண்மான் உறங்குமாம். இந்த இரு மலைகளையும் போலப் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் உயர்விலும், புகழிலும் நடுக்கம் இல்லாமல் வாழவேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார் \ புறம் ௨

நன்றி:கனவே...

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 02, 2012 12:24 am

இமய மலை செல்ல ஆசையா இருக்கிறது பதிவை படித்ததும்

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Mஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Uஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Tஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Hஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Uஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Mஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Oஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Hஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Aஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Mஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Eஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 12:28 am

Muthumohamed wrote:இமய மலை செல்ல ஆசையா இருக்கிறது பதிவை படித்ததும்

அப்படியா...அதிசயம் ...அற்புதம் பல...
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Images?q=tbn:ANd9GcSyXV_jJN7gRgzhabrHuozA3toz_H-vafX4lrsRIAFS-jwNkJwesZKTVK2lHw

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 12:30 am

Muthumohamed wrote:இமய மலை செல்ல ஆசையா இருக்கிறது பதிவை படித்ததும்

அச்சலா கூட்டி போவாங்க

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 12:31 am

பூவன் wrote:
Muthumohamed wrote:இமய மலை செல்ல ஆசையா இருக்கிறது பதிவை படித்ததும்

அச்சலா கூட்டி போவாங்க
விசா கிடைக்குவரை காத்திருங்கள்...

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 12:32 am

விசா கிடைக்குவரை காத்திருங்கள்...
இமய மலைக்கு விசா வா ????

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 12:37 am

பூவன் wrote:
விசா கிடைக்குவரை காத்திருங்கள்...
இமய மலைக்கு விசா வா ????
நீங்கள் வெளிநாடுதானே!!

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 10:34 am

உலகவெப்பமயமாதலால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இமயமலை

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Himalayas_site

இமயமலை பனிச்சிகரங்கள் உருகுவதன் காரணமாக 1.3 பில்லியனுக்கும் அதிகமான ஆசிய நாட்டவர்கள் அச்சுறுத்தலை எதிர் நோக்குவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

1 பில்லியனுக்கும் அதிகமான ஆசிய நாட்டவர்கள் தமக்கான நீர் வளத்துக்காக இமய மலை சிகரங்களிலேயே தங்கியுள்ளனர். ஆய்வாளர்களின் கருத்தின் பிரகாரம் இமய மலை சிகரங்களில் அச்சுறுத்துகின்ற வேகத்தில் பனி உருகுவதன் காரணமாக ஆசியக் கண்டத்தில் அதிகப்படியான வரட்சி நிலையினை இது ஏற்படுத்தலாம் என எச்சரிக்கைச் செய்திகள் விடப்படுகின்றன.

2400 கி.மீற்றருக்கும் அதிகமான தூரம் இமயமலை சிகரங்கள்; பாகிஸ்தான், இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் என பரந்து காணப்படுகின்றது. ஆசியாவின் பிரதான 9 மிகப்பெரிய ஆறுகளுக்கு இமயமலை சிகரங்களே பிரதான நீர் வழங்கும் ஊற்றாக காணப்படுகின்றது. இந்த ஆறுகளை நம்பி 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.

இந்தப் பிராந்தியத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெப்பநிலையானது 0.15 தொடக்கம் 0.6 டிகிரி செல்சியஸ் வரை [0.27- 1.08 டிகிரி பரனைற்] அதிகரித்தவண்ணமுள்ளது. இதன் காரணமாக சிகரங்கள் சுருங்கும் வேகமானதும் அதிகரித்தவண்ணமுள்ளது.

காலநிலை மாற்றங்களின் காரணமாக எதிர்வருகின்ற 40 வருடங்களில் அதிகமான பனிச்சிகரங்கள் இல்லாமல் மறைந்துபோய்விடும் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

காலநிலை மாற்றங்கள் தொடர்பில் ஆராயும் பிரதான ஐ.நா நிறுவனமான காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான அரசாங்கங்களுக்கிடையிலான குழுவினர் [IPCC] கருத்துத்தெரிவிக்கையில் இமயமலை பனிச்சிகரங்கள் 2035ம் ஆண்டளவில் பிரதான மாறுதல்களை வெளிப்படுத்தும் என தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்தின் பிரகாரம் உலகவெப்பமயமாதலின் விளைவுகளை இந்தப் பிராந்தியத்தில் உணரக்கூடியதாக தெரிவிக்கின்றனர்.

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Himalaya_iss1_big
ஆய்வுகளின் பிரகாரம், அதிகரித்த வேகத்தில் சிகரங்கள் உருகுவதன் காரணமாக சீனா தேசத்தில் குறுகிய காலத்தில் வெள்ளப்பெருக்குகள் அதிகரிக்கலாம் என சிங்குவா செய்தி ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், நீண்ட காலத்தில் ஆறுகளின் நீர்ப்பிரவாகத்தில் குறைவுகள் ஏற்பட்டு மேற்கு சீனாவின் பெருமளவான பகுதிகள் பாதிப்பினை எதிர்நோக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்ப் பற்றாக்குறை காரணமாக உலக அதிகளவு சனத்தொகையினை கொண்ட சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தியில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நூற்றாண்டின் இறுதியில் பங்களாதேஷ் நாட்டின் பிரதான நதிகள் வரட்சி நிலையினை அடையலாம் என IPCC தெரிவிக்கின்றது. இதன் காரணமாக அங்கு ஏற்படுகின்ற வெள்ள நிலைமைகளில் மாறுதல்கள் ஏற்படலாம்.

இமயமலையின் பனிச்சிகரங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் நீண்ட காலத்தில் ஆசிய நாட்டவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம் எனவே உலகவெப்பமயமாதலுக்கு காரணமான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அரசாங்கங்கள் விரைந்து செயற்பட வேண்டுயதன் அவசியம் தற்சமயம் உணரப்படுகின்றது எனலாம்.

நன்றி:லோகநாதன்..

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 10:41 am

கடலுக்குள் இருந்த இமயமலை!
இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Hima
சில உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையோ, கட்டுக்கதையோ என்று யோசிக்கத் தோன்றும்.

உதாரணமாக, இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில் ஆழ்கடலுக்குள் இருந்தது என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை.

நமது உலகம் தோன்றும்போது அது இப்போது நாம் காணும் தோற்றத்தில் இல்லை. இப்போது கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்து கண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால் ஒரு வித்தியாசம். அவை இப்போது இருப்பதைப் போல் ஐந்து கண்டங்களாக இல்லை. உலகத்தின் சிறுபகுதி வெறும் நிலத்திட்டாகவும், பெரும்பகுதி நீரால் சூழப்பட்டதாகவும் இருந்தது.

ஆனால் அந்த நிலத்திட்டு நிலையாக இருக்கவில்லை. எப்போதும் நகர்ந்துகொண்டே இருந்தது. அதை கண்டங்களின் நகர்வு என்கிறார்கள். அதற்குக் காரணம், பூமி ஒரே திடப்பொருளாக இல்லாததுதான்.

பூமி முக்கியமாக நான்கு அடுக்குகளாகக் காணப்படுகிறது. பூமியின் மையத்தில் கனமான திடப் பொருளால் ஆன மையப் பகுதி உள்ளது. அதைச் சுற்றி திரவ நிலையில் உள்ள புறமையம் இருக்கிறது. அந்தப் புறமையத்தைச் சுற்றி ரப்பர் போன்ற `மேன்டில்’ பகுதி உள்ளது. அந்த மேன்டில் மீள்தன்மை உடையது. கிட்டத்தட்ட `பாகு’ நிலையில் இருக்கிறது. இந்த மேன்டிலின் மீதுதான் நாம் இருக்கும் நிலப்பகுதி மிதந்து கொண்டிருக்கிறது.

நம்முடைய நிலப்பகுதி ஒரே துண்டாக இல்லாமல் பல துண்டுகளாக இருப்பதால் அவை மேன்டிலின் மீது நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு காலத்தில் நிலமாக இருந்தபகுதி இப்போது கடலாகவும், கடலாக இருந்த பகுதி இப்போது நிலமாகவும் இருக்கின்றன. அதாவது பூமியின் முகத்தோற்றம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது.

நமது தமிழ்நாட்டுக்குத் தெற்கே லெமூரியாக் கண்டம் என்ற ஒரு நிலப்பரப்பு இருந்தது என்றும், பின்னர் அதை கடல்கொண்டுவிட்டது என்றும் படித்திருக்கிறோம். அதற்கு இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன.

இதேபோல் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஈரானும், சீனாவும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன. ஈரான், சால்ட் ரேஞ்ச், ஸ்பிடி, காஷ்மீர், இந்தோ- சீனா, சீனா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் இநëதப் பகுதிகள் அனைத்தும் ஒரே கடலால் இணைக்கப்பட்டிருந்தன என்பதை நிரூபித்திருக்கின்றன. லடாக், நேபாளம் ஆகிய பகுதிகள் கூட கடலாகத்தான் இருந்திருக்கின்றன.

இந்தப் பகுதிகள் எல்லாம் கடலாக இருந்தன என்று எதை வைத்துக் கூறுகிறார்கள்? பூமியின் வரலாற்றைப் பல்வேறு காலகட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்தெந்தப் பகுதியில் என்னென்ன விலங்குகள் வாழ்ந்தன என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

பழங்காலத்தில் வாழ்ந்த விலங்குகளில் சில பூமிக்கடியில், பாறைகளில் புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட்டன. பூமியைத் தோண்டி ஆராய்ச்சிகளை மேற்கொண்டால், அங்கு இயற்கையால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகளின் புதைபடிவங்களைக் காண முடியும். இந்தப் புதைபடிவங்கள் பூமியின் வரலாற்றையும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

இவ்வாறு இமயமலைப் பகுதியைத் தோண்டி ஆராய்ச்சிகள் நடத்தியபோது அங்கு கடல்வாழ் விலங்குகளின் புதைபடிவங்கள் காணப்பட்டன. அந்தப் புதைபடிவங்களில் காணப்படும் கடல்வாழ் விலங்குகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் வாழ்ந்தவை. எனவே பல கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி கடலாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். இந்த முடிவை வேறு பல சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.

நன்றி:செந்தில்...

இமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xzஇமயமலை- பற்றிய செய்திகள் மற்றும் தகவல்.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 10:46 am

அச்சலா wrote:
பூவன் wrote:
விசா கிடைக்குவரை காத்திருங்கள்...
இமய மலைக்கு விசா வா ????
நீங்கள் வெளிநாடுதானே!!

சத்தியமா சொல்றேன் நான் தமிழ்நாடு தான்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக