ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!

5 posters

Go down

ஈகரை ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!

Post by அச்சலா Sun Dec 02, 2012 9:37 am

.ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! E_1352370744
நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் உலகத்தில் பறவைகள்
இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரே வண்ணத்தில்
இருந்தன. இப்போது காணப்படுவது போல் சிவப்பு, பச்சை,
மஞ்சள் வண்ணத்தில் இல்லை. சொல்லி வைத்தது போல்
சாம்பல் நிறத்தில் இருந்தன.
-
ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு
அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை ஏற்று எல்லாப்
பறவைகளும் அரசன் முன்னால் கூடின.
-
கூட்டமாக கூடி வந்த பறவைகளில் சில கூவின. சில
பறவைகள் அகவல் ஒலி எழுப்பின. சில கிரீச் சிட்டன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன.
சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி
நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன.
சில பெரிய மனிதர்போல் கம்பீரமாய் உலவின. அவைகள்
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன.
-
அரசப் பறவை, அவர்கள் எல்லாரையும் ஒரு முறை தனது
கண்களைச் சுழற்றிப் பார்த்தது. பின்னர் ஓர் இறக்கையை
வானத்தை நோக்கி திருப்பியது. உடனே எல்லா பறவைகளும்
வானத்தை அண்ணாந்து பார்த்தன.
-
ஆகா! வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. அதன்
வண்ணங்களைப் பார்த்து பறவைகள் ஆச்சரியப்பட்டன.
“ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு’ என்று அவைகள்
சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன.
-
எழில் மிகு ஏழு வண்ணங் களைப் பார்த்து சில வாயடைத்துப்
போய் நின்றன. ஏனென்றால், அப்படி ஓர் அழகான பெரிய
வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை.
-
“”உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக்
கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ
அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்,”
என்று அனுமதி வழங்கியது பறவைகளின் அரசன்.
-
அடுத்த வினாடி அங்கு ஒரு “தள்ளு முள்ளு’ ஏற்பட்டது.
ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க
முயன்றன. எனவே, அவைகள் மற்ற பறவையைத் தள்ளிவிட்டு
முன் வந்தன. அதனால் ஏகப்பட்ட குளறுபடி உண்டாயிற்று.
-
ஒரு கிளி முன்னால் வந்தது, “”எனக்கு பச்சை வர்ணமே
பிடிக்கும்,” என்று சொல்லி அது பச்சை நிறத்தைப் பெற்றுக்
கொண்டது. அதனால் கிளி செழிப்பான ஒரு மரத்தின் பெரிய
இலை போல் காணப்பட்டது.
-
ஒரு குருவி ஓடி வந்தது. அது, “”எனக்கு மஞ்சள் நிறம்தான்
பிடிக்கும்,” என்று கிரீச்சிட்டது. பின்னர் அது மஞ்சள் நிறத்தை
அணிந்து கொண்டது. அதை எல்லாரும் மஞ்சள் குருவி
என்று அழைத்தனர்.
-
எல்லாரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்தது.
அது, “”எனக்கு சிவப்பு வர்ணமே விருப்பமானது,” என்று சொல்லி
அந்த நிறத்தைப் பெற்றுக் கொண்டது. அதை எல்லாரும் செங்குருவி
என்று கூப்பிட்டனர்.
-
இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப்
பெற்றுக் கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி
மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது.
அதனால் மற்றவர்களைத் தள்ளி விட்டு முன்னால் வர
முடியவில்லை.
-
அரசப் பறவை அந்தக் குருவியைப் பார்த்தது.
“”சின்னஞ்சிறு பறவையே! நீ ஏன் அமைதியாய் அங்கே
நிற்கிறாய்? மற்றவர்களைப் போல் நீ ஏன் வர்ணம் கேட்க
வில்லை?” என்று கேட்டது.
-
“”வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன்,”
என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு சிறிய பறவை.
-
“”எல்லா நிறங்களும் முடிந்துவிட்டதே! என்ன செய்வது?” என்றது
அரசப் பறவை.
அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை கண்ணீர் விட்டது.
-
“”அப்படியானால் நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான்
இருக்க வேண்டுமா?” என்றது.
-
“”சின்னஞ்சிறு பறவையே, நீ மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து
மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ
எப்போதும் சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது,” என்று சொன்ன
பறவை, எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு
பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து,
அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய
பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது.
-
அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு
“பஞ்சவர்ண கிளி’ என பெயர் வைத்தான்.
-
இப்போது எல்லா பறவைகளும் அந்த சிறிய பறவையைப் பார்த்து
மகிழ்ச்சி அடைந்தன. ஏனென்றால், அதுதான் பறவைகளில் எல்லாம்
மிக மிக எழிலுடன் திகழ்ந்தது..

நன்றி:சிறுவர் மலர்..


ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!

Post by கே. பாலா Sun Dec 02, 2012 9:52 am

பஞ்சவர்ண கிளியைவிட இந்த கதை மிக அழகாக இருக்கிறது..... சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!

Post by அச்சலா Sun Dec 02, 2012 9:53 am

கே. பாலா wrote:பஞ்சவர்ண கிளியைவிட இந்த கதை மிக அழகாக இருக்கிறது..... சூப்பருங்க
நன்றி கே.பாலா... மகிழ்ச்சி


ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!

Post by gnsenthil Sat Dec 15, 2012 3:11 pm

கதையும் கருத்தும் நன்றாக உள்ளது.... சூப்பருங்க
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Back to top Go down

ஈகரை Re: ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!

Post by அச்சலா Sat Dec 15, 2012 3:36 pm

gnsenthil wrote:கதையும் கருத்தும் நன்றாக உள்ளது.... சூப்பருங்க
நன்றி உங்கள் பதிலுக்கு..உங்களை அறிமுகம் செய்துக்கொள்லாமே..


ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xzஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!

Post by thivyabalan Tue Feb 05, 2013 8:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


thivya :வணக்கம்:
thivyabalan
thivyabalan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 05/02/2013

http://thiviya vasan@gmail.com

Back to top Go down

ஈகரை Re: ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!

Post by Pakee Wed Feb 06, 2013 12:12 am

கதை அருமையா இருக்கு சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum