ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துக் கோயில்... ஆகம விதி !

2 posters

Go down

ஈகரை இந்துக் கோயில்... ஆகம விதி !

Post by அச்சலா Sun Dec 02, 2012 12:56 am

இந்துக் கோயில்... ஆகம விதி ! Periyakovil3
இன்றைய இந்துக் கோயில்கள் ஒரு காலத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த மன்னர்களால், அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்பட்டும், நிருவகிக்கப்பட்டும் வந்தன என்பது வரலாற்று உண்மையாகும். மதுரைக் கோயிலுக்குப் பல கிராமங்கள் சொந்தமாயிருந்தன. இந்தக் கிராமங்களையயல்லாம் முகமதிய அரசாங்கம் தனது சொந்தப் பொறுப்பில் 1790 வரையில் தக்க வைத்துக் கொண்டு இருந்தது. இக்கோயிலுக் குள்ள கட்டளைகள் 1704 இல் இருந்து 1735 காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்டன. பின்னர் மெட்ராஸ் அரசாங்கம் மதுரை மாவட்டத்தைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தது. 1801 இல் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி இக்கிராமங் களைத் தன் வசமாக்கிக் கொண்டது. 1849 வரை கிழக்கிந்தியக் கம்பெனி இக்கிராமங்களைத் தன் பொறுப்பில் வைத்திருந்தது.

முகமதிய அரசாங்கம் இந்தக் கிராமங்களிலிருந்து வந்த வருவாயின் ஒரு பகுதியை மதுரைக் கோயிலின் அறக்கட்டளை யின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத் தியது. மீதி வருமானத்தைத் தன் தேவைக்குச் செலவழித்துக் கொண்டது. 1790 இல் இருந்து 1801 வரை என்ன நடந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

பழைய ஸ்மிருதிகளில் அரசன் கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டச் சொத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், கோயில்களை இந்திய அரசர்கள் வியாபார மையமாக நடத்தி வந்தனர் என்பது நடைமுறை உண்மை. இஸ்லாமி யர்களையோ, கிருத்துவர்களையோ இந்த ஸ்மிருதிகள் கட்டுப்படுத்தவில்லை.

1810 இல் வங்க மாநிலத்திலும் 1817 இல் சென்னை மாநிலத்திலும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து இஸ்லாமிய நிறுவனங் களைக் கையகப்படுத்தி Board of Revenue விடம் ஒப்படைத்து விட்டன.

1863 இல், ஆங்கில அரசாங்கம் அந்தந்த மத நம்பிக்கை உள்ளவர்களிடமே இச்சொத்துகளை நிருவகிக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட முடிவு செய்தது. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு Act XX1863 சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி இஸ்லாமியரும், இந்துக்களும் கோயில் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு அறக்கட்டளை களை நிருவகிக்க சட்டப்பூர்வமாக அதிகாரம் பெற்றனர். இக்கோயில் குழுக்கள் அறங்காவலர் களையும், கண்காணிப்பாளர்களையும் நியமிக்கும் உரிமையைப் பெற்றன.

இங்கு இரண்டு முக்கிய நிகழ்வுளைக் கவனிக்க வேண்டும்.

1.எவ்வகையான செல்வாக்குகள் இந்த அதிகார மாற்றத்திற்கு அடிப்படையாக இருந்தன?

2. அந்தந்த மதத்தைச் சார்ந்த, அதாவது இந்து, இஸ்லாமிய சமயத்தவர்களுக்கு அதிகாரப் பரிமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

ஆங்கில அரசாங்கம் சமய நிறுவனங்களை நிருவகிக்கும் அதிகாரத்தை, அந்தந்த மதங்களைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, வகுப்புக்கோ, ஒரு பிரிவினருக்கோ, ஒரு குழுவுக்கோ மாற்றம் செய்யவில்லை. அதற்கு மாறாக இந்து மதத்தைச் சார்ந்த அனைத்து இந்துக்களுக்கும் மத நிறுவனங்களை நிருவகிக்கும் அதிகாரம் உண்டு என்று தெரிவித்தது. இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். குறிப்பிடத்தக்க செயலுமாகும். அடுத்து, பிரிவி கவுன்சில் தனது நீதிமன்ற மொழியில் மிகப் பாதுகாப்பாகக் கூறியது என்னவென்றால், இஸ்லாமிய, இந்து சமய நம்பிக்கை உள்ளவர்களிடமே அந்நிறுவனங்களை நிருவகிக்கும் பொறுப்பை ஆங்கில அரசாங்கம் ஒப்படைக்கிறது என்பதாகும்.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1817 இல் Regulation VII of 1817 சட்டத்தின்படி, வருவாய் போர்டு மாவட்ட கலெக்டர்கள் மூலமாக இந்திய நிருவாகம் நடைபெற்றது. 1814 இல் Court of Directors, ஆங்கில அரசு அதிகாரிகள் கோயில்களின் முக்கிய தலங்களை நிருவகிப்பதிலிருந்து தங்களது அதிகாரத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றது.

கோயில்களை மேலாண்மை செய்யும் கட்டுப்பாடு Board of Revenue வசம் இருந்தது. இதை இந்துக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கிருத்துவ மினரிகள் இந்துக் கோயில்களை ஆங்கில கிருத்துவ அரசாங்கம் நிருவகிப்பது கூடாது என்று எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு வலுவாக இருந்ததால் மாவட்ட ஆடசியாளர்களிடம் இருந்து இது குறித்து அறிக்கை கேட்டனர். ( 1814) Act XX1863 சட்டத்தின்படி Board of Revenue கோயில்களையும், ஏனைய சமய நிறுவனங்களை யும் நிருவகிக்கும் அதிகாரத்திலிருந்து விடுவிக்கப் பட்டது. கோயில் சொத்துக்களை நிருவகிக்கும் அதிகாரம் நிர்வாகக் குழுக்களிடம் ஒப்படைக் கப்பட்டது.

இந்த அதிகார மாற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று, இந்துச் சட்டத்தின் மிகச்சிறந்த வல்லுநராக Privy Council ஆல் அங்கீகரிக்கப்பட்ட கோஸ் அவர்கள் கூறுவது மிக முக்கியமானதாகும். இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிகார மாற்றத்திற்கு, பிராமணர்களுடைய ஸ்மிருதியோ, சைவர்களு டைய ஆகமமோ, வேறெந்த புனித நூலோ அல்லது மரபோ அல்லது வர்ணாசிரம பழக்கமோ, எந்த ஒரு இந்துவோ காரணகர்த்தாவாகவில்லை. இன்று காணப்படும் தேவஸ்தான குழு, அறங்காவலர்கள் ஆகியவை தோன்றுவதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்தது கிருத்துவ மி­னரியே ஆகும். கிருத்துவ ஆங்கில அராசங்கம், இந்து சமய நிறுவனங்களை நிருவகிக்கக் கூடாது என்று இங்கிலாந்து கிருத்துவ மி­னரியே எதிர்த்ததால் விளைந்ததே இந்த அதிகாரப் பரிமாற்றம்.

ஆக 1810 இல் இருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த இந்துக் கோயில்கள் 1863 இல் கிருத்துவ மி­னரிகளின் எதிர்ப்பால், அதிகார மாற்றம் செய்யப்பட்டு, இந்துக் கோயில்கள் விடுதலையடைந்தன. வங்காளத்தில் 1810 லும் மெட்ராசில் 1817 லும், பம்பாயில் 1827 லும் சமய நிறுவனங்களை நிருவகிக்கும் அதிகாரத்தைப் போர்டு ஆப் ரெவின்யூவிடம் ஆங்கலக் கிழக்கிந்தி யக் கம்பெனி ஒப்படைத்தது. அந்நிறுவனங்கள் அனைத்தும் 1863 இல் முழு விடுதலையடைந்தன.

அபுதுபே என்ற பிரெஞ்சு பாதிரியார் கூறுவதாவது, “ ஆங்கில அரசாங்கத்திடம் இருந்து இந்து சமய நிறுவனங்கள் ஏனைய அறக்கட்ட ளைகள் ஆகியவற்றின் நிருவாகப் பொறுப்பு பிராமணர்களிடம் நேரிடையாக மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்டதும், பிராமணர்கள் வர்ணாசிரம முறையை வேதகால அடிப்படை யாகக் கொண்டு நிலைநிறுத்தத் தலைப்பட்டனர். பிராமணர்கள் பழைய சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்திற்கும், திராவிடச் சாதியினரை அடிமைப்படுத்திச் சுரண்டுகிற வகையில் விளக்கம் அளித்தனர். ”

வேதம் படித்த பிராமணர்கள் ஆகம சமயத்தில் இணைந்து கொள்வற்குத் “ தீட்சை ” பெற வேண்டும் என்பது முக்கியமாகும். எவன் ஒருவன் தான் பிறந்த சாதியின் அடிப்படையில் ஸ்மிருதிகள், புராணங்கள் படிப்பதற்குத் தகுதியற்றவன் என ஒதுக்கப்படுகிறானோ, அவன் படிப்பதற்குள்ளதே ஆகமங்கள் ஆகும். ஆகமங்கள் என்பது திராவிடக் கடவுள்களான சிவனையும், சக்தியையும் எவ்வாறு வழிபட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கூறுவதேயாகும்.

ஆக, ஆகமங்கள் திராவிடர் களுக்கும் ‡ ஸ்மிருதிகள், புராணங்கள் பிராமணர்களுக்கு மட்டும் என்பதே சனாதன மதம் செய்துள்ள விதியாகும்.

தென்னிந்தியாவில் பல பெரிய கோயில்களில் பூசாரிகளாக இருப்பவர்கள் யாவரும் சூத்திரர்கள் ஆவர். இதையயல்லாம் ஆய்வு செய்துதான், சே­கிரி அய்யர், சிதம்பரம் கோயிலில் உள்ள பூசாரிகள் பிராமணர்கள் அல்லாதவர்களே என்பதைக் காட்டி, பூசாரியாக இருப்பதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பிலோ, சாதியிலோ பிறந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

கோயில் கர்ப்பகிரஹத்தில் ஒரு சூத்திரர் நுழைந்து விடலாம். ஆனால் ஒரு பிராமணர் நுழைய முடியாது. அதுமட்டுமன்று, சங்கராச் சாரியாரே கர்ப்பக்கிரஹத்தினுள் நுழையக் கூடாது. காரணம் ஆகம விதிப்படி தீட்சைப் பெறவில்லை. ஆகம விதிப்படி தீட்சைபெற்ற ஒரு சூத்திரர், கர்ப்பக்கிரஹத்தினுள் நின்று பூசை செய்வது இறைவனைத் திருப்தியடையச் செய்கிறது. ஒரு பிராமணன் கர்ப்பக்கிரஹத்தினுள் நுழைந்தால் அக்கோயில் புனிதத் தன்மையை இழந்து விடுகிறது. அக்கோயில் அசுத்தமடைந்து விடுகிறது என்பதே ஆகமம் கூறும் விதியாகும்.

நன்றி:கீற்று...


இந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xzஇந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xzஇந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xzஇந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: இந்துக் கோயில்... ஆகம விதி !

Post by கரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 7:41 pm

தகவலுக்கு நன்றி

தற்போதைய நிலையில் இந்த அறக்கட்டளைகள் அறமாக செயல்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: இந்துக் கோயில்... ஆகம விதி !

Post by அச்சலா Mon Dec 03, 2012 12:20 am

கரூர் கவியன்பன் wrote:தகவலுக்கு நன்றி

தற்போதைய நிலையில் இந்த அறக்கட்டளைகள் அறமாக செயல்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது
நன்றிகள் உங்கள் பதிலுக்கு,,. :வணக்கம்:


இந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xzஇந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xzஇந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xzஇந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: இந்துக் கோயில்... ஆகம விதி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» எந்த விதி எமது விதி??
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum